Friday, July 4, 2014

சம்பாதிப்பதால் மட்டும் எவனும் பணக்காரன் ஆகிவிட முடியாது. சேமித்து வைப்பதே முக்கியம். நிறைய சம்பாதித்து ஏழையாகச் செத்தவரும் உண்டு. கொஞ்சம் சம்பாதித்து பணக்காரனாக வாழ்ந்தவரும் உண்டு.

சம்பாதிப்பதால் மட்டும் எவனும் பணக்காரன் ஆகிவிட முடியாது. சேமித்து வைப்பதே முக்கியம். நிறைய சம்பாதித்து ஏழையாகச் செத்தவரும் உண்டு. கொஞ்சம் சம்பாதித்து பணக்காரனாக வாழ்ந்தவரும் உண்டு.

இரட்டையர்களில் இரண்டு வகை உண்டு. ஒட்டிப் பிறந்த இரட்டையர், ஒரே மாதிரி இரட்டையர் என்று இருவகை. ஒரே மாதிரி இரட்டையர்கள் முகம் போல அகமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பழகப்பழக இருவரும் நேர் எதிர் என்று கண்டு பிடித்த கதைகளும் உண்டு.

பார்க்க ஒரே மாதிரி பழக வேறுவேறு குணம் என்கிற இரட்டையர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டுமா? சிக்கனம், கஞ்சத்தனம் என்பதே அவர்கள் பெயர்கள். ஒரே மாதிரியாக உலகத்தின் கண்களுக்கு இவை ர்ழ் இவர்கள் தெரிவதே பெரிய குழப்பத்தின் காரணம். இருவரும் நேர் எதிரானவர்கள். புரிய வைக்கிறேன்.
அமெரிக்காவின் பிரபலமான கோடீசுவரர் ஒருவரை ஒரு குழு சந்திக்கப் போனது. கல்விக்கூடம் கட்ட நன்கொடை கேட்டு கோரிக்கை வைத்தது. பேசிக்கொண்டே இருந்த பணக்காரர் பாதியில் எழுந்து போய் “விளக்குகள் அநாவசியமாக எரிகின்றன நிறுத்திவிட்டு வருகிறேன்” என்று அணைத்துவிட்டு வந்தார். கோரிக்கை வைத்த குழுவின் முகப்பிரகாசம் அணைந்து போனது. “பெரிய கோடீசுவரர்.. நிறைய கொடுப்பார் என்று நம்பி வந்தால்.. மகா கஞ்சர்.. விளக்குகளை அணைத்துவிட்டு வருகிறார். என்ன கொடுக்கப் போகிறார்” என்று தளர்ந்து போனார்கள்.
கதை போல் கோரிக்கையை ரசித்துக் கேட்ட கோடீஸ்வரர் நாலைந்து குறுக்குக் கேள்விகள் கேட்டார். நம்பிக்கை இன்னும் தகர்ந்தது. முடிவில் இந்திய ரூபாய்க்கு மூன்று லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை செக் எழுதி அவர் தந்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ஒருவர் வாய்விட்டு தம் சந்தேகத்தை வெளிப்படுத்தினார். “ஒரு விளக்கு எரிவதைக் கூட செலவாக நினைக்கும் குணம் உடைய தாங்கள் எப்படி இவ்வளவு நன்கொடை தர முன்வந்தீர்கள்” என்றார். கோடீஸ்வரரோ “வெரிசிம்பிள்.. இப்படி சேமித்து மிச்சம் வைத்ததால்தான் என்னால் நல்ல காரியங்களுக்கு கொடுக்க முடிகிறது” என்றார். ராக்ஃபெல்லர் வாழ்வில் நடந்த சம்பவம் இது. இவர் கஞ்சமா? சிக்கனமா? யோசியுங்கள்.

பல்லாயிரம் ரூபாய்க்கு மேல் ஒருநாள் வாடகை ஈட்டும் அழகிய பெரிய திருமண மண்டபத்தின் உரிமையாளர் அவர். திருமணம் நடக்காத ஆடி மாதத்தில் கூட எக்ஸிபிஷன் சேல்ஸ் என்று வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் மண்டப உரிமையாளராக அவர் இருந்து பணம் குவிக்க முடியும். ஆனால் அவரோ மகாத்மாகாந்தி விழா, வள்ளலார் விழா, கம்பன் விழாவுக்குத் தன் மண்டபம் இலவசமாகத் தரப்பட வேண்டும் என்று தந்தார். தன் காலத்திற்குப் பிறகு இந்தத் தருமம் நின்று விடக்கூடாது என்று உயிலாகவே எழுதி வைத்துவிட்டார். மாற்றப்பட முடியாத நிபந்தனையாகவே மண்டபத்தின் தலையெழுத்தாகவே அதனை ஆக்கிவிட்டார்.
இந்தக் கொடை உணர்வு மிக்க அமரர் அ.ய.ங என்ற புகழ்பெற்ற மெய்யப்ப செட்டியார் தன் பிடிமானத்தில் இருந்த பாரதி பாடல்களின் காப்புரிமையைத் தேசத்துக்கு இலவசமாகவே தந்தார். ஆனால் இந்தக் கொடையாளியின் கடைசிப் பேச்சு என்ன தெரியுமா? மருத்துவமனையில் உயிர் பிரியுமுன் அவர் சொன்ன வார்த்தை “அந்த பாத் ரூம்ல லைட் வீணா எரியுதேப்பா” அதை ஆஃப் பண்ணுங்க” என்றுதான். லட்சம் லட்சமாகக் கொடுக்க முடிந்த ஒருவர் ஒரு ரூபாய் சிக்கனம் பற்றி ஏன் யோசித்தார் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
அவசியமானால் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால் அவசியம் இல்லாமல் பத்து பைசா கூட வீணாக விரயமாகச் செலவாகக் கூடாது. இது இளைய தலைமுறையில் எத்தனை பேருக்குப் புரிகிறது?

மகாத்மா காந்தி ஒரு சின்ன பென்சில் துண்டு தொலைந்து போனால் கூட பெரிய அமர்க்களம் செய்து விடுவாராம். எங்கே? எங்கே? என்று வைரப் புதையலைத் தேடுவதுபோல ஆசிரமத் தொண்டர்கள் தேடிப்பிடித்து பாபுஜியிடம் பென்சிலை ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் தூங்க மாட்டார். தன் ரத்தத்தையே தேசத்திற்காகச் செலவழித்த வள்ளல் பாபுஜி என்ன கஞ்சரா? சிக்கனத்தை நுட்பமாக உணர்ந்த மாபெரும் வள்ளல் அவர். உயிர்மீது கூட பற்று வைக்காத ஒருவர் எப்படி கஞ்சனாக இருக்க முடியும்?

சம்பாதிப்பதால் மட்டும் எவனும் பணக்காரன் ஆகிவிட முடியாது. சேமித்து வைப்பதே முக்கியம். நிறைய சம்பாதித்து ஏழையாகச் செத்தவரும் உண்டு. கொஞ்சம் சம்பாதித்து பணக்காரனாக வாழ்ந்தவரும் உண்டு. 

No comments:

Post a Comment