Thursday, July 17, 2014

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்



வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்படலாமே?

· காலை 5 மணிக்கு எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல்,குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்க படுக்கையை விட்டு மணிக்கே எழலாமே!
· உடலில் முதுகுவலிமூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்று கஷ்டப்படலாமே!
· பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்க சமையல் என்கிற ஒன்றை அறிய அல்லது சமைக்க கஷ்டப் படலாமே...

நானும் அறிவேன் இது எல்லாருக்கும் பொருந்தாது என்றுஇருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்வோம் பிற்காலத்தில் மற்றவரை சார்ந்திராது இருக்க.

ஒழுங்கற்றஎதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.

சிரமங்கள் நம்மை பலப்படுத்துகின்றன.
கஷ்டங்கள் நம்மை வலுப்படுத்துகின்றன.
துயரங்கள் நம்மை உருவாக்குகின்றன.
எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!
urs Happily
Dr.Star Anandram
www.v4all.org 

No comments:

Post a Comment