இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்:-
* காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள்.
*பல் தேய்க்கும் போது ஆள் காட்டி விரல் உபயோகிக்காதீர்கள்.
*ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா என்று மூன்று முறை கூறுங்கள்.
*குளித்தபின் உணவு உண்ணுங்கள்.
பைரவர், காகம், பசு இவைகளுக்கு முடிந்த அளவுக்கு உணவு இடுங்கள்.
*பணத்தை எப்போதும் இடது மார்பின் பையில் வையுங்கள்.
*வாரம் இரண்டு முறை எண்ணை ஸ்நானம் செய்யுங்கள்.
ஆண்கள் - புதன், சனி; பெண்கள் - செவ்வாய், வெள்ளி.
*ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தினங்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது.
*மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் - தலை முடி வெட்டுவது கூடாது.
*பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.
*கோயில் கோமுகத்தை - சுத்தம் செய்து, சந்தானம், குங்குமம் இட்டு தீபாராதனை செய்யுங்கள்.
*மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் மரண பயம் விலகும்.
*பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு,திங்கள் வியாழன், சனி.
*வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.
*லுங்கி,கைலி அணியாதீர்கள். வறுமை வாட்டும்.
வேஷ்டியே நல்லது.
நள மகாராஜா தமயந்தியின் பாதி சேலையை அணிந்த நிகழ்ச்சியே கைலியாக மாறியது.
*வெளியே போகும்போது டாட்டா காட்டாதீர்கள்.
இறைநாமம் சொல்லி செல்லுங்கள்.
*புது ஆடைகளை குங்குமமிட்டு, வெண் தாமரை வைத்து பூசை செய்தபின் அணியுங்கள்.
*அருந்த சுரைக்குடுவை, மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர் உபயோகிக்கவும்.
*மருதாணியை முடிந்த மட்டும் அதிகமாக உபயோகிக்கவும்.
குழந்தைகளை அடிக்காதீர்கள் - வியாதி, கடன், சுமை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment