Tuesday, November 3, 2015

வயிரவர் அகவல்

வயிரவர் அகவல்.

சீர் புகழ் வயிரவன் செந்தமிழ் உரைக்க
கார் புகழ் மேனிக் கணபதி அருளே
ஆதிபராபரி அருளிய நூதல்விழி
சோதி போலெழும்பி சுடரொழியாகி
வீதியில் எழும்பி விசும்பையும் கடந்து
ஓதிய மந்திரம் உட்சாடனமாய்
ஓங்காரம் கொண்டு ஒரு முகமாகி
ஆங்காரம் கொண்டகாரமாகி
விக்கினம் தீர்க்கும் விறுமவயிரவா
அப்பமும் அவலும் ஆலங்காயும்
செப்பிய மாங்கனி திகழ் தட்டுறட்டி
தேன் கதலிப்பழம் பலாப்பழம்
அத்தனை எல்லாம் அருந்திடுவைரவா
ஐயும் கிலியும் அகோர வைரவா
மவ்வும் கிலியும் ஆன வைரவா

சவ்வும் கிலியும் சங்கார வைரவா
றியுங் கிலியும் ஏறு வயிரவா
பவ்வும் கிலியும் பாதாள வயிரவா
சதியோடு அருள்புரி சச்சுதானந்தா
பாம்பெலும் பணியும் பராபர சொரூபமே
சாம்பலும் அணிந்து தலையோடேத்தி
சுடலையில் நின்று சுடலை காத்தாயே
கெங்கைக் கரையில் கிருபாகரனே
நம்பின பேர்க்கு நடனம் புரிந்து
பாரிக்கும் பேயை பதற அடித்து
பக்கப் பசாசை பதறத் துரத்தி
ஈடளித்திடுவாய் ஏக வயிரவா
ஐயனே உந்தன் அருளுண்டானால்
வையகம் பிணி வாதபித்தம் வந்திடு சிலேட்டுமம்
அப்பிணி எல்லாம் அகற்றிடு வயிரவா
கையில் பிடித்த கண்ட கோடாலியும்
காதிலணிந்த கவச குண்டலமும்
காலில் தரித்த தண்டை பாடகமும்
பாதக் கொலிசு பழ பழ என்றொலிக்க
நாத வீணை நலம் பெற முழங்க
செம்பொன் மேனியும் திருநீற்றழகும்
உச்சும் குடும்பியும் உதிர வாயும்
அலறிய பல்லும் அண்ணார்ந்த பார்வையும்
அரையில் கட்டிய காவியொட்டியாணமும்
சூலமும் மழுவும் சுடரொழி வாழும்
அன்பாய் வந்து அடியேன் செய் பூசையை
நன்பாய் வந்து நல்லருள் புரிவாய்
நாய் வாகனத்தில் நடனமிடுபவா
கெங்கை கரையில் கிருபாகரனே
நம்பின பேர்க்கு நல்வரமளிப்பாய்
நான்முகன் சிரசை நறுக்கிய வயிரவா
நளின காளியுடன் நடனம் புரிந்தவா
எப்போதும் என்னை ரட்சித்தருள்வாய்
ஈசன் தன் திருமகனே
மாதன வாவி மலர்த் தடாகத்தருகில்
தானத்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் பருவத்துதித்துக் களிக்கும்
சச்சிதானந்தா சரணம் சரணம்.

No comments:

Post a Comment