Showing posts with label jci coimbatore anandham. Show all posts
Showing posts with label jci coimbatore anandham. Show all posts

Saturday, June 18, 2016

ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை

ழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனத்தில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை :
* அவநம்பிக்கை
* அவசரம்
* அமைதியின்மை
அவநம்பிக்கை
அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது.
இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப்பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.
மேலும், இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.
என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பார்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.
இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரமாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.
ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்புக்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).
அவசரம்
அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் "தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?" என்று தோண்டிப் பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.
ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால், நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.
அமைதியின்மை
மனத்தை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்துக்காவது மனத்தை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.
நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.
நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனத்தை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மன சக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.
இனி அவற்றைப் பெறும் வழிமுறைகளையும் காண்போமா?




Saturday, March 7, 2015

மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-1

மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-1

நாயுருவி : திருஷ்டி கழிப்பிற்க்கு மிக பயனுள்ள ஒன்று இந்த செடியின் வேர். தீய கண் பார்வைகளால் பாதிக்கப்பட்டோர் இந்த செடியின் வேரை தலையனை அடியில் வைத்து உறங்கி வர, திருஷ்டி தோஷங்கள் விலகும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர் இதே முறையை பின்பற்றி பயன் பெறலாம்.

குழந்தைகள் அல்லது பெண்கள் மற்றும் தீய சக்திகளால் இருட்டை கண்டு பயப்படுவோர் இந்த செடியின் வேரை கழுத்தில் சிகப்பு நூலில் கட்டி கொள்ள பயம் விலகும்.
திருமண தடை மற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நின்று போதல் போன்றவைகளுக்கு இந்த செடியின் வேரை வலது கை மணிக்கட்டில் ஒரு வருடம் வரை கட்டி கொள்ள திருமண தடைகள் விலகும்.

வேரை எடுக்கும் முன் செடிக்கு மஞ்சள் நீர் ஊற்றி வேரை எடுக்க அனுமதி கோரி தூப தீபம் காண்பித்து பின்பு ஆணி வேர் அறுபடாமல் ஆயுதம் படாமல் சிறிது வேரை எடுத்து பின்பு மீண்டும் செடியை மண்ணில் புதைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து வரவும்- வேறு மந்திரங்கள்,திசைகள் என எதுவும் இல்லை 

Monday, March 2, 2015

இளைஞர்களின் கலங்கரை விளக்கம் - ஜேஸிஐ

இளைஞர்களின் கலங்கரை விளக்கம் - ஜேஸிஐ



அறிமுகம்:
“ஒளி படைத்த கண்ணினாய், உறுதி கொண்ட நெஞ்சினாய், தெளிவு பெற்ற மதியினாய், வெற்றி கொண்ட கையினாய்” என்றெல்லாம் மகாகவி பாரதியாரால் மட்டுமல்லாது, விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை அனைத்துத் தலைவர்களாலும் போற்றப் பெறும், ஆற்றல் மிகுந்த இளைஞர்களை, நல்ல வழியில் செலுத்தி, “நல்ல எதிர்காலத்தை இளைஞர்களுக்கும், நல்ல தலைவர்களை எதிர்கால உலகிற்கும்” தருவதையே, தனது முக்கியப் பணியாகக் கொண்ட ஓர் உலகளாவிய பேரியக்கம்தான், ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) ஆகும். இளம் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோரின் உலகளாவிய அமைப்பாக விளங்கும் இந்த ஜேஸி இயக்கம், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மட்டுமே பிரதான உறுப்பினர்களாகக் கொண்டு வெற்றி நடைபோட்டு வருகிறது.

தோற்றமும், வளர்ச்சியும்:
ஜேஸி இயக்கம், ஹென்றி கிசன்பியர் (Henry Giessenbier) என்பவரால், 1915-ஆம் ஆண்டு, அக்டோபர் 13-ஆம் நாள், அமெரிக்காவில் துவங்கப்பட்டது. முதலில் YMPCA (Young Men Progressive Civic Association) என்ற பெயருடன் துவங்கப்பட்ட இவ்வியக்கம், 1916-ல், ஜூனியர் சேம்பர் சிட்டிசன்ஸ் (Junior Chamber Citizens), சுருக்கமாக ஜேஸி என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் பிறகு, முழுப்பெயர் பலமுறை மாற்றப்பட்டாலும், ஜேஸி என்கிற சுருக்கப்பெயர் மாறவில்லை. மாற்ற முடியாத அளவிற்கு அது பிரபலமாகிவிட்டது. 1988 முதல் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்பு, உலகெங்கும் சுமார் 125 நாடுகளில், சுமார் 10,000 கிளை இயக்கங்களில், சுமார் 5 லட்சம் உறுப்பினர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.

நோக்கம்:
என்றும் நிலைத்திருக்கும் உலக சமாதானம் வேண்டும் என்ற கனவுடன், ஜேஸி இயக்கத்தைத் தொடங்கினார் ஹென்றி கிசன்பியர். எனவே, இவ்வியக்கம், இளைஞர்கள் தங்கள் தலைமைப் பண்புகள், சமூகப் பொறுப்புணர்வு, தொழில் முனைவு மற்றும் நட்புறவு போன்றவற்றில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம், ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கி, உலக சமுதாய முன்னேற்றத்திற்கு உதவுவதையே நோக்கமாகக் (Mission) கொண்டுள்ளது. மேலும், இவ்வியக்கத்தின் கோட்பாடு கடவுள் நம்பிக்கை, மனித சகோதரத்துவம், பொருளாதார நீதி, சட்டங்களாலான அரசு, மனித ஆளுமை வளர்ச்சி மற்றும் மனித சேவை போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு விளங்குகிறது.

சிறப்பம்சங்கள்:
ஜேஸி இயக்கம், அதன் உறுப்பினர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, தனிமனித முன்னேற்றம், நிர்வாகத் திறமை, சமூக சேவை, தொழில் வளர்ச்சி மற்றும் சர்வதேச நல்லுறவு ஆகிய ஐந்து பகுதிகளில் அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, தனிமனித முன்னேற்றத்திற்கு உதவும் வகையில், தலைமைப் பண்புகள், சிறந்த தகவல் பரிமாற்றம், இலக்கு நிர்ணயம், நேர நிர்வாகம், மகிழ்ச்சியான வாழ்க்கை, மேம்பட்ட மனித உறவுகள் போன்றவற்றில் தேர்ச்சி பெறப், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது ளுழகவ ளுமடைடள என்று அழைக்கப்படும் இது போன்ற சிறப்புத் திறன்களில், பல்வேறு படிநிலைகளில், முறையான பயிற்சியளித்து, மண்டல, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சான்றிதழ்களை வழங்கும் ஒரே உலகளாவிய சமூக இயக்கம் ஜேஸி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜேஸி இயக்கம் பின்பற்றும் கூட்டம் நடத்தும் நெறிமுறைகள், உலகெங்கும் பல நாடுகளின் பாராளுமன்றங்களின் செயல்பாட்டிற்கும், பல சர்வதேச இயக்கங்களின் செயல்பாட்டிற்கும் உதவிகரமாக அமைந்துள்ளன என்றால் அது மிகையல்ல.


புகழ்மிக்கவர்கள்:
ஜேஸி இயக்கம் சாதாரண மனிதர்கள் பலரையும் திறன் படைத்தவர்களாகவும், புகழ்மிக்கவர்களாகவும் மாற்றுகிறது. மேலும் புகழ்பெற்ற பலரும் ஜேஸியின் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும், ஜேஸி இயக்கத்துடன் தொடர்புடையவர்களாகவும் விளங்குகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர்கள் லிண்டன் ஜான்சன், ரிச்சர்டு நிக்ஸன், ஜெரால்டு போர்டு, ஜான் கென்னடி, பில் கிளின்டன், ஆப்பிரிக்க யூனியனின் நிறுவனர் லாரென்ட் டானா பொலாகா, பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஜாக்கஸ் சிராக், டென்மார்க் நாட்டின் முன்னாள் பிரதமர் பால் ஷ்லடர், ஜப்பான் முன்னாள் பிரதமர் யஸ_ஹிரோ நகசோனே, ஜப்பானின் முன்னாள் பிரதமர் தாரோ அசோ போன்ற பல உலகத்தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா, ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கோவாவின் முன்னாள் முதல்வர் ரவி நாயக் போன்ற பல இந்தியத் தலைவர்களும், ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முன்ஜால், கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜ், இதயம் நிறுவனங்களின் அதிபர் முத்து, சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி போன்ற தொழிலதிபர்களும், ஜேஸி இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம்:
சர்வதேச அளவில், ஒரு தலைவரும், அவருடைய ஆட்சிமன்றக் குழுவும் ஜேஸி இயக்கத்தை நிர்வகிக்கின்றனர். (2011-ன் சர்வதேசத் தலைவர் -- ஜப்பானைச் சேர்ந்த ஹண்டாரோ கருடா). இந்தியாவில், 1949-ல், கல்கத்தாவில் தொடங்கப்பட்ட ஜேஸி இயக்கம், நாடெங்கும் பரவியுள்ளது. இந்திய அளவிலும், அதேபோல் ஒரு தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழுவினர் இருப்பர். (2011-ன் இந்திய தேசத் தலைவர் -- நம் தமிழ்நாட்டின், ஈரோட்டைச் சேர்ந்த பாலவேலாயுதம்). ஜேஸிஐ இந்தியா, நிர்வாக வசதிக்காக, மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலும் ஒரு தலைவரும், ஆட்சி மன்றக் குழுவினரும் இருப்பர். ஒவ்வொரு மண்டலத்திலும் ஏராளமான ஜேஸி சங்கங்கள் இருக்கும். இவை கிளை இயக்கங்கள் (LOM) என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சங்கத்திலும், ஒரு தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழுவினர், சங்க செயல்பாடுகளைக் கவனிப்பர். ஒரே ஊரில் அல்லது பகுதியில், பல ஜேஸி சங்கங்கள் இருக்கலாம். 
if u want join call us - 9790044225 visit - www.v4all.org