Showing posts with label how to become a leader. Show all posts
Showing posts with label how to become a leader. Show all posts

Monday, July 27, 2015

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்


அ-
+
Temple images

காசி: காசியே சிவனின் தலைமைக்காவலரான பைரவரின் பிரதான தலமாகும்.  காசி விஸ்வநாதர் கோயிலின் வடக்கே பைரவநாத்தில் உள்ள காலபைரவர் சன்னதியே பைரவரின் தலைமையிடம் ஆகும். இந்த சன்னதி பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். காசியில் இறப்பவர்களின் பாவபுண்ணியக்கணக்குகளை சித்ரகுப்தன் எழுதாமல், காலபைரவரே எழுதி பலன்களை அளிக்கின்றாராம்.
ராமகிரி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் ஆலயத்தினை ஒட்டி கால பைரவருக்கான தனி ஆலயம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்டது. இந்த பைரவ ஆலயத்தில் கால பைரவர் தனது சக்தியான காளி தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவொற்றியூர்: சென்னை - பாரிமுனையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தியாகராஜசுவாமி ஆலயத்தில் (மாணிக்கத் தியாகர் - வடிவுடையம்மை) வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சன்னதிக்கு எதிரே சூர சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது.
சீர்காழி சட்டநாதர் ஆலயம்: சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும். திருஞான சம்பந்தர் அவதரித்த  மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்திலுள்ள மலைக்கோயில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோயில் உள்ளது.
காஞ்சிபுரம் வைரவேச்சுரம்: திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் உள்ளது. இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான். இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது.
÷க்ஷத்ரபாலபுரம் கால பைரவர்: பைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர்.
தில்லையாடி கால பைரவ விநாயகர்: மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் வழியில் பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது.
அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்: காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம். ஆகவே மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு செய்யப்படுகின்றது.
வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில், ருரு பைரவரும், துர்கா மந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரத்தில் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், திரிலோசனகஞ்ச்சில் சங்கார பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவரும், காசிபுராவில் பீஷாண (பூத) பைரவரும், காசி நகரில் சிறப்பாக வழிபடப்படுகின்றனர். தெற்கில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவர்களைத் தரிசிக்க செல்வதே அஷ்ட பைரவ யாத்திரை எனப்படுகிறது.
வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த வைரவன்பட்டியில் மகா பைரவர் சிவகுமரனாகத் தனிச்சிறப்புடன் வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.
சென்னிமலை: ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது.
திருப்பத்தூர் யோக பைரவர்: யோக பைரவரின் அருட்தலமான இந்த திருப்பத்தூர் மதுரையிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இலுப்பைக்குடி வடுக பைரவர்: காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள இந்த இலுப்பைக்குடித் தலத்தில் தான்தோன்றீஸ்வரர் - வடிவுடையம்மன் மூலவர் வடிவங்களாகத் திகழ்ந்தாலும் பரிவாரத் தெய்வமாகத் திகழும் வடுக பைரவரே சிறப்புத் தெய்வமாக வழிபடப்படுகிறார். புதுச்சேரியிலுள்ள திரு ஆண்டார் கோயில் வடுக பைரவர், திருப்பாதிரிபுலியூர் கால பைரவர், திருமயிலை கபாலீஸ்வரர், திருஒற்றியூர் பைரவர், திருவான்மியூர் பைரவர் முதலிய தலங்களிலுமுள்ள பைரவ வடிவங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக வழிபடப்படுகின்றனர்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள தலங்கள்: திருப்பதி
ஏழுமலையான் சக்கரம் ஸ்வர்ண ஆகர்ஷண சக்கரம் என்பதால் பொன் பொருள் குவிகிறது.
சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார்.
விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார்.
ஆடுதுறை: ஆபத் சகாயேச்வரர் கோயிலில் கால பைரவர் மட்டுமல்லாது ஸ்வர்ண பைரவரும் இருக்கிறார்.
தபசுமலை: புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தபசு மலையில் கௌசிக முனிவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும், முருகப் பெருமானையும் நேரெதிரே நிர்மாணித்து ஸ்வர்ண பைரவர், பைரவி உற்சவ மூர்த்தங்களை அமைத்துள்ளார்.
காரைக்குடி: இங்கு புகைவண்டி நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இலுப்பைக்குடி என்னும் தலம். இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
படப்பை: தாம்பரத்திலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பை என்னும் ஸ்தலமுள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மூர்த்திகளை சிறப்புற அமைத்துள்ளார்.
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோயில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
தாடிக்கொம்பு: திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ÷க்ஷத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோயிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.
பஞ்சமுக பைரவர்: முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள்பாலிக்கிறார்.
முக்கிய பைரவர் ஸ்தலங்கள்:
வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.
திருக்கோஷ்டியூர்: பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்
பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்
இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.
பைரவபுரம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோயில் இங்கே உள்ளது.
சிவபுரம்: இது கால பைரவ ÷க்ஷத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
எமனேஸ்வரம்: எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
காளையார் கோயில்: இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருநாகை: நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.
மதுரை: இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும்,  கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.
திருவண்ணாமலை: இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.
திருமயம்: இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.
பொன்னமராவதி புதுப்பட்டி: இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
சேந்தமங்கலம்: இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.
முறப்ப நாடு: எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.
திருவாஞ்சியம்: தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.
திருச்சேறை: கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.
திருப்பாச்சேத்தி: மதுரை - ராமேஸ்வரம் சாலையில்  உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
நாகை: இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம்: வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.
காளஹஸ்தி: இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.
பழநி: அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.
சீர்காழி: சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.
சேலம்: இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.
திருவான்மியூர்: சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.
இலுப்பைக்குடி: இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.
அந்தியூர்: ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோயிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோயிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார். சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.
திருவியலூர் (திருவிசநல்லூர்): கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.


Saturday, July 18, 2015

சில காலம் முன் அமிதாப் பச்சனை , ஒரு பொது மேடையில் பலர் அறிய பாராட்டினார் ரஜினி...

சில காலம் முன் அமிதாப் பச்சனை , ஒரு பொது மேடையில் பலர் அறிய பாராட்டினார் ரஜினி...
“அமிதாப்பச்சன் சின்ன வயசுல ஜெயித்தது பெரிய விஷயமல்ல. அவரது 60 வது வயதில் பெரிய கஷ்டம் வந்தது... வீட்டையே அடமானம் வைத்துவிட்டார். படமும் எதுவும் கிடைக்கல. அவ்வளவு கஷ்டப்பட்ட நேரத்திலும் யாருக்கிட்டேயும் உதவிக்காக நின்னதுல்ல. ஆனால் தனி மனிதனா நின்னு ஜெயிச்சு அந்த வீட்டை மீட்டதும் இல்லாம , அதே ஏரியாவுல்ல இன்னும் 2 வீடு வாங்கியிருக்காரு. அதுதான் அமிதாப் பச்சன்…”
# சரி....அமிதாப்புக்கு அறுபது வயதில் சூறாவளிதான் வீசியது...ஆனால் , “ஆறிலிருந்து அறுபதுவரை ” படத்தில் நடிக்கும் வேளையில் , ரஜினியின் திரையுலக வாழ்வை சுனாமியே சூறையாடியது...!
இயக்குனர் பாலச்சந்தர் சொன்னது போல , அது ரஜினியின் “இருண்ட காலம்”....
1979-ம் ஆண்டு.... இரவும் பகலும் இடைவெளியில்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்தது ஒரு பக்கம்... மது ..ஜரிதா பீடா..ஜாதிக்காய் பழக்கம் இன்னொரு பக்கம்...நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு.. எதைக் கண்டாலும் எரிச்சல்... யாரைக்கண்டாலும் கோபம் அடைந்தார் ரஜினி...
13-3-1979 அன்று ஒரு விழாவில் கலந்து கொள்ள சக நடிகர்களுடன் மதுரை வந்த ரஜினிகாந்த், மதுரை விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று சோடா கேட்டிருக்கிறார்..
`சோடா இல்லை ' என்று கடை ஊழியர் சொன்னதால் , அவரை கன்னத்தில் அறைந்தார் ரஜினி..., அத்தோடு விட்டாரா..? தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி , அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்க.... இதைப் பார்த்தவர்கள் பயந்து போய் ஓட்டம் பிடிக்க... ரஜினியை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்தனர். மற்ற நடிகர்கள் வந்து, "நாங்கள் அவரை பத்திரமாக அழைத்துப் போகிறோம்'' என்று உறுதிமொழி கொடுக்க சென்னை வந்து சேர்ந்தார் ரஜினி...
இருந்தும் , இயல்பான நிலைக்கு வரவில்லை ரஜினி.... இதனால் சென்னை விஜயா நர்சிங் ஹோமில் சேர்க்கப்பட்டார்...
# அந்த "இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் கே.பாலசந்தர் இப்படி குறிப்பிடுகிறார்...
“அந்தச் சூழ்நிலையில் ரஜினி வீட்டுக்குச் சென்ற என்னிடம் , ரஜினி "நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் அழுதார். அவரது பேச்சு தொடர்பில்லாமல் இருந்தது. ரஜினியை அந்த சூழ்நிலையில் பார்த்த என் கண்கள் கலங்கின. இந்த நேரத்தில் பலர் பலவிதமாகப் பேசினார்கள். இத்தோடு அவர் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்றும், அவரது பெயரைக்கூட சொல்லாமல் சிலர் `மெண்டல்' என்று குறிப்பிடுகின்ற துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டிருந்தது.”
# பாலச்சந்தர் சொன்னது உண்மைதான்...அந்தக் காலத்தில் ரஜினியை “மெண்டல்” என்று கிண்டல் செய்தார்கள்..
ஆனால்..அதே ரஜினியின் வசனங்கள் இன்று மேனேஜ்மெண்ட் மந்திரங்கள், பிஸினெஸ் யுக்திகளுக்கு பயன்படும் “ரஜினியின் பன்ச் தந்திரம்” புத்தகமாக...!
எப்படி நடந்தது இந்த மேஜிக்..?
ரஜினி சந்திரமுகி ஆடியோ மேடையில் சொன்ன “பஞ்ச்” டயலாக் ஞாபகம் வருகிறது...
“நான் யானையில்லை குதிரை… கீழே விழுந்தா டக்குன்னு எழுந்துப்பேன்..”
# ஆம்...!
“தன்னை அறிய தனக்கொரு கேடில்லை

Friday, July 10, 2015

பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்....!

பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்....!
ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்து விடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல சிக்கல்களை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்..!
இப்படி நிறைய பிரச்சினைகள் இருக்குங்கறதுக்காக, ஒட்டு மொத்தமா ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்து விடுவது நல்லது என்றோ, ஃபேஸ்புக்கினால் கிடைக்கும் சில நல்ல விஷயங்களை அனுபவிக்காமல் விட்டுவிட வேண்டும் என்றோ சொல்ல முடியாது. ஆனால், ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது! அதைப்பற்றிய சில நுணுக்கங்களை அலசத்தான் இந்தப் பதிவு…..!!!
ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!
ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல்களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சில வலைப்பின்னல் துறை வல்லுனர்கள். அவை….
1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password) பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம்..! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியானது!
ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிருத்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண்கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!
2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடுவது (Leaving Your Full Birth Date in Your Profile)
இணையத்தில் உலவும், அடையாளத் திருடர்களுக்கு (identity thieves), ஒருவரின் பிறந்த தேதி தான் முதன்மையான இலக்கு. அதைத் திருடி என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா? உங்க பிறந்த தேதியை வச்சி, உங்களின் மேலதிக தகவல்களை சேகரித்து, உங்க வங்கி கணக்கு/க்ரெடிட் கார்டு கணக்கு போன்றவற்றை கடத்தக் கூடும்?!
அய்யய்யோ…அப்படீன்றீங்களா? சரி சரி, உடனே உங்க ஃபேஸ்புக் கணக்கை திறந்து, profile பக்கத்துக்கு போய், Info tab-அ கிளிக் பண்ணி, Basic Information பகுதியில வெறும் பிறந்த தேதி மட்டும்/மாதம் மட்டும் இல்லைன்னா பிறந்ததேதியே குறிப்பிடாம விட்டுடுங்க. சரிங்களா?!.
3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது (Overlooking Useful Privacy Controls)
உங்க ஃபேஸ்புக் பக்கத்துல, மத்தவங்களுக்கு தொடர்பு வழங்க நண்பர்கள் மட்டும் (only friends) நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக்கலாம்.
இந்தப் பக்கத்துல, உங்க படங்கள், பிறந்த தேதி, மத பார்வை மற்றும் குடும்ப விவரங்கள், இது எல்லாத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான கட்டுப்பாட்டுக்குள் வைங்க! மிக முக்கியமா, உங்க தொலைபேசி எண், முகவரி போன்ற தொடர்பு விவரங்கள மத்தவங்க பார்க்குற மாதிரி வைக்காதீங்க!!
4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது (Posting Your Child’s Name in a Caption) உங்க குழந்தைங்க பெயரை படங்களின் தலைப்புகளாகவோ, குறியீடுகளாகவோ (photo tags) பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்க குழந்தைங்க பெயரை பயன்படுத்தியிருந்தா, Remove Tag என்னும் தொடர்பை அழுத்தி நீக்கிடுங்க இல்லைன்னா அவங்கள நீக்கச் சொல்லுங்க!
5. நான் வெளியூருக்குச் செல்கிறேன் என்று குறிப்பிடுவது (Mentioning That You’ll Be Away From Home) அதாவது, வெளியூருக்குச் செல்வதாயிருந்தா, “no one’s home” அப்படீங்கிற மாதிரியான விஷயங்கள எழுதுவதை தவிர்த்திடுங்க! நீங்க திரும்பி வந்து உங்க சுற்றுலா எப்படி இருந்ததுன்னு சொல்லிக்கலாம். அதேமாதிரி சுற்றுலா செல்லும் தேதியை மறந்தும் குறிப்பிடாதீங்க!!
6. கூகுள் போன்ற தேடியந்திரங்களின் பார்வையில் இருப்பது (Letting Search Engines Find You)
பரிச்சயமில்லாதவர்கள் உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் அடைவதை தவிர்க்க, ஃபேஸ்புக்கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook’s privacy controls) நண்பர்கள் மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறதா என்று உறுதிபடுத்தி கொள்ளுங்கள்! (Be sure the box for public search results isn’t checked)
7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது (Permitting Youngsters to Use Facebook Unsupervised) இது வரைக்கும் பார்த்ததிலேயே ரொம்ப முக்கியமானது இதுதான்!
அதாவது, ஃபேஸ்புக் பக்கம் 13 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஃபேஸ்புக்கை பயன்படுத்தவேண்டும் என்று விதி முறைப்படுத்தி இருந்தாலும், 13 வயதுக்கு குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்க குழந்தை/குழந்தைகளும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராகச் சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு வரும்படியாக செய்துகொள்வதுதான்!
“குழந்தைகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தாங்கள் எழுதும் சிலவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்கிறார், இணையதளத்தின் குற்றப்புகார் மைய மேற்பார்வையாளர் சார்லஸ் பேவலிட்ஸ் (Charles Pavelites, a supervisory special agent at the Internet Crime Complaint Center). உதாரணமாக, “அம்மா வர நேரமாச்சு, நான் சீக்கிரம் வீட்டைச் சுத்தப்படுத்தியாகனும்” அப்படீன்னு எழுதும் ஒரு குழந்தைக்கு, தினமும் தம் பெற்றோர் அலுவலகம் செல்லும் அல்லது வீடு திரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, தங்களையறியாமலேயே ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிடுகிறார்கள் என்று உணர்வதில்லை அப்படீங்கிறாரு சார்லஸ். இதுல இருக்குற சாதக பாதகம் என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.

Thursday, July 9, 2015

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்



           ந்த ஆண்டு ஆவணி மாதம் 6-ஆம் தேதியுடன் (22-8-2013) ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்து 342 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த மகான் இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்து வருகிறார் என்பதற்கு சாட்சியாக பல அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவருடைய புண்ணிய தினத்தில் அவரை வணங்கி, அவருடைய அருளாசியைப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டுகிறோம்.

தர்மபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாப்பாரப்பட்டி எனும் சிற்றூரில், ஸ்ரீராகவேந்திர சுவாமி பிரத்யட்சமாய் காட்சியளித்தார் என்கிற செய்தியைப் படிக்க நேர்ந்தது. அன்று முதல் எனக்கும் பாப்பாரப்பட்டி ஸ்ரீராயர் மடத்தை தரிசிக்கவேண்டும் என்கிற அவா பல்லாண்டுகளாக இருந்துவந்தது. ஆனால் அந்த  பாக்கியம் கிட்டவில்லை. விமானத்தில் ஹைதராபாத் செல்லமுடிகிறது; சதாப்தியில் அடிக்கடி பெங்களூர், மைசூர் என்று போகமுடிகிறது. ஆனால் பாப்பாரப்பட்டி மட்டும் பல்லாண்டுகளாக வாஷிங்டனாகவே எனக்கு இருந்தது. திடீரென்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு தர்மபுரி செல்ல நேர்ந்தது. அன்று மாலையே நான் பாப்பாரப்பட்டி சென்றுவிட்டேன். 

பாப்பாரப்பட்டி ஊரின் உள்ளே நுழைந்து, கடைத் தெருவைத் தாண்டி பாப்பாரப்பட்டி அக்கிரகாரம் என்னுமிடத்தில் அமைந்திருந்தது ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம். ஊரிலிருந்து தனிமைப்பட்டுக் காட்சியளித்தது அந்த இடம். நான்கைந்து மெலிதான வீதிகள்; சுத்தமான சிமெண்ட் சாலைகள்; குட்டை குட்டையான ஓட்டு வீடுகள்; நடுவில் ஓரிரு மச்சு வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பக்கமும் சுகமான திண்ணைகள். மொத்தம் அறுபது வீடுகள்; அனைத்தும் ஒரே மாதிரியாக பளிச்சென்று இருந்தன. அந்த அறுபது வீடுகளிலும் மாத்வ பிராமணர்களே வசித்துவந்தனர்.

என்னுடைய கார் பிருந்தாவனம் அருகே நின்றது. திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்கள் சிலர் என்னைப் பார்த்தார்கள். பல ஆண்களின் உடம்பில் கோபிசந்தன நாமம் அவர்களின் பக்திப் பெருக்கைக் காட்டியது.

என்னோடு பலரும் ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்கள். 

சுமார் எண்பது வருஷத்து பிருந்தாவனம் இது. 

பாப்பாரப்பட்டியில்- மைசூர் சமஸ்தானத்தில் பணிபுரிந்து புகழ்பெற்ற ஒரு குடும்பத்தில், அண்ணன்- தம்பியாகப் பிறந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீனிவாசன் ஆகியோர். திருமணமாகி நீண்டகாலமாகியும் மக்கட்பேறு இல்லாததால், அண்ணனும் தம்பியும் மந்திராலயம் போய் ஸ்ரீராக வேந்திரரை தரிசித்து, 

அவரிடம் மக்கட்பேறுக்காக வேண்டிக்கொள்ள முடிவு செய்தனர். கடைசியில் தம்பி சீனிவாசனும் அவர் குடும்பமும் மந்திராலயம் சென்று சுவாமிகளை வழிபட்டனர். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், தன் அண்ணனான கிருஷ்ணமூர்த்தியை உடனே மந்திராலய சேவையில் கலந்துகொள்ள வரச்சொல்லி கடிதம் எழுதினார் தம்பி ஸ்ரீனிவாசன். கிருஷ்ணமூர்த்தி மறுநாள் மந்திராலயம் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.  அன்றிரவு அவருக்கு ஒரு கனவு தோன்றியது.

"கிருஷ்ணமூர்த்தி... நீ மந்திராலயம் வரவேண்டாம். நானே பாப்பாரப்பட்டிக்கு வருகிறேன்' என்று கனவில் ராயர் சொல்ல, புளகாங்கிதம் அடைந்தார் அவர். இதை தன் மூத்த சகோதரரான அச்சுதனிடம் சொல்ல, 1933-ஆம் ஆண்டு அச்சுதன் மந்திராலயம் சென்றார். அப்போது பட்டத்தில் இருந்த ஸ்ரீசுவாமிகளிடம் நிகழ்ந்ததைச் சொல்ல, பாப்பாரப்பட்டியில் பிருந்தாவனம் அமைக்க மகிழ்வுடன் இசைந்த ஸ்ரீசுவாமிகள், தன் திருக்கரத்தாலேயே புனித மண்ணை (மிருத்திகை) மூல பிருந்தாவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். என்ன அதிசயம்! புனித மண்ணோடு ஒரு சிறிய சாளக்கிராமமும் அதிலிருந்தது. உடனே அச்சுதன்மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, ஸ்ரீசுவாமிகளிடம் அந்த அற்புதத்தைக் காட்டினார்.

சுவாமிகளும் அகமகிழ்ந்து, ""ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்தபோது (1671-ஆம் ஆண்டு), பிருந்தாவனத்தில் எழுநூறு சாளக்கிராமங்களைக் கொட்டி அதை மூடினார்கள். அதிலொன்று உனக்குக் கிடைத்திருக்கிறது. பாப்பாரப் பட்டியில் இதை வைத்து பிருந்தாவனம் பிரதிஷ்டை செய். எதிர்காலத்தில் உங்கள் ஊர் "தக்ஷிண மந்திராலயம்' என்று புகழ்பெறும்'' என்றார்.

23-5-1935, வியாழக்கிழமை, வைசாக சுத்த சப்தமி அன்று பாப்பாரப்பட்டி முள்பாகல் ஸ்ரீ தயாநிதி தீர்த்தர் என்கிற மகானின் திருக்கரங்களால் பிருந்தாவனம் வெகுவிமரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஸ்ரீராகவேந்திரர் இந்த பிருந்தாவனத்தில் வாசம் செய்கிறார் என்பது பல அற்புத நிகழ்வுகளால் தெரியவந்தது. ஒரு சிறிய கிராமம்மந்திராலயத்தைப்போலவே திகழ ஆரம்பித்தது.

பாப்பாரப்பட்டி ஸ்ரீராயரின் பக்தர்களோடு பேசியபோது, அவர்களுடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்ததை கண்களில் நீர்மல்க விவரித்தார்கள். 


சுமார் 60 வயதுள்ள ஒருவரின் மனைவிக்கு கை கால்கள் விளங்காமல் போய்விட்டது. உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் தவித்த தன் மனைவியை பல பெரிய மருத்துவமனைகளில் சேர்த்தும் குணமாக்க முடியவில்லை. இறுதியாக பாப்பாரப்பட்டி பிருந்தாவனத்திற்கு வெகு கஷ்டப்பட்டு அழைத்து வந்தாராம். மனைவியை ஒரு மூலையில் படுக்க வைத்துவிட்டு அவர் பிருந்தாவன தரிசனம் செய்து கொண்டிருந்தாராம். பெரிய கோவில் மணி, ஜாங்கடை, பூஜை மணி ஒலிக்க, ராயருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பக்தியோடு வேண்டிக்கொண்டே மனைவி கிடந்த மூலையைப் பார்த்தாராம். அடுத்த நொடி "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்று அலறிக்கொண்டே ஓடினாராம் அவர். காரணம், அவர் மனைவி மற்றவர்களைப்போலவே நின்றுகொண்டு, மங்கள ஆரத்தியை கைகூப்பிய வண்ணம் தரிசித்துக் கொண்டிருந்தார்! எல்லாம் ராயரின் அனுக்கிரகம்.

""இங்கே முத்தூர் வெங்கட்ராவ் என்கிற பக்தருக்கு ராயர் காட்சி தந்தாராமே? அவர் வீடு எது?'' என்று கேட்டேன்.

""இப்போது அவர் இல்லை. அவரது மகன் கோபாலகிருஷ்ணன் இருக்கிறார். என்னோடு வாருங்கள்'' என்றார் ஒருவர்.

ஒரு சிறிய தாழ்வான ஓட்டு வீடு. வாசல் திண்ணையில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். 

என்னை கோபாலகிருஷ்ணனிடம் அறிமுகப் படுத்தினர். 80 வயதுக்குமேல் ஆனவர் அவர்.

""உள்ளே வாங்கோ...'' என்றழைத்துப் போனார். ஸ்ரீராகவேந்திரரை நேரில் தரிசித்த தன் தந்தை ஸ்ரீமுத்தூர் வெங்கட்ராவின் படத்தைக் காட்டினார். மனைவியோடு அவர் இருந்த புகைப்படம் அது. கண்களில் ஒற்றிக் கொண்டேன். என்ன புண்ணியம் செய்த ஆத்மா அது!

வெங்கட்ராவ் அந்த மடத்தின் சமையல் கலைஞர். ஓர் ஏகாதசி அன்று மடத்தினுள்ளே போய், மறுநாள் காலை துவாதசி என்பதால், ஏழு மணிக்குள் ராயருக்கு நைவேத்தியம் படைக்க வேண்டுமே என்று இரவே அங்கு படுத்துக்கொண்டார்.

""வெங்கிட்டு... கார்த்தால நாலு மணிக்கு வீட்டிலேர்ந்து ஸ்னானம் செஞ்சுட்டுப் போயேன்... பக்கத்துலயே பாம்பு, புழு, பூச்சின்னு எல்லாம் இருக்கு... ஏதாவது ஏடாகூடமாயிடக் கூடாதே?'' என்று நண்பர்கள் தடுத்தார்களாம்.

வெங்கட்ராவ் சிரித்துக்கொண்டே  ""பாம்பா? எல்லாம் ராயர் இருக்கார். பாத்துப்பார்...'' என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஓர் லாந்தர் விளக்கோடு படுத்த வெங்கட்ராவ், இருள் விலகாத அதிகாலையில் கண்விழித்தபோது, எதிரிலிருந்த கிணற்றருகேயிருந்து காவி வஸ்திரங்களோடு ஈரம் சொட்டச் சொட்ட நடந்துபோன ஸ்ரீராகவேந்திரரை அந்த லாந்தர் விளக்கொளியில் பார்த்து பிரமித்துப் போனாராம்!

""இதோ... இதுதான் அப்பா கொண்டுபோன லாந்தர் விளக்கு'' என்றார் கோபாலகிருஷ்ணன்.

அவரோடு பேசிவிட்டு விடைபெற்றபோது, ஓர் மாநிறமான இளம்பெண் என்னை வணங்கினாள்.

""இவள் என் மருமகள்'' என்றார் கோபால கிருஷ்ணன்.

""நீ ஏனம்மா என்னை வணங்குகிறாய். ராயரை நேரில் பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த வள் நீ. ஏழு தலைமுறைக்கும் அந்தப் புண்ணியம் உன்னைக் காப்பாற்றும்'' என்று வாழ்த்தினேன்.

""பல வருஷங்கள் மந்திராலயம் போனதாகவும், 1962-லிருந்து பல புத்தகங்களில் ராய ரைப் பற்றி எழுதி வருவதாகவும் மாமாவிடம் நீங்கள் சொன்னதைக் கேட்டேன். அதனால் உங்களை வணங்கத் தோன்றியது...'' என்றாள்.

எல்லாம் அவரின் அருள்.

ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!

Tuesday, July 1, 2014

தலைவராக இருக்க என்ன தேவை ? ' 9 சி '

தலைவர் ஆகலாம் .

தலைவராக இருக்க என்ன தேவை ?


ஒருவர் எப்படித் திடுதிப்பென்று தலைவராக முடியும் ?



அதற்குத் தேவையான பண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது ?


இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்விதாமாக , " வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான் ? ' ( ' Where Have All The Leaders Gone ? ' ) என்ற சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகியிருக்கிறது . இதை எழுதியிருப்பவர்கள் , பிரபல மேலாண்மை நிபுணர் , உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லீ அயகோக்கா மற்றும் கேதரின் விட்னி .
இதற்கு , இவர்கள். 9 சி தேவை என்கிறார்கள் . ' 9 சி ' என்பது ' சி ' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒன்பது முக்கியமான குணங்களைக் குறிக்கிறது .
1 . Curiosity -- ஆர்வம் .
2 . Creativity -- படைப்புத்திறன் / புதுமைச் சிந்தனை .
3 . Communication -- தகவல் தொடர்பு .
4 . Character -- ஒழுக்கம் .
5 , Courage -- தைரியம் .
6 . Conviction -- உறுதி .
7 . Charisma -- ஈர்ப்பு / கவர்சிகரமான ஆளுமை .
8 . Competence -- திறமை / தகுதி .
9 . Common Sense -- யதார்த்த அறிவு .
எப்பேர்ப்பட்ட தலைவரும் , அந்தரத்தில் கொடிகட்ட முடியாது . எத்தனை சிறப்பான லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்தாலும் , எதார்த்தத்தைப் புரிந்து தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப் பெரிய வெற்றியடைகிறார்கள் .
இந்த 9சியில் உங்க ஸ்கோர் என்ன ? எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைப்படுகிறது ? சட்டென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத் தயாராகிக்கொள்ளூங்கள் , நீங்களும் தலைவராகலாம் .

urs - www.v4all.org