Wednesday, August 13, 2014

நல்ல புத்தகம் - ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி !



புத்தகம் பற்றிய பொன் மொழிகள்:-
---------------------------------------------------------
1. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
2. ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி !
- ஜூலியஸ் சீசர்
3. உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக் கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
- டெஸ்கார்டஸ்
4. போதும் என்று நொந்து போய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி
வாசிக்கத் தொடங்கு...
- இங்கர்சால்
5. சில புத்தகங்களை சுவைப்போம்... சிலவற்றை அப்படியே விழுங்குவோம்... சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
- பிரான்சிஸ் பேக்கன்
6. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கி களை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
- லெனின்
7. உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
- ஆஸ்கார் வைல்ட்
8. உடலுக்கு எப்படி உடற் பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
- சிக்மண்ட் ஃப்ராய்ட்
9. பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ...
- மாசேதுங்
10. ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்... வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.
- சாமுவேல் ஜான்சன்


Urs Happily

Dr.Star Anand Ram
www.v4all.org

No comments:

Post a Comment