Monday, November 30, 2015

WHAT HAPPENS IN HEAVEN WHEN WE PRAY?

WHAT HAPPENS IN HEAVEN WHEN WE PRAY?

This is one of the nicest e-mails I have ever seen !!

I dreamed that I went to Heaven and an angel was showing me around. We walked side-by-side inside a large workroom filled with angels. 

My angel guide stopped in front of the first section and said, 'This is the Receiving Section. Here, all petitions to God said in prayer are received.

I looked around in this area, and it was terribly busy with so many angels sorting out petitions written on voluminous paper sheets and scraps from people all over the world.

Then we moved on down a long corridor until we reached the second section.

The angel then said to me, "This is the Packaging and Delivery Section. Here, the graces and blessings the people asked for are processed and delivered to the living persons who asked for them." 

I noticed again how busy it was there. There were many angels working hard at that station, since so many blessings had been requested and were being packaged for delivery to Earth.

Finally at the farthest end of the long corridor we stopped at the door of a very small station. 

To my great surprise, only one angel was seated there, idly doing nothing. "This is the Acknowledgment Section, my angel friend quietly admitted to me. He seemed embarrassed.

 "How is it that there is no work going on here? I asked."

"So sad," the angel sighed.

 "After people receive the blessings that they asked for, very few send back acknowledgments."

"How does one acknowledge God's blessings? "I asked.

"Simple," the angel answered. Just say, "Thank you, Lord."

"What blessings should they acknowledge?" I asked.

"If you have food in the refrigerator, clothes on your back, a roof overhead and a place to sleep you are richer than 75% of this world.If you have money in the bank, in your wallet, and spare change in a dish, you are among the top 8% of the world's wealthy, and if you get this on your own computer, you are part of the 1% in the world who has that opportunity."

"If you woke up this morning with more health than illness.. You are more blessed than the many who will not even survive this day."

"If you have never experienced the fear in battle, the loneliness of imprisonment, the agony of torture, or the pangs of starvation... Youare ahead of 700 million people in the world."

"If you can attend a place of worship without the fear of harassment, arrest, torture or death you are envied by, and more blessed than, three billion people in the world."

"If your parents are still alive and still married.... you are very rare."

"If you can hold your head up and smile, you are not the norm, you'reunique to all those in doubt and despair......."

"Ok," I said. "What now? How can I start?"

The Angel said, "If you can read this message, you just received a double blessing in that someone was thinking of you as very special and you are more blessed than over two billion people in the world who cannot read at all."

Have a good day,count your blessings, and if you care to, pass this along to remind everyone else how blessed we all are..........

ATTN: 
Acknowledge Dept.

"Thank you Lord, for giving me the ability to share this message andfor giving me so many wonderful people with whom to share it." 😊🙏😊

கணபதி ஹ்ருதயம்

கணபதி ஹ்ருதயம்
இந்த மந்த்ரம் கணபதியின் 21 நாமாக்கள் அடங்கியது.
சிவனிடம், நீங்கள் யாரை த்யானம் செய்கிறீர்கள் என்று கங்கா தேவி கேட்ட்தற்கு, கணபதி ஹ்ருதயத்தை சிவன் அவளுக்கு உபதேசம் செய்வதாக முத்கள புராணம் சொல்லும்.

ரிஷி- சம்பு
சந்தஸ்- நானாவித சந்தஸ்

கணேசம் ஏக தந்தம்ச சிந்தாமணி விநாயகம் 
டுண்டிராஜம் மயூரேசம் ச லம்போதர கஜாந்னௌ!!

ஹேரம்பம் வக்ர துண்டம்ச ஜ்யேஷ்ட ராஜம் நிஜஸ்திதம்.

ஆசா  பூரம்து வரதம் விகடம் தரணீதரம் ஸித்தி புத்தி பதிம் வந்தேப்ரும்மணஸ்பதி சம்ஞிதம்

 மாங்கல் யேசம் சர்வ பூஜ்யம் விக்னானாம் நாயகம் பரம் 
ஏகத் விம்சதி நாமாநி கணேசஸ்ய மகாத்மன:

அர்நேக சம்யுதா நிசேத் ஹ்ருதயம் பரிகீர்த் திதம்.

மந்திரங்கள்
1. ஏகாக்ஷர கணபதி: (கணபதி அருள் கிடைக்க)

மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம:

2. மகாகணபதி : (பரிபூரண சித்தி)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

ஹஸ்தீந்த்ரா நநமிந்து சூடமருணச் சாயம் த்ரி நேத்ரம் ரஸாத்
ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ் வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர-கதேக்ஷú- கார்முக-லஸச்-சக்ராப்ஜ-பாசாத்பல
வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந் ஹஸ்லதர வஹந்தம் பஜே

3. மோகன கணபதி : (எப்போதும் பாதுகாப்பு)

ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா

4. லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)

அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !

இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:

ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
கும்பாங்குசாந்
பாசம் கல்பலதாம் ச கட்க வில
ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
ச்யாமே நாத்த-ஸரோருஹேண
ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
லக்ஷ்மி கணேசோவதாத்

5. ருணஹர கணபதி : (கடன் தொல்லை நீங்க)

ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்

6. மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

7. ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)

ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

8. வக்ரதுண்ட கணபதி : (அதிர்ஷ்ட லாபம்)

வக்ர துண்டாய ஹும்

9. நிதி கணபதி : (செல்வம் கிட்ட)

ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா துமான்:
ர÷க்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய ஹும் !!

10. புஷ்டி கணபதி :

ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா

11. பால கணபதி : (மகிழ்ச்சி)

ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா

கரஸ்த-கதளீ சூத
பநஸேக்ஷúக- மோதகம்
பால ஸுர்ய- நிபம் வந்தே
தேவம் பால கணாதிபம்

12. சக்தி கணபதி : (எல்லாக் காரியமும் நிறைவேற)

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம்
பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம்
பயாபஹம் சக்தி கணேசமீடே 

13. ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா

14. க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர)

ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:

15. குக்ஷி கணபதி : (நோய் நீங்க)

ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

16. சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)

ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா

17. சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)

ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா

18. ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)

ஓம் கூம் நம:

19. விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)

ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா

பாசாங்குச-ஸ்வதந் தாம்ர
பல வா நாகு வாஹந
விக்நம் நிஹந்து ந: ஸர்வம்
ரக்தவர்ணோ விநாயக

20. அர்க்க கணபதி : (நவக்கிரக சாந்தி)

ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

21. உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)

ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா

நீலாப்ஜ-தாடியீ-வீணா
சாலி- பாசாக்ஷஸுத்கரம்
தததுச் சிஷ்ட- நாமாயம்
கணேச: பாது மேசக

22. விரிவிரி கணபதி : (விசால புத்தி)

ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே
வசமானய ஸ்வாஹா

23. வீர கணபதி : (தைரியம் வர)

ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்

வேதாள சக்தி-சர- கார்முக- சக்ர-கட்க
கட்வாங்க-முத்கர-கதாங்குச-நாகபாசாந்
சூலம் சகுந்த-பரக-த்வஜமுத்ஹந்தம்
வீரம் கணேசமருணம் ஸததம் ஸ்மராமி

24. ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும் நீங்க)

ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா

25. விக்னராஜ கணபதி : (ராஜயோகம்)

ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா

சங்கேக்ஷú-சாய-குஸுமேஷு குடார- பாச
சக்ர-ஸ்வதந்த-ஸ்ருணி-மஜ்சரிகா-சராத்யை
பாணிச்ரிதை-பரிஸமீஹித பூஷணஸ்ரீ
விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌர

26. ராஜ கணபதி

ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா

27. துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:

28. யோக கணபதி :

ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:

29. நிருத்த கணபதி : (கலை வளர)

ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:

பாசாங்குசா பூப-குடார-தந்த
சஞ்சத்-கராக்லுப்த-வராங்குலீநம்
பீதப்ரபம் கல்பதரோ ரத: ஸ்தம்
பஜாமி ந்ருத்தோய பதம் கணேசம்

30. ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும் வெற்றி)

ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
திலமோதகை: ஸஹ 
உத்வஹந் பரசுமஸ்து தேநம
ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா

31. புத்தி கணபதி : (கல்விப் பேறு)

ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா

32. மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)

ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

33. மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)

ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா

34. குரு கணபதி : (குருவருள் உண்டாக)

ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:

35. தூர்வா கணபதி : (தாப நீக்கம்)

ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
தூர்வா கணேசாய ஹும்பட்

36. அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய)

ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா

37. பக்த கணபதி

நாளிகேராம்ர- கதளீ
குடபாயாஸ- தாரிணம்
சரச்சந்த்ராய- வபுஷம்
பஜே பக்தகணாதிபம்

38. த்விஜ கணபதி

ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ தந்ய

39. க்ஷிப்ர கணபதி

தந்த-கல்பலதா- பாச
ரத்ன கும்பாங்கு சோஜ்வலம்
பந்தூக-கமநீயாபம்
த்யாயேத் க்ஷிப்ர-கணாதிபம்

40. ஹேரம்ப கணபதி

அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா
ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா

41. ஊர்த்வ கணபதி

கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண
தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க
ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா
தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந

42. ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய
ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்

43. வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்
(குமார சம்ஹிதையில் காண்பது)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி
வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

44. கணபதியைக் குறித்து வரும் ரிக்வேத மந்திரம்

கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்

45. கணபதி உபநிஷத் தரும் மந்திரம்

நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:

46. கணேசர் மாலா மந்திரம்

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர,  வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே

ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே

ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : ÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.

47. ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர :

ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய
தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய
சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு
வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி
ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய
ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய
ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய
ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
கணபதயே ஹும் பட் ஸ்வாஹா

48. போக கணபதி (ஸகலபோகப்ரதம்)

அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ

கராங்கந்யாஸ:

ஓம்
ஹ்ரீம்
கம்
வசமானாய
ஸ்வாஹா   இதி கராங்கந்யாஸ :
ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் கம்  வசமானய ஸ்வாஹா

தியானம்

பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம் போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம் குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை: கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி

ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா பாவயேத் தேவ வந்த்யம்:

லமித்யாதி பூஜா
மந்த்ரா :

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :
தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்பணம்

49. கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ மந்த்ர :

அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

கராங்கந்யாஸ:

ஓம் ச்ராம்
ச்ரீம் ச்ரீம்
ஹ்ரீம் ச்ரூம்  இதி கராங்கந்யாஸ :
க்லீம் ச்ரைம்
க்லௌம் ச்ரௌம்
கம் ச்ர:

தியானம்

முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்யை: நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம் பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி

லமித்யாதி பூஜா
மந்த்ர:

ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ: திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா

ஸமர்ப்பணம்.

50. குமார கணபதி (மாலா மந்த்ர:)

ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத் குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய குஹாக்ரஜாய கஜவதனாய கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான் சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம் கணபதயே நம:

51. ப்ரயோக கணபதி (மாலா மந்த்ர)

ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய பவ பந்த விமோசனாய ஹ்ரீம் ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள: ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத் ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம் மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய  கேம் கேம் மாரய மாரய சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான் நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம் நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :

52. தருண கணபதி (தியானம்)

பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ
ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:

மந்த்ர :

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய
யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய கணபதயே நம:

53. ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி)

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்
க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ நமாம்யஹம்:

54. நவநீத கணபதி (மனோவச்யம்)

ஐம் ஹ்ரீம் ச்ரீம் ஓம் க்லௌம் நவநீத கணபதயே நம:

55. மேதா கணபதி (மேதாபிவ்ருத்தி)

மேதோல்காய ஸ்வாஹா:

56. வாமன கணபதி (விஷ்ணு பக்தி)

ஓம் வம் யம் ஸெளபாக்யம் குரு குரு ஸ்வாஹா:

57. சிவாவதார கணபதி

ஓம் ஸ்ரீம் த்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ கணபதயே ஓம் சிம் வர வரத ஓம் வாம் ஸர்வ ஜனம் மே ஓம் யம் வசமானய ஸ்வாஹா:

58. ரக்த கணபதி (வச்யஸித்தி)

ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய ரக்த மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ஹும் ஹும் ஹும் கே கே ரக்த களேபராய தயாபராய ஸ்வாஹா :

59. ப்ரம்மணஸ்பதி

1. ஹ்ரீம் ச்ரீம் க்லீம் நமோ கணேச்வராய ப்ரும்ம ரூபாய சாரவே
ஸர்வஸித்தி ப்ரதேயாய ப்ரம்மணஸ்பதயே நம:

2. நமோ கணபதயே துப்யம் ஹேரம்பாயைக தந்தினே ஸ்வானந்த
வாஸினே துப்யம் ப்ரம்மணஸ்பதயே நம:

60. மஹா கணபதி ப்ரணவமூலம்
ஓம்

த்வநி மந்திரம்

ஓம் ஸ்ரீம் விக்நேச்வர ஆஹுவாஹனாய சிவசிவ லம்போதராய வக்ரதுண்டாய ஸுர்ப்ப கர்ணாய ஸித்தி விநாயகாய ஸ்ரீம் மஹா கணபதயே க்லீம் ஸ்ரீம் ஸெளம் ஐம் ஹ்ராம் ஹ்ரீம்

சதாசிவ கணபதி

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் ஈம் நம் ஆம் ஹம் ஸம்பன்னுவஸ்ச ஸதாசிவ கணபதயே வரவரத ஸர்வ ஜகம் மே வசமானய ஸகலைச் வர்யம் ப்ரயச்ச ஸ்வாஹா

பெருந்தலைவர் காமராஜர் - ஜீவா

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக
இருந்த போது,  சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.

அப்போது,  தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்
ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
என்று கேட்டார்" ஜீவா.
"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
என்று கேட்டு  ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, 
"நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை, 
உட்கார வைக்க,
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,
 பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்"
என்றார் காமராஜர்.

"காமராஜ்,
நீ முதலமைச்சர், 
நீ திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச
 நீ இல்லாம, 
நான் எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்,  காமராஜர்,

"அப்படின்னா,
 நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்" 
என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு,
காய வைச்சு,
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின் வறுமை,  காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், 
"ஜீவாவின்
மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.

ஆனா,

நான் கொடுத்தா,  அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.

அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி, 

"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.

உடனே,  
நான் வேலை 
போட்டுத் தர்றேன்...

ஆனா, 
இந்த விஷயம் 
வேறு யாருக்கும்
தெரியக்கூடாது

அவன் முரடன், 
உடனே வேலையை 
விட வைச்சுடுவான் 

என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே 
ஜீவாவுக்குத்
தெரியாமல், 
அவருடைய
மனைவிக்கு 
அரசு வேலை 
கொடுத்தார்
காமராஜர்.

அதற்குப் 
பின்னரே 
ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா 
இருவருடைய நட்பும்
வார்த்தைகளால் 
வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு 
சென்னை அரசு பொது 
மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... "காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.

இனி எங்கே 
காணமுடியும்..?

இது போன்ற
தலைவர்களை.

அடித்தட்டு 
மக்களோடு மக்களாக, 

வறுமையை உணர்ந்த, 
பகிர்ந்த தலைவர்கள்,

கர்மவீரர்  
காமராஜர், 
ஜீவா,
கக்கன்
போன்ற தலைவர்கள்.

இதை பகிரலாம் 
என்று நினைத்தால்,

செய்யலாமே... !! 
நண்பர்களே....!!
மழை நீர் பிராணன் 
---------------------------
மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். 

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும். 

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். 

குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து. 

எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக. 

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அமைதியும் 
 ஆரோக்கியமும்)

ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்! – அரியதோர்வரலாற்று நிகழ்வு...

ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்! – அரியதோர் வரலாற்று நிகழ்வு... 

ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சித் தரும் கடிதம்! – அரியதோர் வரலாற்று நிகழ்வு

👉அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர் களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால்,
பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

👉பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார் த்துக் கொள்ளுங்கள். 

👉எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங் கிப்போவது, கோழைத்தனம் என புரிய வையுங்கள்.

👉புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். 

👉அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதி சயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள். வானில் பறக்கும் பட்சிகளி ன் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தை யும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத் தாருங்கள் அவனுக்கு.

👉ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வ ளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். 

👉மற்றவர்கள் தவறு என விமர்சித்தா லும்கூட, சுயசிந்தனைமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

👉மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவ ர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள். 

👉அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண் டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றைமட்டும் பிரித்தெடு க்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

👉துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். 

👉கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரிய வையுங்கள்.

👉 போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக
இருக்கவும் அவனுக்கு பயிற்சிகொடுங்கள். 

👉அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

👉சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவ னுக்கு ஊட்டுங்கள். அதே வேளையில் தனது வலி மையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையை யும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். 

இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்… இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

Thursday, November 26, 2015

கண் திருஷ்டி கண்டு பிடிக்க போக்க .......

கண் திருஷ்டி கண்டு பிடிக்க போக்க .......
கண் திருஷ்டி உள்ளதை எப்படி உணருவது?

நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்

ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்க்கலாம்.

- www.v4all.org

மீன் விற்கும் ஒரு பெண்ணு

மீன் விற்கும் ஒரு பெண்ணு, பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும்  பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. 'இரவு நன்கு தூங்கினாயா?' எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, 'அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை...' என, சொன்னாள் மீனம்மா.
'அப்படியா... ஏண்டி?'
'உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை...' என்றாளாம் மீனம்மா.
மனிதர்கள் பலரும், இப்படித் தான் இருக்கின்றனர். வழக்கத்திற்கு மாறான எது ஒன்றை பற்றியும், மலைத்துப் பேசுகின்றனர்; மறுக்கின்றனர். செயலில் இறங்கும் முன்பே, குரலிலேயே களைப்பு காட்டுகின்றனர்.
'என் கூட வேலை பார்க்கிறவரோட மகன் கல்யாணம்; வா... போயிட்டு வரலாம்...' என கணவர் அழைக்கிற போது, பெரும்பாலான மனைவியர் சொல்கிற பதில்... 'எனக்கு அங்கே யாரையுமே தெரியாது; நான் தனியா உட்கார்ந்திருக்கணும். உங்களுக்கு, உங்களோட வேலை செய்யுறவங்களைக் கண்டா, தலை கால் புரியாது. என்னை, 'அம்போ'ன்னு விட்டுடுவீங்க. நான் வரலை; நீங்க போயிட்டு வந்தாப் போதும்; ஆளை விடுங்க...'
இந்த வசனங்களில், சில மாறுதல் இருக்கலாமே தவிர, பதில் என்னமோ மறுப்பு தான்; பதில் என்னவோ அலுப்பு தான்.
முதன் முதலில் பள்ளியில் சேர்த்த போது, நாம் அழ அழக் கொண்டு போய், இரக்கமில்லாமல் பள்ளியில் விட்டனர். அங்கு யாரைத் தெரிந்தது... பின், பெற்றோரை விடவும், தோழர்கள், தோழிகள் நமக்குப் பெரிதாகி விடவில்லையா?
வங்கி, தபால் நிலையம்...
'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!' 'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!'
எங்கே போனாலும், சிவப்புக் கம்பள வரவேற்பும், ராஜமரியாதையும் எதிர்பார்க்கிற குணம், என்ன குணம்!
பள்ளி மற்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு இருக்கிற வெளி உலகமும், ஒரு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தான்; அது, எத்தனையோ பாடங்களை பயிற்றுவிக்கிறது. அறிமுகமாகிற நபர்கள், நூற்றுக்கணக்கான டியூஷன் வகுப்புகளை, காசு வாங்கிக் கொள்ளாமல், நமக்கு நடத்துகின்றனர்.
வாழ்வின் உண்மையான சுவையை, நன்கு உணர வேண்டுமானால், முதலில், மனச்சிறகுகளை விரிக்க வேண்டும்.
'எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது; ஒரு கஷ்டமும் கூடாது. மேனா மினுக்கிகளாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறேன்...' என்று எதிர்பார்க்கும் வாழ்க்கை, தேங்கிப் போன குட்டைக்குச் சமம்.
அருவியாய் மாறி, ஆறாய் ஓடி, கடலாய் பரந்து, வாழ்வின் மறுபக்கங்கள் இன்னின்ன என்பதை, உணரத் தலைப்பட முன்வர வேண்டும்.
'என் மகளை, கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்துட்டேன்; நீங்களும் இவளை மகளைப் போலப் பார்த்துக்கணும்...' என்று, கன்னிகாதானத்தன்று, கைத்தலம் பற்றக் கொடுக்கிற தாய் - தந்தையை, நல்ல பெற்றோராக நான் கருதவில்லை.
'எல்லாத்தையும் நல்லாவே கத்துக் கொடுத்திருக்கோம்; நாங்க விட்டதை நீங்க சொல்லிக் கொடுங்க...' என்றல்லவா ஒப்படைக்க வேண்டும்?
தாய் வீட்டில் சங்கிலியிட்டு வளர்த்தால் தான், புகுந்த வீடு, பூமாலைத் தோரணமாகப்படும்.
ஒரு சொல் கூடத் தாங்காத பெண்ணாக ஒருத்தியை வளர்த்தால், அது ஒரு மாத, ஒரு ஆண்டு கதையாக ஆகிவிடும்.
இடைஞ்சல்களே இல்லாத தொழில், திட்டாத அதிகாரி, தண்டிக்காத முதலாளி, கொடுத்தாலொழிய வாடகை கேட்காத வீட்டுக்காரர், தவறைச் சுட்டிக் காட்டாத நண்பன் என்றெல்லாம் எதிர்பார்த்து, அப்படி அமையாத போது, இவர்கள் நொந்து கொள்கின்றனர்.
எந்த ஒரு மனிதனது வாழ்க்கையும், மலர் பாதையால் அமைக்கப்பட முடியாது. இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!
ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை ரசிக்கிறோம். ஆனால், அது மோசமான உருவத்தோடு தான், தன் பயணத்தை, மலையிலிருந்து துவங்கியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!
'எனக்கு எந்தக் கஷ்டமும் தராதே... எல்லாம் நல்லபடி நடக்கணும்!' எனக் கடவுளிடம் வேண்டும் பக்தன், தவறு செய்கிறான்.
'எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத்திடத்தை, பலத்தை எனக்குத் தா...' என வேண்டுபவனே நடைமுறையாளன்.
நூலாம் படையை, சங்கிலியாக எண்ணுவதைக் கைவிட வேண்டும். சங்கிலியை, நூலாம்படையாக ஆக்குவது நம் சாதுரிய அணுகுமுறையில் இருக்கிறது.

லேனா தமிழ்வாணன்


விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை
வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை:

நீல் ஆம்ஸ்ட்ராங்...

இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...

ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...

பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். 
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...

"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை... 
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது... 
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...

நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...

தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...

அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...

ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...

சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்து கொண்டிருப்போம்...

எனவே, நல்ல விஷயங்களில்...

தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிர்ப்போம்.

இந்த பிரபஞ்சம் அபரிதமான விசாலமானது

இந்த பிரபஞ்சம் அபரிதமான விசாலமானது. எத்தனை நட்சத்திரங்கள்? எத்தனைக் கோள்கள்? அதை விடுங்கள். இந்த உலகில் எத்தனை உயிரினங்கள்? நமக்கு எத்தனை  சொந்தக்காரர்கள்? எத்தனை உறவுகள் நமக்கு? எத்தனை நண்பர்கள்? நாம் யாருக்காக வாழ வேண்டும்? நமக்காகவா? நம் வாழ்க்கைத் துணைக்காகவா? நம் குழந்தைகளுக்காகவா? நம் உறவினர்களுக்காகவா? நண்பர்களுக்காகவா? அல்லது இந்த சமுதாயத்திற்காகவா? மேலே படியுங்கள்.....

 நாம் தெரிந்தோ தெரியாமலோ இந்த உலகில் பிறந்து விட்டோம். நாம் முதலில் நமக்காக வாழ வேண்டும். குழந்தைகளாக இருக்கும் போது நம் பெற்றோர்களுக்காக வாழலாம். பெரியவர்களாக ஆனா பின், நாம் நம் நண்பர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும்  வாழலாம். திருமணம் ஆன பின் கணவன் அல்லது மனைவிக்காக வாழலாம். பின் குழந்தைகளுக்காக நாம் வாழ ஆரம்பித்து விடுகிறோம்.

நாம் பிறருக்காகவும் கொஞ்சம் வாழப் பழக வேண்டும். நம் குடும்ப தேவைகள் பூர்த்தி ஆன பின் நாம் பிறருக்கு கொஞ்சம் நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம். பண உதவி செய்ய முடியாதவர்கள் மற்ற உதவிகளை செய்யலாம் அல்லவா?

நாம் நமக்குப் பின்னால் வாழப் போகிறவர்களுக்காகவும் வாழ வேண்டும். எப்படி என்கிறீர்களா? இந்த பூமியின் சுற்றுப்புறசூழலைக் கெடுக்காமல், மாசுப் படுத்தாமல்  பின் வரும் சந்ததியருக்கு விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

நாம் நம்மை அறியும் போது (self realization) இந்த உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடத்தும் அன்பு பிறக்கிறது. நாம் நமக்காக மட்டுமில்லாமல் பிறருக்காகவும் வாழ ஆரம்பிப்போம். 

நாம் யாருக்காக வாழ வேண்டும்? நாம் நமக்காகவும், நம்மை சுற்றியுள்ளவர்களுக்காகவும் மற்றும் எல்லா உயிரினங்களுக்காகவும் வாழ வேண்டும். 

வாழ்க வளமுடன்!

- www.v4all.org

நீங்களும் தலைவர் ஆகலாம்!

நீங்களும் தலைவர் ஆகலாம்! 
கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவர், சிறந்த
தலைவராய் இருக்க முடியாது’ என்கிறார்
அரிஸ்டாட்டில்.

நமது வரலாற்றையோ, வாழ்க்கையையோ புரட்டிப்
பார்த்தாலே பல தலைவர்கள் சட்டென நமது
கண்ணுக்குப் புலப்படுவார்கள்.

நெல்சன் மண்டேலா நமது மனக்கண்ணில்
புன்னகையுடன் வருவார். அடுத்த வினாடியே இறுகிய
கண்களுடன் ஹிட்லரும் வரலாம்.

அன்னை தெரசா மனதில் சிரிக்கும் அடுத்த
வினாடியில் ராஜபக்சேவும் எட்டிப் பார்க்கலாம்.

சிலர் அவர்களுடைய நல்ல பண்புகளுக்காகவும், சிலர்
அவர்களுடைய கொடூர பண்புகளுக்காகவும்
நமது மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.

தலைவர்கள் எந்த நிறத்திலோ, எந்த வடிவத்திலோ
இருக்கலாம். 

ஒல்லிப்பிச்சானாய், ஆறடி உயரத்தில்
மனதில் தோன்றும் ஆபிரகாம் லிங்கனாகவும்
இருக்கலாம், சக்கர நாற்காலியில் வலம் வரும்
ரூஸ்வெல்டாகவும் இருக்கலாம்.

முதுமையின் சுருக்கம் முகமெங்கும் கூடாரமிட்டிருக்கும்
கிருஷ்ணாம்பாளாகவும் இருக்கலாம், பளிச்
ஆடையுடன் வலம் வரும் பில்கேட்ஸ் ஆகவும் இருக்கலாம்.

தலைவர்கள் யாரும் ரெடிமேடாய்
செய்யப்படுபவர்கள் அல்ல. 

மக்களிடையே இருந்து
புறப்பட்டு வருபவர்கள் தான்.

ஒரு குழுவில் பத்து பேர் இருப்பார்கள். ஒருவர்
தலைவராகிவிடுவார். 

ஒரு நிறுவனத்தில் பல்லாயிரம்
பேர் இருப்பார்கள். ஒரு சிலர் தலைவர்களாகி
விடுவார்கள். 

அந்த குறிப்பிட்ட மனிதர்களை
கொஞ்சம் கவனித்துப் பார்த்தால்
அவர்களிடம் ஏதோ ஒரு ‘ஸ்பெஷாலிட்டி’ இருப்பது
புரியும்.

தலைவர்களாக வேண்டும் என்ற விருப்பம் நம்மிடம்
இருந்தால், இந்த சிறப்புத் திறமைகளைக் கண்டறிந்து
அவற்றை வளர்த்துக் கொண்டாலே போதுமானது!

மனதளவில் உற்சாகமாக இருக்க வேண்டியது
தலைவருடைய முதல் பண்பு. 

உற்சாகமாக இல்லாத
ஒரு தலைவரால் தனது குழுவையும் உற்சாகமாக
வைத்திருக்க முடியாது. 

ஏகப்பட்ட எரிச்சல்கள்,
கஷ்டங்கள், மன அழுத்தம் இவையெல்லாம்
இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி மனதை
உற்சாகமாய் வைத்திருக்க வேண்டியது தலைவருக்கான
முக்கியமான தகுதிகளில் ஒன்று.

‘கற்காலத்தில் தலைவர்கள் உடல் பலத்தால்
நிர்ணயிக்கப்பட்டனர். 

தற்காலத்திலோ, மக்களோடு
இரண்டறக் கலக்க முடிபவர்களே நல்ல தலைவர்கள்’
என்கிறார் மகாத்மா காந்தி.

தலைவர் என்பவர் மக்களோடு கலந்து அவர்களுக்கு
முன்னால் செல்லும் ஒரு நல்ல உதாரணமாக
இருக்க வேண்டும். தான் எல்லோருக்கும் பணியாளன்
எனும் மனநிலை உடையவனே மிகச் சிறந்த தலைவன்.

‘சாரி… மறந்துட்டேன்’ என நாம் சகஜமாகச்
சொல்லும் வார்த்தை தலைவருடைய
அகராதியிலேயே இருக்கக் கூடாது.

ரொம்ப நேர்த்தியாக எல்லா
செயல்களையும் ஒழுங்குபடுத்திச் செய்ய
வேண்டியது அவருடைய மிக முக்கியமான பணி. 

எதை எந்த
நேரத்தில் செய்ய வேண்டும் எனும் சிறப்பான
திட்டமிடல் ரொம்ப அவசியம்.

தலைவர் என்பவர் எல்லா வேலைகளையும் செய்பவர்
அல்ல! எல்லா வேலைகளையும் செய்ய வைப்பவர்.

யாரிடம் எந்த வேலையைக் கொடுக்கலாம், எந்த
வேலையைக் கொடுக்கக் கூடாது, அவர்களிடம்
நாசூக்காய் வேலை வாங்குவது எப்படி எனும்
சூத்திரங்களெல்லாம் ஒரு நல்ல தலைவனின்
அடையாளங்கள்.

ஜெய் தீசன் என்பவர் 5 மில்லியன் டாலர்
மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர்.

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உழைப்பவர்.

நல்ல தலைமைப் பண்புகள் கொண்ட அவரிடம்
யாராவது பைல் கொண்டு வந்து
கையொப்பமிடச் சொன்னாலோ,
மெயில் வாசித்து பதில் போடச்
சொன்னாலோ ‘நேரமில்லை, அப்புறம்
பார்க்கலாம்’ என்று ஒதுக்கி வைப்பார்.

அன்று இரவு அந்த வேலைகளையெல்லாம் வீட்டில்
வைத்து முடித்துவிட்டு அலுவலகத்துக்கு வருவார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவர் ஒரு ரகசியத்தை
வெளியிட்டார்- ‘எனக்கு எழுதப் படிக்கத்
தெரியாது!’.

உடன் பணிசெய்தவர்களெல்லாம்
அதிர்ந்தனர். 

இப்படி ஒரு குறையை வெளியே
தெரியாமல் எப்படி மறைத்தார் என
ரொம்பவே வியந்தனர்.

தனது 56வது வயதில்தான் கொஞ்சம்
எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார் அவர்.

‘மக்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று
சொல்லுங்கள், எப்படிச் செய்ய
வேண்டுமென சொல்லாதீர்கள்.

அப்போதுதான் வியப்பூட்டும் வகையில் வேலை சிறப்பாக
நடக்கும்’ என்கிறார் ஜார்ஜ் எஸ் பேட்டன்.

இது மக்களுடைய உண்மையான திறமைகளை
வெளிக்கொணரும் நல்ல முயற்சி என்பதைத்
தலைவர்கள் அறிவார்கள்.

தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு
குணம் தைரியம்.

சில முடிவுகள் எடுக்கும் போது மன திடம் ரொம்பவே
தேவைப்படும். 

தோல்வியை நேர்மையாய் ஏற்றுக்
கொள்வதும் தைரியத்தின் ஒரு பாகமே!

சொல்லப்படாத ஒரு விஷயம் எப்போதும்
கேட்கப்படுவதில்லை. 

தேவையான விஷயங்களை பகிர்ந்து
கொண்டே இருப்பது முக்கியமான தலைமைப்
பண்பு. 

அதே போல, பிறர் பேசுவதைக் பொறுமையுடன்
கேட்பதும் தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதி.

அப்படிக் கேட்கும்போது தான் பல்வேறு விதமான
ஐடியாக்கள் தலைவருக்குக் கிடைக்கும். 

மக்களும்
உற்சாகமடைவார்கள்.

தனது மக்களைப் பற்றித் தெரியாதவர் நல்ல
தலைவராய் இருக்க முடியாது. வெறும் அலுவலக
விஷயங்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட
விஷயங்களையும் தெரிந்திருப்பது தலைவருக்கும்,
அவருடைய குழுவுக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும்.

தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனையும் தலைவருக்குத்
தேவையான இரண்டு விஷயங்கள். 

தலைவருக்கே
தன்னம்பிக்கை இல்லையேல் குழுவும் தன்னம்பிக்கை
இல்லாமல் தான் இருக்கும்.

குழப்பமான வேளையில் வழிகாட்ட வேண்டியது
தலைவருடைய இன்னொரு பணி. 

மற்றவர்களை
உற்சாகப்படுத்தி அந்த சூழலை எதிர்கொள்ள
வைப்பது அவருடைய சிறப்புத் தகுதி. 

வேலையைச் சரியாய்
செய்வது மட்டுமல்ல, சரியான வேலையைச்
செய்வதும் ஒரு தலைவரிடம்
கொடுக்கப்பட்டிருக்கும் கடமையாகும்.

தலைவர் என்பவர் நம்பிக்கைக்குரியவராய்
இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும்
இல்லை. 

குழுவினருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பவராக
இல்லாமல் போனால் ஒருவர் நல்ல தலைவராகப்
பரிமளிக்க முடியாது.

எல்லோருமே ஒரு திறமைசாலியைத் தலைவராகக்
கொண்டிருக்கவே விரும்புவார்கள். 

எனவே
தலைவருக்கு நல்ல திறமைகள் இருக்க வேண்டியது அவசியம்.

தனக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்து
கொள்வதும், அந்தத் திறமைகளைப்
பயன்படுத்துவதும், புதிய திறமைகளை வளர்த்துக்
கொள்வதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய
முக்கியமான குணங்களாகும்.

பல தலைவர்கள், திட்டுவதற்குக் காட்டும் ஆர்வத்தைப்
பாராட்டுவதற்குக் காட்டுவதில்லை. 

தனது குழுவினர்
சிறப்பாகச் செயல்படத் தூண்டுதலாய் இருக்க
வேண்டியதும், அப்படிச் செயல்படும்போது மனம் திறந்து
பாராட்ட வேண்டியதும் தலைமைப் பண்பின்
அம்சங்களாகும். 

தனது குழுவின் செயல்பாடை
வைத்துத் தான் தம்முடைய மதிப்பு கணக்கிடப்படும் எனும்
எண்ணம் எப்போதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டும்.
நிறுவனத்தில் லட்சியத்தை நோக்கிச் செல்பவராக ஒரு
தலைவர் இருக்க வேண்டும். 

எங்கே இருக்கிறோம், எங்கே
செல்ல வேண்டியிருக்கிறது, அதற்கு என்ன
செய்ய வேண்டும் எனும் மூன்று அடிப்படை
விஷயங்களை மனதில் கொண்டிருக்க வேண்டும்.

இந்த லட்சியத்தை அடைய புதுமையான திட்டங்கள்,
வித்தியாசமான சிந்தனை போன்றவற்றைப்
பயன்படுத்தினால் சிறந்த தலைவராகலாம்.

ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ கடந்த பத்து ஆண்டின் சிறந்த
சி.இ.ஓ ஆக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல்வேறு ஜாம்பவான் நிறுவனங்கள் எலக்ட்ரானிக்
பிளேயர்களைத் தயாரித்து இசை உலகை ஆக்கிரமித்திருந்த
சமயம் அது. தனது புதுமையான திட்டங்களால் இசை,
சினிமா, மொபைல் என மூன்று ஏரியாவிலும்
புகுந்து பட்டையைக் கிளப்பி, நிறுவனத்தை சரேலென
உச்சியில் கொண்டு போய் நிறுத்தினார் இவர்.

காரணம் இவரிடமிருந்த தனித்துவமான
வித்தியாசமான சிந்தனைகள்.
ரிஸ்க் எடுக்கத் தயங்காதவராகவும் தலைவர் இருக்க
வேண்டும்.

ஆங்கிலத்தில் ‘கால்குலேட்டட் ரிஸ்க்’ எனப்படும்
கணிக்கப்பட்ட ஆபத்துகளை எடுக்கத்
தயங்காதவர்தான் தடைகளைத் தாண்டி முன்னேற
முடியும். 

‘எல்லோரையும், எப்போதும் திருப்திப்படுத்துவது
தலைவருடைய வேலையல்ல. 

எல்லோரையும் எப்போதும் கூடவே வைத்துக்
கொள்வதும் தலைவருடைய பணியல்ல’ என்பதை
ஒரு தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படை விஷயங்களை மனதில்
கொண்டிருங்கள். 

வாய்ப்புக்
கிடைக்கும்போதெல்லாம் இந்தத் திறமைகளை
உங்களுடைய அலுவலகத்தில் வெளிப்படச்
செய்யுங்கள். 

விரைவிலேயே தலைமைப் பதவிகள் உங்களை
வந்தடையும்!

துணிவும், பணிவும் தலைமைக்கு
இருந்தால் வாழ்க்கை வளமைக்கு!
வாருங்கள் தலைவராகுங்கள், உங்கள் கனவு களை அடையுங்கள்!
- www.v4all.org


சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?
சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல். சண்டிகேஸ்வரருக்கு காது கேக்காது என்று வேறு கூறி வருகிறோம். அப்படியில்லை.

சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர். அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே
தியானத்தில் இருப்பவர். எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தை
கலைப்பது போன்றது. எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள்.

சண்டிகேஸ்வரர் சிவ பக்தர் மட்டும் இல்லை. சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர். எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்லவேண்டும்.

இதுவே முறையாகும். தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இதனை தெரிவிப்பது நமது கடமையும் அல்லவா!

Tuesday, November 24, 2015

📥 படியுங்கள் 📲

📤 பகிருங்கள்📱

👣👣👣 பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் 😢 விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. 🚫
👴 👵 பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக 👎 ஆற்றல் குறைந்து, 👉 👈 மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் ⏫ உயரமான 🌌 மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். ❗

❌ எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள 🚻 அம்முதியோர்கள் 😰 பசி, 😥 தாகத்தினால் தனிமையில் வாடி 😨 வதங்கி 😱 மடிவார்கள்.

👆 இப்படியான சூழ்நிலையில் ஓர் 👮 இளைஞன் ♿ முதுமையடைந்த தன் 🚺 தாயை சுமந்து கொண்டு 🌵 மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் 🌋  மலை உச்சியை நோக்கி 🚶 நடந்து கொண்டிருந்தான்.

👵 தாய், 👮 மகன் இருவருமே எதுவும் 😷 பேசவில்லை!

ℹ ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ❓ ஏதோ ஒருவித 💭  மணம் கொண்ட 🌳 மரங்களின் சின்னசின்ன 🌾 கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான். ❗

👍 உடனே, 
💬 ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' 😁 என்று கேட்டான்.

👌 அதற்கு தாயார், 💬 ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி 🔣 தெரியாமல் 🔂 திண்டாடக் கூடாதல்லவா?

👇 இங்கே போடப்பட்டுள்ள 🌾 கிளைகளை கவனித்து 🚶 நடந்தால் வழி ❌ தவறாமல் நீ பாதுகாப்பாக ⛪ வீடு போய் சேரலாம். 

👆 அதற்காகவே 🌾 கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

♿ ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் 👮 மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் 💞  பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் 💗 மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் ⛪ வீட்டுக்கே கொண்டு வந்து 💞 பாசத்துடன் பராமரிக்கலானான் .

👍 அதன்பின்பு அந்தக் 👎 கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. ❌

👆 இந்த கதை சொல்ல வரும் 📝 கருத்து நம் வாழ்வுக்கு மிக ✅ முக்கியம்..

👉 நீ 
👷 நல்லவனா
👺 கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் 👸 தாய் ❗

👎 எத்த்த்துனை ஜன்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த ⛪ வீட்டிற்கு 💰 வாடகை கொடுக்க ❌ முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே ❗ 

👉 எத்தனையோ
😨 கஷ்டங்கள்
😩 நஷ்டங்கள்
😢 துன்பங்கள்
😭 துயரங்கள்
😰 அசிங்கங்கள்
😱 அவமானங்கள்
⏩ கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு  👪 குடும்பத்தின் மத்தியில் 😊 சிரித்துக் கொன்டிருக்கும் 👨 தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் 📚 புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை ❗

💞 நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன்  நினைப்பவர்கள். ✅

💞 அவர்களை 
👀  கண் போன்று பாதுகாப்போம்                        இன்ஷா அல்லாஹ்

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?
😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳

இதற்கான விடையை சீனதத்துவ ஞானியான லா வோ- த்ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.💐



'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.
'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.
'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.
'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.
'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?'
'இல்லை'
'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?' விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல.. (இது) எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.
ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏


-இன்றைய சிந்தனைக்கு-
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Sunday, November 22, 2015

வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!

வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!

 
#நெஞ்சு_எரிச்சல்_போகணுமா?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
#சதை_குறையணுமா?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
#காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)
#உடம்பு_வலிக்கிறதா?
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
#கால்_பாதங்கள்_வலிக்கிறதா?
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
#மூக்கு_அடைப்பா?
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
#வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.
#ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
#தரையை_துடைக்கும் போது
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
#திடீரென்று_கடுமையான_தலை_வலியா?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
#சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்’
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.

Friday, November 20, 2015

An American visited India and went back to America

An American visited India and went back to America
Where he met his Indian friend who asked him
How did u find my Country
The American said it is a great country
With solid ancient history
And immensely rich with natural resources.
The Indian friend then asked.
How did u find Indians??

Indians??
Who Indians??
I didn't find or met a single Indian there in India.

What nonsense??
Who else could u met in India then??
The American said..
In Kashmir, I met a Kashmiri...
In Punjab a Panjabi,
In Bihar a bihari,
In Karnataka Kannadiga,
in Maharashtra Marathi,
in Rajasthan Marwadi,
in Bengal Begali,
in TamilNadu Tamilian,
in Kerala Malayali,


Then i met
A Hindu,
A Muslim,
A Christian,
A Jain,
A Buddhist,

A Sikh


And many many many more......
But nøt a single Indian did i mèét 

Think höw serious this joke is..😒
The day would not be far when indeed we would
Become a collection of polarized states as some
Regional anti-national politicians want...

Fight back -
Always say i am Indian
Jai hind🇮🇳

Pls help to sprèád this messäge...............Be a true Indian.

A HUMBLE REQUEST👏
Forward to as many INDIANS as possible even NRIs yöu knöw..

Chänge yöur thinking not jst yöur pröfile picture.Then Nation will change.🇮🇳

Tuesday, November 17, 2015

ஏழ்மை எழக் காரணம்

ஏழ்மை எழக் காரணம்
====================
மனிதனுக்கு ஏழ்மை என்பது மூன்று வழிகளில் உண்டாகலாம் :
1) அவன் வாழ்வில் உள்ள வசதிகளை வீணான வழிகளில் செலவு செய்து அழித்து விடுவது
2) அன்றுள்ள சமுதாய அமைப்புக்கும், தனிமனிதன் தேவைகளுக்கும் ஒத்தவாறு பொருள் உற்பத்தித் திறனைக் கற்றுக் கொண்டு, அதை முறையாகச் செய்யாத சோம்பேறித்தனம்
3) உழைப்பினாலும், அறிவின் திறமையாலும் ஒருவர் உற்பத்தி செய்யும் பொருட்களை உழைக்காமலே அநீதியான வழிகளில் பிறர் பறித்துண்ணல்
இம்மூன்று வழிகளையும் ஆராய்ந்து தெளிந்து கொண்டால் தனிமனிதன் முயற்சியையும், சமுதாயக் கூட்டு அமைப்பின் கருத்துக்களையும், இணைத்துச் சிந்தித்துத் திட்டமுட்டு, எந்தக் குறையுமின்றி, எல்லோரும் பொருள்வளம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி - www.happy4all.org

Monday, November 16, 2015

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

பத்து கட்டளைகள்:

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!

கடவுள் ஒரு நாள் மாறுவேடத்தில்

கடவுள் ஒரு நாள் மாறுவேடத்தில் உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது தாகம் ஏற்பட்டதாம்.
அப்போ அங்கு அருகில் இருந்த ஒரு பால்காரரின் வீடு கண்ணில் தென்பட்டவுடன் அங்கு சென்று குடிக்க சிறிது தண்ணீர் கேட்டாராம். அதற்கு அந்த பால்காரர் "பாலில் கலக்கவே தண்ணி பத்தல இதுல உமக்கு குடிக்க தண்ணியா"கிடையாது, கிடையாது வேற இடம் பார்த்து கிளம்பு என்றாராம் பால்காரர்.
கடவுள் தாகத்துடன் வேறு எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கு ஒரு சோமபான கடை தென்பட்டதாம். கடவுள் அங்கே சென்று தண்ணீர் கேட்டபோது, அவர் மூச்சி முட்டும் அளவுக்கு குடிங்க குடிங்க என்று குடுத்தார்களாம்.
அதில் மனம் மகிழ்ந்த கடவுள் "தண்ணீர் கேட்டால் குடிக்க கொடுக்காத பால்காரனை தேடி யாரும் வரமாட்டார்கள் இனி அவன் வீடு வீடாய் போய் தான் பால் ஊற்ற வேண்டும், எனக்கு வயிறு முட்ட குடிக்க கொடுத்த சோமபான கடை எங்கே இருந்தாலும் தாறுமாறாய் கும்பல் கும்பலாய் அவர்களே வந்து குடித்து விட்டு போவார்கள்" என்று சாபம் கொடுத்தாராம்.
இதுதான் டாஸ்மாக்கின் கதை 
🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍹

எட்டு" போடுகிறவனுக்கு "நோய்" எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

8⃣8⃣8⃣8⃣8⃣8⃣8⃣8⃣8⃣

"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்". 

நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.

சித்தர்கள் :

"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"

என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம். 

எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.

இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும்
நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர்
சித்தர்கள். 

இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர். 

காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும். 

முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.

காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்!

1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.

2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.

3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).

4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.

5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.

6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.

7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.

8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.

9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.

10. பாத வலி, மூட்டுவலி மறையும்.

11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உறுப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும். 

"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள், 

அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது. 

இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்!

#shared#😎- www.v4all.org 

உயிர் நம் உடலில் எந்த இடத்தில் இருக்கிறது?

உயிர் நம் உடலில் எந்த இடத்தில்
இருக்கிறது?-சித்தர்கள் கூறும் விளக்கம் !!!
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து
வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும்
அது அழுதே ஆகவேண்டும். இல்லையேல்
மற்றவர் அழத் தொடங்குவர். அழுகையே
பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல்
காரியம். குழந்தை அழும்போது முதல்
முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது.
உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே
செல்கிறது.
உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று
அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்
என்று பார்ப்போமா?
“உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை!”
- திருமந்திரம் – 309
“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!”
- திருமந்திரம் 197
இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே
உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில்
வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். அங்கே
வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது
என யாருக்காவது தெரியுமா என்றால்
அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.
“மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று”
- திருமந்திரம் 1777
“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”
- மாணிக்கவாசகர்
“ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்”
- திருமந்திரம் 1797
“உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே! “
- சிவவாக்கியர்
இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற
ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின்
நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது
எனவும் அந்தத் தீப வடிவே உயிரின் வடு
எனக் கூறப்படுகிறது.
இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம்
எனத் தெளிவாகக் கூறுகிறார்.
“தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்”
- திருமந்திரம் 1823-
வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின்
அளவைப் பற்றி மட்டும் கூறாமலா
விட்டிருப்பார்கள்.
ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை
எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால்
,அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின்
அளவாகுமாம். இதைக் கூறியது நம்
திருமூலர்தான்.

எட்டு வடிவ நடைப்பயிற்சி

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி !


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை;

எட்டு வடிவ நடைப்பயிற்சி :

தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.
15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.
பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பயன்கள் :

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.
முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.

அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.
இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம். 

Wednesday, November 11, 2015

Awesomee ......A story in one of the schools in Chennai

Awesomee ......A story in one of the schools in Chennai where admission is considered impossible!!!

To get UKG admission 

The child could not understand why they brought her there..

When we all were standing, the school principal started to converse with the child....yes...in English only! This is one of the most memorable interview I have ever witnessed in my life..
Here goes..

"What's your name?"

"Sarithra"

"Good. Tell me something you know"

"I know many things. Tell me what you want...!"

Alas, there is no better point for not getting the admission!

Sarithra's mother was trying to make up the situation but the principal stopped her..

Turning to child, she said.. "Tell any rhyme or story which you know.."

Again,"Which one you want.. Rhyme or Story!?"

"Ok. Plz tell me a story.."

"Do uou want to hear what I studied or what I wrote..!?"

Taken to surprise, she asked "Oh! you write stories...???"

"Why should I not write..?"

Now even I was taken aback But she was impressed with the answer. She ( including us) would have not heard such a story in our life...

Ok, tell me story which you have written-?

Sarithra said "Ravanan kidnapped Sita & took her to Srilanka"

The opening scene failed to impress but still she encouraged the child to continue..

"Rama asked Hanumans help to rescue Sita. Hanuman too agreed to help Rama ..."

"Then?"

"Now, Hanuman called his friend Spider man." No one expected this twist in the story!!

"Why?"

"Because there are lot of mountains between India and Srilanka.. but if we have Spiderman we can go easily with his rope..."

"But Hanuman can fly isn't it.. ?"

"Yes. But he is having Sanjeevi Mountain on one hand so he cannot fly very fast.!"

All is quiet, after a while Sarithra asked "Should I continue or not?.".

"Ok plz continue!"

"Hanuman and Spiderman flew to Srilanka and rescued Sita. Sita said Thanks to both!"

"Why"

"When you are helped you should say Thanks!" So "Hanuman is now called Hulk..."

All were surprised.She realized our curiosity and said " Now Sita is there, so to take her safely back to Rama she called Hulk"

"What??? "Hanuman can carry Sita right?"

"Yes. But he has Sanjeevi Mountain in one hand and has to hold spider man on the other"

No one could control thier smiles. " So when they all started to India they met my friend Akshay! "

"How come Akshay there now?"

"Because its my story and I can bring any one there!"

The principal didn't get angry but waited for the next twist

Then all started to India and landed at Chennai Velechery bus stop! 

Now I asked,"Why they have landed In Velechery bus stop?

"Because they forgot the way..& Hulk got an idea and called Dora!"

I came to know about Dora only there...!

"Dora came and she took Sita to Velechery Venus Colony...that's all!" 

She finished the story with a smile.. 😀

The principal asks "Why venus Colony...?"

"Because sita is there & iam Sita!!!"

The principal was impressed and embraced the child. She has been admitted in UKG & was gifted with a Dora doll...
😂😂😂

Kids can really amaze... but we clip their wings (creativity) expecting them to do things as we see it right & not from their viewpoint..

Let's give every child freedom to do their own thing & watch their dreams come true..