Monday, November 2, 2015

வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தன ஆகர்ஷணம்

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது
வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என
ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என
சித்தவைத்தியர்கள்
கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள்
மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய
ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும்
தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில்
பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச
அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை
வீட்டிலும் வளர்க்கலாம்.இதன் பூவை வைத்து
விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை
செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை
பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு
பட்டையை நூலுக்குப் பதில்
விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல
பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு
வடவேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர்
செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு
வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை
அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த
வெள்ளெருக்கு விநாயகர். விநாயகர் வழிபாடு அளப்பரிய
பலன்களை தருகிறது. இதை அவரவர்கள்
அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி
மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை
வழிபட்டால்,தனம் ஆகர்ஷணம்
ஆகும்.வெள்ளெருக்கு விநாயகர் என பல
இடங்களில் விற்பனை செய்கின்றார்கள்.
வேர்ப்பகுதிக்குப் பதில் தண்டுப் பகுதியில்
விநாயகர் செய்து விற்கின்றாகள் அதனால் அது
விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்து
விடுகின்றது.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால்
இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர்
வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர்
மகிமை உணரலாம்.
விநாயகர் அருளை பெறசெவ்வாய் மற்றும்
சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த
நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர்
சாற்றி வணங்கினால் மிக சிறப்பு. சுக்கில
சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி
வணங்கினால் வெற்றி நிச்சயம்.
வலம்புரி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில்
வணங்கினால் வெற்றி கிடைக்கும்.
திருமண காலத்தை விரைவில் காண மஞ்சள்
விநாயகரை48 நாட்கள் பித்தளை தட்டுக்குள்
மூடி வைத்து பூஜை செய்தால் பலன்
கிடைக்கும்.
குடும்ப வறுமையை போக்க, முற்றிலும்
அகற்ற வெள்ளெருக்கு  திரிபோட்டு தீபம் ஏற்ற
வேண்டும்.
நவக்கிரக தோசம் நீங்க விநாயகர் பின்புறம் தீபம்
ஏற்ற பலன் கிட்டும்.உங்களுக்கு
நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக
வெள்ளெருக்கு செடியை அடையாளம்
கண்டு,அதன் வேரை எடுத்து உள்ளூர்
ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர்
செய்து கொள்ளவும்.ஒரு வெள்ளிக்கிழமை
காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு
காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத்
தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை
காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில்
சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல்
தடவி,நிழலில் காய வைக்கவும்.இப்பொழுது
அதன் கதிர்வீச்சுக்கள்
கட்டுப்படுத்தப்பட்டு,நன்மையான கதிர்கள் நம்
வீட்டில் பரவும்படி தயார் செய்து
விட்டோம்.இனி,அவரவர் இஷ்டம் போல வழிபாடு
செய்யலாம்;தூப தீப நைவேத்தியம்
செய்யலாம்;ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம்
சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை
வழிபட்டால்,தன ஆகர்ஷணம் உண்டாகும்.
for வெள்ளெருக்கு விநாயக - Rs,350 + 50 call - 9894624425

No comments:

Post a Comment