Thursday, September 11, 2014

செயல்,உழைப்பு, பயிற்சி ,முயற்சி

செயல் 
உழைப்பு
பயிற்சி
முயற்சி

செயல்

கடல் பரந்த உப்பு செயல்படாத அறிவு போல பயன்படாதது
விரல் பிடித்த உப்பு செயல்படும் அறிவு போல வீண்படாது
புகழ் என்பது நமது நல்ல செயல்களின் அறுவடையே
இகழ் என்பது நமது தீய செயல்களின் எதிரொலியே
நமது சொல்லுக்கு பதில் இன்று கிடைக்கும்
நமது செய்லுக்கு பலன் நாளை கிடைக்கும்
ஒடாதி இயந்திரமும் உழைக்காத மனிதரும் குப்பைக்கே
பாடாத குயிலும் பழகாத மனிதரும் தெரியாதே போவார்
சிலர் அறிவுள்ளவர் அவர் பயன்பட்டால் விரும்பப்படுவார்
சிலர் பல்னுள்ளவர் அவர் அறிவுற்றிருந்தால் மிகவும் விரும்பப்படுவார்
ஒடாத முயலை விட ஊர்ந்து வரும் நத்தையே மேல்
உருப்படாத பேரறிவை விட உதவ வரும் சிற்றறிவே மேல்
மரத்தை உலுக்குபவன் மூடன் அதை
ஏறிப்பறிப்பவன் மனிதன் அதை
எட்டிப்பார்ப்பவன் அறிஞ்ன் அதை
தட்டிப்பரிப்பவன் கயவன்
ஒழக்கமுள்ளவனால் வளரும் உலகம் ஒழக்கமில்லாதவனால் அழியும்
உழைப்பவரால் வளரும் நன்மை உழைப்பில்லாதவரால் சிதையும்
நிறைய சிந்திப்பவர் குறைவாகவே செயல்படுகிறார்
நிறைய சம்பாதிப்பவர் குறைவாகவே செலவிடுகிறார்.
              
--------------------------------------------------------

உழைப்பு
உணவை குறைத்து உழைப்பை அதிகரித்தால் நோய் வராது
உறக்கத்தை குறைத்து உழைப்பை அதிகரித்தால் வறுமை வராது
எந்த தொழிலும் செய்வதினால் இழிவு கேவலமல்ல‌
எந்த தொழிலும் செய்யாமலிருப்பதுதான் இழிவு கேவலாமகும்
கடந்த காலத்தில் உழைக்காதவருக்கு நிகழ்காலமில்லை
நிகழ் காலத்தில் உழைக்காதவருக்கு எதிகாலமில்லை
உழைக்காத உடலின் சந்தனத்தின் மனத்தை விட‌
உழைத்தவன் உடலின் வியர்வை மனம் உயர்ந்தது
நாற்பது வயதிலே இருபது சுறுசுறுப்புள்ளவன் நல்ல தொழிலாலி
இருபது வயதிலே நாற்பது வயது அறிவிருப்பவன் நல்ல முதலாளி
நல்ல கால்களிருந்தும் நடக்காதவர் முடவரிலும் மோசம்
நல்ல கைகளிருந்தும் உழைக்காதவன் பிறந்ததே நாசம்
விருந்தாளியை போற்றிய முதலாளிக்கு என்றும் துக்கமில்லை
தொழிலாளியை போற்றிய முதலாலிக்கு என்றும் தோல்வியில்லை
வேர்களுக்கு புகழில்லை
வேரில்லாமல் மலருமில்லை
தொழிலாளிக்கு விளம்பரமில்லை
அவனில்லாமல் விளைச்சலுமில்லை
உழைத்து பிழைத்தவனுக்கே உணவு உண்ண உரிமையுண்டு
உழைத்து களைத்தவனுக்கே ஒய்வு எடுக்க உரிமையுண்டு
                    
-----------------------------------------------

பயிற்சி

பயிற்சி என்பது உடலை வலுப்படுத்தும்
முயற்சி என்பது உள்ளத்தை வலுப்படுத்தும்
முயற்சியும் பயிற்சியும் வளர்ச்சியின்  படிக்கட்டுகள்
அயர்ச்சியும் தளர்ச்சியும் இகழ்ச்சிக்கு வழிகாட்டிகள்

சிந்தை செய்யும் சித்திகளெல்லாம் வருவதும் முயற்சியாலே
விந்தை செய்யும் விந்தைகளெல்லாம் கற்பதும் பயிற்சியாலே

அயர்ச்சியினால் தளர்ச்சி வரும்
தளர்ச்சியினால் தாழ்வு வரும்
முயற்சியினால் பயிற்சி வரும்
பயிற்சியினால் வளர்ச்சி வரும்

ஒழுக்கமில்லாதவன் உயர்வு ஙாலறுந்த பட்டமென வீழும்
பழக்கமில்லாதவன் முயற்சி வாலறுந்த மந்தியென ஒடும்

நிற்பதற்கு பழகிய பிந்தானே நடக்க முடியும்
நடப்பதற்கு பழகிய பிந்தானே பறக்க முடியும்

ஆயிரம் புத்தகப் படிப்பை விட சிறு தழும்பு அனுபவமானது
ஆயிரம் பேரின் ஆலோசனையை விட சிறு பயிற்சி உபயோகமானாது

விலங்குகள் பின்னாலிருந்து அவைகளை மேய்க்க வேண்டும்
மாணவர்களை முன்னாலிருந்து அவர்களை நடந்த வேண்டும்

பண்பு என்பது நல்ல பயிற்சியினால் விளைவது
பதவி என்பது உண்மை முயற்சியினால் அடைவது
--------------------------------------------------------
                   
முயற்சி
தள்ர்ச்சி என்பது தேயும் நிலவு போல இருள் தரும்
முயற்சி என்பது வளரும் நிலவு போல அருள் தரும்
முயற்சியுடைய கனவுகள் எல்லால் கடலென்றாகும்
முயற்சியில்லாத கனவுகள் எல்லாம் கானலென்றாகும்
முயற்சியே செய்யாமல் முன்னேற ஆசைப்படுவான் மூடன்
உழைப்பே இல்லாமல் உயர விரும்புவன் திருடன்
அசையை மறுப்பவனுக்கு காற்று கூட உதவ முடியாது
முயற்சிக்க மறுப்பவனுக்கு கடவுள் கூட உதவ முடியாது
தோல்விகள் தொடரலாம் நமது தோள்கள் தளரலாமோ
முயர்சிகள் தோற்கலாம் நாம் முயற்சிக்க தவறலாமோ
இயலாமையினால் செய்த குற்றங்களை மன்னிக்க முடியுமா?
விறகாவதும் வெற்றிவீரனாவதும் மனிதனின் முயற்சி இல்லமலில்லையே
இல்லையென்ற சொல் எந்த மொழியிலும் இருக்கவும் கூடாதே
இயலாதென்ற சொல் எந்த நாவிலும் வரவும் கூடாதே
தெரிந்தது என்று நாம் பாடுவது எல்லாம் ஒன்றும் பயிலதததுதான்
இயலாதது என்று நாம் சொல்வது எல்லாம் ஒன்றும் முயலாததுதான்
எழாமல் படுத்திருந்தவனை விட நடந்து விழ்ந்தவன் நல்லவன்
முயலாமல் கிடந்தவனை விட முயன்று தோற்ற‌வன் வல்லவன்

www.v4all.org

No comments:

Post a Comment