▼
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு
இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் அஜாமிளா (பைரவியை) அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில்அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் கொண்டுவைர கிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதிசமேதராக காட்சி தருகின்றார். இவரை அஷ்டமி திதிமற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும், பொன்பொருளும் கிட்டும். ஸ்ரீபைரவருக்குப் பவுர்ணமிக்குப்பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றிவழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாததொல்லைகள் நீங்கும். நல்லருள்கிட்டும். இலுப்பைஎண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய்எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினைதனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றிவழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்என்பது ஐதீகம்.
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச்செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனதுஅருள் செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வஇலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறைஅஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய்விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிறமலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப்பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன்கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில்பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லதுருத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றிசகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால்திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில்திருமணம்கூடும்.இவரை வழிபாடு செய்வதால்வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கிஅவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தனலாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும்இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில்மகிழ்ச்சியை பெறலாம். நம்பிக்கையுடன், பக்தியுடன்சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரத்தை வீட்டில்வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டுவருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்குபூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டுபூஜித்து வணங்கி வந்தால் வீட்டில்செல்வச்செழிப்புஏற்படும்.
வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ணஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லதுயந்திரம்,படம் வைத்து பூஜித்து வர கடையில்வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம்பெறுவார்கள். தினமும் பைரவர் காயத்ரியையும்,பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில்செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம்,உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வஇலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனைசெய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணகர்ஷணபைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டுநாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள்வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும்அடைவார்கள். பவுர்ணமி அன்று இரவு எட்டுமணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டுபதினெட்டு முறை பாராயணம் செய்யவேண்டும்.
இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம்செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்துவிடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில்பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகைமாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்மஅஷ்டமி ஆகும். கோரிக்கைகளை நம்பிக்கையுடன்பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
சித்திரை - பரணி, ஐப்பசி - பரணி போன்றமாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம்காலபைரவருக்கு விசேஷ நாள்கள் ஆகும். ஏனெனில்பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நடசத்திரக்காரர்கள் பைரவரைவழிபட்டால் புண்ணியமாகும். பலனும் அதிகம்கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரைவழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களைகொடுக்கும். பைரவர் விரதம் எல்லா அஷ்டமிகளிலும்பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால்செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்துவந்தால் அதைவிடச் சிறப்பான நாள் எதுவுமில்லை.
குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம்இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி பைரவரைமனதில் நினைத்து வணங்கவேண்டும். பகலில்இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்றுமாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடவேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும்ஏற்றினால் போதும்
சிதம்பரத்தில் சொர்ண பைரவர்
சிதம்பரம் நடராஜப் பெருமானுடைய சித்திர சபையில் கீழ்புறத்தில் வைக்கப்பட்டுள்ள சொர்ண பைரவ முர்த்தியின் பாதத்தில் சுமார் இருநுரு,முன்னுறு வருடங்களுக்கு முன் அப்போது வாழ்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் ஓர் செப்புத்தகட்டை அர்த்தஜாமப் பூஜையின் போது மந்திரங்கள் கூறி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார்களாம் மறுநாள் காலையில் வந்து பார்க்க பைரவப் பெருமானின் பேரருளால் அந்தச் செப்புத் தகடு சொர்ணத் தகடாக மாறி இருக்குமாம் பின் அதை விற்று வாழ்க்கையை இனிமையாக கழித்ததாகக் கூறப்படுகிறது. இக்காலத்திலும் இவரை அன்புடன் உள்ளம் உருகி வணங்கி வழிபட்டு வர சகல சௌபாக்யங்களும் கிட்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தியான சுலோகம்
காங்கேய பாத்ரம் டமருகம்
திரிசுலம் வரம் கரை
ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவயாயுதம் தப்தஸவர்ண
வர்ஷணம் ஸ்வர்ணா
கர்ஷணம் பைரவம்
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் துதி
“ஸ்வர்ண கால பைரவம் த்ரிசுலயுக்த பாணி நம்
வேத ருப ஸாரமேல் ஸம்யுதம் மஹேச்வரம்
ஸ்மாச்ரி தேஷ ஸர்வதா ஸமஸ்தவஸ்து தாயினம்
மகீந்திரி வம்ச பூர்வ புண்ய ருபினம் ஸமாச்ரயே”
மேற்கன்ட ஸ்வர்ணாகர்சண மந்திரத்தினை தில்லை வாழ் அந்தணர்கள் அறுபத்து நான்காயிரம் தடவைகள் பைரவர் முன் கூறி வைத்துவிட்டு செல்லும் செப்புத் தகடே பொன் தகடாக மாறி அவர்களுக்கு வளமையை அள்ளித் தந்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரம்
”ஏக சஷ்டி அஷரம் மந்திரம் லகு சித்தப்ரதாயகம்
ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஷ்ய சித்தியே.”
(வேறு மூல மந்திரம்)


No comments:
Post a Comment