Thursday, August 8, 2013

வெட்கப்படவா? இல்ல துக்கப்படவா?



வெட்கப்படவா? இல்ல துக்கப்படவா?

அடிமை ஆகினோம் என்று என்னவா? இல்லை ஏமாற்ற பட்டும் என்று என்னவா?

எப்படி நினைத்தாலும் சரி, எனது எண்ணம் நமது(இந்தியன்) கலாச்சாரமும், பண்ப்பாடும், மனிதநேயமும் அழிந்து கொண்டு தான் போகிறது.

இங்கே இருக்கும் புகைப்படம் ஆங்கிலேயன் Lord Macaulay என்பவரால் British Parliament யில் 1835 feb 2யில் கூறப்பட்டது.



"நான் இந்தியா முழுவதும் சுற்றி பார்த்து விட்டேன், அங்கு ஒரு பிச்சைகாரனையோ, திருடனையோ கண்டத்து இல்லை. ஒரு தனி கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரமும் கொண்ட நாடு தான் இந்தியா.

நாம் இந்தியாவை முழுமையாக ஆல முடியாதது, ஆனால் அவர்கள் பழமையான கல்வி முறையை நம் கல்வி முறைக்கு மாற்றி, அவர்கள் பண்பாட்டை மாற்றி நாமும் நம் ஆங்கிலமும் சிறந்ததது என்று நினைக்கவைதால் அவர்கள் அவர்கள் மீது வைத்து இருந்த நம்பிக்கை இழந்து விடுவார்கள், அதன் பின்னர் நாம் தெரிவிக்கும் முறையே அங்கு கலாச்சாரமாக மாறும்" என்று Lord Macaulay கூறியுள்ளான்.

அவன் நினைத்தது போல பலமாற்றங்கள் வந்தது இன்றும் அவனுக்கு அடிமையாகியது போலவே ஒரு உணர்வை தூண்ட செய்கிறத்து அவன் பரப்பிய கல்வியும், மத வெறியர்களையும் பார்கையில்.

அடிமை படுத்தியவன் சாதித்தானா? இல்லை அடிமையாக இருந்தவன் சாத்திதானா என்று கேட்டால்???

உங்களை சுற்றி நடப்பதை பாருங்கள் உங்களுக்கே புரியும் யார் வென்றார்கள் என்று.

Saturday, August 3, 2013

எதிரி தேவைப்படுகிறது.

ஒருவர் ஜெயிப்பதற்கு காரணம் கடின உழைப்பு, திறமை ,படைப்பாற்றல் அனைத்தும் இருந்தாலும் அதுக்கு மேல் போட்டி தேவைப்படுகிறது.

உதாரணம் எம்.ஜி.ஆர் , சிவாஜி பிறகு கமல் ,ரஜினி. ரஜினி இந்தளவுக்கு உயர கமலின் போட்டியும் ஒரு காரணம். விஜய்க்கு அஜித்தும் ,அஜித் முன்னேற விஜய்யும் காரணம். சிம்பு,தனுஷ் வரை அது தொடர்ந்தது.



எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ,கருணாநிதி என்று அரசியல் தந்திரம் அறிந்தவர்கள் போட்டியாளரை நன்கு அறிந்திருப்பர். அதற்கு ஏற்றார் போல செயல்படுவர்.

வியாபாரத்திலும் ஒரு போட்டியாளரை குறி வைத்து போட்டி போட்டால் வெற்றி நிச்சயம். கோக்க கோலா ,பெப்சி போல.

தனி மனிதன், அரசியல் ,கலைஞர்கள் எங்கும் போட்டி மனப்பான்மை ஒரு உத்வேகம் கொடுகிறது. இதில் மிக முக்கியம் எதிரியை ஜெயிக்க விடுவது. அதை நாம் முந்தனும். ஜெயிக்காத போட்டியாளர்களால் உபயோகம் இல்லை. உள்ளுக்குள் இருவரும் மிக நெருங்கிய நட்பு கூட பாராட்டி கொள்ளலாம். ஆனால் களத்துக்கு வந்துவிட்டால் போட்டி மிக அவசியம். அந்த வெற்றி பெறும் மனப்பான்மையை, முந்த வேண்டும் என்ற எண்ணத்தை போட்டி மட்டுமே கொடுக்கும்.

Wednesday, July 24, 2013

கோபத்தைக் கட்டுப்படுத்த…


கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்
ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !


‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.

ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.
‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.
கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் ‘நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?’ என்று கேட்டால் கூட ‘எவண்டா அப்படிச் சொன்னது?’ என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. ‘வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்த கோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும்போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.
‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.
ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.
கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். `நீ… எப்படிய்யா என் மனைவியைப் பற்றி தப்பாப் பேசலாம்’ என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை `எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எதிராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். இதை `இம்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே பதுங்கிக் கிடக்கிறது.
மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் எச்சரிக்கிறது.
அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒரு படி மேலே போய், நோய்கள், காயங்கள் போன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும் கோபமே என்கிறது.
கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக் கைதிகளின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும் சிறைச்சாலைக்கு வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.
இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்’ என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவக் குறிப்புகள் பேசுகின்றன.
உறவுகளுக்கு இடையே வரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. `கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்’ என்றோ, ‘கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்’ என்றோதான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.
கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது…. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.
அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப் பறிப்பதும், புரமோஷனைக் கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான். `கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம்…’, `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்…’ என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித் திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.
மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை.
கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை. மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.
‘அவரு ‘வள் வள்’ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல…’ என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங் களில் அது தொடர்ந்து, அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது!
நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், `இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்’ எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.
***********************************************

கோபத்தைக் கட்டுப்படுத்த…
கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை…
1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.
2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். ‘இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும்’ உறவுகளுக்கிடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய்யவில்லை’ எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தேன்’ என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.
3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களின் சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.
6. நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள்.
7. சிரிக்கப் பழகுங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
8. இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
9. இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும்.
10. மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களிடம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்பிளாஸ்டிக் எமன் விழிப்புணர்வு தகவல் !!!

YOURS HAPPILY
STAR ANAND

Sunday, July 7, 2013

The Best sales Person always do like this . Happy selling ....

The Best sales Person always do like this . Happy selling ....

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் நாராயணசாமி.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் இந்தியாவில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நாராயணசாமி.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$101237.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில், கொஞ்சம் பெரியது, அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன். பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நாராயணசாமி சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"


Yours Happily

Star Anand 
Sales Skills Trainer 
Vivekas Sales Training Company 
www.v4all.org 

Tuesday, May 28, 2013

தோற்கலாம் வாங்க

தோற்கலாம் வாங்க
                                                                                                        வணக்கம். என் அன்பு ஆனந்த வாசகர்களே வாருங்கள் தோற்போம். நம் ஆனந்த மாத இதழில் தோற்காமல் வரும் ஒரு முக்கியமான பகுதி தோற்கலாம் வாங்க. ஒவ்வொரு நாளும் தோல்வி எங்கிருந்து தொடங்குகிறது? காலையில் நாம் வைக்கும் அலாரம் அடிக்கும் நேரத்தில் கண் விழிக்காமல் இருப்பதிலிருந்து… நோக்கம் இல்லாதவர்களும் தோல்வியாளர்கள் தான். வாழ்வில் மிகப்பெரிய சோகம் நமது நோக்கத்தை அடையாமல் இருப்பதல்ல, ஒரு நோக்கமே வாழ்வில் இல்லாமல் வாழ்ந்து விடுவதுதான். நமக்கு என்று நோக்கம் இருக்க வேண்டும் அப்போது தான் வாழ்க்கையில் தேக்கம் இல்லாமல் வாழ முடியும். ஏன்என்றால் தேங்கும் நீர் அழுக்கு நிறைந்த குட்டையாகும், ஒடும் நீர் தெள்ள தெளிவாக இருக்கும். இவ்வாறு நாம் நம் வாழ்க்கையில் ஒடும் பொழுது பல தடைகள் வரும். எப்படி ஒரு ஆறு உருவாகிய இடத்திலிருந்து கடலை சென்று அடைய பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளதோ அதுபோல தோல்வி என்ற தடைகளை தாண்டினால் தான் நமக்கு வெற்றி.

                   அப்படி, பல தோல்வி என்ற தடைகல்லை படிக்கற்களாக மாற்றி தரைமட்டத்திலிருந்து அவர்களது வாழ்க்கையில் வெற்றிக்கோட்டையை உருவாக்கியவர்களின் அனுபங்கள் நமக்கு பல விதத்தில் திறன்பட செயல்பட உதவி செய்யும். அப்பேர்பட்டவர்களின் வரிசையில் இம்மாதம் நாம் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் கோவையிலிருந்து உருவாகிய முதல் விஞ்ஞானி, படிக்காத மேதை, பல படைப்புகளின் மேதை, கோவையின் தங்கம், இப்பொழுதும் கோவையின் மையத்தில் சிங்கம் என சிலையாய் நின்று பிரமிப்பை ஊட்டும் திரு.ஜீ.டி.நாயுடு அவர்களைப் பற்றி பார்ப்போம்.

                    ஏன் இவர் இந்த மாதம் என்று பார்க்கிறீர்களா? மே மாதம் தொழிலாளர் தினம் சிறப்பு புத்தகமாக ஆனந்தம் வந்துள்ளது. அதில் கோவையில் பல புதிய தொழிலை உருவாக்கிய இவரைப் பற்றி பார்ப்பது நமது கடமை என்பது தான்.
                     தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்த மனிதர், பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பன்னாத சேவிங் ரேசரை ஐம்பதுகளில் உருவாக்கினார்.                     
                        ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா, அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல் கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை, ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில தோல்விகளுக்கு பிறகு சாதித்தும் காட்டினார். எஞ்கின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrate tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு, டிக்கெட் மெஷின், பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள்.


                            இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. கோவையில் தேர்தலில் தோற்றதால் மனிதர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்தரம். எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம். ‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’. அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிருத்திக்கொள்ளலாம். 21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய். குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய் என்று சொல்லியவர் நம் விஞ்ஞானி திரு.ஜீ.டி.நாயுடு.
                          


    பலதரப்பட்ட முயற்சிகள், அதற்கான பயிற்சிகள் வாழ்க்கையின் முழு நேரமும் உழைப்பு என்று அவர் உருவாக்கியவைகளை  அரசு உபயோகிக்கவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை, இருந்தாலும் இத்தனை தோல்விகளையும், வலிகளையும் தாண்டி திரு.ஜீ.டி.நாயுடு இன்று கோவையில் அனைத்து தொழிலாளர்க்கும் மிகப்பெரும் உதாரணமாக இருந்து வழி நடத்துகிறார்.

-    ஸ்டார் ஆனந்த்

TEAM BUILDING & Firewalk Training program at coimbatore

  • TEAM BUILDING  & Firewalk Training program 

    at coimbatore 

    People are the asset of every organization and the success of the organization is directly dependent on the people hence team building and team bonding is must in any corporate. We as a corporate training organization meet many many organizations and their HR teams, who want to create healthy environment in their organizations hence keep conducting team building training programs for their valuable employees.

    We have custom-designed, action-packed programs that will be tailored to meet your individual and company needs. Over 7 years of corporate seminar facilitation experience gives us the specialized knowledge to design a unique program that will create a lasting impact and be talked about for years.
    Our events are guaranteed to inspire your group, with the end result being increased focus and productivity, thus strengthening your company values and bottom line.

    What your team will learn:

    • Team Building
    • Advanced Goal Setting
    • Eliminating Limiting Beliefs
    • Breaking Through Fear
    • Overcoming Obstacles and Barriers
    • The Power of Focus
  • ---------------------------------------------------------------------------------------------------
  • You are capable of doing more than you previously thought
  • Commitment and follow through
  • Visualize your goal being achieved with ease
  • Listening to your inner voice
  • How to increase your personal power
Extreme seminar formats such as the firewalk are quickly changing the consciousness all. Many of the world’s most forward-thinking companies such as Microsoft, AT&T, American Express and Coca Cola regularly use firewalk seminars to motivate and inspire their employee base as well as middle- and upper- management, thus creating a more productive work environment for all. Many of the world’s leading CEO’s have embraced the immense power of the firewalk and strolled over the coal bed themselves. These unique and innovative seminars create an environment that will push your team beyond their present limits and help them break-though mental barriers that may be holding them back from their true potential.

FIRE WALK DEMO VIDEO 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7zb2tXRrhSM#!



 FIREWALK 


GLASS WALK 

Fire walk makes participants believe nothing is impossible, they can achieve anything and everything in life. Through these intensive Firewalk training sessions self realization, belief and confidence is created, which is must to achieve substantially big goals in corporate life. These empowering sessions helps management executives redefine themselves so that impossible becomes achievable for them. 

For more information regarding our customized seminar formats call us at


Wednesday, May 15, 2013

நீங்களே விற்கலாம் - விற்றலின் அடிப்படை (Selling Skills)


நீங்களே விற்கலாம்



நீங்களே விற்கலாம்





11.மற்றவர் அவர்களது இழப்புகளை சொல்லும் பொழுது அமைதியாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண்டும்
12.   உங்கள் ப்ராஸ்பெக்ட் சொல்வதை கவனமுடன் கேளுங்கள், குருக்கே இடையூறு செய்யாதீர்கள்.
13.   உங்கள் உடல் பாஷைகளை உணர்ந்து செயல்படுங்கள். எவ்வாறான அமைதி குரிகைகளை நேஙள் உங்கள் ப்ராஸ்பெக்டிடம் வெளியிடுகிறீகள் ?
14.   உங்கலது பாடீ லாங்குவேஜை  கற்றுகொள்ள முற்படுங்கள். ஆது உங்களின் விற்பனை உருதி முடிதல்களை மேலுயர்த்தும்.
15.   மறுப்புரைகளுக்கான  பதில்களை முன்னமெ தயார் நிலயில் வைத்துகொள்ளுங்கள், ஆனால் அவர்களிடம் நீங்கள் மனப்பாடம் செய்ததாக காட்ட் கொள்ள வேண்டாம்
16.   தோழமையுடன் இருங்கள், அன்பாக பேசுங்கள், உங்கள் ப்ராஸ்பெக்ட் க்கு உதவும் பொதுவான அக்கரையை கைய்யிலெடுங்கள்.
17.   உங்கள் ப்ராஸ்பெக்ட்க்கு அவர்கள் உங்களுக்கு முக்கியம் என்று உணரவையுங்கள் அதே சமயம் குழையாமல் பார்த்து கொள்ளுங்கள்.
18.   உறுதி முடிக்கும் சமயத்தை வெறும் விற்பனைக்கான உறுதி முடிப்பதாக மட்டும் பார்க்காமல், நீங்கள் எடுக்கும் அடுத்த படிக்கான முயற்சியாக பாருங்கள்
19.   பொருட்களை பற்றிய உங்களின் அறிவுத்திறணை வளர்த்து கொள்ளுங்கள்
20.   உங்களை நம்புங்கள்
21.          உங்கள் தயாரிப்புகளை நம்புங்கள்
22.          உங்கலுடய எதிராளி / போட்டியிடுபவர் என்னவெல்லாம் வழங்குகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை உங்களுக்கு அருகாமையில் வையுங்கள், உங்கள் எதிரிகளை உங்களுக்கு மிகவும் அருகாமயில் வையுங்கள்

உங்களது திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். உங்கள் திறமைகளுக்கு பட்டயம் தீட்டுங்கள்.
24.          உங்களது ப்ராஸ்பெக்டுகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் படங்கள் மற்றும் விளக்க படங்களை வரைந்து காட்டுங்கள்.
25.          ஓவ்வொரு வாங்கும் தீர்மானமும் மனகிளர்ச்சியால் ஏர்படுகின்ற ஒன்று. அத்தகைய உங்களது ப்ராஸ்பெக்ட்களின் மனக்கிளர்ச்சியை ஈர்ப்பதர்க்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
ஓவ்வொரு வாங்கும் தீர்மானமும் மனகிளர்ச்சியால் ஏர்படுகின்ற ஒன்று. அத்தகைய உங்களது ப்ராஸ்பெக்ட்களின் மனக்கிளர்ச்சியை ஈர்ப்பதர்க்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?

26.          எந்த வகையில் உங்களின் ப்ராஸ்பெக்டுக்கு நீங்கள் கூடுதல் மதிப்பு அளிக்க முடியும்?

27.          எப்படி உங்கள் ப்ராஸ்பெக்டின் எதிர்ப்பார்ப்புகளை கடக்க முற்படுவீர்கள் ?

28.          உங்களது பொருள் / சேவைக்கான தனித்தன்மையான இயல்பு என்ன ?

29.          நீங்கள் எப்படி உங்களது தற்போதய வாடிக்கயாளர்கள் / தகுதிசான்றுகள் / நிகழ்வாய்வுகளை உங்களது மேன்மைக்காக பயன் படுத்த போகீறீர்கள் ?

30.          “கடின தோளினை” அடைய உங்களது நம்பிக்கையை மேம்படுத்துங்கள்
31.          மனதில் குறிக்கோளுடனும், குறிப்பிட்ட பலனுடனும் ஒவ்வொரு விற்பனை களத்திற்க்கும் செல்லுங்கள்
32.          உங்கள் நிர்வாகத்தில் தலை சிறந்த விற்பனையாளர் யார்? நீங்கள் செய்யாத எதை அவர் செய்து கொண்டு இருக்கிறார் ? அதை அவரிடமிருந்து கற்று கொள்ளுங்கள்
33.          விதிமுறைகளையும் மரபொழுங்கலையும் விடுத்து ஒரு நண்பனை போல உங்கள் ப்ராஸ்பெக்டிடம் பேசுங்கள்
34.          உங்களை நீங்களே வற்புறுத்தி கொள்ளமல், ஒவ்வொரு விற்பனை வாய்ப்பையும் ஒரு புதிய சவாலாகவே எதிர்கொள்ளுங்கள்
35.          உங்களது நாட்குறிப்பை சரியாக பயன்படுதுங்கள். இதில் ஏதெனும் சிரமம் இருந்தால் தகுந்த ஆலொசனை பெற்று பயன்படுத்துங்கள். ஓவ்வொரு நாளும் கூடுதலாக 60 நிமிடங்கள் ஆகத்திறனை உருவாக்க உங்களால் என்ன செய்ய முடியும் ?
36.          ப்ராஸ்பெக்டுடனான உங்கள் உரையாடலை தொலைபேசியில் பதிவு செய்து கேளுங்கள்
37.          உங்கள் தொலைபேசி குரல் வளத்தை மிகைப்படுத்துங்கள்
38.          நீங்கள் தொடங்கும் இடத்திர்க்கேற்ப்ப உங்கள் சிகையும் உடையும் இல்லாமல்,செல்ல வேண்டிய இடத்தை பொருத்து உங்கள் உடை நாகரீகமானதாக இருக்க வெண்டுமா அல்லது அலுவல் முரைப்படியான உடையாக இருக்க வேண்டுமா என தேர்வு செய்யுங்கள்.
39.          உங்களை ஒரு விற்பனை ஆலொசகராக எண்ணி புதுமை உத்திகளை உருவாக்குங்கள்
40.          விற்பனை ஆற்றல் தொடர்பான ஊக்குவிக்கும் ஒலிப்பதிவுகளை  நீங்கள் மகிழ்வுந்தில் பிரயாணிக்கும் பொழுது கேளுங்கள். இந்த செயலற்ற நேரத்தை உங்களின் வளர்ச்சிக்காக பயண்படுத்தி கொள்ளுங்கள்

41.          சிறந்த பண்பான தகவலை உங்கள் தொலைபேசியின் ஆன்ஸர் போன் ஆப்ஷனில் பதிவு செய்யுங்கள். அவை உங்களின் ப்ராஸ்பெக்டுகளை உங்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும்படியான ஆர்வத்தை தூண்ட வெண்டும்
42.          வாங்குதலின் பொழுது ஏதேனும் கூடுதல் பொருட்கள் மற்றும் சேவைகளை உங்களால் தர இயலுமா ?
43.          உங்களின் முதல் கருத்துகளையும் எண்ணங்களையும் நேர்மரையானதாக பதிவு செய்யுங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயம் மற்றும் அதை சொல்ல நினைக்கும் விதம் பற்றி நேரம் ஒதுக்கி சிந்தித்து செயல் படுங்கள்
44.          நீங்கள் இறுதி தீர்மானம் செய்பவரிடம் தான் பேசுகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
45.          உங்களுடைய ப்ராஸ்பெக்டுகளை விற்பனை செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுத்துங்கள்
46.          உங்கள் ப்ராஸ்பெக்டுகளை குறுக்கு கேள்விகள் கேட்காதீர்கள் / கேள்வி மேல் கேள்வி கேட்டு குறுக்கு விசாரணை செய்யாதீர்கள்
47.          உங்களிடம் இருந்து எளிதான முறையில் வாங்குவதர்க்கு நீங்கள் என்ன செய்ய முடியும் ?
48.          உங்களுடய பொருட்கள் மற்றும் சேவை பற்றி அழுத்தமாக எடுத்து சொல்லுங்கள். “எனக்கானது என்ன இருக்கிறது” என்ற உங்களுடைய ப்ராஸ்பெக்டின் கேள்விக்கு பதில் அளியுங்கள்
49.          உங்களுடய பேச்சு திறணை மேம்படுதுங்கள். சரியான பயிற்சி நிறைவை தரும்
50.          விற்றலின் அடிப்படைகளை ஒருமுறை திரும்ப பார்த்து கொள்ள வேண்டும். இது நீங்கள் நேர் சிந்தனையுடன் சரியான பாதயில் செல்ல வழி வகுக்கும்.
51.          உங்களால் முயன்று அடையகூடிய விற்பனை இலக்கை அடையும்வரை உங்களை நீங்களே சவாலாக எடுத்து கொள்ளுங்கள்
52.          நேர்மரையான, தெளிவான மனநிலையை உருவாக்குங்கள்
53.          விலையை முதலில் தெரியபடுதாத்தீர்கள்.பயன்களையும், திறனையும் முதலில் மேம்பட எடுத்துரையுங்கள்
54.          ஓரு பொருள் அல்லது சேவை இரண்டு காரணங்களுக்காக வாங்கபடும். 1. வேதனையை குறைப்பதர்க்காக 2. மகிழ்ச்சியை பெருவதர்க்காக. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வேதனையை குறைப்பதர்க்காகவே வாங்குவார்களே தவிர, மகிழ்ச்சிக்காக அல்ல
55.          உங்களின் இலக்கங்களை அறியுங்கள். மாதத்திற்க்கு வெறும் 3 கூடுதல் விற்பனைகள் உங்கள் நிர்வாகத்தின் அடித்தளத்திர்க்கும் உங்கள் வருமானத்திர்க்கும் எவ்வாறு பொருள்படுகிறது என்பதை ஒரு ஊக்குவித்தலாக கொள்ளுங்கள்
56.          நீங்கள் கடைசியாக எப்பொழுது விற்றலுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டீர்கள். இன்றெ ஒரு பயிற்சி வகுப்பிற்க்கு உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்
57.          உங்கள் பொருள் மற்றும் சேவை தொடர்பாண நவீன தொழில் சார்ந்த புதிய நடைமுறைகளையும், செய்திகளையும் எப்பொழுதும் தெரிந்து வைத்திருங்கள்
58.          உங்களுடைய ப்ராஸ்பெக்டுக்ளை பின் தொடர மறக்காதீர்கள்
59.          பொது நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் உங்களுடைய தொடர்பையும் பங்களிப்பையும் மேம்படுத்துங்கள். வெறும் வர்த்தக அட்டையை மட்டும் பரிமாறிக்கொள்ளாமல், உறவுமுறைகளை கட்டமைத்து கொள்ளுங்கள்
60.          உறுதியாக இருங்கள், அதேசமயம் எரிச்சலூட்டும்படியாக நடந்து கொள்ளாதீர்கள்
61.          உங்களது கோல்ட் கால்களை ஒரு விற்பனை செயலாக எண்ணாமல், வாடிக்கையாளருக்கு உங்கள் ப்ரொடுக்ட் மற்றும் சேவை பற்றிய புரிதலை உருவாக்கும் சந்தர்ப்பமாகவே எண்ணுங்கள்
62.          வாடிக்கையாளர் சேவையிண் அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு அதனை உங்களது செயலாக்க அளிக்கையின் மூலம் எடுத்துரையுங்கள்
63.          உங்களது மிகைபடுத்தப்பட்ட சொற்களால் வாடிக்கையாளரை குழப்பமடைய செய்யதீர்கள். இதன் மூலம் அவர்கள் உங்களை நேரடியாக காண்பார்கள்
64.          உங்களுடன் இந்த வர்த்தகத்தை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதனால் வரும் விளைவுகளை தாங்களே ஏற்காமல், எப்படி நீங்கள் வருவிளைவுகளை உங்கள் தோளிள் சுமக்க வேண்டும்
65.          உங்களின் விற்பனையை கேட்க மறக்காதீர்கள்
66.          மகிழ்ச்சியாக இருங்கள் !


Yours Happily
Star Anand
Sales Skills Trainer 
Vivekas Sales Training Company 
Coimbatore
website - www.v4all.org
cell -9790044225
mail- star.v4all@gmail.com