Saturday, August 3, 2013

எதிரி தேவைப்படுகிறது.

ஒருவர் ஜெயிப்பதற்கு காரணம் கடின உழைப்பு, திறமை ,படைப்பாற்றல் அனைத்தும் இருந்தாலும் அதுக்கு மேல் போட்டி தேவைப்படுகிறது.

உதாரணம் எம்.ஜி.ஆர் , சிவாஜி பிறகு கமல் ,ரஜினி. ரஜினி இந்தளவுக்கு உயர கமலின் போட்டியும் ஒரு காரணம். விஜய்க்கு அஜித்தும் ,அஜித் முன்னேற விஜய்யும் காரணம். சிம்பு,தனுஷ் வரை அது தொடர்ந்தது.



எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ,கருணாநிதி என்று அரசியல் தந்திரம் அறிந்தவர்கள் போட்டியாளரை நன்கு அறிந்திருப்பர். அதற்கு ஏற்றார் போல செயல்படுவர்.

வியாபாரத்திலும் ஒரு போட்டியாளரை குறி வைத்து போட்டி போட்டால் வெற்றி நிச்சயம். கோக்க கோலா ,பெப்சி போல.

தனி மனிதன், அரசியல் ,கலைஞர்கள் எங்கும் போட்டி மனப்பான்மை ஒரு உத்வேகம் கொடுகிறது. இதில் மிக முக்கியம் எதிரியை ஜெயிக்க விடுவது. அதை நாம் முந்தனும். ஜெயிக்காத போட்டியாளர்களால் உபயோகம் இல்லை. உள்ளுக்குள் இருவரும் மிக நெருங்கிய நட்பு கூட பாராட்டி கொள்ளலாம். ஆனால் களத்துக்கு வந்துவிட்டால் போட்டி மிக அவசியம். அந்த வெற்றி பெறும் மனப்பான்மையை, முந்த வேண்டும் என்ற எண்ணத்தை போட்டி மட்டுமே கொடுக்கும்.

No comments:

Post a Comment