Friday, September 30, 2016

மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது. (கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்)

மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது. (கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்)

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.
பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.
மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.
இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக
இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக்
காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும்
மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று
பெருந்துயரத்தைச் செய்யும்.
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.
எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.
எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை.

Tuesday, September 27, 2016

நீலகிரி ஆலயங்களும் அற்புதங்களும்

2] நீலகிரி  ஆலயங்களும் அற்புதங்களும் 

நீலகிரியில் வாரணாசி

சென்னையில் 100 இற்கும் மேற்பட்ட ஞானியர் கோவில்கள் இருக்கிறது. அவற்றில் 25 ஞானியர் கோவில்களை மட்டுமே அடியேன் இதுவரை பதிவு செய்திருக்கிறேன். 26 வது ஞானியர் கோவில்கள் வரும் அக்டோபர்  1 இல் பதிவு செய்வேன் அதை தொடர்ந்து பல சென்னை ஞானியர் கோவில்கள் பதிவுகள் வரும். மேலும் உயிர்நிலை கோவில்களுக்கு என்று  தனியாக  ஒரு Blog  ஆரம்பித்து அதில் இதுவரை அடியேன் செய்த 25 ஞானியர் கோவில்களின் பதிவுகளும்  மேலும் பல ஞானியர் கோவில்கள் பதிவுகளும் அதில் பதிவு  செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

இன்று ஊட்டியில் மிக முக்கியமான. மகத்துவம் வாய்ந்த ஒரு மகானை, தனித்துவம் வாய்ந்த ஒரு தபோதனரை, சிறப்பு பெற்ற ஒரு சித்தரை பற்றி நாம் பார்க்க போகிறோம். 

கேரளாவில் மம்மியூர் போன்ற சில கிராமங்களில் மந்திர, தந்திர, மாந்திரீகத்தில் வல்லவர்களான பலர் இருந்தார்கள். இப்பொழுது இருக்கிறார்களா என்பது சந்தேகமே. அது போல் 1957  இல்   ஊட்டி காந்தளில்   ஒரு  மந்திர வாதி ஒருவர் இருந்தார். அவர் ஒரு மலையாளி. ஒருநாள் நள்ளிரவு 12 மணிக்கு  காந்தளில் உள்ள சுடு காட்டு பக்கம்  வந்தார். அங்கே அந்த மந்திர வாதி கண்ட காட்சி  மிக அசாதாரணமானது.

அந்த சுடு காட்டிற்கு எதிரே ஒரு ஜீவ சமாதி. அந்த ஜீவ சமாதியின் மீது இருக்கும் சிவலிங்கத்திற்கு பார்வதி  தேவி தீபாராதனை காட்டி வழிபட்டாள். அதை பார்த்ததும் அந்த மந்திரவாதி மூர்ச்சையாகி கீழே விழுந்தார். விடிந்ததும் தான் அந்த மாந்த்ரீகருக்கு சுய நினைவு வந்தது. மந்திர வாதி கண் விழித்த பின். 

தான் இறந்ததும் என் உடலை இந்த மகானின் கோவிலுக்கு எதிரே புதைக்க வேண்டும். அடியேன் இறந்த பின்பும் இந்த மகானின்  அருட் பார்வை என் மீது பட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று அந்த  மந்திர வாதி தனது சீடர்களிடம்  சொன்னார். அதன் படி அந்த மந்திர வாதியின் உடல்  அந்த மகானின் ஜீவ சமாதிக்கு எதிரே புதைக்கப்பட்டது.  

ஷீரடி பாபா, காவாங்கரை கண்ணப்பர் போல் துக்டா பாபாவும் எங்கு? பிறந்தார். எங்கிருந்து வந்தார் என்று  தெரியவில்லை. இவரின் தோற்றத்தை வைத்து இவர் வடநாட்டில் இருந்து வந்ததாக     இவரை  பார்த்தவர்கள் நினைத்தாலும்.  இவர் தமிழை தங்கு, தடையின்றி பிழையின்றி  பேசியதாக  அக்காலத்தில் இவரை பார்த்தவர்கள் பதிவு செய்தார்கள். 

துக்டா பாபா  தொடர்ந்து பல நாட்கள் உண்ணாது இருப்பார். 

ஒன்றுமில்லை அடியேன்  காவாங்கரை கண்ணப்ப சித்தர் பீடத்தில்  மௌன விருதத்தோடு குண்டலினி தியானம் செய்த பொழுது அந்த தியானத்தின் பலனாக அன்று  எனக்கு அறுசுவை உணவு சாப்பிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட  அதிக மகிழ்ச்சியை உணர்ந்தேன்.  மேலும் குண்டலினி  தியானத்தால்  அன்று அடியேன் பசியை உணரவில்லை. 

ஒரு நாள் சில மணி நேரங்கள் செய்த குண்டலினி தியானத்தின் பலனே இப்படி என்றால். அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்ற  யோகிகளின் குண்டலினி  தவம்  எத்தகைய? ஆற்றல் மிக்கதாக இருக்கும். 

சித்தர்கள் பசி, தூக்கம் அனைத்தையும் கடந்தவர்கள். 

பல நாட்கள் உண்ணாது இருக்கும் துக்டா பாபா என்றாவது ஏதேனும் ஒரு அடியார்  வீட்டுக்கு சென்று  துக்டா தேவ் என்று சொல்லியவாறே பிட்சை பாத்திரத்தை நீட்டுவார். யாரிடம் துக்டா பாபா  பிட்சை கேட்கிறாரோ  அந்த நபர்  துக்டா பாபாக்கு பிட்சை  இட்டால் அந்த நொடியிலிருந்து அந்த நபருக்கு  யோகம். அவர் காட்டில் மழை. ஆனால் அவ்வளவு லேசில் துக்டா பாபா  யாரிடமும் பிட்சை கேட்க மாட்டார். 

பொதுவாக சித்தர்கள் அனைவருமே நவகண்ட யோகம் செய்வார்கள்.  உடம்பில் உள்ள  9 வாயில்களை தனி, தனியாக கழட்டி மீண்டும் மாட்டுவதன்  பெயர் தான் நவகண்ட யோகம்.  அது வெறும் ஒரு வித்தை, விந்தை அல்ல. அணைத்து சித்தர்களும். அதுவும் தினமும் லக்ஷம் பேர் வந்து பார்க்கும் அளவு பிரபலம் அடைந்தும் இறுதிவரை பிட்சை எடுத்து  கிழிந்த உடையோடு வேப்ப மரத்தின்  அடியில் மிக எளிமையாக  வாழ்ந்தாரே ஷீரடி சாய் பாபா. அவர் முதற்கொண்டு பல  ஞானிகளும், சித்தர்களும் நவகண்ட யோகம் செய்தார்கள் என்றால். அவ்வாறு மகான்கள்   நவகண்ட யோகம் செய்வதில்  ஏதோ  ஒரு பெரிய உட்பொருள் நிச்சயம் இருக்கும். அதை புரிந்து கொண்டு விளக்கும் அளவு  எனக்கு அறிவு  இல்லை. 

ஒருநாள் அவர் நவகண்ட யோகத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது. அவரின் உடல் 9 துண்டுகளாக  இருப்பதை பார்த்த சிலர் இவரை யாரோ கொன்று விட்டதாக நினைத்து. அன்றைய வெள்ளைக்கார போலீசிடம் புகார்  செய்தார்கள். காவல் துறையினர் அந்த இடத்துக்கு  வந்தவுடன்  பார்த்தால்  துட்கா பாபா ,முழு உடலோடு அமர்ந்து இருந்தார். 

புகார் கொடுத்தவர்க்ளின் மீது காவல்துறை  கோபத்தில் பாய. அப்பொழுது துட்கா பாபா.  புகார் கொடுத்த மக்கள், காவல்துறை இருவருக்கும் நவகண்ட யோகம் என்றால் என்ன? என்பதை பற்றி ஒரு சிறிய டெமோ காட்ட அதை பார்த்து அனைவரும் ஆடி, அசந்து, வெல, வெலத்து போனார்கள்.  மேலும். நான் இனி நவகண்ட யோக தியானத்தில் இருக்கும் பொழுது  யாரும் என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று  அவர் அந்த பகுதி மக்களை பார்த்து  சொல்ல. அதன் பிறகு  அப்பகுதி மக்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். 

உடற்பிணி, மணப்பிணி, பிறவி பிணி என பல பிணிகளை இந்த பனி பிரதேசத்தில் போக்கிய இன்றும் போக்கி கொண்டிருக்கும் ஞானி தான் இந்த  துக்டா பாபா 

ஐப்பசி மாதம், சஷ்டி திதி, சோம வாரம், புனர்பூச நட்சத்திரம் அன்று ஆங்கில தேதிப்படி 

30/10/1893 அன்று துக்டா பாபா ஜீவ சமாதி அடைந்தார். 

இவர் ஜீவ சமாதி அடைவதற்கு முன் அதே ஊட்டி காந்தளில்  தக்ஷிணாமூர்த்தி மடம் அமைத்த ஓம் பிரகாச சுவாமிகள், அவரின் சீடரான  சிதம்பரம் ஏகாம்பர தேசிகர், ரத்தினமணி அம்மையார் மூவருக்கும்  அதை தெரியப்படுத்தினார். துக்டா பாபா ஜீவ சமாதி அடைந்த  பின் அவரின் உயிர்நிலை கோவிலுக்கு முதல் கும்பாபிஷேகத்தை செய்தவர் சிதம்பரம் ஓம் பிரகாஷ சுவாமிகள் தான். 

ஓம் பிரகாஷ சுவாமிகள், ரத்தினமணி அம்மையார் இருவருமே ஜீவ சமாதி அடைந்தார்கள். சிதம்பரம் ஏகாம்பர தேசிகர் அவருக்கு பின் வந்த 3 மகான்கள் என  மொத்தம் 6 மகான்கள் ஊட்டி காந்தளில் உள்ள தக்ஷிணா மூர்த்தி மடத்தில் அருள் பாலிக்கிறார்கள். 

கோவை  ஸ்ரீ வித்யா பீடத்தை சேர்ந்த ஒரு குழு பல உயிர்நிலை கோவில்களை தரிசித்து விட்டு இறுதியாக  கோவை வந்தார்கள். வந்த பொழுது அந்த குழுவினருக்கு  துக்டா பாபா ஜோதி சொரூபமாக காட்சி அளித்தார். அதன் பின்னர் 24/11/2003  SJ ராமன் துணை கொண்டு துக்டா பாபா கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

பல ஆயிரம் மக்களின் துன்பங்களை இவர் தொடர்ந்து துடைத்து கொண்டு இருக்கிறார். 

கிறிஸ்துவர்களின் கல்லறைக்கு எதிரே இவரின் ஜீவ சமாதி கோவில் உள்ளது. 

பரலோகத்தில் வாழும் பரம பிதாவே. நீ உன் பக்தர்களுக்கு மோட்ஷம்  கொடுக்கவில்லை என்றாலும். எனது அருட்பார்வை இவர்களுக்கு படுவதால். இவர்கள் அனைவரும்  மோட்ஷ சாம்ராஜ்யத்தை அடைவார்கள்  என்பதை இவர் சொல்லாமல் சொல்கிறார் போலும். 

காசியில் இருந்து சில  யோகிகள் காந்தளில் அருள் பாலிக்கும் துக்டா பாபாவை தரிசிக்க வந்து இங்கே தங்கவும் தங்குகிறார்கள். 

காசியில் இருந்து சிலர். அதுவும் அந்த சிலர்  சாதாரண நபர்கள் அல்ல. யோகிகள், மகான்கள் துக்டா பாபா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து இங்கே சில நாட்கள் தங்கவும் தங்குகிறார்கள் என்றால். அது சாதாரண விஷயமா? 

காசி போன்றே ஊட்டி காந்தளும் ஒரு மயான பூமி. 

இந்த காந்தளை நீலகிரியில் வாரணாசி என்று சொல்லலாம். 

இவரால் பலன் அடைந்த  பல அடியார்கள்.  இவரின் ஆலயத்திற்கு திருப்பணி செய்திருக்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள். 

மேலும் சில அடியார்கள்  இவரின் பெயரால் ஏழை மக்களுக்கு பல நற்பணிகள்  செய்து கொண்டிருக்கிறார்கள். 

1] தொழில் ரீதியான தடை நீங்கி செழிப்படைய 

துட்கா பாபாவிற்கு திங்கட்கிழமை தோறும் பாலாபிஷேகம் செய்து. குறைந்த பக்ஷம் 3 ஏழைகளுக்கு உணவு இட்டால் தொழிலில் உள்ள தடைகள் நீங்கும். 

2] கோர்ட், வழக்கு மற்றும் பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் நீங்க

செவ்வாய் தோறும் பாலாபிஷேகம் செய்து 5 ஏழைகளுக்கு உணவு இட வேண்டும்.

3] செல்வம் பெருக 

வியாழன் தோறும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து, நெய் விளக்கேற்றி 7 ஏழைகளுக்கு உணவு இட வேண்டும். 

4] கிரக தோஷம் மற்றும் நோய் நீங்க 

சனிக்கிழமை விரதம் இருந்து, இளநீர் கொண்டு அபஷேகம் செய்து,  வில்வ இலைகளால் பூஜிக்க  கிரக  தோஷங்களும், நோய்களும் நீங்கும். 

அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அபிஷேகம் செய்து பூஜித்தால் எல்லா நலன்களும் ஒருங்கே கிடைக்க பெரும். 

என்று இக்கோவிலில் சொன்னார்கள். 

இந்த கோவிலின் உள் சில நிமிடங்கள் அமர்ந்தாலே எங்கும், எதிலும் வெற்றி என்பது அடியேன்  அனுபவ பூர்வமாக உணர்ந்து  கொண்டிருக்கும் ஒன்று. 

வரும் அக்டோபர் 22. இவரின் குரு பூஜை நடக்கிறது. 

அனைவரும் வருக. இவரின் அருள் பெறுக. 

ஊட்டி போட் ஹவுசில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் காந்தள் இருக்கிறது. 

நல்ல சுத்தமான. கெய்சர், வெஸ்டர்ன் டாய்லட் வசதியோடு  500 ரூபாய்க்கு கூட ஊட்டியில் நல்ல ரூம்கள் இருக்கிறது.  

பின் குறிப்பு- இந்த கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்  MSC+ PHD. இந்த கோவில் அர்ச்சகர் மிகப்பெரிய பதவியில் இருந்தவர். அதை உதறி தள்ளி விட்டு துக்டா பாபா ஆலயத்தில் பூஜை செய்து கொண்டிருக்கிறார். 

காவாங்கரை கண்ணப்ப சித்தரின் குரு பூஜை வரும் அக்டோபர் 1 நடக்கிறது. 

- from - FB - Krishnaprasad 

Monday, September 26, 2016

நவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்!

நவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்!

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.

7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி,
போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கிநவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

11. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலுவைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

12. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

13. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

14. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது. 

15. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

16. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

17. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

18. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

19. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

20. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து
வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

21. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

22. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

23. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே
மிகமிக முக்கியம்.

24. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய
அம்சமாகும்.

25. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

26. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

27. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

29. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

30. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

31. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

32. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

33. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

34. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

35. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

36. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

37. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

38. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

39. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

40. நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

43. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

44. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

45. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும்,எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

46. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

47. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

48. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

49. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

50. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.

Sunday, September 25, 2016

ஸ்ரீ அகத்திய மாமுனி

ஸ்ரீ அகத்திய மாமுனி

பதினென் சித்தர்களில் முதல் சித்தராக விளங்குபவர் ஸ்ரீ அகத்திய மாமுனி ஆவார். சிவபெருமான் - பார்வதி அம்மையின் திருமணத்தின் போது வடபால் தாழ்ந்து தென்பால் உயர்ந்தது. அதனால் உலகைச் சமன்படுத்த வேண்டித் தென்திசை பொதிகை மலைக்கு சிவபெருமானால் அனுப்பப்பட்டவர் ஸ்ரீ அகத்திய பெருமானார். திருத்தணிகையம்பரியை (திருத்தணி) அடைந்த எந்தை தணிகேசப் பெருமானை வழிபட்டு செந்தமிழ் புலமையையும், ஐந்து இலக்கணம், கணிதம், சித்த மருத்துவம், முதலியவைகளை பெற்று அவற்றிற்கும் மேலான சிவஞானத்தை எய்தினார்.
ஸ்ரீ சரஸ்வதியின் குருவான (ஸ்ரீ ஹயக்ரீவர் மூர்த்தியிடம் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் உபதேசம் கற்றவர். ஸ்ரீ பராசக்தியின் அனைத்து சக்தி பீடங்களையும் வழிபட்டவர். சிவபெருமான் பார்வதி தேவியின் திருமண கோலங்களை பல்வேறு தலங்களில் தரிசிக்கும் பேறு பெற்றவர்.
ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி திருமண வைபோகம் சிவா பூஜையில் உன்னத நிலையை அடைந்தவரும், காசி ராஜாவின் அருமை புதல்வியுமான லோபமுத்ரா தேவி சிவா பூஜையில (சைவம்) உன்னத நிலையை அடைந்தது போல் சக்தி பூஜையில் (சாக்தம்) பரிப பூரண நிலையை அடைய விரும்பினார். லோபமுத்ரா தேவியின் அயராத பூஜைகளால் பகிழ்வூற்ற சிவபெருமான் அசரரி வாக்காய் மகளே! உன்னுடைய பூஜையால் யாம் மகிழ்வுற்றோம். உமது திருமண வயதில் உமது விருப்பம் நிறைவேறும். உன்னை மணக்கப் போகும் மனாளன் சக்தி உபாசனையில் உன்னத நிலையை பெற்றவன். அவனது நேத்ர தீட்சையால் (கண்) உன்னுடைய சக்தி பூஜை பூரணம் அடையும். அதுவரையில் சிவப பூஜைகளை செய்து வருவாயாக என்று அருளினார். அதன்படி சிவா பூஜைகளை லோபமுத்ராதேவி சிரம்மேற்கொண்டு செய்து வந்தார்.
ஸ்ரீ உலோபமுத்ரா தேவி உரிய திருமண வயதை அடைந்த உடன் காசி ராஜா தன் ஆருயிர் மகளின் திருமணத்தை நிறைவேற்ற ஸ்ரீ உலோபமுத்ரா தேவியின் விருப்பத்தை கேட்க, அதற்கு ஸ்ரீ உலோபமுத்ரா தேவி சக்தி உபாசனையில் உன்னத நிலையை பெற்ற ஒருவரையே மணக்க விரும்புவதாக தெரிவித்தார். காசி ராஜன் தன் மகளின் தெய்வீக் நிலை கண்டு அகமகிழ்ந்து தன்னுடைய குல குருவிடம் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியின் எண்ணத்தைக் கூறினார். குல குரு அதை ஆமோதித்து சக்தி உபாசனையில் உன்னத நிலையை அடைந்தவர் ஸ்ரீ அகத்தியர் ஒருவரே எனக் கூறி அவரது பெருமைகளை காசிராஜனிடம் எடுத்து கூறினார். இதனால் பெரிதும் மகிழ்வுற்ற காசிராஜா தன் குல குருவின் அனுமதியுடன் சகல பரிவாரங்கள் படைசூழ பொதிகை மலைக்குச் சென்றார்.
பொதிகை மலை ஆசிரமத்தில் ஸ்ரீ அகத்திய பெருமானார் பிரம்ம முகூர்த்த பூஜைகளை தன் சீடர்களுடன் நிறைவேற்றிக் கொண்டு இருக்கும்போது சிவபெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளி அகத்திய மாமுனியே பன்னெடுங்காலமாக எமது திருமண கோலத்தை பல தலங்களில் கண்டு மகிழ்வுற்றாய். இப்போது உன்னுடைய திருமண கோலத்தை நாங்கள் காண விரும்புகிறோம் என அருளினார். பின்னர் ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவி திருமணம் சிவபெருமான், பார்வதி தேவி, காசி ராஜா மற்றும் அனைவரது முன்னிலையில் இனிதே நடந்தேறியது.
இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள் முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும், சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள் சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம், சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில் பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம் பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்படஉள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில் எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு (காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம் அருகில்) அமைந்து உள்ளது.
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயம் குடமுழுக்கு முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது பிரகாரத்திருப்பணிகள் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து ஸ்ரீ உலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்திய மாமுனியின் அருளுக்கு பாத்திரர்களாகும்படி கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆறா துயர் தீர்க்கும் அகத்தியர் திருக்கோயில்

இறைவன் மிகப் பெரியவன். அன்பெனும் மனதிற்கு மட்டுமே கட்டுப்பட்டவன். இறைவனை சதா தொழுது கொண்டு இறைவனின் திருவடியை பிடித்த சித்தர்கள் கோடி. ஆதில் தலையாய மகாகுரு கும்ப மகாமுனி எனும் அகத்தியர் ஆவார். ஊலக நன்மைக்காகவும். இறைபணிக்காகவும் தன்னை யுகம் யுகமாய் அர்ப்பணித்த மகாகுரு அகத்தியர் ஆவார்.
துமிழகத்தில் ஜோதிர்லிங்கமாய் திகழும் இராமேஸ்வரம் திருக்கோயில் அமைய மூல காரணமாய் நின்றவர் அகத்தியர். இலங்கையை வென்று திரும்பிய பரம்பொருள் ஸ்ரீராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் போக்க லிங்கபிரதிஷ்டை செய்ய உபதேசம் செய்து பின் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே இராமநாதசுவாமி ஆவார். தீர்த்தங்களில் தலையாய தீர்த்தங்களைக்கொண்ட ராமேஸ்வரத்தில் ராமருக்கு அகத்தியர் உபதேசம் செய்த இடத்தில் "அகத்திய தீர்த்தம்" எனும் தீர்த்தமும் சிறிய அளவிளான அகத்தியர் திருக்கோயிலும் இருக்கிறது. தற்போது அகத்தியரின் திருவருளால் திருப்பணி துவங்கப்பட்டுள்ளது. சுமார் 17 அடி உயரம் உள்ள கருங்கல் (அகத்தியர் கற்றளி) திருக்கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
எட்டு இதழ்கள் கொண்ட தாமரை கமலங்கள் உள்ள பீடத்தின் மேல் மஹா குரு அகத்தியரின் திருவடிகள் பிரதிஷ்டிக்கப்பட உள்ளன. இதன் கீழ்புறத்தில் கயிலை முதல் இராமேஸ்வரம் வரை உள்ள புண்ணிய ஷேத்திரங்களின் கற்களாலும் மண்ணினாலும் நிரப்பப்பட்டு மேற்சொன்ன பீடங்கள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாலய பூர்த்திக்குப்பின் வரும் திருகுடமுழுக்கு அன்று இறைவனின் திரு அருளாளும் இராமேஸ்வரம் முதல் கயிலை வரை உள்ள ஆயிரத்தி எட்டு புண்ணிய நதி மற்றும் தீர்த்தங்களில் இருந்து தீர்த்தங்களை கொண்டு வந்து அன்பு மயமான அகத்திய பெருமானுக்கு புனித நன்னீராட்ட எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதங்களை வேண்டுகிறோம்.

மாறாத அன்புடன்

உம் அருகினில் இருக்க வேண்டும் என்னும் அன்பை தவிர பெரிதாக வேறு ஒன்றும் இல்லை என் அகத்திய மஹாகுருவே…..

அகத்தியர் சில குறிப்புகள்
  • 1) அகத்தியர் சென்னைக்கு மிக அருகில் உள்ள பஞ்சேஷ்டி எனும் இடத்தில் ஐந்து மஹா யாகங்கள் செய்ததாகவும் பின்னர் பொதிகை வழியாக சென்று அனந்தசயனம் எனும் கேரளாவில் உள்ள அனந்த பத்மனாப ஸ்வாமி கோவிலில் சமாதியில் அமர்ந்ததாகவும் தெரிகிறது. மேலும் மஹாவிஷ்ணு அனந்த சயனத்தில் இருக்கும்போது பத்மநாபனின் வலது கை சிவலிங்கத்தை தழுவியதாக இருக்கும். ஆனால் சில படங்களில் பத்மனாபனின் கை அகத்தியரின் தலையில் வைத்து ஆசீர்வதிப்பதை போல் காணப்படுகிறது. இந்நிலையில் பார்க்கும் பொழுது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி திருக்கோவில் அகத்தியரின் சமாதி உள்ள இடம் என உறுதியாகக் கூறலாம்.
  • 2) அகத்தியரால் இராமபிரானுக்கு வெற்றி கிடைக்கும் பொருட்டு அகத்தியரால் உபதேசிக்கப்பட்டதே "ஆதித்திய ஹிருதயம்" எனும் ஸ்லோகம் ஆகும். இதை பாராயணம் செய்த பிறகே இராமபிரான் இலங்கையை வென்றார் என்பது உண்மை. மேலும் இவ்விடத்தில் அகத்தியர் இராமபிரானுக்கு உபதேசித்தது சிவ கீதை எனும் நூலாகும்.
  • 3) திருநெல்வேலி புராணத்தின் படி தமிழ் நாட்டை சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அகத்தியருக்கு கொடுக்க அகத்தியர் பாண்டியனுக்கு கொடுத்ததாக புராணம் கூறுகிறது.
  • 4) அகத்தியருக்கு தாமிரபரணி ஆறு சிவ மூர்த்தியால் கொடுக்கப்பட்டது.
  • 5) திருவிளையாடல் புராணத்தின் படி தேவர்களை வருத்திய விருத்ராசுரன் இந்திரனது வஜ்ராயுதத்திற்கு பயந்து கடலில் ஒளிந்து கொள்ள தேவர்கள் அகத்தியரை வேண்ட அகத்தியர் சமுத்திர ஜலத்தை தன் கைகளால் ஏந்தி குடிக்க சமுத்திரத்தில் இருந்த விருத்ராசுரன் வெளிப்பட அவனை இந்திரன் வென்றதாகவும் பின் மீண்டும் கடலை அகத்தியர் விடுவித்ததாகவும் மதுரை திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
  • 6) அகத்தியர் பன்னிரண்டு வருடங்கள் நீரில் படுத்து தவம் இருந்ததாக கூறுகிறது உத்ர இராமயணம்
  • 7) இராம மூர்த்திக்கு இலங்கையை வெல்லும் நிலையில் திவ்ய பாணங்களைக் கொடுத்து அப்பாணங்களின் வரலாற்றையும் கொடுத்தவர் அகத்தியராவார்.
  • 8) சிவ அனுகிரகத்தால்் சிவா பூஜை செய்வதற்காக கமண்டலத்தில் கங்கையைப் பெற்றுக்கொண்டு திரும்பி வருகையில் மாயாமபுரத்தின் அருகில் மலை உருவாக இருந்த க்ரௌஞ்சன் மாயையில் பட்டு அதனிடம் இருந்து எழுந்து அவனை மலை உருவாகவே இருக்க சாபம் அளித்து பின் குமாரக் கடவுளாகிய முருகனின் வேலால் பிளவுபட சாபவிமோசனம் செய்து காசி ஸ்தலத்தை அடைந்தவர் அகத்தியர்.
  • 9) கந்த மூர்த்தியை எண்ணி தவம் புரிந்து சகல கலைகளையும் பெற்றவர்.
  • 10) சுரியனிடமிருந்து தமிழைக் கற்றவர் அகத்தியர்.
  • 11) சுவேரனின் குமாரியாகிய காவிரியை மணந்தவர்.(இவளே உலோபமுத்ரா  என காவிரி புராணம் கூறும். இவளை விதர்வ நாட்டு புத்திரி என பாரதம் கூறும்.
  • 12) அகத்தியர் வண்டு உரு கொண்டு புஷ்பங்களில் இருந்து தேனை எடுத்து சிவ பூஜை செய்ததால் ஈங்கோய் மலை எனும் ஸ்தலம் உண்டாயிற்று ( திருசெங்கோட்டு புராணம் ).
  • 13) விஷங்களுக்கு என்று அகத்தியரால் ரிக் வேதத்தில் ஒரு கீதம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • 14) தூங்கி எயில் எழுந்து தொடித்தோல் செம்பியன் எனும் மன்னன் காலத்தில் அவன் ஆண்ட காவிரி பூம்பட்டிணத்தில் அகத்தியர் இந்திர விழாவை எடுத்திட்டார் என மணிமேகலை கூறுகிறது.
  • 15) அகத்தியரின் மாணவர்கள் தொல்காப்பிய முனிவர் அதன் பொருட்டு ஆசான் தூராலிங்கன் செம்பூட்சேய், வையாபிகன், வாய்த்தியன், பணம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கைப் பாடினியன், நற்றத்தன், வாமனன்.
  • 16) அகத்தியருக்கு கும்பமுனி, குருமுனி, கலசயோனி என பல நாமங்கள் உண்டு.
  • 17) அகத்தியர் எனும் பெயருக்கு பொருள் விந்திய மலையை அடக்கியவர் என்பதாகும்.
  • 18) இவர் செய்த நூல்கள் அகத்தியம், வைத்திய நூல்கள் பெருந்திரட்டு ஆயுர்வேத பாஷ்யம், விதிநூல் மூவகை காண்டம், அகத்திய சிந்தாமணி, செந்தூரம் முந்நூறு மணி, நாலாயிரம், சிவ ஜாலம் சக்தி ஜாலம், சண்முக ஜாலம், வைத்திய கண்ணாடி, அகத்திய ரத்னாகாரம், வைத்தியம் ஆயிரத்து ஐநூறு, ஆயிரத்து அறனூறு கர்ம வியாபகம், தரிசில் புஷ்பம் இருநூறு தண்டகம், பட்சினி, நாடி, மேலும் அகத்திய சம்யிதை எனும் வைத்திய வகை நூல் இவரால் செய்யப்பட்டது.
அகத்திய தீர்த்தம்: இது தென் கடற்கரையில் உள்ளது. இராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தத்தில் அர்ஜீனன் தீர்த்த யாத்திரையில் தங்கினார். இங்கு தங்கினால் மகா பாதங்கள் நீங்கும்.
அகத்திய நக்ஷத்திரம்: விண்ணில் தோன்றும் இந்த நக்ஷத்திரம் கடல் அலையை நிறுத்தும் சக்தி கொண்டது.
அகத்திய பக்த விலாசம்: சிவனடியார்களின் கதையை வட மொழியில் கூறும் நூல்
அகத்திய பர்வதம்: காலாஞ்சர பர்வதம் எனும் மலைக்கு அருகில் உள்ள மலை.
அகத்தியப்ரதா: அகத்தியருடன் பிறந்தவன் வயிற்றிலேயே ஞானம் அடைந்தவன்.
அகத்திய வடம்: இமய மலையில் உள்ள ஒரு தீர்த்தம்
அகத்திய ஆஸ்ரமம்: பஞ்சவடிக்கு சமீபத்தில் உள்ள புண்ணிய ஸ்தலம். இந்த இடத்திற்கு லோமஸேனனுடன் யுதிஷ்டன் சென்றான். இது நாசிக் எனும் இடத்தில் இருபத்தி நான்கு மைல் தொலைவில் உள்ளது. தற்போது அகத்திய புரி என்று வழங்கப்படுகிறது.
அன்பின் வடிவமான இறைவனை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அகத்திய பெருமானுக்கு எழுப்பப்படும் இத்தகைய கற்றளி கலகாரப்பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. அக்னி தீர்த்தக்கரையில் வடபுறத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பணிகள் சிறப்புற அமைய விசேஷ திரவியங்கள் கொண்டு ஹோமங்கள் செய்யப்பட உள்ளது. எல்லாம் வல்ல இறைவனின் திருவருளும் மகாகுரு அகத்திய பெருமானின் திருவருள் உடனிருந்து எல்லா நலமும் பெருக வேண்டுகிறோம்.

கட்டு மந்திரங்களும் முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும்

சக்தி வாய்ந்த கட்டு மந்திரங்களும் அவற்றை முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் .. அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும் .. 
==================================== 

சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன 
வாழ்விடங்களில் இருந்து விலகி 
காடுகளிலும், மலைகளிலும் 
வாழ்ந்திருந்தனர்.அவர்களின் வாழ்நாள் தேடல் 
விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் 
சார்ந்ததாகவே இருந்தது. இத்தகைய தேடலில் 
அவர்கள் அடைந்த தெளிவும், முதிர்வும் 
அசாதாரணமானவை. 

தாங்கள் உணர்ந்த அரிய தகவல்கள் 
சுயநலவாதிகளிடமோ அல்லது 
பேராசைக்காரர்களிடமோ சென்று சேர்ந்து 
விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக 
இருந்தனர்.அதன் பொருட்டே தங்களின் 
பாடல்களை மறைபொருளாய் எழுதி 
வைத்தனர். 

சித்தரியலில் குருவே எல்லாவற்றுக்கும் 
ஆதாரமானவர் என தீர்க்கமாய் 
நம்பினர்.குருவானவர் தனத் தெளிவுகளை 
சீடர்களுக்கே அளித்தார்.மறைபொருளை 
கட்டவிழ்க்கும் வகையினையும் 
குருவிடமிருந்தே சீடர்கள் 
பெற்றனர்.இதனையே நாம் குருவருள் 
என்கிறோம். 

சதாரண மனிதர்களினால் செயல் 
படுத்தமுடியாத நுட்பங்கள், வழிமுறைகள் 
அவற்றின் அசாத்திய விளைவுகளை பற்றிய 
தகவல்களே இப்படி பாதுகாக்கப் 
பட்டது.இவற்றையே பொது மக்கள் சித்த 
ரகசியம் என்று அழைத்தனர். 
என்னுடைய புரிதலின்படி இந்த சித்த 
ரகசியங்களை ஆறு வகைகளாய் தொகுக்க 
நினைக்கிறேன். 

அவையாவன... 
உடல் கட்டு மந்திரங்கள் 
அபாயகரமான யந்திரங்கள் 
சாபநிவர்த்தி மந்திரங்கள் 
காயகற்ப வகைகள் 
இரசவாதம் 
தீட்சைகள் 
இரசவாதம் பற்றி முன்பே பல பதிவுகளில் 
பார்த்து விட்டபடியால் மற்ற வகைகளைப் 
பற்றிய எனது புரிதல்கள் மற்றும் 
தகவல்களை வரும் நாட்களில் பகிர்ந்து 
கொள்கிறேன். 

இனி பகிர இருக்கும் பல தகவல்கள் நம்ப 
இயலாத வகையிலும், பகுத்தறிவுக்கு 
ஒவ்வாதனவாகவும் இருக்கலாம்.இவற்றின் 
சாத்திய,அசாத்தியங்கள் ஆய்வுக்கும், 
விவாதத்திற்கும் உட்பட்டவை. இந்த 
முறைகளை செயல்படுத்தி பலன் காண்பதில 
நிறையவே நடைமுறை சிக்கல்கள் 
இருக்கின்றன.முறையான குருவின் அருளாசி 
மற்றும் வழி நடத்துதல் இருந்தால் மட்டுமே 
இவை சாத்தியமாகும்.எனவே இவற்றை ஒரு 
தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட 
வேண்டுகிறேன். 

சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்” 
------------------------------------------------------------- 
நமது உடலானது பஞ்ச பூதங்களின் 
சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச 
சக்திகளான கோள்கள், அட்டதிக்கு 
பாலகர்களுக்கு 
கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான 
மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் 
ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த 
கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே 
எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், 
சுயமாகவும் செயல்பட முடியும் என 
சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் 
தெளிவுகளுமே இந்த பதிவு... 

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து 
உடலை வெளியேற்றுவது, வெளியேறிய 
பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு 
அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு 
மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் 
கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது 
அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் 
மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக 
குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் 
என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், 
அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் 
கூறப் பட்டிருக்கிறது. 

இனி நவ கோள்களின் உடல் கட்டு 
மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு 
மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த 
பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க 
வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். 

அதாவது... 
"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய 
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன் 
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா 
தனி தனியாய் உருத்தான் போடு போடே" 
- அகத்தியர் - 

நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம் 
நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம் 

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம் 

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் 
ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது 

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது 

அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது 

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது 

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது 

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம் 
எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் 

திக்கு கட்டு 
------------------- 
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் 
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு 
முன்புறம் போடவும் 
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும் 
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும் 
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும் 
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம் 
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும் 
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே 
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே 
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே 
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே 
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே 
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே 
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே 
பொருப்பு இருப்பாக கொண்டேனே 
சிவன் சிவமாக கொண்டேன் 
சிவன் இருந்தவாறே 

உடல்கட்டு. 
------------------- 
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல் 
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல் 
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல் 
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல் 
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா 
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்) 
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர 
கீழ்க்கண்டவை நடக்கும் 
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும் 
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும் 
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும் 
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும் 
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும் 
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது 
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்........... 

சிவ மகாமந்திரம் ... முயன்று பாருங்கள் 
-------------------------------------------------------------------- 
"ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்" 
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது: 
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது. 
இதை நீக்க சிவ மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம் - அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும். 

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் . 
"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த 
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே! 
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை 
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே 
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே 
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே! 
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! 
இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும். 

அனுமாரின் வசியக் கட்டு மந்திரம் ... 
---------------------------------------------------------- 
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா, 
லங்காபுரி ராவண சம்ஹாரா, 
சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா, 
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு 
ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா" 
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார்அகத்தியர். 

சகலத்திர்கும் கட்டு மந்திரம் ... 
------------------------------------------------ 
"ஓம் பஹவதி ப்ய்ரவி 
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு 
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு 
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி 
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு 
சத்ருவை கட்டு எதிரியை கட்டு 
எங்கேயும் கட்டு 
சிங்க் வங்க் லங்க் லங்க் 
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம" 
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா” 
இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன். 

சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
--------------------------------------------------------- 
"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு 
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம் 
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்" 
- அகத்தியர் - 

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" 
என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் 
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். 

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
--------------------------------------------------------- 
"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர 
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம் 
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்" 
- அகத்தியர் - 

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" 
என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் 
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். 

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்.. 
------------------------------------------------------------ 
"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர 
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே" 
- அகத்தியர் - 

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் 
றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் 
செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் 
அகத்தியர். 

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
------------------------------------------------------- 
"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு 
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம் 
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்" 
- அகத்தியர் - 

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு 
சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் 
உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் 
என்கிறார் அகத்தியர். 

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
-------------------------------------------------------- 
"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு 
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம் 
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்" 
- அகத்தியர் - 

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் 
மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று 
அன்பாக லட்சம் உரு செபித்தால் 
குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் 
அகத்தியர். 

சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
-------------------------------------------------------------- 
"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு 
இறீம் றீம் நசி மசி யென்று போடே" 
- அகத்தியர் - 

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை 
கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு 
செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு 
தீரும் என்கிறார் அகத்தியர். 

சனிக்கான உடல் கட்டு மந்திரம்.. 
---------------------------------------------------- 
"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு 
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி 
தேடுவாய் லட்சமுருப் போடு போடே" 
- அகத்தியர் - 

பகவானின் உடல் கட்டு மந்திரத்தை 
கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு 
செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் 
என்கிறார் அகத்தியர். 

ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
---------------------------------------------------- 
"திறமான இராகுவுட கட்டுதீர 
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம் 
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்" 
- அகத்தியர் - 

திறமான இராகு பகவானின் உடல் கட்டு 
மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" 
என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் 
இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் 
அகத்தியர். 

கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
------------------------------------------------------ 
"சாடுவாய் கேதுவுட கட்டு தீர 
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் 
போடே" 
- அகத்தியர் - 

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை 
கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு 
செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு 
தீரும் என்கிறார் அகதியர். 

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் 
மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் 
கட்டு மந்திரங்களை அகத்தியர் 
அருளியிருக்கிறார். 

குளிகன் உடல் கட்டு மந்திரம்.. 
---------------------------------------------- 
"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க 
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம் 
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா" 
- அகத்தியர் - 

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு 
"ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு 
செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் 
என்கிறார் அகத்தியர். 

அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம். 
------------------------------------------------------------- 
"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப் 
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு 
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும் 
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் 
என்றும் 
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும் 
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும் 
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும் 
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே" 
- அகத்தியர் - 

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் 
புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் 
வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் 
பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது 
லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே 
அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் 
என்கிறார். 

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் 
உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் 
பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ 
கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் 
அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது 
உடல் முழுமையாக உனது 
கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார். 

உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை 
---------------------------------------------------------------- 
சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் 
நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் 
மந்திரங்கள் மட்டுமே கூறப் 
பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை 
செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு 
கொண்டு வருவது போன்றவைகள் 
குருவினால் மட்டுமே கூறிட இயலும். 
தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை 
வலியுறுத்துவதன் பின்னனி இதுதான். 
இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும் 
முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை 
இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு 
பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம் 
மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி 
பார்ப்போம். 

"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள் 
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு 
வருவில்லா சிவயனார் மந்திரந்தானும் 
வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு 
குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா 
குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம் 
திருவான வினாயகரின் சுழியை முந்திச் 
செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே" 
- அகத்தியர் - 

குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்" 
என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் 
முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் 
என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், 
சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே 
அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், 
மேலும் திருவான வினாயகரின் சுழியை 
முதலில் செபித்தே தனது மந்திரங்கள் 
அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று 
சொல்கிறார். 

"அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு 
அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு 
வடக்குமுகம் இருந்துலட்சம் 
உருத்தான்போடு" 
- அகத்தியர் - 

மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு 
உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து 
ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு 
நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க 
வேண்டும் என்கிறார். 

இத்துடன் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய 
தகவல் பதிவு நிறைவடைந்தது.ஆர்வமும், 
முயற்சியும் உள்ள எவரும் குருவருளை 
வேண்டி வணங்கி இம் மந்திரங்களை பயன் 
படுத்திடலாம். 

பின் குறிப்பு : 
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள் 
அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட 
நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத 
நம்பிக்கைகளை விதைப்பதோ எனது 
நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை, 
பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும், 
விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும் 
தெளிவுகள் கிடைக்கலாம். 

சிவ சிவ சிவ சிவ நமசிவாய................. 

முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்.

Saturday, September 24, 2016

திருப்பதியில் உள்ள வேங்கடவனின் குலதெய்வம் யாரு?

திருப்பதியில் உள்ள வேங்கடவனின் குலதெய்வம் யாரு?
பல பேருக்கு திருப்பதியில் உள்ள வேங்கடவன் குலதெய்வம். ஆனா, அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யாரு. அவர்தான்
★ஸ்ரீ நரசிம்மர்★
★ ஸ்ரீனிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிக்கை
யில் குலதெய்வம் என்ற காலத்தில் ‘ஸ்ரீ நரசிம்மரை’ போடுமாறு ஸ்ரீனிவாசர் கூறுகிறார்.
★ அன்று தயாரிக்கப்பட்ட விருந்து, ஸ்ரீ நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்தபிறகே அனைவரும் உண்கின்றனர். திருமணம் முடிந்த ஸ்ரீனிவாசரும், லக்‌ஷ்மி தேவியும், அஹோபிலம் சென்று ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிப்பட்டனர்.
இவ்விவரங்கள் ‘வேங்கடேச மஹாத்மியம்’ என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.
★ சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்.
★ ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.
★ நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று மிக நம்பிக்கையுடன் சொன்ன தன் பக்தனான பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி, மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் - நரசிம்மனாக - கம்பத்தில் இருந்து தோன்றினான்.
★ மேற்கண்ட ஸ்லோகத்திற்கு இது ஒரு எளிமையான விளக்கம். ஆனா, இந்த ஒரே ஒரு ஸ்லோகத்தை வைத்தே ஒரு நாள் முழுக்க விளக்கங்களால் பரவசப்படுத்தும் உபன்யாசகர்கள் உண்டு.
"கோவிந்தா கோவிந்தா கோவிந்தா"