Friday, September 9, 2016

திருச்செந்தூர் முருகன்

💜 திருச்செந்தூர் முருகன் 💜

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார்.

அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.

பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, பிறகு "திருச்செந்தூர்' என மருவியது.

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.

மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

திருசெந்தூரில் குரு அம்சமாக அருளோடும் கருணை பொழியும் முகத்தோடும் கடலோரத்தில் காட்சி தருகிறார் ..முருக பெருமானை ஆராதனை செய்து ஆலயம் எழுப்பி அறப்பணி ஆற்றிய அடியார்கள் மூவரின் ஜீவசமாதி கோவிலுக்கு அருகே வாகனம் நிறுத்துமிடத்தில் உள்ளது ...மூவர் சமாதி கோவில் என கேட்டால் சொல்வார்கள் ..

1.ஸ்ரீ மௌன சாமி,
2.ஸ்ரீ காசி சாமி,
3.ஆறுமுக சாமி ,

மூவர் சமாதிகள் அடுத்தடுத்து வரிசையாக உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டியது இவர்கள்தான், ஒரு 10 நிமிடம் சமாதியில் அமர்ந்து நமது கோரிக்கையை வேண்டினால் உடனே நடைபெரும்.

இங்கு தரும் பன்னீர் இலை அபி ஷேக விபூதி தீராத நோய்கள் தீர்க்கும் அற்புதமான பிரசாதம். மேலும்
பஞ்சலிங்கம், வள்ளி குகை,நாழிகிணறு ஆகிய இடங்கள் வரலாற்று சிறப்புடையவை. அனைவரும் நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.

ஓம் சரவணபவ குகனே சரணம்

No comments:

Post a Comment