Saturday, October 24, 2015

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே

ஒருநாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று
கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் 
உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி 
ஏசினான். 
-
அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் 
சென்று கொண்டிருந்தார். பின்னாலேயே வந்து 
திட்டி ஓயந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க 
முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் 
இருந்தது. 
-
என்ன மனிதனிவர் என்று வியந்தவன் "ஏனய்யா 
இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு 
சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று 
கேட்டான்.
-
கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு 
பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் 
அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் 
யாருக்குச் சொந்தம்?"
-
"கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். 
இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத்
திட்டியவன்.
-
"ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய 
ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே 
அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய 
கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, 
அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான். ,
தகுதியில்லாதவன் நம்மை ஏளனம் செய்யும் பொழுது
புத்தரைப் போல புன்னகை செய்து நகர்வதே நலம்
துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

- சுவாமி விவேகானந்தர்.
www.v4all.org

No comments:

Post a Comment