Monday, October 5, 2015

வெற்றிகரமான வாழ்வியல் முறைக்கு மாற்றுத்திறன் ஒரு தடையல்ல

ஜெசிக்கா காக்ஸ் (Jessica Cox, நான் படித்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக் குறிப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர். பிறப்பு: அரிசோனாவில் 1983-ம் ஆண்டு) உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர், கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர். இவர் பிறக்கும் போது இரு கைகளும் இன்றி பிறந்தார். இது பிறவிக் குறைபாடு ஆகும். மூன்று ஆண்டுகள் கடின பயிற்சிக்குப் பிறகு தன்னுடைய விமான ஓட்டுநர் உரிமத்தை அக்டோபர் 10, 2008 அன்று பெற்றார்.
தன் மழலை பருவம் முதற்கொண்டு தன் இரு கைககள் இல்லாது அவர் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள அதிக நிர்பந்தங்களுக்கு ஆளாகி இருக்கக் கூடும். பிறர் உதவியின்றி தன்னுடைய தேவையை செய்ய துணிச்சலாய் கற்றதின் நிமித்தம் அவர் தன் மன வலிமையைக் காப்பாற்றிக்கொண்டார். வெற்றிகரமான வாழ்வியல் முறைக்கு மாற்றுத்திறன் ஒரு தடையல்ல என்பதற்கான மற்றும் ஒரு எடுத்துக்காட்டு இவர்.
இவர் இலகுரக விமானம் (10,000 அடி வரையிலும்) ஓட்டுவதில் பயிற்சியும், ஆப்பிள் ப்ளைட் நிறுவனத்தின் உதவித்தொகையையும் பெற்றார். தன்னுடைய பதினான்காவது அகவை வரையிலும் தன்னுடைய செயற்கைக் கையை உபயோகப்படுத்தவில்லை. . தன்னுடைய கைகளுக்குப் பதிலாக, கால்களையே பெரும்பாலும் உபயோகப்படுத்தும் இவர் கார் ஓட்டுநர் உரிமமும் வைத்துள்ளார் (தடையற்ற கார் ஓட்டுநர் உரிமம்). இவருடைய கார்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் உபயோகப்படுத்தி வருகிறார். இவர் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்வதிலும் தேர்வு பெற்றுள்ளார். தன்னுடைய காஸ் இணைப்பது, மூக்குக் கண்ணாடியில் உள்ள குவியங்களை மாற்றுவது உள்ளிட்டவைகளைப் பிறருடைய உதவிகளை நாடாமல் தானே செய்கிறார். இவர் ஒரு பயிற்சிபெற்ற சுகூபா என்னும் ஒரு வகையான நீர் மூழ்குதல் வீராங்கனை ஆவார். காக்ஸ், அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து உளவியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது உணர்ச்சிமயமான பேச்சாளராக இருந்து வருகிறார்..
உண்மையிலேயே இவர் பல்வேறு மாற்றுத்திறன்களைக் கொண்டவர் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

No comments:

Post a Comment