Dear divine.
அவசியம் இந்த பதிவை படித்து விட்டு பகிரவும்...
வரும் திங்கட்கிழமை 12-10-2015
அன்று சர்வ மஹாளயபக்ஷ அமாவாசை....
திங்கட்கிழமையை ஸோமவாரம் என்று அழைப்பார்கள்.
திங்கட்கிழமை வரும் அமாவாசையை நம் முன்னோர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும் "அமா ஸோமவாரம்" என்று அழைத்தார்கள்.
அன்றைய தினம் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் காலையில் எழுந்து நீராடி, காலை 6 - மணியளவில் அரசமரத்தின் அடியில் வீற்றிருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று 2 நெய் தீபம் ஏற்றி, விநாயகருக்கு ஒரு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் (துண்டு) விநாயகருக்கு கட்டி, சந்தனம், குங்கும பொட்டு வைத்து, விநாயகருக்கு அருகம்புல் வைத்து, ஒரு தேங்காய் உடைத்து, 2 வெற்றிலை பாக்கு மற்றும் வாழைப்பழம் வைத்து விநாயகருக்கு ஊதுபத்தி மற்றும் கற்பூரம் காட்டி கீழே குறிப்பிட்ட மந்திரத்தை கூறி தம்பதி சமேதமாக அரசமரத்தின் கீழே வீற்றிருக்கும் விநாயகரையும் சேர்த்து 108 முறை வலம் வரவும்..
மூலதோ ப்ரம்ம ரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத சிவ ரூபாய, வ்ருக்ஷ ராஜாயதே நமஹ....
(அரசமரத்தின் வேர்ப்பாகம் படைக்கும் கடவுளான பிரம்மாவகவும், நடுவே உள்ள தண்டுபகுதி காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும், மேலுள்ள கிளைகள், இலைகள் உள்ள மேற்பகுதி அழிக்கும் கடவுளான சிவபெருமானாகவும் கருதப்படுகிறது. வ்ருக்ஷம் என்றால் மரம், ராஜா என்றால் அரசன். அதனால்தான் மரங்களுக்கு ராஜா என்று குறிப்பிடபடும் இந்த மரத்தை வேதம் அரசமரம் என வர்ணிக்கிறது)
இந்த மந்திரம் கூற இயலாதவர்கள்
ஓம் நமச்சிவாய அல்லது ஓம் நமோ நாராயணாய என்று கூறி மரத்தை 108 முறை வலம் வரவும்.
அமாவாசை தினத்தில் அரசமரத்திற்கு ஆகர்ஷண சக்தி அதிகம்
திங்கட்கிழமை வரும் அமாவாசை தினத்தன்று அரசமரம் அதன் ஆகர்ஷண சக்தியை 10 ல் 5 பங்கு சதவீதம் வெளியிடுகிறது
மருத்துவ ரீதியாக ஒரு சில பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பபை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாலும் கர்ப்பத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி ஒரு சில பெண்களுக்கு இல்லாததாலும் அவர்கள் முற்கூறிய முறையில் வழிபாடு செய்தால் அவர்களுக்கு புத்திர சந்தானம் இயற்கையாகவே கிடைக்கும்.
மேலும், புத்திர சந்தானம் இல்லாத ஆண்கள் இந்த மரத்தை வலம் வரும் போது அவர்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சரியாகும். புத்திர சந்தானம் கிடைக்கும்.
இந்த முறையில் வழிபாடு செய்ய உங்களுக்கு ஆகும் செலவு -250 -௹பாய் மட்டுமே.
இந்த முறையில் வழிபாடு செய்யும் போது உங்கள் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்வதோ அல்லது செல்போனை வீட்டில் வைத்து செல்வதோ உத்தமம்.
ஏனெனில், அப்போது தான் நம்மால் நிம்மதியாக கடவுளை வணங்க முடியும்..
மேலும்,
திருமணம் ஆகாதவர்களும்,
தொழில் சிறப்பாக நடத்த விரும்பும் அன்பர்களும்
இந்த முறையில் வழிபாடு செய்வது நலம் தரும்.
இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்
கார்த்திகை தீபம் - 2,
திரி + தீப்பெட்டி
நெய் - 1/4 - லிட்டர்,
ஒரு குடம் குடிநீர் (வீட்டில் இருந்து எடுக்கவும்)
விநாயகருக்கு புதிய துண்டு - 2
சந்தனம், குங்குமம் மற்றும்
சிறிதளவு அருகம்புல்
தேங்காய் - 1,
வெற்றிலை + பாக்கு
வாழைப்பழம் - 2
மேலும்,
அன்றைய தினத்தில் குறைந்த பட்சம் - 5 - நபர்களுக்கு அன்னதானம் செய்யவும். (சாப்பாடாக வாங்கி தருதல் நலம்)
அன்னதானம் செய்ய இயலாதவர்கள்
இரண்டு தினங்களுக்கு முன்
அனாதை ஆசிரமங்களுக்கு
தங்களால் இயன்ற அளவு
அரிசி, பருப்பு முதலிய பொருட்கள் வாங்கித்தரவும்...
'' ஸ்ரீ ரஸ்து " - '' ஸுபமஸ்து "
Urs
Dr.Star Anand ram
No comments:
Post a Comment