"ரயிலில் கிடைத்த பாடம்..."
ஒரு உண்மை சம்பவம்.
கன்னியாகுமரி முதல் மும்பை செல்லும் அதிவிரைவு புகைவண்டி...
இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில், குப்பை பொறுக்கும் ஆள் போன்று, கையில் ஒரு கோனிப்பையுடன் ஒருவர் பெட்டிக்கு வெளியே, பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து பயணிக்க...
சந்தேகத்துடன்,
“என்னங்க! பக்கத்து நிலையத்தில இறங்குறீங்களா?”
“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன்..."
“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல?”
“இல்ல சார், அங்க இருந்தா நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று டிக்கெட்டை காட்டினார்.
"என்ன தொழில் பண்றீங்க?”
அவரது தொழிலை பற்றி விளாவாரியாக சொல்ல சொல்ல நான் பிரமித்துப் போனேன்...
அவர் சொன்னதின் சுருக்கம்...
'அண்ணன் ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார்...
வேலை என்னவென்றால்...
கன்னியாகுமரியில் ரயிலில் ஏறி, முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும், வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும்.
முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள், எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள்.
இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது...
அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம் (ரூ.4,000)...
எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம் (ரூ.32,000)...
மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் (ரூ.2,40,000)...
செலவு நாப்பதாயிரம் (ரூ.40,000))...
மாதவருமானம் இரண்டு லட்சம் (ரூ.2,00,000)...
வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் (ரூ.24,00,000)...
இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும், இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன...' என்றார்.
நான் மலைத்து நின்றேன்...
கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான், ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன்.
ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து, கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார்...
அன்று நான் இருந்த ஏ சி பெட்டி, கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது.
எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம்...
அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்...
மேற்படி பதிவு உணர்த்தும் நீதிகள்...
ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.
இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.
மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்...
No comments:
Post a Comment