Monday, October 5, 2015

ஞான வான். தோன்றிய தினம் இன்று.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் மனம் வாடிய வள்ளல் பெருமான் என்கிற ஞான வான். தோன்றிய தினம் இன்று.
மழை பெய்கிறது. அதில் அனைவரின் உடலும் நினைகிறது. ஆனால். ஒருவரின் உடலில் மட்டும் ஒரு சொட்டு நீர் கூட படவில்லை. அவர் தான் வள்ளல் பெருமான். இவருக்கு அணைத்து. அரும் பெரும் சித்திகள் இருந்தும். அதை . இவர். மக்களுக்கு வித்தை காட்ட பயன் படுத்தியது இல்லை.
மகான்களில் சிலரே. ஜீவசமாதி ஆவார்கள். மிக ஒரு சிலரே. அதையும் தாண்டி. ஜோதியோடு ஜோதியாக மறைவார்கள்.
உலகினில் எந்த பொருளை எரித்தாலும். முடிவில் அதன் சாம்பல் மிஞ்சும். கற்ப்பூரம் மட்டுமே. எதுவும் மிஞ்சாமல். காற்றோடு, காற்றாய் கலக்கும். இதையே ஆங்கிலத்தில் Sublimation என்பார்கள்.
இறைவனுக்கு கற்ப்பூரம் காட்டப்படுவதன் உட் கருத்து இது தான்.
அன்று கற்ப்பூர மரம் என்கிற மரத்தில் இருந்து இயற்கையாக கற்ப்பூரம் தயாரித்தார்கள். இன்றைய செயற்க்கை கற்ப்பூரம் சுற்று சூழலுக்கு கேடு.
ஸ்ரீதர அய்யாவாள், வள்ளலார் போன்ற. மிக சிலரே. உடலோடு மறைந்து ஜோதியோடு கலந்தார்கள்.
கடை விரித்தேன் கொள்வார் இல்லை. இது தான். வள்ளல் பெருமான். ஜோதியில் கலக்கும் முன் சொன்ன வாசகம். அவருடைய புலால் உண்ணாமை. கொள்கையை. அனைவரும் பின்பற்றுதல் கடினம். சத்தியம், சம தர்மம், முதலான அவர் போதித்த மீதி அணைத்து நல்ல விசயங்களையும். முயற்ச்சி செய்தால். அனைவராலுமே. பின்பற்ற முடியும்.
அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி. தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி.

No comments:

Post a Comment