“ நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை ”....
செல்போனில் நாம் தவறான எண்ணை அழுத்தி விட்டால் வரும் பதில் , இதுவாகத்தான் இருக்கும்..!
ஆனால் இந்தப் பதிலை , நெல்லைத் தமிழ் , கோவைத்தமிழ் , சென்னைத் தமிழ் , ஈழத்தமிழ் , இப்படி எல்லா தமிழிலும் கற்பனை செய்து ஒரு பதிவை , முகநூலில் படித்து ரசித்துச் சிரித்தேன் ...!
இதோ ... அந்தப் பதிவு :
நெல்லைத் தமிழ் :
“எல ... எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..”
கோவைத் தமிழ் :
“ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!”
ஈழத்தமிழ்:
“இஞ்சாருங்கோ .. நீங்கள் கூப்பிட்ட எண் பிழை , இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே..”
சென்னை தமிழ்:
“அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க... நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்”
# ஹஹஹா... உங்களுக்குப் பிடித்தது , எந்தத் தமிழோ , நான் அறியேன்...!
ஆனால் எனக்குப் பிடித்தது ஈழத் தமிழும் , கோவைத் தமிழும்தான் !
# ஆனால் , எழுத்தாளர் சுஜாதாவிடம் , “எந்த வட்டாரத்துப் பேச்சுத் தமிழ் தங்களைக் கவர்ந்திருக்கிறது ? ” என ஒருமுறை கேட்டபோது , அவர் சொன்ன பதில் :
“என்னைக் கவர்ந்த பேச்சுத் தமிழ் , திருநெல்வேலித் தமிழ்தான்...! ‘என்னடே’ என்பதே மரியாதைச் சொல்.... ‘புலிய அங்க வச்சுப் பாத்தேன்’ போன்ற வசீகரமான பிரயோகங்கள்... எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு!”
# இதை எழுதிக் கொண்டிருக்கும்போது , பக்கத்து வீட்டிலிருந்து ஒரு குரல் , காதுகளில் வந்து விழுகிறது..!
“என்ன அண்ணாச்சி.. நீங்க நாளைக்கி வருதியளோ ?
சரி ... ஏளா! நீ எப்ப வருத ?”
# ...... சுஜாதா சொன்னது உண்மைதான் அண்ணாச்சி !
No comments:
Post a Comment