வீடு மனை யோகம் தரும் வீரவநல்லூர் ஸ்ரீபூமிநாதர்!
நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 28&வது கிலோமீட்டரில் உள்ளது வீரவநல்லூர். இங்கே, ஊரின் மையப்பகுதியில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபூமிநாத சுவாமி. அம்பாளின் பெயர் ஸ்ரீமரகதாம்பிகை.
அதிவீரவழுதி மாறன் எனும் பாண்டிய மன்னனை, வகுளத்தாமன் எனும் மன்னன் போரில் தோற்கடித்தான். தேசத்தை இழந்த அதிவீரவழுதி மாறன் ஒவ்வொரு தலமாக வந்தான்.
பிறகு இங்கு வந்து, இங்கே லிங்க வடிவில் உள்ள சிவனாரை கண்ணீர்விட்டு தொழுதான். ‘உன் சிறு படையைக் கொண்டு, தைரியமாக எதிரியுடன் போர் செய். எதிரியின் கண்களுக்கு உன் சிறுபடை, பெரும்படையாய் தெரியும். போரில் நீயே வெல்வாய். தேசத்தை மீட்பாய்’ என சிவவாக்கு ஒலித்தது. அதன்படியே போரில் வென்றான் மன்னன். இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் பலவும் செய்தான்!
சோமவாரம் (திங்கள்), பிரதோஷம், மாத சிவராத்திரி ஆகிய நாட்களில் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், பூமி தொடர்பான சிக்கல்கள் நீங்கும். வீடு மனை வாங்கும் யோகம் கிட்டும்!
No comments:
Post a Comment