திருக்கடையூருக்கு சமமான தண்டீஸ்வரம்
திருக்கடையூருக்கு சமமாக சென்னையில் ஒரு கோவில் இருப்பது உங்களுக்கு தெரியுமா. அது தான் தண்டீஸ்வரம். ஆயுள் விருத்தி அளிக்கும், நவ கிரஹ தோஷம் போக்கும் ஸ்தலம். எமன் வழிபட்ட சிவ ஸ்தலங்களில் தண்டீஸ்வரமும் ஒன்று.
இன்று சனி பிரதோஷம். அதுவும் திரயோதசியில் வரும் சனி பிரதோஷம்.
இந்த ஆலயத்திற்கு அருகில் இருப்பவர்கள். மற்றும் சென்னை வாசிகளில் யார், யார் எல்லாம் இன்று தண்டீஸ்வரம் வந்து தரிசனம் செய்ய முடியுமோ செய்யுங்கள்.
இந்த தண்டீஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலேயே ஸ்ரீ சிதம்பரம் பெரிய சுவாமிகள் என்கிற 200 ஆண்டுகள் பழமையான ஒரு சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.
இவர் தான் 200 ஆண்டுகளுக்கு முன் இந்த தண்டீஸ்வரம் கோவிலை புனரமைத்து கட்டினார். இவர் உண்மை துறவி. உண்மை துறவி கையில் காசு இருக்குமா? இருக்காது. இவர் பின்னர் கோவிலை கட்டிய தொழிலாளிகளுக்கு எவ்வாறு பணம் கொடுத்தார் என்றால். வெறும் திருநீரை தான் இவர் கூலியாக கொடுப்பார். யார், யார் எந்த அளவு உழைத்தார்களோ அந்த உழைப்புக்கு தகுந்தபடி அந்த திருநீர் காசாக மாறும் அதிசயத்தை இவர் செய்தார். இவர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த குருலிங்க சுவாமிகளும் சைதாபேட்டை காரணீஸ்வரர் கோவிலை இப்படி தான் கட்டினார்.
சிதம்பரம் பெரிய சுவாமிகளின் ஜீவசமாதி வேளச்சேரி குருநானக் கல்லுரி பஸ் ஸ்டாப்பிற்கு மிக அருகிலேயே இருக்கிறது. தண்டீஸ்வரம் சிவன் கோவிலில் இருந்து இந்த மஹானின் உயிர்நிலை கோவில் நடக்கும் துரம் தான். அனைவரும் வருக. ஈசன் அருள் பெருக.
No comments:
Post a Comment