Wednesday, June 18, 2014

தலை சிறந்த விற்பனையாளர் யார்?

தலை சிறந்த விற்பனையாளர் யார்? 

ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..
.
அங்கு உள்ள சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..
அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்...
.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான் ..
.
சிகரட் குடித்தால்..!
.
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
.
2 உங்களுக்கு முதுமையே வராது
.
3 பெண் குழந்தை பிறக்காது
.
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்....
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது...
சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜரானார்...
.
நீதிபதி அவரிடம், “ இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய்... இது அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே..!! “ என்று கேட்டார்
.
அதற்கு அவன் சொன்னான்,
“ முதலில் நான் என்ன சொன்னேன்...?
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..
ஆமாம் வரமாட்டான்..
காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும்.. இருமிக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது... முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்...
.
2 வது என்ன சொன்னேன்
.
முதுமையே வராது... எப்படி வரும்...?
சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்...?
.
3 வது என்னசொன்னேன்
.
பெண் குழந்தை பிறக்காது...
எப்படி பிறக்கும்...? சிகரட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை
இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேறே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது.... “ என்று சொல்லி முடித்தான்...
.
அவன் சொன்னது சரிதான் நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிமதி...
.
Happy Selling 
Jc.Dr.Star Anandram
Vivekas Sales Training Company 
Coimbatore
web-www.v4all.org 
cell-9790044225

No comments:

Post a Comment