கூட்டாக ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த
எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.
ஏன்? காரணம்--" தேனெடுத்து திரும்பி வரும் தேனீக்கள், தங்கள் கூட்டிற்குத் திரும்புவதில்லை.நடுவழியில் இறந்து விடுகின்றன."
வேலைக்காரத் தேனீக்கள்,பூக்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் முறையும் அதை மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும் முறையும் அதிசயமானது.ஒரு வேலைக்காரத் தேனீ மட்டும் அலைந்து திரிந்து--பூக்களின் இருப்பிடத்தை கண்டறிந்து வரும்.அதன் பின் அதை மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும் விதமாக நடனமாடும்.அந்த நடனத்தை வைத்து பூக்கள் தேன் கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என துல்லியமாக மற்ற தேனீக்கள் புரிந்து கொள்ளும் .அந்நடனத்தில் சூரியனை நோக்கிப் பறந்தால் சூரியன் இருக்கும் திசையிலும், சூரியனுக்கு எதிர் திசையில் பறந்தால் எதிர் திசையிலும் பூந்தோட்டங்கள் இருக்கின்றன என்று பொருள்.அவ்வாறு கடினப்பட்டு சேகரித்து வரும் தேனை சேமிக்கும் முறை பற்றியும், அதைக் கெடாமல் பாதுக்காக செய்யப்படும் வேலைகளைப் பற்றியும் ஒரு 1000 பக்கத்திற்கு தனி புத்தகமே எழுதலாம்.அவ்வளவு விஞ்ஞானம்,அவ்வளவு நுணுக்கம்.
Bees are the claasic example for Colonial and Communal system of living.கூட்டாக ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.ஒரு தேனீ கூட்டத்தில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும்.மற்றவை ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்கள்.இதில் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே ராணித் தேனீயின் பணிஆண் தேனீயின் வேலை பற்றி சொல்ல வேண்டியதில்லை.இதில் வேலைக்காரத் தேனீக்கள் தான் தேன்கூட்டிற்கு முழுமுதல் பொறுப்பு.
இந்த தேனீக்கள் கூட்டத்தால் தான், அது தேனைச் சேகரிக்கும் பொழுது அதன் கால்களில் ஓட்டிச் செல்லும் மகரந்த சூல்களால் தான் தாவரங்கள்,மரங்கள்,காடுகளே உருவாகின்றன.
இவ்வளவு பயன் உள்ள தேனீக்கள் சமீபகாலமாக வெகு வேகமாக அழிந்து வருகின்றன.ஐரோப்பாவில் 42% தேனீக்கள் அழிந்து விட்டன.காரணம்-மலட்டுத் தன்மை கொண்ட பூக்கள்.அவற்றை நல்ல பூக்கள் என்று நம்பி தேனெடுக்க வரும் தேனீக்கள் அமர்கின்றன.அப்பூக்களில் உள்ள Neonicotinoids- நீயோ நிகோட்டினாய்ட்ஸ் என்னும் ஒரு வேதிப் பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கி,அதனால் இயற்கையிலேயே மிகப் புத்திசாலியானதும்,நல்ல ஞாபகதன்மைக் கொண்டதுமான தேனீக்கள் தங்கள் கூட்டை மறந்து--குழம்பி இறந்து விடுகின்றன.இவற்றை நம்பி கூட்டில் காத்திருக்கும் ராணித் தேனீ--இறுதியில் தானும் இறக்கிறது.அதோடு அந்த சமுதாயமே அழிகிறது.
இந்தப் பேரழிவிற்கு முழுமுதல் காரணம்: மரபணு மாற்றப் பட்ட விதைகள்.அவையே மலட்டுத் தன்மை கொண்ட பூக்களை உரிவாக்குகின்றன.வான் பொய்த்ததால், வாழ்வு பொய்த்த விவசாயியின் வாழ்வில்,குறுகிய காலத்தில் நல்ல மகசூல் என்ற பெயரில், மரபணு மாற்றப்பட்ட B.T கத்திரிக்காய்களும், வாழைப்பழங்களும்,மாம்பழங்களும்- Monsanto மான்சான்ட்டோ எனப்படும் மரபணு மாற்றப் பற்ற விதைகளும் இந்திய விவசாய சந்தைகளுக்குள் ஊடுருவத் துவங்கியுள்ளன.இவற்றை ஆரம்ப நிலையிலேயே, வேரோடும்--வேரடி மண்ணோடும் விரட்டியடிக்க வேண்டியது நம் பொறுப்பு.ஏனெனில் நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,
மனிதனின் துணையின்றி தேனீக்கள் எத்தனை ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து விடும்.ஆனால் தேனீக்கள் இல்லையேல் மனித இனம் நான்கே ஆண்டுகளில் துடைத்தெறியப்பட்டு விடும்.
பி.கு: " Bee Movie " என்றொரு Animated English Movie உள்ளது.அதை பாருங்கள்.ஒரு தேன்கூட்டின், தேனீயின் வாழ்வை மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும் படம்.
Yours Happily
Jc.Dr.Star Anand Ram
www.v4all.org
No comments:
Post a Comment