Monday, June 16, 2014

‘பிஸினஸில் தோல்வியைச் சந்திக்க பத்து விதிகள்’

‘பிஸினஸில் தோல்வியைச் சந்திக்க பத்து விதிகள்’

என்ன இது, தலைப்பே தடாலடியாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? கோகோ – கோலா கம்பெனியின் முன்னாள் தலைவர் டொனால்ட் ஆர் கியோக் எழுதிய இந்த புத்தகம் தான் இன்றைக் ஹாட் கேக்காக விற்பனையாகிறது.

இந்த விதிகளைத் தவிர்த்தாலே நீங்கள் வெற்றிக்கு வழி கண்டுவிடுவீர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், இவற்றைப் பின்தொடர்ந்தால் தோல்வி நிச்சயம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் டொனால்ட்.

வாழ்நாள் முழுக்க அவர் பெற்ற அனுபவத்தை சாறுபிழிந்து, பிஸினஸ் மேனேஜர்களுக்கும் சி.இ.ஓ. களுக்கும் 10 விதிகளாகச் சொல்கிறார்.

1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.
2. மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்
3. மேனேஜரோ/சி.இ.ஓ.வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் வாழுங்கள்.
4. நான் தவறே செய்யமாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.
5. தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள் தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.
6. எதையும் யோசித்து செய்யாதீர்கள்.
7. வெளியாட்களின் சிறப்பறிவை (எக்ஸ்பர்ட்டைஸ்) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.
8. உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்து அனுபவியுங்கள்.
9. வரும், ஆனா வராது; கிடைக்கும், ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.
10. எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல்படுங்கள்.



சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இருக்கும் இந்த புத்தகத்துக்கு வாரன் பஃபெட் முன்னுரை எழுத, பில்கேட்ஸ், ஜாக் வெல்ச், ரூபர்ட் முர்டாக் போன்ற பிஸினஸ் ஜாம்பவான்கள் இந்த புத்தகத்தைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தைத் தொழில் முனைவோர்களும், மேனேஜர்களும் வருடம் ஒரு முறையாவது படித்து தங்கள் செயல்பாடுகளில் இந்த விதிகள் தப்பித்தவறி ஒட்டிக்கொண்டுள்ளதா என்று பார்ப்பது அவசியம்.

No comments:

Post a Comment