Friday, June 27, 2014

அமானுஷ்ய இரகசியங்களை அறிந்துகொள் - ஆதார சக்தி

''சித்தர்கள்''
சித்தர்கள் என்றால் யார் ?
சிந்தை தெளிந்திருப்பான் அவனே சித்தன். (வால்மீகர் ஞானம். செ-2).
சிந்தை அதாவது சித்தம்.
சித்தம் என்றால் மனம்.
மனதை வென்றவர்கள் என்று சொல்லலாமா ?
மனம் என்றால் என்ன ?
இந்த மனம் எவ்விதமாக செயல் படுகிறது ?
மனதை வசப்படுத்துவது எப்படி ?
மனித உடலின் இயக்கும் சக்தி எது ?
உயிர் என்றால் என்ன ?
உயிர் எங்கிருந்து வருகிறது ?
முடிவில் எங்கே செல்கிறது ?
அது எவ்விதம் இயங்குகிறது ?
உணர்வுகள் எவ்வாறு உருவாகின்றன ?
இப்படி பல விதமான கேள்விகளுக்கு மனதைக் கொண்டு ஆராய்ந்து விடை கண்டறிந்த விஞ்ஞானிகள்.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாதரசத்தை திடப்படுத்தி, கடினநிலைக்கு உட்படுத்தி பல உபாயங்கள் செய்து, 8 விதமான குளிகைகள் செய்து அசத்தியவர்கள். குளிகைகள் பற்றி விளக்க தனிப் பதிவு போட்டால்தான் முடியும். 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்கள் இயற்றினார் திருமூலர்.
இதெல்லாம் சாத்தியமா ?
போகர் சொல்லுகிறார்,
''காணவுமே குளிகையுட மகிமை சொல்ல
கடல்புளுகோ வென்பார்கள் சவங்கள்தானும்.'' போகர்7000 - பாடல்2559.
இது போன்றனஅமானுஷ்ய இரகசியங்களை அறிந்துகொள்ள நாம் ஆர்வம் அதிகம் கொள்வோம். ஆனால் நம்மால் அதை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. என்ன வென்றால் இன்றைய நவீன விஞ்ஞானிகள் மனித உடலைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து துல்லியமாகச் சொல்லி விட்டார்கள். ஆனால் அவர்களால் அதை இயக்கும் ஆதார சக்தி குறித்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே நமக்கும் அமானுஷ்ய விஷயங்களை நம்பத் தயக்கமாக இருக்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய விஞ்ஞானிகள் தொடக்கூட முடியாத விஷயத்தை நம் ரிஷிகளும், சித்தர்களும் சொல்லியிருக்கிறார்கள். நம் வேதங்கள் உயிர், சூக்கும உடல்கள், சக்கரங்கள், நாடிகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதுவும் அதர்வண வேதத்தில் இது குறித்த தகவல்கள் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உபநிடதங்களில் இது குறித்த விளக்கங்கள் அதிகம் காணப்படுகின்றது. நம் சித்தர்கள் உடலியல், மனஇயல், வைத்தியம், வானியல் என்று அவர்கள் தொடாத விஷயங்களே இல்லை எனலாம்.
இதெல்லாம் எப்படி சாத்தியம் ?
அப்படி என்றால் இதெல்லாம் அவர்களுக்கு பிறகு வந்தவர்களிடம் ஏன் மறைக்கப்பட்டது? தவறான, பேராசைக்காரர்களுடைய கைகளில் கிடைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதால்தான். அணுவைப் பிளக்கும் இரகசியமே சித்தர்கள் சொன்னதுதான். அது மோசமானவர்கள் கைகளில் கிடைத்ததன் விளைவை நாம் எல்லோருமே அறிவோம்.
விலங்குகளில் இருந்து மனிதனை வேறுபடுத்துவது ஐம்புலன்களும் அதன் ஒருமித்த வளரர்ச்சியுமே. ஐம்புலன்களுக்கும் ஆதாரமாக இருப்பது மூளையாகும். மூளை குறித்து விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக ஒருதீர்வுக்கு வரமுடியவில்லை. என்றாலும் அடிப்படையான நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்று சொல்லலாம். அதில் ஒரு ஆராய்ச்சியின் முடிவு என்ன வென்றால், மனித மூளை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு செயல்திறன் கொண்டது என்பதாகும். மேலும், ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 4% மூளைத்திறனையே பயன்படுதந்துகிறான் என்றும், பெரிய மேதைகள் கூட 10% மூளையின் திறனையே தன் வாழ்நாளில் பயன்படுத்துகிறார்கள் என்ற அதிசயமான உண்மையாகும்.
அப்படி என்றால் அதை முழுமையாகப் பயனபடுத்தினால் என்ன வாகும் ? இதுவரை நம் கண்ணுக்கு புலப்படாத பல உலகங்களைக் காண முடியும். அதைப் பயன்படுத்தாத வரை இதெல்லாம் அக்மார்க் புரூடாக்கள் என்றே சொல்லப்படும். நம் சித்தர்கள் மூளையின் செயல்திறனை முழுமையாகப் பெற்றவர்கள். அதற்கு அவர்கள், தியானம், யோகாசனம், ப்ராணாயாமம், பந்தனம், மந்திர உச்சாடனம் என்று பல உபாயங்களைக் கைகொண்டார்கள். மூளையின் செயல்திறனை முழுமையாகப் பெற்று ஞானமும், அஷ்டமாசித்திகளும் கைவரப் பெற்றார்கள். உதாரணமாக ஒரு காட்டுக்குள் போனால் பல இலட்சக்கணக்கான தாவரங்களைக் காணுகிறோம். இவற்றில் இந்தத்தாவரம்(மூலிகை) இந்த நோய்க்கான மருந்து என்று எப்படி சொல்ல முடிந்தது ? பெயர்களை நினைவில் வைத்திருப்பது கூட கடினம். அதாவது 84 இலட்சம் ஜீவராசிகள், 4448 வியாதிகள், இந்த வியாதிகளைப் போக்கும் மருந்தாக 20 இலட்சம் மூலிகைகள், தலையைச் சுற்றுகிறதல்லவா ? அதுதான்,
மூளையின் செயல் திறனை முழுமையாகப் பெற்று சித்திகள் கைகூடிவிட்ட காரணத்தினால் அதனுள்ளேயே நுழைந்து அதைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கு வேணெடுமானாலும் வான சஞ்சாரம் செய்ய முடிந்தது, எந்த உருவமும் எடுக்கமுடிந்தது, எதற்குள்ளும் நுழைய முடிந்தது, கூடுவிட்டு கூடுபாயமுடிந்தது, 3000 என்ன 30000 ஆண்டுகள் கூட வாழமுடியும் என்று சொல்ல முடிந்தது. சித்தர்கள் இந்த சக்திகளையெல்லாம் அடைய கடுந்தவம் மட்டுமல்ல, மூன்று வகையான அடக்கங்களையும் கடைபிடித்தார்கள். நம்மால் அதில் ஒன்றையாவது அடக்க முடியுமா என்று பாருங்கள். அது என்ன மூன்று வகையான அடக்கம்.
1. மூச்சை அடக்குதல்.
2 . விந்துவை அடக்கி காமத்தை வென்று ஆசையற்ற நிலையைப் பெறுதல்.
3 . மனதை அடக்குதல்.
இதைத்தான் தமிழ் சித்தர் வள்ளுவர் அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார். எனவே நீங்களும் உங்கள் மூளையின் செயல் திறனை அதிகரிக்கச் செய்து எல்லா வளமும், நலமும் பெற்று நீண்ட நெடுங்காலம் நீடூழிவாழ்க என எல்லாம் வல்ல சித்தர்கள் பெயராலும், சித்தர்களின் தலைவரான ஆதி சித்தர் சிவசித்தர் பெயராலும் வாழ்த்தி வணங்குகிறேன்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

www.v4all.org 

No comments:

Post a Comment