இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை! அசுரத்தனமான நம்பிக்கை
நம்பிக்’கையால் வெற்றி பெற்ற நிக்
“வாழ்க்கை வாழ்வதற்கே….வெற்றி நிச்சயம் எனக்கே….பெற்றேனே சுவாசப் புத்துணர்ச்சி” அப்படின்னு ஒரு கோல்கேட் விளம்பரப் படத்துல வருகிற? ஒரு இளைஞன் பாடுவதை நீங்கள் பார்த்து/கேட்டு இருக்கலாம்.அதே வரிகளை நீங்களோ, நானோ பாடினால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் பெரிதாக
இல்லை என்பதே உண்மை.ஆனால் அதே பாடலை இவர் பாடினால் உலகம் பேச்சற்று
போய்விடுகிறது.
அந்த இளைஞருடைய பெயர் நிக். இருபத்தெட்டு
வயது. நடக்கிறார், சிரிக்கிறார், பேசுகிறார், வாசிக்கிறார், கால்ஃப் விளையாடுகிறார். கீழே விழுகிறார், மீண்டும் அவரே சிரமப்பட்டு எழுந்து நிற்கிறார்…
கொஞ்சம் பொறுங்க சார். 28 வயது ஆள் இதையெல்லாம் செய்யறது ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் மகா அதிசயம் மாதிரி சொல்ல வந்துட்டீங்களே!
அதிசயம்தான் சார். இவ்வளவையும் சர்வசாதாரணமாகச்
செய்கிற நிக்கிற்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை!
1982-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நிக் பிறந்தபோதே அவருக்குக் கைகள், கால்கள் இல்லை.
நிக்கோலஸ்
சேம்சு வோய்ச்சிச் (Nicholas James Vujicic) அல்லது சுருக்கமாக நிக்
வோய்ச்சிச் ( பிறப்பு: 4 டிசம்பர் 1982),இவர்
பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயால் (இரு கைகளும், இரு கால்களும்
இல்லாதவர்) பாதிக்கப்பட்டவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பல இன்னல்களுக்கு ஆளான இவர், தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது அகவையில் "லைஃப்
வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப
நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார். 2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின்
ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு
நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும்,
மற்றவர்களுக்காக
உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. தற்போது, ஐக்கிய
அமெரிக்காவில்கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். 2012-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் நாள், கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து
கொண்டார்.
வெறும் உடம்பு
மட்டும்தான். இதற்கு என்ன மருத்துவக் காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
காரணம் கிடக்கட்டும்.
இந்தக் குழந்தையை இப்போது என்ன செய்வது?நிக்கின் பெற்றோர் துடித்துப்போனார்கள். “உடம்பில் ஒரு சின்ன ஊனம் உள்ளவர்கள்கூட
இயல்பாக வாழமுடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கிறோம், இந்தப் பிள்ளை கையும் காலும் இல்லாமல் எப்படி
வளரப்போகிறது?
ஆனால் பெற்றோர் அவனை நல்லவிதமாக வளர்க்க
முடிவு செய்தார்கள். ஊனமுற்றோர் பள்ளியில் சேர்க்காமல், வழக்கமான பள்ளியில் சேர்த்தார்கள். அப்படி சேர்ப்பதற்கே நிறைய போராட
வேண்டியதாயிருந்தது. ஆனால் பள்ளியில் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளானான் சிறுவன்
நிக். இந்த கேலியைப் பார்த்த சிறுவன் நிக் தற்கொலை செய்ய முடிவு செய்தான்.
நல்லவேளையாக, நிக் தற்கொலை செய்துகொள்ளவில்லை. “எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்ட எங்க அம்மா, அப்பாவை நினைச்சுப் பார்த்தேன். சாகறதுக்கு மனசு வரலை!’அதன்பிறகு, நிக் நிறையப் படிக்க ஆரம்பித்தார்.
அவரைப்போலவே உடல் குறைபாடுகளால் அவதிப்பட்டவர்கள், அதைத் தைரியமாக எதிர்த்து நின்று
ஜெயித்தவர்களைப் பற்றியெல்லாம் வசித்து, கேட்டுத் தெரிந்துகொண்டார்.
அப்போதும், அவருக்கு ஒரு சந்தேகம் மட்டும் தீரவில்லை. “என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் நான் ஏன் வாழணும்?’
விரைவில், அந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்தது. நிக்
தன்னுடைய ஊனத்தைப்பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்
என்பதைக் கவனித்த சிலர், “நீங்க இந்த விஷயத்தை மேடையேறிப் பேசணும்’ என்றார்கள். அது நல்ல யோசனையாகப் பட, இப்போது நிக் மேடைப் பேச்சாளராகிவிட்டார்.
மிகப்பிரபல்யமான பேச்சாளராகவும் உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 -
நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவருடன் உரையாற்றியுள்ளார். அவரது
வாழ்க்கை புத்தகமாகவும் வந்திருக்கிறது. “லைஃப் வித்தவுட் லிமிட்ஸ்’ என்ற தலைப்பில் 2010-ம்
ஆண்டு வெளியானது.. வோய்சிச் தன்னுடைய சேவைகளைத்
தொலைக்காட்சிகளிலும், புத்தகம்
மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார்.பின்னர் 2005-ஆண்டு தன்னுடைய தினசரி வாழ்க்கையில்
செய்யும் செயல்களை லைப்
இஸ் க்ரேட்டர் பர்பஸ் (Life's
Greater Purpose), என்னும் குறும்படத்தின் மூலமாக வெளியிட்டார்.
இதனுடைய இரண்டாம் பாகம், பிரிஸ்பேனில்
உள்ள ஒரு தேவாலயத்தில் படமானது; இதுவே இவருடைய முதல் தொழில்முறையான பேச்சாகும்.
இளைஞர்களுக்காக, நோ
ஆர்ம்ஸ், நோ
லெக்ஸ், நோ
வொர்ரீஸ் (No
Arms, No Legs, No Worries: Youth Version) என்ற
தொகுப்பினையும் வெளியிட்டார்.
மார்ச் 2008, பாப் கம்மிங்கிசுடன், 20/20 என்ற அமெரிக்க
தொலைக்காட்சி நேர்காணலில் பங்குபெற்றார். இவர் தி பட்டர்பிளை சர்க்கஸ் என்னும்
குறும்படத்தில் நடித்துள்ளார், அது 2009-ம் ஆண்டு டோர்போஸ்ட்
திரைப்பட திட்டத்திலும், மெத்தேட் பெஸ்ட் திரைப்பட விழாவிலும், தி பீல் குட்
பிலிம் விழாவிலும் (2010) சிறந்த திரைப்படத்திற்கான பரிசு பெற்றது. சம்திங்க்
மோர், என்னும் காணொளியை யூடியூபில் வெளியிட்டார்.
“ஊனம் ஊனம் ஊனமிங்கே ஊனமில்லீங்கோ….உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
ஊனமில்லீங்கோ” என்னும் பொற்காலம்
திரைப்படத்தில் வரும் பாடற்காட்சியின் வரிகளுக்கு நிகழ்கால உதாரணமாய், எல்லோரின் விழிகளையும் ஆச்சரியத்தில்/வியப்பில் ஆழ்த்தி அவர் செய்யும் பல செயல்கள் காண்போரை
சமயங்களில் கண்ணீர் விடவும் செய்துவிடுகிறது!
வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பெயர்,பணம்,புகழ் இப்படி எதுவும் தேவையில்லை.ஆனால் ஒன்று மட்டும் மிக மிக அவசியம், அதுதான்
தன்னம்பிக்கை.அது மட்டும் நிரம்ப பெற்றுவிட்டால் எதுவுமே, அதாங்க நிக் போல கை, கால்கள் இல்லாமலேகூட உலகை வலம் வர
முடியும்.வெறுமையாக அல்ல, மிகவும் பெருமையாக.
Yours Happily
STAR ANAND
Self motivation Trainer
Coimbatore