Showing posts with label வியர்வை நாள். Show all posts
Showing posts with label வியர்வை நாள். Show all posts

Tuesday, April 30, 2013

வியர்வை நாள்' வாழ்த்துக்கள்



வியர்வை நாள்' வாழ்த்துக்கள்




1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது - என்பதுகூட மேதினம் கொண்டாடும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.




========================================================================


மே 1
இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------\





வானம் 
தனது கிரீடத்தை 
அவனுக்குச் சூட்டுகிறது 

மலை 
அவனைப் பணிந்து வணங்குகிறது

கடல்
அவன் பாதங்களை முத்தமிடுகிறது

வியர்வையால் எழுதும்போதுதான்
அழகு பெறுகிறது
நம் ஒவ்வொரு பெயரும்

அனைவருக்கும் 'வியர்வை நாள்' வாழ்த்துக்கள்
-அன்புடன் பழநிபாரதி..


மே தின வாழ்த்துக்கள்.

Yours Happily
Star Anand
Corporate Trainer