வியர்வை நாள்' வாழ்த்துக்கள்
1889 ஜூலை 14 அன்று
பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச
தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில்
இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக்
ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று
அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல்
விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது - என்பதுகூட மேதினம் கொண்டாடும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது - என்பதுகூட மேதினம் கொண்டாடும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.
========================================================================
மே 1
இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------\
வானம்
தனது கிரீடத்தை
அவனுக்குச் சூட்டுகிறது
மலை
அவனைப் பணிந்து வணங்குகிறது
கடல்
அவன் பாதங்களை முத்தமிடுகிறது
வியர்வையால் எழுதும்போதுதான்
அழகு பெறுகிறது
நம் ஒவ்வொரு பெயரும்
அனைவருக்கும் 'வியர்வை நாள்' வாழ்த்துக்கள்
-அன்புடன் பழநிபாரதி..

மே தின வாழ்த்துக்கள்.
Yours Happily
Star Anand
Corporate Trainer
No comments:
Post a Comment