Dr.STAR ANAND RAM Self Motivation Coach & MONEY ATTRACTION CONSULT

"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"

Saturday, December 14, 2013

வாழ்வில் சாதிக்க எதுவும் தடையில்லை... தன்னம்பிக்கையும் உழைப்புமே அவசியம் !!!

வாழ்வில் சாதிக்க எதுவும் தடையில்லை... தன்னம்பிக்கையும் உழைப்புமே அவசியம் !!!

ரூ.3 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் பெங்களூர் சலூன் கடைக்காரர்!

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பெரும் தொழிலதிபர்கள், அரச பரம்பரையினர், அரசியல்வாதிகள் வாங்க முடியும், வைத்திருக்க முடியும் என்று நம்புவது இயல்பு. ஆனால், பெங்களூரை சேர்ந்த சலூன் கடைக்காரர் ரூ.3 கோடி மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர காருக்கு சொந்தக்காரர் என்றால் நம்ப முடிகிறதா?

ரோல்ஸ் மட்டுமல்ல ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என மொத்தம் 67 கார்களுக்கு சாட்சாத் அவர்தான் சொந்தக்காரர். பெங்களூரை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் 9 வயதாக இருக்கும்போத தந்தை இறந்துவிட்டார். சொத்து சுகம் என்று எதையும் இவரது தந்தை வைத்து விட்டு போகவில்லை.

வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் பெங்களூர் பிரிகேட் சாலையில் உள்ள தனது தந்தையின் சலூனை வாடகைக்கு விட்டார். தினமும் 5 ரூபாய் கிடைத்தது. ஆனால், அந்த வருமானம் வயிற்றைக் கழுவுவதற்கே பற்றாக்குறையானது.

இதனால், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பாபு படிப்பை பாதியிலேயே கை கழுவி விட்டு குடும்ப சூழ்நிலையால் முழுநேரமாக முடிதிருத்தும் தொழிலில் இறங்கினார். தொழிலை கற்றுக்கொண்ட பின்னர், கடந்த 1991ம் ஆண்டு சொந்தமாக சலூன் ஒன்றை துவங்கினார். சாதாராண பாபு கொஞ்சம் கொஞ்சமாக தொழிலில் 'பாப்புலர்' பாபு ஆனார். போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் ரமேஷ் பாபுவின் வாடிக்கையாளர்களாக வரிசை கட்டினர். பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஆமிர்கான், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ரமேஷ் பாபுவின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், வருமானம் உயர்ந்ததால் கடந்த 1994ம் ஆண்டு ரமேஷ் பாபு ஒரு மாருதி ஆம்னி வேனை வாங்கி வாடகைக்கு விட்டார். முடிதிருத்தும் தொழில் போன்றே டாக்ஸி தொழிலிலும் வருவாயும், பிரபலமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் தேவைக்கு தக்கவாறு தனது டாக்ஸி நிறுவனத்துக்காக பல்வேறு கார்களை வாங்கினார். தற்போது ரமேஷ் பாபு வசம் ரூ.3 கோடி மதிப்புடையை ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார் உள்பட ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என அனைத்து நிறுவனங்களின் சொகுசு கார்களும், சாதாரண ரக கார்களும் இருக்கின்றன.

மொத்தம் ரமேஷ் பாபு வசம் தற்போது 68 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில், ரமேஷ் பாபு வாழ்க்கையை மையமாக வைத்து 3 மொழிகளில் புதிய சினிமா ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர காரையும் பில்லியனர் பாபு வாடகைக்கு விடுகிறார். அந்த காருக்கு ஒரு நாள் வாடகை ஜஸ்ட் ரூ.50,000..

http://www.youtube.com/watch?v=Bk-1nDFUxIg
Posted by Unknown at 5:10 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: வாழ்வில் சாதிக்க எதுவும் தடையில்லை...

Thursday, November 28, 2013

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!


கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!


1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!


Yours Happily 

Star Anand
Hr Trainer & Consultant
9790044225  
Posted by Unknown at 12:49 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: DEPRESS MANAGEMENTS, laughing therapy, laughter therapy, stress managements

Tuesday, November 26, 2013

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!



 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

 3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

 5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

 6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

 7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர். 

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். 

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும். 

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது. 

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர். 

Children ,Parenting Counselling & family Discussion feel free to call us.  

Yours Happily 

Dr.Star Anand
Self Motivation Trainer & Naturopathy consultant 
Vivekas Corporate Training Company 
Anandham Naturopathy Center
Coimbatore 
cell - 9790044225 
Posted by Unknown at 4:39 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Children Counselling, family Counselling Discussion, Parenting Counselling, குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில

Sunday, November 17, 2013

Presentation skills Training program at coimbatore

Presentation

What is a Presentation?

A presentation is a means of communication which can be adapted to various speaking situations, such as talking to a group, addressing a meeting or briefing a team. To be effective, step-by-step preparation and the method and means of presenting the information should be carefully considered.

Preparing Your Presentation

Preparation is the most important part of making a successful presentation.  This is the crucial foundation and there should be no short-cuts.
 

Organising the Presentation Material

Irrespective of whether the occasion is formal or informal, always aim to give a clear, well-structured delivery.  You should know exactly what you want to say and the order in which you want to say it.  Clarity of ideas and good organisation should result in a lively, logical and compelling message.
 

Writing Your Presentation

This article offers advice on how to write an effective presentation.   Before you write your presentation, you should already have started to prepare by developing your ideas and selecting the main points to include.
 

Deciding the Presentation Method

Few people are able to give a presentation without notes. You will need to know your own abilities and decide how best to make the presentation. You might manage your talk by using full text, notes on cue cards, keywords on cue cards, or mind maps.
 

Working with Visual Aids

Most visual aids will need advance preparation and should be operated with efficiency.  Only use visual aids if they are necessary to maintain interest and assist comprehension: do not use them just to demonstrate your technological prowess. If visual aids are used well they will enhance a presentation by adding impact and strengthening audience involvement, yet if they are managed badly they can ruin a presentation.
 

Managing the Presentation Event

The practicalities of how you manage your presentation even can make a significant difference to its success, and to your nerves!
 

Coping with Presentation Nerves

It is entirely natural to feel nervous before making a presentation. Fortunately, there are some tried and tested strategies and techniques to manage your nerves so that you can concentrate on delivering an effective and engaging presentation.
 

Dealing with Questions

At the start of your presentation, you should make it clear whether and when you would prefer to deal with questions. Some speakers prefer questions to be raised as they arise during the presentation whilst others prefer to deal with questions at the end. Decide in advance how and when you wish to handle questions.
Ten Quick Tips for Effective Presentations

1.      Talk naturally to your audience – although it may be appropriate to read short passages avoid reading from a script for the majority of your presentation.
2.      Stand, rather than sit, and move around a little – but avoid pacing backwards and forwards like a trapped animal.
3.      Vary the tone, pitch and volume of your voice to add emphasis and maintain the audience’s interest.  Aim to speak loudly and clearly while facing your audience.  Avoid talking in a monotone voice or turning your back to the audience.  See Effective Speaking for more information.
4.      Make eye contact with your audience.  Do not stare at your feet, or the podium and avoid looking directly at any one person for more than a few seconds, gain eye contact with the individual members of the audience.
5.      Use visual aids where appropriate, graphs and charts, diagrams, pictures and video - but don’t overdo it.  Visual aids should help to illustrate and strengthen your points not be a distraction from what you are saying.
6.      Rehearse your talk and check your timings.  Always aim to finish you talk in time remembering to allow time for questions if appropriate.
7.      Prepare and structure your presentation carefully.  Introduce the subject – tell the audience what your talk is about.  Explain the points you wish to convey.  End with a summary of your points.
8.      Stay focused throughout your presentation – avoid irrelevance and unnecessary detail.
9.      Learn to channel any nervous energy, relax but stay alert.
10. Answer any questions as honestly and concisely as you can.  If you don’t know the answer then say so and offer to provide further information at a later date.

Yours Truly
Dr.Star Anand 
3/27,SMS Layout,Ondipudur
Coimbatore 641016.
Call - 97900-44225 
www.v4all.org
Catch us - http://www.facebook.com/pages/Vivekas-Sales-Training-Company/169289673145493

Posted by Unknown at 11:52 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Personality developments Trainer, Presentation skills, Presentation skills Training program at coimbatore

Friday, November 15, 2013

யோகா பற்றிய வரலாறு.- சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்

யோகா பற்றிய வரலாறு.- சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்
யோகா பற்றிய வரலாறு.- சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்

இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர். இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.







 இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம். ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ), பாகாசனம் ( பாக – கொக்கு ), பேகாசனம் ( பேக – தவளை ), குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ), சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் ) உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ), கபோடாசனம் ( கபோடா- புறா ) இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் : பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ), விருட்சாசனம் ( விருட்சம் - மரம் ) பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு, நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ), ஹலாசனம் ( ஹலா- கலப்பை ), துலாசனம் ( துலா – தராசு ) சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ), தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி ) இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர். இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது. பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன. இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம். 






தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம். இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது. பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார். இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர். 1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது. 1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார். இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக. யோகா செயல்படும் விதம் : யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன. பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது. உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது. நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும். மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம். இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும். யோகா பற்றிய குறிப்புகள் : • யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும். • ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம். • ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம். • கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை. யோகாவின் இன்றைய அவசியங்கள் : இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம். பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம். இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும். எல்லோரும் இன்புற்று வாழலாம். யோகா பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க,இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்யவும். 





Yours Happily 

Dr.Star Anand
9790044225 
ANANDHAM Naturopathy Center 
Coimbatore  
Posted by Unknown at 1:46 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள், யோகா பற்றிய வரலாறு

Wednesday, November 6, 2013

உளவியல் சொல்லும் உண்மைகள்

உளவியல் சொல்லும் உண்மைகள்

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.


Yours 

Dr.Star Anand
Self Motivation Trainer 
Naturopathy Consultant 
9790044225
mail - star.v4all@gmail.com 
Posted by Unknown at 10:31 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: laughing therapy, stress managements, STRESS RELIEF YOGA, உளவியல், உளவியல் சொல்லும் உண்மைகள்

Wednesday, October 23, 2013

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும்


  • DrStar Anand

    எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் 


    DrStar Anand




    ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்.. அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார். அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்.. அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார். அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார். அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? 




    நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள். அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!! அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும். #அன்பே சிவம்ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்.. அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார். அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்.. அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார். அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார். அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள். அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!! அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும். 



    #அன்பே சிவம்


    எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் 
    Yours Happily

    Dr.Star Anand
    Self motivation trainer 
    Coimbatore
    www.v4all.org
    cell -97900-44225 
Posted by Unknown at 10:23 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: laughing therapy, laughter therapy, stress managements, STRESS RELIEF YOGA

உடல் மொழி - about Body Language in tamil

உடல் மொழி - about Body Language in Tamil 



1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.

2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.


உடல் மொழி - about Body Language in tamil  videos - http://youtu.be/W1ByCzNt_yg




Yours Happily 

Dr.Star Anand
Self motivation Trainer 
Vivekas Corporate Training Company
Coimbatore 
www.v4all.org 
cell  -9790044225 

Posted by Unknown at 10:07 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: about Body Language in Tamil, body language, Corporate Training Company, உடல் மொழி

மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை - Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார்

மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை - Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார்

எல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,
எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார். உடனே
"தொப்பையை குறை" என்று மருத்துவர் ஆலோசனை செய்தார்.
அன்று முதல் தன் Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது, முகம் மட்டும் அழகாக வில்லை.
மீண்டும் வருத்தது டன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போன்றே
"எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்". உடனே அந்த ஞானி
"குப்பையை குறை" என்றார்.
ஐயா "குப்பையை குறைப்பதா" என்று சந்தேகத்துடன் கேட்டார்.
ஆம் அடுத்தவன் அழகாக இருக்கிறான் என்று உன் உள்ளம் நினைக்கிறதே அந்த குப்பையை அகற்று அழகாகி விடுவாய் என்றார்.
ஆம், மனிதர்களாகிய நமக்கு உள்ள ஒரே பிரச்சினை நாம் ஏழை என்பதல்ல, அடுத்தவன் பணக்கரனாக இருப்பது தான். அதுவே நாளடைவில் மன நோயாக மாறிவிடும்.
உடல் நோயிக்குத்தான் Medication மன நோய் போக்க Meditation.
காந்தி அழகான ஆடை உடுத்தி இருக்கும் சிறு வயசு புகைப்படத்தை விட, அவர் கோவணத்தோடும், பொக்கைவாயுடனும் இருக்கும் வயதான புகைப்படம் அழகாக இருக்கும். அந்த அழகு மனக்குப்பைகளை Meditation மூலம்அகற்றியதால் வந்தது. பணத்தாசை இல்லாத அவரின் புகைப்படம்,இன்று இந்திய ரூபாய் நோட்டை அலங்கரிகிறது.
அகவே
அடுத்தவரை பார்த்து ஏங்கும் எண்ணத்தை தவிர்த்து
அடுத்தவரை தாங்கும் எண்ணத்தை உருவாக்குவோம்
அதுவும் முடியவில்லையா
அடுத்தவரை தாக்காமல் இருக்கவாவது கற்று கொள்வோம்.
பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கச்
சிறந்த வழி மெளனம்;
பல பிரச்சனைகளைத் தவிர்க்க
மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை.





Yours 

Dr.Star Anand
Self motivation Trainer 
Naturopathy Doctor 
Posted by Unknown at 9:52 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: laughing therapy, laughter therapy, naturopathy

Thursday, August 8, 2013

வெட்கப்படவா? இல்ல துக்கப்படவா?



வெட்கப்படவா? இல்ல துக்கப்படவா?

அடிமை ஆகினோம் என்று என்னவா? இல்லை ஏமாற்ற பட்டும் என்று என்னவா?

எப்படி நினைத்தாலும் சரி, எனது எண்ணம் நமது(இந்தியன்) கலாச்சாரமும், பண்ப்பாடும், மனிதநேயமும் அழிந்து கொண்டு தான் போகிறது.

இங்கே இருக்கும் புகைப்படம் ஆங்கிலேயன் Lord Macaulay என்பவரால் British Parliament யில் 1835 feb 2யில் கூறப்பட்டது.



"நான் இந்தியா முழுவதும் சுற்றி பார்த்து விட்டேன், அங்கு ஒரு பிச்சைகாரனையோ, திருடனையோ கண்டத்து இல்லை. ஒரு தனி கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரமும் கொண்ட நாடு தான் இந்தியா.

நாம் இந்தியாவை முழுமையாக ஆல முடியாதது, ஆனால் அவர்கள் பழமையான கல்வி முறையை நம் கல்வி முறைக்கு மாற்றி, அவர்கள் பண்பாட்டை மாற்றி நாமும் நம் ஆங்கிலமும் சிறந்ததது என்று நினைக்கவைதால் அவர்கள் அவர்கள் மீது வைத்து இருந்த நம்பிக்கை இழந்து விடுவார்கள், அதன் பின்னர் நாம் தெரிவிக்கும் முறையே அங்கு கலாச்சாரமாக மாறும்" என்று Lord Macaulay கூறியுள்ளான்.

அவன் நினைத்தது போல பலமாற்றங்கள் வந்தது இன்றும் அவனுக்கு அடிமையாகியது போலவே ஒரு உணர்வை தூண்ட செய்கிறத்து அவன் பரப்பிய கல்வியும், மத வெறியர்களையும் பார்கையில்.

அடிமை படுத்தியவன் சாதித்தானா? இல்லை அடிமையாக இருந்தவன் சாத்திதானா என்று கேட்டால்???

உங்களை சுற்றி நடப்பதை பாருங்கள் உங்களுக்கே புரியும் யார் வென்றார்கள் என்று.
Posted by Unknown at 12:38 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, August 3, 2013

எதிரி தேவைப்படுகிறது.

ஒருவர் ஜெயிப்பதற்கு காரணம் கடின உழைப்பு, திறமை ,படைப்பாற்றல் அனைத்தும் இருந்தாலும் அதுக்கு மேல் போட்டி தேவைப்படுகிறது.

உதாரணம் எம்.ஜி.ஆர் , சிவாஜி பிறகு கமல் ,ரஜினி. ரஜினி இந்தளவுக்கு உயர கமலின் போட்டியும் ஒரு காரணம். விஜய்க்கு அஜித்தும் ,அஜித் முன்னேற விஜய்யும் காரணம். சிம்பு,தனுஷ் வரை அது தொடர்ந்தது.



எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ,கருணாநிதி என்று அரசியல் தந்திரம் அறிந்தவர்கள் போட்டியாளரை நன்கு அறிந்திருப்பர். அதற்கு ஏற்றார் போல செயல்படுவர்.

வியாபாரத்திலும் ஒரு போட்டியாளரை குறி வைத்து போட்டி போட்டால் வெற்றி நிச்சயம். கோக்க கோலா ,பெப்சி போல.

தனி மனிதன், அரசியல் ,கலைஞர்கள் எங்கும் போட்டி மனப்பான்மை ஒரு உத்வேகம் கொடுகிறது. இதில் மிக முக்கியம் எதிரியை ஜெயிக்க விடுவது. அதை நாம் முந்தனும். ஜெயிக்காத போட்டியாளர்களால் உபயோகம் இல்லை. உள்ளுக்குள் இருவரும் மிக நெருங்கிய நட்பு கூட பாராட்டி கொள்ளலாம். ஆனால் களத்துக்கு வந்துவிட்டால் போட்டி மிக அவசியம். அந்த வெற்றி பெறும் மனப்பான்மையை, முந்த வேண்டும் என்ற எண்ணத்தை போட்டி மட்டுமே கொடுக்கும்.
Posted by Unknown at 9:23 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, July 24, 2013

கோபத்தைக் கட்டுப்படுத்த…


கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்
ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !


‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.

ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.
‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.
கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் ‘நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?’ என்று கேட்டால் கூட ‘எவண்டா அப்படிச் சொன்னது?’ என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. ‘வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்த கோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும்போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.
‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.
ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.
கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். `நீ… எப்படிய்யா என் மனைவியைப் பற்றி தப்பாப் பேசலாம்’ என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை `எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எதிராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். இதை `இம்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே பதுங்கிக் கிடக்கிறது.
மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் எச்சரிக்கிறது.
அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒரு படி மேலே போய், நோய்கள், காயங்கள் போன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும் கோபமே என்கிறது.
கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக் கைதிகளின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும் சிறைச்சாலைக்கு வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.
இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்’ என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவக் குறிப்புகள் பேசுகின்றன.
உறவுகளுக்கு இடையே வரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. `கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்’ என்றோ, ‘கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்’ என்றோதான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.
கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது…. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.
அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப் பறிப்பதும், புரமோஷனைக் கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான். `கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம்…’, `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்…’ என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித் திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.
மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை.
கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை. மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.
‘அவரு ‘வள் வள்’ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல…’ என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங் களில் அது தொடர்ந்து, அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது!
நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், `இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்’ எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.
***********************************************

கோபத்தைக் கட்டுப்படுத்த…
கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை…
1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.
2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். ‘இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும்’ உறவுகளுக்கிடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய்யவில்லை’ எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தேன்’ என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.
3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களின் சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.
6. நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள்.
7. சிரிக்கப் பழகுங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
8. இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
9. இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும்.
10. மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களிடம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்பிளாஸ்டிக் எமன் விழிப்புணர்வு தகவல் !!!

YOURS HAPPILY
STAR ANAND

Posted by Unknown at 6:44 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: ANGER MANAGEMENTS, ANGRY, DEPRESS MANAGEMENTS, NO TENSION, star anand, STRESS RELIEF YOGA, TENSION FREE LIFE
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

உங்கள் பிசினஸ் வளர்சிக்கு அணுகவும் - 9790044225

About Me

Unknown
View my complete profile

பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

click - www.v4all.org

  • Vivekas Corporate Training company

our services

our services
உங்கள் பிசினஸ் வளர்சிக்கு அணுகவும் - 9790044225

நண்பர்களே. படிப்பில் வேலையில் வியாபாரத்தில் குடும்பத்தில் ஏற்படக்கூடிய. பிரச்னைகள். பயிற்ச்சி

Total Pageviews

589,730

Blog Archive

  • ►  2018 (2)
    • ►  September (2)
  • ►  2016 (503)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (14)
    • ►  September (28)
    • ►  August (47)
    • ►  July (70)
    • ►  June (149)
    • ►  May (62)
    • ►  April (8)
    • ►  March (50)
    • ►  February (35)
    • ►  January (37)
  • ►  2015 (1279)
    • ►  December (67)
    • ►  November (42)
    • ►  October (31)
    • ►  September (70)
    • ►  August (106)
    • ►  July (176)
    • ►  June (204)
    • ►  May (171)
    • ►  April (129)
    • ►  March (122)
    • ►  February (92)
    • ►  January (69)
  • ►  2014 (499)
    • ►  December (90)
    • ►  November (83)
    • ►  October (94)
    • ►  September (47)
    • ►  August (61)
    • ►  July (90)
    • ►  June (25)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ▼  2013 (26)
    • ▼  December (1)
      • வாழ்வில் சாதிக்க எதுவும் தடையில்லை... தன்னம்பிக்கை...
    • ►  November (5)
      • கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!
      • குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!
      • Presentation skills Training program at coimbatore
      • யோகா பற்றிய வரலாறு.- சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞ...
      • உளவியல் சொல்லும் உண்மைகள்
    • ►  October (3)
      • எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும்...
      • உடல் மொழி - about Body Language in tamil
      • மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை - Excess sizeஐ Excersi...
    • ►  August (2)
      • வெட்கப்படவா? இல்ல துக்கப்படவா?
      • எதிரி தேவைப்படுகிறது.
    • ►  July (2)
      • கோபத்தைக் கட்டுப்படுத்த…
    • ►  May (4)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (2)
  • ►  2012 (1)
    • ►  January (1)

Popular Posts

  • குண்டலினி எழுந்தால் என்னவாகும்?
    குண்டலினி சக்தியை எழுப்புவ தற்காக சித்தர்கள் சொன்ன உண்மை ரகசியங்கள் . --------------------------------------------------------------- ...
  • கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள்
    கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள் (share) செய்யுங்கள்) நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அத...
  • அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதி (பாடலும் பொருளும்)
    அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதி (பாடலும் பொருளும்) அபிராமி பட்டர்  வழங்கிய  அபிராமி அந்தாதி யைப் படிப்பவர், பாராயணம் செய்பவர...
  • அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் ?
    அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் ? விநாயகரின் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ...
  • சர்வ சித்தி தரும் தன ஆகர்ஷன மந்திரம்
    சர்வ சித்தி தரும் தன ஆகர்ஷன மந்திரம்:  வெள்ளிக் கிழமை காலை சுக்கிர ஓரையிம்(6லிருந்து7வரை. வீட்டில் சுததமான இடத்தில் பஞ்சமுக குத்து விளக்க...
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும் வழிகள்
    ஜீரண சக்தியை அதிகரிக்கும் வழிகள்: www.v4all.org *தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !: *ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சி : உ...
  • செல்வந்தர் ஆக சிறப்பு பரிகாரங்கள்
    செல்வந்தர் ஆக சிறப்பு பரிகாரங்கள் ஒருவர் சிறந்த செல்வ நிலையை அடைய கீழ்க்கண்ட எளிய முறைகளை-பரிகாரங்களை செய்து வரலாம். நம் முறைகள்...
  • செல்வம் பெருக சில குறிப்புகள்
    செல்வம் பெருக சில குறிப்புகள் வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டில்...
  • கண் பார்வை அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்!!!
    கண் பார்வை அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்!!! 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு ப...
  • பணம் பெருக எதிரிகள் தொல்லைஅடங்க மூலிகை
    பணம் பெருக எதிரிகள் தொல்லைஅடங்க மூலிகை ஆடி மாதம் வளர்பிறை ஞாயிற்றுகிழமையில் மாலையில் 6-7க்குள் முறைப்படி தொட்டார்சிணுங்கி செடிக்கு ம...

UNNAI ARINTHU ULAGAI VEL

UNNAI ARINTHU ULAGAI VEL
MOTIVATION AUDIO CD -For order call -9790044225
www.v4all.org. Ethereal theme. Powered by Blogger.