Wednesday, February 24, 2016

விவேகானந்தர் உபதேசித்த வேலைமுறை....🌺

🌺சுவாமி விவேகானந்தர் உபதேசித்த வேலைமுறை....🌺

சுவாமி விவேகானந்தர் உபதேசித்த வேலைமுறை....

சுவாமி விவேகானந்தர் உலகிற்கு ஆன்மீக போதனை செய்ததோடு நின்றுவிடவில்லை. தரித்ர தேவோ பவ,மூர்க்க தேவோ பவ, துக்கி தேவோ பவ என்று போதித்தார்.

முழுக்க முழுக்க எல்லா உலகியல் பந்தங்களையும் துறந்தவரே சன்னியாசி.ஆனால், சுவாமிஜியோ நாட்டினையும் அதன் மக்களையும் உயிரினும் மேலாக நேசித்தார்.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி மடிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஆன்மீக ஞானம் கொடுப்பதைவிட உணவளிப்பதே முக்கியம் என்று முழங்கினார். பேசியது போதும். செயலாற்றுங்கள் என்பதே அவரின் அறைகூவல்.

எப்படிச் செயலாற்றவேண்டும் எனத்திட்டமிட்டு அதற்கு ஒரு வடிவமும் கொடுத்து இந்த நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். அவர் உபதேசித்த வேலைமுறை இதுதான்: அமைப்பு ரீதியாக வேலை செய்யுங்கள்.

அமெரிக்காவில் நடந்த சர்வ மத மாநாட்டில் கலந்து கொள்ள சிக்காகோ சென்றடைந்த அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி நீங்கள் எந்த ஸ்தாபனத்தின் சார்பில் வந்துள்ளீர்கள் என்பதுதான்.


உலகக் கண்காட்சியில், விஞ்ஞானமும், தொழில் நுட்ப அறிவும் ஏற்படுத்தியிருந்த கண்டுபிடிப்புகள் , விந்தைகள் அவருக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. உலக வாழ்வில் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த செழிப்பை நம் நாட்டு மக்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து மனம் வருந்தினார்.


1893,செப்டம்பர் 11 அன்று சிக்காகோவில் உரையாற்றி உலகையே வென்றாரே அது அவரது வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. காலியாக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில், தெரு ஓரங்களில், பிச்சைக்காரனைப் போல் தங்கியிருந்த அவருக்காக சிக்காகோ நகரிலிருந்த தனவந்தர்களின், பிரபலங்களின் வீடுகள் வரவேற்புக் கம்பளங்கள் விரித்தன.


மாநாட்டு அமைப்பாளர்களின் ஏற்பாட்டின்படி, ஜான் பி லயன் தம்பதியினரின் வீட்டில் சுவாமி விவேகானந்தர் தங்கினார். அந்த வீட்டில்தான் வரலாற்றுப் பிரசித்திபெற்ற கீழ் கண்ட உரையாடல் நிகழ்ந்தது.


சுவாமி:  என்னுடைய வாழ்க்கையில் இந்த அமெரிக்காவில்தான் மிகப் பெரிய சபலத்திற்கு ஆளாகிவிட்டேன்.

ஸ்ரீமதி லயன்: அப்படிச் சபலிக்கச் செய்தவள் யாரோ?

சுவாமி:  அவள் இலலை. அது. உங்கள் ஸ்தாபனங்கள்தான் என்னை சபல மடையச்செய்துவிட்டன..


சுவாமிஜி தன்னுடைய சீடர் பிரம்மானந்தருக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்: (ஞான தீபம் பாகம் 11, பக்கம் 157,கடிதம் 537)


நம்மிடம் ஒரு பெரிய குறை இருக்கிறது. நம்மால் நிரந்தர இயக்கம் ஒன்றை நிறுவ முடியாது.ஏனெனில் நாம் நமது அதிகாரத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள ஒருபோதும் விரும்புவதில்லை.நாம் இறந்தபிறகு என்ன நேரிடும் என்பதைப் பற்றியும் ஒருபோதும் சிந்திப்பதில்லை. மனிதனை பணிக்காக தயார் செய்யவேண்டும். யார் இறந்தாலும் யார் இருந்தாலும் இயங்கிச் செல்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.


விவேகானந்தர் தன்னுடைய செயல் திட்டத்தை வகுக்க ஆதாரமாக இருந்தது அவருடைய வெளி நாட்டு (குறிப்பாக அமெரிக்க) அனுபவங்கள்தான்.


மனிதனை உருவாக்க வேண்டும். அவர்களை ஒருங்கிணைத்து அமைப்பு ரீதியாக தேச வேலையைச் செய்ய வைக்கவேண்டும்.அதன் மூலம் நாட்டை உயர்த்த வேண்டும் என்பதை அவர் தனது வாழ்க்கைப் பணியாக ஏற்றுக்கொண்டார். ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரின்  கனவாக ஆனது. அந்தக் கனவுதான் ராமகிருஷ்ண சங்கம் என்ற நனவாக மலர்ந்தது..


1897, மே மாதம் 1ந்தேதி ஸ்ரீ.ராமகிருஷ்ண சங்கம் துவக்கப்பட்டது,.சங்கத்தின் முதல் உறுப்பினர்கள் கூட்டம், 1897, மே மாதம் 9ந்தேதி அன்று நடந்தது.. சுவாமிஜி பூத உடலை நீத்தது, 1902, ஜூலை 4 அன்று. இடைப்பட்ட அந்த 5 வருடகாலத்தில் தன்னுடைய முழு சக்தியையும் சங்கத்தை வலுவாக்கும் பணிக்கே அர்ப்பணமாக்கினார். அளவுக்கு அதிகமாக உழைத்ததால் கடும் நோய்க்கு ஆளான போதும் தொடந்து வேலை செய்தார். அகண்டானந்தருக்கு எழுதிய கடிதத்தில், சுவாமிஜி குறிப்பிடுகிறார்: நான் இறக்கும் போதும் கவலைப்படாதே. என் அஸ்திகளே அற்புதங்களைச் செய்யும். பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நாம் பரவிவிடவேண்டும்.இதற்கும் குறைவாகச் செய்தோமானால், அது சுத்த மோசம்.(ஞான தீபம் பாகம் 11, பக்கம் 91,கடிதம் 479). இன்று ராமகிருஷ்ணா மிஷண் 176 கிளைகளோடு உலகெங்கிலும் பரந்து விரிந்து மாபெரும் விருட்சமாக வளர்ந்திருப்பது, ஐந்து வருடங்களில் சுவாமிஜி வேருக்குப் பாய்ச்சிய நீரால்தான்.அவர் இட்ட உரத்தால்தான்.


ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க, வலுவாக்க, வழிநடத்தத் தேவையான அனைத்துக் குணங்களும், திறமைகளும்,தலைமைப் பண்புகளும்,தொலைநோக்குப் பார்வையும் அவரிடம் அபரிமிதமாக இருந்தன.


சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ள ஒரே ஒரு உதாரணம் போதும். யுனெஸ்கோ அமைப்பின் டைரக்டர் ஜெனரலாக இருந்த ஃபெடரிகோ மேயர் 1993ல் நிகழ்த்திய உரையில் அதைப்பற்றி குறிப்பிடுகிறார்.“யுனெஸ்கோ ஆரம்பிக்கப்பட்டது 1945ல்.  மிஷண் ஆரம்பிக்கப் பட்டதோ 1897ல். யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்ட திட்டம், பிரமிப்பூட்டும் வகையில்  மிஷனோடு ஒத்திருக்கின்றது: இரண்டின் நோக்கம்,செயல்பாடு மற்றும் அவைகளின் அனைத்து முயற்சிகளும் மனித மேம்பாட்டிற்காகவே. இரண்டும், உலகில் ஜனநாயகம் மற்றும் அமைதியை நிலை நாட்டுவதற்காக, சமூகங்களிடையே சகிப்புத்தன்மையை  ஏற்படுத்த வேண்டும் என்பதை முதல் செயல் திட்டமாகக் கொண்டுள்ளன. இரண்டுமே, உலக ஒற்றுமைக்குப் பாடுபடும் அதே வேளையில், வேறுபட்ட பல சமூகங்களும், கலாச்சாரங்களும் உலகில் இருப்பதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றன,”


மத்திய இந்தியாவை 1897 ம் ஆண்டு கடும் பஞ்சம் வாட்டிக்கொண்டிருந்தது. அப்போது, மடத்தில் சுவாமிஜியைப் பார்க்க ஒருவர் பசு பாதுகாப்பு சங்கத்திலிருந்து வந்திருந்தார். அவர் தமது சங்கத்துக்கு நன்கொடை கேட்டு வந்திருந்தார். சுவாமிஜி அவரிடம் உங்கள் சங்கம் பஞ்சத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறதா என்று கேட்டார். அவர், நாங்கள் எதுவும் செய்யவிலை.அவர்கள் அனுபவிப்பது கர்மபலனால்தானே என்று பதிலளித்தார். சுவாமியின் கண்கள் கோபத்தால் ஜொலித்தன. சொந்தச் சகோதரர்கள் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கும்போது பறவைக்கும் விலங்குக்கும் உணவைத் தரும் சங்கங்களிடம் எனக்கு அனுதாபம் கிடையாது. பசுமாதாவும் தன்னுடைய கர்மபலனினால்தானே கசாப்புக் கடையில் மாட்டிகொண்டிருக்கிறாள் என்று சாடித்தீர்த்துவிட்டார்.எவ்வளவு பரிதாபம்?கர்மநியதிக் கொள்கை எவ்வளவு கேவலமாகப் பயன்படுத்தப் படுகிறது? வேதனையில் துடித்துப் போய்விட்டார். .(ஞான தீபம் பாகம் 6, பக்கம் 10). மக்கள் மத்தியில் சேவைப் பணிகளை மேற்கொள்வதற்கே ராமகிருஷ்ணா மிஷனை சுவாமிஜி ஆரம்பித்தார்.


மேலைநாட்டினரிடமிருந்த அபாரமான தன்னம்பிக்கையும், ரஜோ குணமும், வெளிக்கருத்துக்களை ஏற்றுக்கொள்கிற பரந்த மனமும், ஏற்றுக்கொண்ட கருத்தை வாழ்நாள் முழுதும் கடைபிடிக்கின்ற பிடிவாதகுணமும், இணந்து வேலைசெய்கின்ற குணமும்,தலைமைப் பண்புகளும் அவரை வெகுவாக ஈர்த்தன. அதற்கு நேர்மாறாக நம் மக்களைப் பீடித்திருந்த அவநம்பிக்கை, தமோகுணம்,சுய மறதி, பெரும் சுயநலம்,பொறாமை,மூடந்ம்பிக்கைகள்,வேதாந்தத்தினைப் பற்றிய அரைகுறை ஞானம், அயல்நாட்டுமீதான மோகம், காலத்திற்குப் பொருந்தாத பழக்கங்களை கட்டிகொண்டு சாஸ்திரத்தின் பெயரால் சொந்த சகோதரர்களை நிந்திக்கிற,கொடுமைப்படுத்துகிற அரக்க குணம் ஆகியவற்றைக் கண்டு ஆவேசம் கொண்டார்.நமது நாடு வேதாந்தத்தை மேலை நாட்டிற்கு கற்பித்துக் கொடுத்து, அவர்களின் மதிப்பைப் பெற்று அவர்களின் குருவாக இருக்க வேண்டும். பெளதீக விஷயங்களில் நாம் அவர்களை ஆசிரியராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நாம் இருவருமே பயனடைவோம் என்பது அவரின் உறுதியான கருத்து.


சங்கத்தைப் பற்றிய எல்லா விஷயங்களிலுமே இந்த கருத்தின் அடிப்படையிலேயே அவர் முடிவெடுத்தார். மக்களுக்கு கல்வியும், ஆன்மீக ஞானமும் கொடுப்பது மற்றும் நரசேவை ஆகியவை மிஷனின் செயல்திட்டமாக இருந்ததற்கு இதுவே காரணம்.


ஸ்ரீராமகிருஷ்ணர் கோவிலைக் கட்டுவதற்காக ஒரு வரைபடம் தயாரித்து வைத்திருந்தார், சுவாமிஜி. கோவிலின் கதவில் சிங்கமும் ஆடும் ஒன்றின் உடம்பை ஒன்று நக்கிக் கொண்டிருப்பது போன்ற சித்திரத்தை வரையத் திட்டமிட்டிருந்தார். பேராற்றலும்,மென்மையும் அன்பினால் இணைந்திருப்பதைக் குறிப்பதே அதன் நோக்கம்..(ஞான தீபம் பாகம் 6, பக்கம் 213).அதாவது, கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த ஒரு உலகம்.


சுவாமிஜி ஒரு அற்புதமான பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவர், ஒரு தேர்ந்த ஓவியருங்கூட.

பெரும் அறிஞர்களால் கலை நயத்திற்காகவும்,அதன் கருத்திற்காகவும் பாராட்டப்படுகின்ற ராமகிருஷ்ணா மிஷனின் சின்nனம் சுவாமிஜி அவர்களால் வரையப்பட்டதே. மிஷன் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் அவர் தனிப்பட்ட கவனம் கொடுத்தார். ஓவியரும், ஜூப்லி கலைக் கழகத்தை உருவாக்கியவருமான திரு. ரநாத பிரசாத் தாஸ் குப்தா அவர்களோடு உரையாடும்போது சின்னத்தின் பொருளை அவரே விளக்குகிறார்: “அலைவீசும் தண்ணீர் கர்மத்தையும்,தாமரை பக்தியையும்,உதய சூரியன் ஞானத்தையும்,சுற்றிகொண்டிருக்கும் பாம்பு யோகத்தையும் எழுப்பப்பட்ட குண்டலினி ஆற்றலையும் அன்னம் பரமாத்மாவையும் குறிக்கிறது. அதாவது, கர்மம்,பக்தி,ஞானம்,யோகம் ஆகிய நான்கின் இணைப்பால் பரமாத்மாவின் காட்சியைப் பெறலாம்.” கலை என்பது ஒரு கருத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வளவு அழகோடு இருந்தாலும் கூட, ஒரு கருத்தை வெளிப்படுத்தவிலையென்றால், அது கலையே அல்ல என்பது சுவாமிஜியின் வாக்கு. .(ஞான தீபம் பாகம் 6, பக்கம் 213).


சுவாமிஜிக்கு செயல் திட்டம் பற்றியும், செயல் புரிவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பற்றியும், நிர்வாகம் பற்றியும் மிகத் தெளிவான கற்பனை இருந்தது. குருபாயிக்களுக்கு 27-04-1896ல் எழுதிய மிக நீண்ட கடிதத்தில் இதைப்பற்றி விவரமாக எழுதுகிறார். .(ஞான தீபம் பாகம் 10, பக்கம் 332,கடிதம் 366).எந்தெந்த நிர்வாகப்பொறுப்புகள் இருக்க வேண்டும் என்பதிலிருந்து, குடிநீர் ஏற்பாடு, சாப்பிடும் இடத்தின் வசதி என எல்லா விஷயங்களையும் அவர் அந்தக் கடிதத்தில் விவாதிக்கிறார். நான் சொல்லுபவற்றை அப்படியே கடைப்பிடியுங்கள் என்று அவர் கூறவில்லை. நான் எழுதியுள்ளவற்றை எல்லோரும் படியுங்கள்; யோசனை செய்யுங்கள்; விவாதம் செய்யுங்கள். சரியென்று தோன்றினால் எனக்கு எழுதுங்கள் என்றே கூறுகிறார்.


அவர் மீண்டும் மீண்டும் சொல்லுகிற விஷயங்கள் இவைதான்: சேர்ந்து வேலை செய்தல், அப்பழுக்கற்ற தூய்மை, விதிமுறைகளுக்குட்பட்ட கட்டுப்பாடான திட்டமிட்ட வாழ்க்கை.கீழ்படிந்து நடப்பதுதான் முதற்கடமை என்று தெளிவாகச் சொல்லுகிறார்.சிறு செடிகளுக்கு வேலி அமைப்பது போல, பக்குவமடையாத நிலையில் நியதிகள் கண்டிப்பாகத் தேவையென்பது சுவாமிஜியின் கருத்து.பத்து பேர் சேர்ந்து பத்து நாள் வாழ முடியாவிட்டால் உலகத்தில் எப்படி அன்பை நிறுவமுடியும் என்பது சுவாமிஜியின் கேள்வி.


இன்று நாம் சொல்லுகிற Organisation Structure பற்றி அப்போதே  திட்டமிட்டிருந்தார். அமைப்பிற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் இருக்க வேண்டும் என வகுத்திருந்தார். பொறுப்பாளர்களை வாக்கெடுப்பு  முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெளிவான நியதியை விதித்திருந்தார். ஒருவர் பொறுப்பில் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கக்கூடாது.முதல்  வருடத்திற்கு மட்டும் சுவாமி பிரம்மானந்தர் தலைவராகவும் நிர்மலானந்தர் பொருளாளராகவும் செயலாளராகவும் இருக்கட்டும் என குறிப்பிடுகிறார்.


எப்படித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் தெளிவாகத் திட்டமிட்டிருந்தார். ஒருவர் இந்த ஆண்டு இவர் தலைவராக இருக்கலாம் என முன்மொழிய வேண்டும். மற்றவர்கள் அந்த யோசனையை சரி அல்லது கூடாது என்று காகிதத்தில் எழுதி குடத்தில் இடவேண்டும். யாருக்கு வாக்குகள் அதிகமாக இருக்கிறதோ அவர் தலைவர் ஆவார்.


சுவாமிஜி நிதி நிர்வாகத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது. அது இன்றைக்கும் நமக்கு ஒரு பாடமாக இருக்கக்கூடியது. சுவாமிஜி 12-10-1897ல் சுவாமி பிரம்மானந்தருக்கு எழுதிய கடிதத்தில் சிறு சிறு விஷயங்கள் என நாம் எண்ணுகின்றவற்றை அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி எழுதுகிறார்..( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 115,கடிதம் 498 ).


1.        பணம் வசூலித்து அனுப்புபவர்களுக்கு மடத்திலிருந்தே ரசீது அனுப்ப வேண்டும். ( அதாவது ரசீது புத்தகத்தை மடத்தில்தான் வைத்திருக்க வேண்டும். பிறரிடம் கொடுத்து வைத்திருக்கக்கூடாது.)

2.        ரசீதிற்கு நகல் இருக்க வேண்டும்.( அதாவது கூப்பன் முறைகளை அவர் ஏற்றுக்கொள்ளவிலை.)

3.        ரசீதிற்கான நகலை மடத்தில் வைத்திருக்க வேண்டும். ரசீதை பணம் அனுப்பியவருக்கு அனுப்ப வேண்டும்.

4.        ஒரு பதிவேட்டில் நன்கொடையாளர்களின் பெயரையும் முகவரியையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

5.        வசூலாகின்ற பணத்தின் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

6.        யாருக்கேனும் பணம் கொடுத்தால் அவர்களிடமிருந்து முழு கணக்கையும் பெற்றுக் கொள்ளவேண்டும்.

7.        இந்தக் கணக்கு பின்னால் பிரசுரிக்கப்பட வேண்டும்.

8.        நான் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என ஏசப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


இந்தக் குறிப்புகள் நவீன தணிக்கை விதிமுறைகளோடு ( Audit Principles)அப்படியே ஒத்துப் போகின்றன. அமைப்பினர் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகளையும் ( Internal Controls ) தெளிவாக வரையறுக்கின்றது.


சுவாமிஜி உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டவரல்ல. சொல்லப் போனால் அவருடைய குருநாதரைப் போலவே அவருக்கும் பணத்தைக் கண்டால் ஒவ்வாமையே. பரிவிராஜகராக நாட்டைச் சுற்றிவரும்போதுகூட பணம் வைத்துக்கொண்டதில்லை. யாரிடமும் பணம் கேட்டதில்லை.  பசியோடு இருந்தபோதுகூட பிறரிடம் உணவு கேட்க கூச்சப்பட்டவர். யாராவது டிக்கெட் எடுத்துக் கொடுக்காவிட்டால் நடந்தே பயணம் செய்துவந்தார். ஏன்? வறுமையில் வாடிய தன் குடும்பத்தாருக்கு ஒரு வழி காட்டு தாயே என காளிமாதாவிடம் கேட்கவே வெட்கப்பட்டார். 1898 நவம்பர் 22ந்தேதி மற்றும் டிசம்பர் 1ந்தேதி அவர் கேத்ரி மகாராஜாவுக்கு எழுதிய கடிதங்களைப்   .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 171,கடிதம் 550 ) படித்தால் கண்ணீர் வந்துவிடும். மிகவும் வெட்கப்பட்டு எழுதுகிறார். இது உங்கள் பார்வைக்கு மட்டுமே என்று கூட எழுதுகிறார். நான் உங்களுக்கு அதிக காலம் துன்பம் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் நான் இன்னும் சில வருடங்களே உயிர் வாழ்வேன் என்ற பீடிகையோடு அவர் எழுதியுள்ள அந்தக் கடிதங்களை பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அனைவரும், அமைப்புகளை நிர்வகிக்கிற அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.


இப்படிப் பட்ட சுவாமிஜி பின்னாளில் பணம் திரட்டுவதற்காகவே உலகெங்கும் பயணம் செய்திருக்கிறார் என்பதை நம்பக் கூட முடியாது. சொற்பொழிவுகளுக்கு பணம் வாங்கியிருக்கிறார். சில சமயங்களில் தன்னுடைய சீடர்களிடம் “கறாராக”  வசூல் செய்திருக்கிறார்.அவர் எழுதிய பல கடிதங்களில் பணம் திரட்டும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதுகிறார். சில கடிதங்களில் என்னால் இன்னும் பணம் திரட்டமுடியவில்லையே என்ற ஏக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார். அமைப்பிற்கென்று பணம் கேட்கவேண்டி வரும்போது அவர் தயவு தாட்சண்யமே பட்டதில்லை. வெட்கப்பட்டதில்லை.


ஆனால் ஒரு விஷயத்தில் – அதாவது அமைப்பு வேறு தான் வேறு என்பதில் - அவர் தெளிவாக இருந்தார். பணிக்காக திரட்டிய பணத்திலிருந்து ஒரு காசைக்கூட அவர் தனக்காகவோ தன் குடும்பத்திற்காகவோ செலவு செய்ததில்லை. .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 196,கடிதம் 573 ) அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காக கேத்ரி மகாராஜா மாதாமாதம் பணம் அனுப்பிவந்தார். அமைப்பும் அதை நடத்துபவரும் வேறு வேறு என்பதும் ( concept of Separate Entity )  நவீன நிர்வாக இயலின் அடிப்படைக் கோட்பாடே.


அதனால், பணத்திற்கான செலவு கணக்குகளை சரியாக வைத்திருக்கவேண்டும் என்பதில் அவர் குறிப்பாக இருந்ததில் வியப்பேதும் இல்லை.எல்லா செலவுகளுக்கும் நிர்வாகக் குழுவின் அனுமதியைப் பெறவேண்டும்.அவர்களுடைய கையெழுத்தையும் பெறவேண்டும்.இல்லாவிட்டால் உன்பெயரும் கெட்டுப்போய்விடும் என தனது சீடருக்கு விவரமாக அறிவுரை கூறுகிறார். அவ்வப்போதே செலவுகளுக்கான கணக்கை எழுதி வைத்துவிடவேண்டும் என நியதியை வகுத்திருந்தார். ஆரம்பத்தில்  இதை சோம்பேரித்தனத்தினால்  செய்யாமல்  இருப்பவர்கள் நாளடைவில் ஏமாற்றுப்பேர்வழிகளாக மாறிவிடுவர் என்பது அவரின் கணிப்பு. .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 201, கடிதம் 575 ).


பணத்தை வங்கியில் போட்டு வைக்க வேண்டும் அதுவும் இரண்டு பேரின் பெயரில் கூட்டுக்கணக்கில் போட்டு வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். இந்த விதிமுறையானது, இன்றைக்கு , தணிக்கை விதிமுறைகளின் கீழ் நிதி நிர்வாக மேலாண்மையை மதிப்பீடு செய்யும்போது கண்டிப்பாக நடைமுறையிலிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


2008ல் வெளிவந்த சத்யம் ஊழல் நமக்கெல்லாம் ஞாபகத்திலிருக்கும். அதன் தலைவர் கம்பெனிக்கு வந்த பணத்தை நிலங்களில் முதலீடு செய்து அப்போது நிகழ்ந்த பொருளாதாரச் சரிவின் காரணமாக பெருத்த நஷ்டத்தினைச் சந்தித்து சிக்கலில் மாட்டிக்கொண்டார். விசாரணையில், தான் பேலன்ஸ் ஷீட்டை மாற்றி பணத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டு சிறைக்குச் சென்றார். இந்த ஊழலின் சாரமே, ஒன்றிற்கென்று பெறப்பட்ட பணத்தை விதிக்கு முரணாக இன்னொன்றிற்குச் செலவளித்ததுதான். இதற்காகத்தானோ என்னவோ சுவாமிஜி மிகத் தெளிவாக நியதியை வகுத்திருந்தார். அவர், சுவாமி பிரம்மானந்தருக்கு எழுதிய கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்: “ பஞ்ச நிவாரண நிதியில் எஞ்சியுள்ளதை ஒரு நிரந்தரப் பணிக்கென வைத்துவிடு. வேறு எதற்கும் அதைச் செலவு செய்யாதே.ப`ஞ்ச நிவாரணப் பணிக்கான எல்லா கணக்குகளையும் சரிசெய்த பின்னர் இவ்வாறு எழுதி வை: ‘எஞ்சியது இவ்வளவு,இது .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 123, கடிதம் 508 ).இன்னொரு நற்பணிக்காக.’“ அவருடைய தீர்க்க தரிசனத்தையும் முன்ஜாக்கிரதையையும் போற்றாமலிருக்க முடியவில்லை.


அவருடைய கடிதங்களைப்படித்துப் பார்த்தாலே போதும். ஒரு வரவு செலவு கணக்கை எப்படிப் பதிவு செய்வது என்று ஒரு குறிப்பேடையே ( Accounts Manual )தயார் செய்துவிடலாம். மனிதர்களை எப்படி உருவாக்குவது / கையாள்வதுஎன்பது பற்றியும் ( Personal Manual ) ஒரு குறிப்பேடு தயார் செய்துவிடலாம்.

பல பிரபல நிர்வாக வல்லுனர்கள் விவேகானந்தரின் நிர்வாகத் திறமையை, வழிநடத்தும் திறமையை, தொலைநோக்குப் பார்வையை, தலைமைப் பண்பை வியந்து பாராட்டியுள்ளார்கள். மெக்கின்சே அன்ட் கம்பெனியின் நிர்வாக இயக்குனரான இருந்த திரு. ரஜத் குப்தாவினுடைய அலுவலக அறையினை  விவேகானந்தரின் படம் அலங்கரித்துக்கொண்டிருந்தது.நோபல் பரிசு பெற்ற ரொமைன் ரோலன்ட் விவேகானந்தரை கதாநாயகன் ( HERO )  என்றே அழைத்தார்.


விவேகானந்தர் வாழ்ந்தது வெறும் 39 வருடங்களாக இருக்கலாம். ஆனால் அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள்,அவை ஏற்படுத்தும் தாக்கம், நம்மை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தும் சக்தி வாய்ந்தவை.


சுவாமிஜி,  உலகுதழுவிய பார்வையோடு கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஒரு பாலமாக இருந்தார். வேத காலக் கருத்துக்களை நவீன காலத்திற்குப் பொருந்தும் வகையில் எடுத்துரைத்தார்.


இந்தக் கலியுகத்தில்,ஒன்றிணைந்த சக்தி ஒன்றே வெற்றி தரும் என்ற பொருள் பொதிந்த “சங்க சக்தி கலே யுகே” என்ற வேத வாக்கிற்கு அமைப்பு ரீதியாக வேலை செய்யுங்கள் என்று அர்த்தம் சொல்லி அதற்கு முதன்முதலில் செயல் வடிவம் கொடுத்தவர் அவர்.


சுவாமி விவேகானந்தரை ஒரு செயல் முறை வேதாந்தி என்றழைப்பது முற்றிலும் பொருத்தமானதே.

🌷 தொகுப்பு🌷

🌺 மல்லூர் சித்தர்🌺

மூளையைப் பாதுகாக்க

( மூளையைப் பாதுகாக்க மனிதர்களுடைய மூளைப் பகுதியை ‘பிராணன்' என்ற வாயுவும், ‘தர்ப்பகம்' என்ற கபமும் தம் செயல்களின் மூலம் அறிவு, புலன்கள், நாடிகள் எனப்படும் நரம்பு மண்டலங்கள் இவற்றை நிலைநிறுத்தச் செய்கின்றன. இந்த இரு தோஷங்களின் சீற்றம், மூளையைச் சார்ந்த நரம்பு மண்டலங்களையும் அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் திரவக் கசிவுகளையும் பாதிப்படையும் வகையில் தாக்குவதால், உடல் அசைவுகள் மந்தமாகுதல், விரைப்பு, தன்னிச்சையாக கைகள் நடுங்குதல், கைகளில் வலுவற்ற தன்மை போன்ற அறிகுறிகள் தென்படும்.
வாதத்திற்கும் கபத்திற்கும் சமமான குணம் ‘சீதம்' எனப்படும் குளிர்ச்சி மட்டும்தான். மற்ற குணங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேராதவை. அதனால் குளிர்ச்சி எனும் குணத்தைக் கொண்ட உணவு வகைகளாலும், செயல்களாலும் பருவ காலத்தினாலும் இந்த நோயின் தாக்கம் எளிதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தலையில் அடிக்கடி குளிர்ந்த நீரை விட்டுக் குளித்தல்
* அப்படி குளித்தபிறகு தலையைச் சரியாக துடைத்துக் கொள்ளாமல் தலைமுடியை வாரிக் கொள்ளுதல்
* தேங்காய் எண்ணையைத் தலையில் தேய்த்துக் கொண்டு, காலையில் இளம் வெயில் அல்லது விடிகாலையில் நடைப்பயிற்சி செய்தல்
* தூங்கும்போது அதிக அளவில் ஏசியை வைத்துக் கொள்ளுதல்
* தலைப்பகுதியில் டேபிள் மின்விசிறியின் காற்று படும்படி படுத்துக் கொள்ளுதல்
* இரவில் படுக்கும் முன் குளிர்ந்த நீரைப் பருகுதல்
* குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சில்லிட்டுப் போன பழங்கள், பழ ரசங்கள், பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்து அடிக்கடி சாப்பிடுதல்
* சில்லிட்டுள்ள தரையில் கால் பாதங்களை வைத்திருத்தல்
* உடல் வியர்த்துள்ள நிலையில், ஐஸ் தண்ணீரைப் பருகுதல்
* உணவில் குளிர்ச்சியான வீர்யத்தைக் கொண்ட வெள்ளரிக்காய், பூசணிக்காய், புடலங்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுதல்
* தவறான விதத்தில் யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்போன்ற சில காரணங்களால் தலையைச் சார்ந்த வாத - கப தோஷங்கள் சீற்றமடைந்து நரம்புகளை வலுவிழக்கச் செய்கின்றன.
இந்நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் பல உள்ளன
முகத்தில் மூலிகைத் தைலத்தைத் தடவி, பூண்டு வேகவைத்த சூடான பாலிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படும்படி செய்தல், தலையில் எண்ணைய்யை நிரப்பி ஊறவிடுதல், குடலுக்கு நெய்ப்புத் தரும் விளக்கெண்ணெயைப் பருகச் செய்து மலம் கழிக்க வைத்து அதன் பிறகு ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலம் மற்றும் கஷாயங்களைச் செலுத்தி குடலில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுதல், உடல் சுத்தி முறைகள் அனைத்தையும் செய்த பிறகு, மூளைத் திசுக்கள், நரம்புகள் வலுப்படும் வகையில் மூலிகைக் கஷாயங்களைப் பாலுடன் கலந்து பருகுதல் போன்றவை சிகிச்சை முறைகளாகும்.....

தியானம் தான் உனக்கு ஏற்றது என்றால் புத்தரைப் போல உட்கார்ந்து விடு

தியானம் தான் உனக்கு ஏற்றது என்றால் புத்தரைப் போல உட்கார்ந்து விடு 

மௌனமாக ஒன்றும் செய்யாமல் அப்படியே உட்கார்ந்து விடு 

சிந்திப்பது கூட ஒரு காரியமாக தெரியும் அளவுக்கு 

ஆழ்ந்த மோனத்தில் உட்கார்ந்து விடு 

சில நாட்களுக்கு சிந்தனைகள் வந்து போய் கொண்டுதான் இருக்கும் 

அவற்றைக் கவனித்துக் கொண்டே வந்தால் 

அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் 

போகப் போக அவை இல்லாமல் போய் விடும் 

நீ தொடர்ந்து கவனித்துக் கொண்டே வரும்போது சில இடைவெளிகள் கிடைக்கும் 

அந்த இடைவெளிகளில் உன்னுடைய உயிர்த்தலை பார்த்து விடுவாய் 

அப்படி பார்க்கும் காட்சிகளை 

உடலில் இருந்தும் பெறலாம் 

நெஞ்சத்தில் இருந்தும் பெறலாம் 

புத்தியில் இருந்தும் பெறலாம் 

ஏனென்றால் அப்போதுதான் நீ உடலாகவும் நெஞ்சமாகவும் 
மனமாகவும் 

அவற்றைக் கடந்த ஒன்றாகவும் இருக்கிறாய் 

நீ அவை ஒவ்வொன்றில் இருந்தும் சம தூரத்தில் இருக்கிறாய் 

அதுதான் துரியம் என அழைக்கப் படுகிறது 

உடலை மறுக்க வேண்டாம் 
நெஞ்சத்தை மறுக்க வேண்டாம் 
புத்தியை மறுக்க வேண்டாம் 

நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே இருந்து கொள் அங்கிருந்தே சாதகம் செய்ய ஆரம்பித்து விடலாம் 

எந்த நம்பிக்கையும் வேண்டியதில்லை 

உன்னை நீயே நம்பி ஏற்றுக்கொள்ளும்  போது பிற நம்பிக்கைகள் எதற்கு 

கடவுள் உன்னை ஏற்றுக்கொள்கிறார் எனும்போது உன்னை யாரும் மறுக்க முடியாது 

கடவுள் உன்னுள் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார் 
அவர் உனக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 

உடலும் நெஞ்சும் மனமும் கூட்டாக ஈடுபடும் தியானத்தை முயன்று பார் 

அப்போது நீ உயிர்த்திருப்பதை உணர ஆரம்பித்து விடுவாய் 

நீ எதனிடமாவது சரணாகதி அடைந்தால் அதுதான் புத்தராகிப் போவது 

அகந்தையானது அகந்தை கழிந்து போன ஒன்றிடம் சரணடைவது சிரமம் 

ஆனால் ஒரு அகந்தை இன்னொரு அகந்தையிடம் சரணடைவது மிகச் சுலபம் 

எங்கே யாரிடம் சரணடைய முடியுமோ அங்கே அவரிடம் சரணடைந்து விடு 

முடிவு அந்த மனிதரை சார்ந்திருப்பது இல்லை 

உன்னுடைய சரணாகதியோடு தொடர்புடையது அதன் பயன் 

சரணடையும் அந்தப் பண்பே உன்னை மாற்றி விடுகிறது 

மனிதர்கள் வார்த்தைகளுக்கு அடிமை ஆகிப் போகிறார்கள் 

எந்தக் கிளர்ச்சியான வார்த்தையும் பயன் தராது 

பிறரைக் கிளர்ச்சி கொள்ள வைக்கிறவர்கள் தத்தம் லட்சியத்துக்காகப் பிறரை வற்புறுத்துகிறார்கள் 

முழுமை உனக்குள் இயங்கும் போது நீ அங்கே இருக்க மாட்டாய் 

நீ பரந்த சூன்யமாகிப் போவாய்

Tuesday, February 23, 2016

பாரம்பரிய நெல் வகைகள்

பாரம்பரிய நெல் வகைகள்
1. அன்னமழகி
2. அறுபதாங்குறுவை
3. பூங்கார்
4. கேரளா ரகம்
5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
6. குள்ளங்கார்
7. மைசூர்மல்லி
8. குடவாழை
9. காட்டுயானம்
10. காட்டுப்பொன்னி
11. வெள்ளைக்கார்
12. மஞ்சள் பொன்னி
13. கருப்புச் சீரகச்சம்பா
14. கட்டிச்சம்பா
15. குருவிக்கார்
16. வரப்புக் குடைஞ்சான்
17. குறுவைக் களஞ்சியம்
18. கம்பஞ்சம்பா
19. பொம்மி
20. காலா நமக்
21. திருப்பதிசாரம்
22. அனந்தனூர் சன்னம்
23. பிசினி
24. வெள்ளைக் குருவிக்கார்
25. விஷ்ணுபோகம் [19]
26. மொழிக்கருப்புச் சம்பா
27. காட்டுச் சம்பா
28. கருங்குறுவை
29. தேங்காய்ப்பூச்சம்பா
30. காட்டுக் குத்தாளம்
31. சேலம் சம்பா
32. பாசுமதி
33. புழுதிச் சம்பா
34. பால் குடவாழை
35. வாசனை சீரகச்சம்பா
36. கொசுவக் குத்தாளை
37. இலுப்பைப்பூச்சம்பா
38. துளசிவாச சீரகச்சம்பா
39. சின்னப்பொன்னி
40. வெள்ளைப்பொன்னி
41. சிகப்புக் கவுனி
42. கொட்டாரச் சம்பா
43. சீரகச்சம்பா
44. கைவிரச்சம்பா
45. கந்தசாலா
46. பனங்காட்டுக் குடவாழை
47. சன்னச் சம்பா
48. இறவைப் பாண்டி
49. செம்பிளிச் சம்பா
50. நவரா
51. கருத்தக்கார்
52. கிச்சிலிச் சம்பா
53. கைவரச் சம்பா
54. சேலம் சன்னா
55. தூயமல்லி
56. வாழைப்பூச் சம்பா
57. ஆற்காடு கிச்சலி
58. தங்கச்சம்பா
59. நீலச்சம்பா
60. மணல்வாரி
61. கருடன் சம்பா
62. கட்டைச் சம்பா
63. ஆத்தூர் கிச்சிலி
64. குந்தாவி
65. சிகப்புக் குருவிக்கார்
66. கூம்பாளை
67. வல்லரகன்
68. கௌனி
69. பூவன் சம்பா
70. முற்றின சன்னம்
71. சண்டிக்கார் (சண்டிகார்)
72. கருப்புக் கவுனி
73. மாப்பிள்ளைச் சம்பா
74. மடுமுழுங்கி
75. ஒட்டடம்
76. வாடன் சம்பா
77. சம்பா மோசனம்
78. கண்டவாரிச் சம்பா
79. வெள்ளை மிளகுச் சம்பா
80. காடைக் கழுத்தான்
81. நீலஞ்சம்பா
82. ஜவ்வாதுமலை நெல்
83. வைகுண்டா
84. கப்பக்கார்
85. கலியன் சம்பா
86. அடுக்கு நெல்
87. செங்கார்
88. ராஜமன்னார்
89. முருகன் கார்
90. சொர்ணவாரி
91. சூரக்குறுவை
92. வெள்ளைக் குடவாழை
93. சூலக்குணுவை
94. நொறுங்கன்
95. பெருங்கார்
96. பூம்பாளை
97. வாலான்
98. கொத்தமல்லிச் சம்பா
99. சொர்ணமசூரி
100. பயகுண்டா
101. பச்சைப் பெருமாள்
102. வசரமுண்டான்
103. கோணக்குறுவை
104. புழுதிக்கார்
105. கருப்புப் பாசுமதி
106. வீதிவடங்கான்
107. கண்டசாலி
108. அம்யோ மோகர்
109. கொள்ளிக்கார்
110. ராஜபோகம்
111. செம்பினிப் பொன்னி
112. பெரும் கூம்பாழை
113. டெல்லி போகலு
114. கச்சக் கூம்பாழை
115. மதிமுனி
116. கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
117. ரசகடம்
118. கம்பம் சம்பா
119. கொச்சின் சம்பா
120. செம்பாளை
121. வெளியான்
122. ராஜமுடி
123. அறுபதாம் சம்பா
124. காட்டு வாணிபம்
125. சடைக்கார்
126. சம்யா
127. மரநெல்
128. கல்லுண்டை
129. செம்பினிப் பிரியன்
130. காஷ்மீர் டால்
131. கார் நெல்
132. மொட்டக்கூர்
133. ராமகல்லி
134. ஜீரா
135. சுடர்ஹால்
136. பதரியா
137. சுதர்
138. திமாரி கமோடு
139. ஜல்ஜிரா
140. மல் காமோடு
141. ரட்னசுடி
142. ஹாலு உப்பலு
143. சித்த சன்னா
144. வரேடப்பன சேன்
145. சிட்டிகா நெல்
146. கரிகஜவலி
147. கரிஜாடி
148. சன்னக்கி நெல்
149. கட்கா
150. சிங்கினிகார்
151. செம்பாலை.
152. மிளகி
153. வால் சிவப்பு.

Monday, February 22, 2016

முகநூலில் படித்து ரசித்துச் சிரித்தேன்

“ நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை ”....
செல்போனில் நாம்  தவறான எண்ணை அழுத்தி விட்டால் வரும் பதில் ,  இதுவாகத்தான் இருக்கும்..!

ஆனால் இந்தப் பதிலை , நெல்லைத்  தமிழ் , கோவைத்தமிழ் , சென்னைத் தமிழ் , ஈழத்தமிழ் , இப்படி எல்லா தமிழிலும் கற்பனை செய்து ஒரு பதிவை , முகநூலில் படித்து ரசித்துச் சிரித்தேன் ...!

இதோ ... அந்தப் பதிவு :

நெல்லைத் தமிழ் :

“எல ... எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..”

கோவைத் தமிழ் :

“ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!”

ஈழத்தமிழ்:

“இஞ்சாருங்கோ .. நீங்கள் கூப்பிட்ட எண் பிழை , இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே..”

சென்னை தமிழ்:

“அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க... நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்”

# ஹஹஹா... உங்களுக்குப் பிடித்தது , எந்தத் தமிழோ , நான் அறியேன்...!
ஆனால் எனக்குப் பிடித்தது ஈழத் தமிழும் , கோவைத் தமிழும்தான் !

# ஆனால் , எழுத்தாளர் சுஜாதாவிடம் , “எந்த வட்டாரத்துப் பேச்சுத் தமிழ் தங்களைக் கவர்ந்திருக்கிறது ? ”   என ஒருமுறை கேட்டபோது , அவர் சொன்ன பதில் :

“என்னைக் கவர்ந்த பேச்சுத் தமிழ் , திருநெல்வேலித் தமிழ்தான்...! ‘என்னடே’ என்பதே மரியாதைச் சொல்.... ‘புலிய அங்க வச்சுப் பாத்தேன்’ போன்ற வசீகரமான பிரயோகங்கள்... எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு!”

# இதை எழுதிக் கொண்டிருக்கும்போது , பக்கத்து வீட்டிலிருந்து ஒரு குரல் ,   காதுகளில் வந்து விழுகிறது..!

“என்ன அண்ணாச்சி.. நீங்க நாளைக்கி வருதியளோ ? 
சரி ... ஏளா! நீ எப்ப வருத ?” 

# ......  சுஜாதா சொன்னது உண்மைதான் அண்ணாச்சி !

இந்த உலகத்தில் உள்ள அணைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து

இந்த உலகத்தில் உள்ள அணைத்து
நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி
இருக்கும்? இதை கேள்வியை உலகில் உள்ள
நவீன விஞ்சானிகளிடமோ அல்லது
மருத்துவரிடமோ கேட்டால் இது
முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே
இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை
தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம்
இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18
சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர்
போகர்க்கு தோன்றிய சிந்தணையில் உதித்த
மருந்துதான் நவபாஷாணம். இதற்காக அவர்
மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார்
கிட்டத்தட்ட 4448 மூலிகைளை உபயோகித்து
அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த
பாஷாணங்களை 9 பாஷாணங்களாக பிரித்து
எடுத்தார் அவை(கௌரிபாஷானம்
,கெந்தகபாஷானம்,சீலைபாஷானம்,வீர
ப்பாஷானம்,கச்சாலபாஷானம்,வெள்ளை
பாஷானம் தொட்டிபாஷானம்,ச
ூதப்பாஷானம்,சங்குபாஷானம் ஆகும்)இந்த 9
பாஷானங்களை 9 விதமான எரிபொருளை
கொண்டு சூடு பண்ணி பூமியில்
குழிதோண்டி இந்த 9 பாஷாணங்களை
புதைத்து குறிப்பிட்ட நாளில் எடுத்து
மருந்தாக மக்களுக்கு கொடுத்தார்.இந்த
நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில்
இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது
பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய
சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக
வடித்தார் மருந்தாகவே மக்களுக்கு
கொடுத்திருக்கலாமே என்று. இதைபற்றி
இன்னொரு தகவல் என்னவேன்றால்
நவபாஷானத்தை போகர் கண்டுபிடித்தது
மனிதனின் நோயை போக்குவதற்கு இல்லை
மனிதனை இறப்பே இல்லாமல்
செய்வதற்குதான் கண்டுபிடித்தார் என்று சில
சித்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்
கண்டுபிடித்த நவபாஷாணத்தை பற்றி
கேள்விபட்ட மற்ற சித்தர்கள் போகரை நீ
இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய்
இந்த நவபாஷானத்தை உடனே அழித்து விடு
என்று அறிவுரை கூறினார்கள்.உடனே தன்
தவறை உணர்ந்த போகர் அந்த பாஷாணங்களை
அழிக்க மணமில்லாமல் அதை பொதுமக்கள்
யாரும் பயன்படுத்தமுடியாது படி
முருகன்சிலையாக செய்து பழனியில் வைத்து
விட்டார்.இந்த கதையை கேட்டவுடன் சில
பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க
மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும்
என்று இதை உங்களுக்கு அறிவியல்
பூர்வமாகவே விளக்குகிறேன் அதாவது
இப்போம் உள்ள dna(மரபனு) ஆராய்ச்சியாளர்க
ள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு
மனிதனின் மரபனுவை சுத்திகரிப்பதன் மூலம்
இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம்
என்று கூறுகின்றனர் . அதை போல் இந்த
நவபாஷாணம் ஏன் நமது மரபனுவை
சுத்திகரித்து இறப்பை தடுக்ககூடாது. ஏது
எப்படியோ இந்த நவபாஷானத்தை நமது
அரசாங்கம்தான் ஆய்வுக்கு உட்படுத்தி
அதோடு உண்மை தன்மையை உலகுக்கு
தெரியபடுத்த வேண்டும 

மக்கள் அனைவரும் சித்தர்களின்
இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
என்பது என் நோக்கம்.

 கிருஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள்
முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும்
சித்தர் இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின்
சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார் இவர்
பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை
செய்தவரும் இவர்தான்.இவரை பற்றிய தகவல்
மிக ஆச்சரியத்தை கொடுக்கும்.இவரை பற்றிய
ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம்
என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலை
படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று
விட்டேன் .இப்பேர்பட்ட தமிழனை உலகம்
முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே
என் நோக்கம்.அவர் இயற்றிய அந்த நூலில்
1799, 1800 ஆம் பாடலில் விமான
தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும்
அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை
வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக
கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல
1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam
engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது
என்றும் கப்பலின் டிசைனிங்கையும்
குறிப்பிட்டிருக்கிறார் இதை 5000 ஆண்டுகள்
முன்பே தமிழன் கண்டுபிடித்துவிட்டான்
என்பது நமக்கெல்லாம் பெருமை ஆனால்
அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம்
என்பது வேதனையளிக்கிறது. தமிழனின் புகழ்
உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின்
முதல் இனமும் முதல்மொழியும் முதல்
அறிவியல் விஞ்சானியும் முதல்
மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும்
தமிழனே.இப்படி தமிழனின் புகழை மறந்து
நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும்
தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது..

Saturday, February 20, 2016

திருக்கடையூருக்கு சமமான தண்டீஸ்வரம்

திருக்கடையூருக்கு சமமான தண்டீஸ்வரம்

திருக்கடையூருக்கு சமமாக சென்னையில் ஒரு கோவில் இருப்பது உங்களுக்கு தெரியுமா. அது தான் தண்டீஸ்வரம். ஆயுள் விருத்தி அளிக்கும், நவ கிரஹ தோஷம் போக்கும் ஸ்தலம். எமன் வழிபட்ட சிவ ஸ்தலங்களில் தண்டீஸ்வரமும் ஒன்று. 

இன்று சனி பிரதோஷம். அதுவும் திரயோதசியில் வரும் சனி பிரதோஷம்.

 இந்த ஆலயத்திற்கு அருகில் இருப்பவர்கள். மற்றும் சென்னை வாசிகளில் யார், யார் எல்லாம் இன்று தண்டீஸ்வரம் வந்து தரிசனம் செய்ய முடியுமோ செய்யுங்கள். 

 இந்த தண்டீஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலேயே ஸ்ரீ சிதம்பரம் பெரிய சுவாமிகள் என்கிற  200 ஆண்டுகள் பழமையான ஒரு சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.

 இவர் தான் 200 ஆண்டுகளுக்கு முன் இந்த தண்டீஸ்வரம் கோவிலை புனரமைத்து கட்டினார். இவர் உண்மை துறவி. உண்மை துறவி கையில் காசு இருக்குமா? இருக்காது. இவர் பின்னர் கோவிலை கட்டிய தொழிலாளிகளுக்கு எவ்வாறு பணம் கொடுத்தார் என்றால். வெறும் திருநீரை தான் இவர் கூலியாக கொடுப்பார். யார், யார் எந்த அளவு உழைத்தார்களோ அந்த உழைப்புக்கு தகுந்தபடி அந்த திருநீர் காசாக மாறும் அதிசயத்தை இவர் செய்தார். இவர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த குருலிங்க சுவாமிகளும்  சைதாபேட்டை காரணீஸ்வரர் கோவிலை இப்படி தான் கட்டினார். 

 சிதம்பரம் பெரிய சுவாமிகளின் ஜீவசமாதி வேளச்சேரி குருநானக் கல்லுரி பஸ் ஸ்டாப்பிற்கு மிக அருகிலேயே இருக்கிறது. தண்டீஸ்வரம் சிவன் கோவிலில் இருந்து இந்த மஹானின் உயிர்நிலை கோவில் நடக்கும் துரம் தான். அனைவரும் வருக. ஈசன் அருள் பெருக.

ஜீவசமாதி

ஜீவசமாதி: ஜீவசமாதியை பற்றி
சுருக்கமாகவே இங்கு கூறுகிறேன்.
விரிக்கின் பெருகும் ஆதலால், மற்றொரு
சமயம் விரிவாக எழுதுகிறேன். முற்காலத்தில்
ஐநூறு, ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த நம்
சித்தர்கள்

ஜீவசமாதி அடைவதற்காக 'லம்பிகா யோகம்'
என்ற முறையை கையாண்டார்கள். இந்த யோகா
முறையை அவர்கள் தவளை, உடும்பு, ஓணான்
முதலிய விலங்குகளிலிருந்து
கற்றுக்கொண்டார்கள். அதாவது
என்னவென்றால்,
சித்தர்கள் நாவை மடக்கி மேல் அன்னத்தில்
ஓட்ட
வைத்துக்கொண்டு, அப்படியே தவத்தில்
அமர்ந்து விடுவார்கள். அதேசமயத்தில்
ரகசியமான ஒருவித பயிற்சியை செய்வார்கள்.

அதைப்பற்றி இங்கு வெளிப்படையாக சொல்ல
இயலாது. இவ்வாறு சிறிது சிறிதாக,
மணிக்கணக்கில் பயிற்சியை கூட்டிக்கொண்டே
செல்வார்கள். அப்போது என்ன ஆகுமெனில்,
மனிதனின் விந்துவில் உள்ள சாரமானது,
பதங்கமாகி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி
மூளைக்கு சென்று சேர்ந்து கொண்டே
இருக்கும். கவனிக்கவும், மேலே செல்வது
விந்து அல்ல. விந்துவின் சாரம்தான். இதனை
எளிதாக காந்தசக்தி என அழைக்கலாம்.
தத்துவத்தில் இது ஓஜஸ் அல்லது தேஜஸ்
எனப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து பலநாட்கள் செய்து
வரும்போது, உடம்பானது சிறிது சிறிதாக
மரத்துபோய், உணர்வற்றுக் கொண்டே வரும்.

இது கோமா நிலை போன்றது. அதாவது
உடலில் உயிர் இருக்கும், உடல் இயக்கங்கள்
எல்லாம் நுண்ணியதாக நடந்து கொண்டுதான்
இருக்கும். ஆனால் உணர்வு இருக்காது; மனம்
செயல்படாது. சீடர்கள் அப்படியே உடலை
தூக்கிக்கொண்டு சென்று ஏற்கனவே தயாராக
உள்ள குழியில் வைத்து மூடிவிடுவார்கள்.
இதுதான் ஜீவசமாதி.

தமிழ் 'ழ' : இப்போது ழவிற்கு வருவோம்... ழ
என்று உச்சரிக்கும்போது என்ன செய்கிறோம்?

நாவை மடக்கி மேல் அன்னத்தில் தொட
வேண்டும்- இப்போது மூளை பகுதியில் உள்ள
பீனியல் சுரப்பி ஆக்டிவேட் ஆகும். அதாவது
சஹாஸ்ராதார சக்கரம் திறக்கிறது. பின் என்ன
செய்கிறோம்? ஒலி வருவதற்காக சற்று
அழுத்தம் குடுத்து 'ழ' என்று உச்சரிக்கிறோம்.

மூலாதாரத்தில் உள்ள சூட்டின் காரணமாக,
விந்து சுரப்பியில் உள்ள விந்துவின்
சாரமானது எப்போதும் சிறிதளவு
பதங்கமாகிக்கொண்டே இருக்கும். சத்தம்
வருவதற்காக வாயில் சிறிது அழுத்தம்
கொடுக்கிறோமே, அப்போது அந்த ஓஜஸ்
சக்தியானது சட்டென்று ஒருவினாடியில்
அனைத்து சக்கரங்களையும் கடந்து மேலேறி
மூளைக்கு சென்று நிரம்புகிறது. இந்த ஓஜஸ்
சக்தியானது மூளைக்கு நலமும், வளமும்,
அமைதியும், சீர்மையும் அளிக்கிறது.
இதுவே தமிழ் 'ழ' உருவான ரகசியமாகும்.

'ழ'வை சரியாக உச்சரித்தால் இன்னும்
ஏராளாமான பலன்கள் கிடைக்கும்.

பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்களிடையே
மெய்ப்பொருள் சிந்தனை மிகுந்திருந்தது.

இதற்க்கு சரியான உதாரணம், எந்த
தமிழருடைய
ஆண் பெண்ணுடைய பெயர்களையும்
எடுத்துக்கொள்ளுங்கள்...அவற்றை
பிரித்துப்பார்த்தால் கடைசியில் தெய்வத்தின்
பெயராகவே முடியும் (தொண்ணூறு
சதவீதம்). மேலும் தமிழர்களின் பண்பாடும்,
இறை
உணர்வும் ஒன்றாக கலந்தே இருந்தன. இதை
பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் தெரிந்து
கொள்ளலாம். எனவே, தமிழில் 'ழ' எனும்
எழுத்தை மேற்கண்ட பின்புலத்தில்தான்
தமிழர்களோ, தமிழ் சித்தர்களோ
உருவாக்கியிருப்பார்கள் என்பது என் துணிபு...

எது அவமானம்?

எது அவமானம்?

நீ உன் சுயத்தில் மையங்கொண்டிருந்தால் உன்னை யாராலும் அவமானப்படுத்த இயலவே இயலாது.

அவமானம் என்பது நீ கொண்டிருக்கும் கருத்துக்களால், அபிப்பிராயங்களால், கொள்கைகளால், கோட்பாடுகளால்,  விளைவது.  அதற்கும் உன் சுயத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை

உன்னுடைய கொள்கைகள் உன்னை எப்படி வந்தடைகின்றன என ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்.

உதாரணமாய் நீ சின்னக்கவுண்டர், நாயகன், நாட்டாமை, தேவர் மகன்  போன்ற பல படங்களை சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறாய். 

இது போன்ற படங்களில் தந்தை கதாபாத்திரங்கள் தனக்கு நேர்ந்த அவமானங்களைத் தாங்க முடியாமல் உயிரை விட்டிருப்பார்கள்.  அல்லது தாங்கள் கொண்ட கொள்கைக்காய் உயிரை விட்டிருப்பார்கள்.

அப்படி உயிர்விடும் காட்சிகளின் பின்னனியில்......

"இடியேயானாலும் தாங்கிக் கொள்ளும் இதயம்.....சிறு பலி தாங்கக் கூடலையே....."

"தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே....."

"போற்றிப் பாடடி பொண்ணே.....தேவர் காலடிமண்ணே....."

போன்ற உருக்கமான பாடல்கள் ஒலிக்கும்.

இப்போது
ஊர் நாட்டாமைகள் அல்லது ஒரு பெரிய மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்ற இலக்கணம் உனை அறியாமலேயே உன் ஆழ்மனதில் பதிவாகிறது.

கவரிமான் மயிர் நீப்பின் உயிர் வாழாது என்பது போல ஒரு நல்லவனுக்கு பழிச்சொற்களோ, அவமானமோ நேர்ந்தால் அவன் உயிரையே விட்டு விடுவான்.  அவனுக்கு உயிரைவிட மானமும், கௌரவமும், கொண்ட கொள்கைககளும்தான் பெரிது என்பது இந்தக்காட்சிகளின் மூலம் உன் ஆழ்மனதில் (Sub Conscious) பதிவாகிவிடுகின்றன.

பின்னாளில் அதே போன்ற ஒரு சம்பவம் உன் வாழ்க்கையில் நிகழும்போது.....அதாவது உன்னை ஒருவர் பழிச்சொற்களால் தூற்றும்போது.....உன் ஆழ்மனதிலிருக்கும் பதிவுகள் உனையறியாமலேயே மேலேழுந்து வரத்தொடங்குகின்றன.  

நீ இப்போது ஏற்கெனவே எழுதப்பட்ட ப்ரோக்கிராம்படி இயங்கும் ஒரு ரோபோவாக மாறிப்போகிறாய்.  

அது போன்ற தருணங்களில் நீ உயிரை விடவில்லையாயினும் குறைந்தபட்சம் ஒரு மாரடைப்பாவது உனக்கு வந்துவிடுகிறது.   

ஆனால்,  அது ஒரு மானஸ்தன் இது போன்ற தருணங்களில் இவ்வாறுதான் நடந்துகொள்ளவேண்டும் என உன் ஈகோவில் பதிவான ப்ரோக்கிராமினால் நீயாக வரவழைத்துக்கொண்ட மாரடைப்பாகும்.

இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நீ எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என உன் பெற்றோர்களால், நண்பர்களால், உறவினர்களால், சமுதாயத்தால், ஊடகங்களால் ப்ரோகிராம் செய்யப்படுகிறாய்.  அவைகளை உன் கருத்துக்களாக, கொள்கைகளாக, அபிப்பிராயங்களாக மாற்றிக்கொள்கிறாய்.  இவை எதுவுமே உண்மையல்ல.  வெளியிலிருந்து திணிக்கப்பட்டவை.

குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் அவை சிலபல தருணங்களில் அவை தன் பெற்றோர்களைப் போலவே நடந்துகொள்வதைப் பார்க்கலாம்.  பெற்றோரின் மத, ஆன்மிகக் கொள்கைகள் குழந்தைகளின் கொள்கைககளாகி விடுகின்றன.

இன்னொரு உதாரணம்.

"குரு சாட்சாத் பரப்பிரம்மம்"

"குருவருள் இன்றி திருவருள் இல்லை"

"குரு துரோகம் பொல்லாத பாவத்தை கொணர்ந்து சேர்க்கும்"

என பல வாக்கியங்களை சிறு வயது முதலே கேட்டுவருகிறாய்.

ஸ்ரீ ராகவேந்திரா படத்தைப் பார்க்கிறாய்.  கையைச் சுடும் விளக்கின் சூட்டைத்தாங்கிக் கொண்டு தனது குருநாதர் படிப்பதற்கு வெளிச்சம் காண்பிக்கிறான் அந்தச் சிறுவன்.  

ஏகலைவனின் குருபக்தி பற்றிய கதையைக் கேள்விப்படுகிறாய்.

இப்போது ஒரு சீடனுக்கான இலக்கணம் உன் ஆழ்மனதில் தயாராகிவிட்டது.  

உன் குருவின் படத்தை எப்போதும் பாக்கெட்டில் சுமந்து திரிகிறாய்.  

உன் குருவை யாராவது தவறாகப் பேசினால் அவரோடு சண்டையிடுவதன் மூலம் உன் குருபக்தியை நிரூபிக்கப் பார்க்கிறாய்.

உன் குருவைத்தாண்டி வேறோரு மகானின் சிந்தனையைப் படிக்க மறுக்கிறாய்.  அதனால் ஏதேனும் பாவம் சூழ்ந்துகொள்ளுமோ என பயப்படுகிறாய்.

குருவைப் பற்றிய இந்த இலக்கணமும் வெளியிலிருந்து உன் மீது திணிக்கப்பட்டது.

அவை உன்னுடையவை அல்ல.  ஆனால் அந்தக்கருத்துக்களோடு உன்னை நீ அடையாளப்படுத்திக்கொள்கிறாய்.

வெளியிலிருந்து வரும் எதுவுமே புனிதமானதல்ல என ஓஷோ கூறுகிறார்.

உள்ளே நீ மலர்ந்ததன் விளைவாக உன் ஒழுக்கங்கள் வெளிப்படவேண்டும்.

அதாவது ஞானத்தினால் ஒழுக்கம் பிறக்கவேண்டும் என்கிறார் ஓஷோ.  ஒழுக்கத்தினால் ஞானத்தை அடைய முடியாது.

ஒரு செடி அதன் மலரும் தன்மையினால் பூக்களை மலர்த்த வேண்டும்.  

வெளியிலிருந்து உன் மீது திணிக்கப்பட்ட கருத்துக்களால் உன் ஒழுக்கம் அமைந்திருக்குமாயின் அது பூக்கவே பூக்காத ஒரு செடியில் இன்னொரு செடியில் பூத்த மலரைக் கொண்டுவந்து ஒட்ட வைத்ததற்கு ஒப்பாகும். மலருக்கான ஊட்டச்சத்துக்கள் செடியிலிருந்து கிடைக்கச் சாத்தியமேயில்லை. 

ஞானம் என்ற அந்தச் செடிக்கும் ஒழுக்கம் என்ற அந்த மலருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததால் அந்த மலர் நிச்சயமாய் வெகு சீக்கிரம் வாடிவிடும்.

ஆக உன் கருத்துக்களே உன் எதிரி.  ஆனால் கருத்துக்கள் உண்மையில்லை. ஆகையால் எந்தவிதமான கருத்துகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாதே.  உன் குருவை ஒருவன் அமானப்படுத்தட்டுமே.  அவனோடு சண்டையிடுவானேன்?  அதனால் என்ன நடந்துவிடப்போகிறது? 

அது அவன் கருத்து.  அவ்வளவே.  அவனுக்கும் ஒரு கருத்தினை வைத்திருக்க உரிமையுண்டல்லவா?

உன் கருத்துக்களோடு உனக்கு ஆழ்ந்த பிடிப்பு இருக்குமாயின் அதற்கு எதிரான கருத்துக்களை கொண்டவன் அனைவரும் உன் எதிரிகளாவர்.  நீ அவமானப்பட அல்லது படுத்த நேரிடும்.

கருத்துகளற்று, கொள்கை கோட்பாடுகளற்று எல்லையற்ற வானில் நீ பறந்து திரிவாயேயானால் உன்னை எவராலும் அவமானப்படுத்துதல் சாத்தியமன்று.

#ராகவேந்தர்.

Feel the power of positive Thinking...

[07/02 08:03] principal: Good msg, PL read
[07/02 08:03] principal: நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் “The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்.
தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார். தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.
பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார். கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச்சொன்னார். வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார். 
சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது. இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். “உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.
அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போகவில்லையே என்று கூறினார். “இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.
தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார். “எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்த்தில்லை என்று பதிலளித்தார். “உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்றபோது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத்தான் இருக்கிறது என்று பதில் கூறினார். இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப்புறம் நிரம்பியிருந்தது. இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.
கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்டமனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. அதுபோல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை. இரண்டும் கலந்த்து தான் வாழ்க்கை.
ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள். கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக்கூடாது. அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளுபலகையாக இருக்க வேண்டும்.
என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள். மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்.
வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா?
மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள். வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்.

Feel the  power of  positive  Thinking... That is the BIGGEST SECRET OF LIFE...