Tuesday, September 20, 2016

நவ துவார வழிபாடுகள்

நவ துவார வழிபாடுகள்
  1. மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

  2. திருவானைக் கோவில் போன்ற திருத்தலங்களில் மூல மூர்த்தியை நவசாளரங்கள் வழியாக தரிசனம் செய்து வழிபடுவதால் கண் திருஷ்டிகள் நம்மை எளிதில் தாக்காத வகையில் கவச சக்திகளைப் பெருக்கிக் கொள்ள முடியும். ஒன்பது சாளரங்களுக்கு மேல் உள்ள சிறுகமணி சிவத்தலம் போன்ற திருக்கோயில்களிலும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு பயனடையலாம்.

  3. மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.

  4. ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.

  5. பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.   

  6. திருமண வைபவங்களில் நவ தானியங்களை மண் சட்டிகளில் வளர்த்து முளைப் பாலிகைகளை வழிபடும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. புது மணத் தம்பதிகள் மேல் விரவும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவதற்காகவும், தம்பதிகள் நற்சந்ததிகளைப் பெற்று வாழவும் இந்த முளைப் பாலிகை வழிபாடு ஒரு முக்கிய திருமண வைபவமாக நிறைவேற்றப்படுகிறது.

  7. இயற்கையாகவே, முளைப் பாலிகை வழிபாடு திருஷ்டி தோஷங்களை நீக்கும் ஆதலால் மண் சட்டிகளில் முளைப் பாலிகைகளை வளர்த்து திருச்சி சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்திலும், கண்ணாயிரம், செந்தாமரைக் கண்ணன், கண்ணாத்தாள் போன்று கண் பெயருடைய இறைவன், இறைவிகள் அருளும் தலங்களில் சமர்ப்பித்து வழிபாடுகள் நிறைவேற்றுவதால் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த முளைப் பாலிகைகளை கன்றுடன் கூடிய பசுக்களுக்கு வழங்குவதும் ஓர் அற்புத வழிபாடாகும்.

Monday, September 19, 2016

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி? 
.
காலக்கெடு !
மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்றால் எந்த ஒரு வேலைக்கும் காலக்கெடு நிர்ணயித்துக் கொள்வது நல்லது. காலக்கெடு விதித்துக் கொண்டால், முக்கியமில்லாத பணிகள் மறந்து போய், முக்கியமான பணிகள் மட்டுமே நினைவில் பதிந்து அதனை முடிக்க வைத்துவிடும்.
.
தூக்கம் !
நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அசதி, களைப்பு, போதுமான தூக்கமின்மை ஆகியவை மனதை ஒருமுகப்படுத்துவதை பாதிக்கும் காரணிகளாகும்.
.
சீரான முன்னேற்றம் !
மனம் ஒருமுகப்படவில்லை என்று கருதினால், பணிகளில் சிறு சிறு முன்னேற்றத்தினை காட்ட வேண்டும். கவனம் சிதறுவது போல் கருதினால் மன சிதறலின் அளவினை சிறிது சிறிதாகக் குறைக்க முயல வேண்டும்.
.
இதயமும் மனமும் !
இடைப்பட்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க மனம் தான் அவசியம். எனினும் ஒரு நேர்மறையான அணுகுமுறையும், அதனுடன் இருந்தால் அப்பணி மிக எளிதாக முடியும். பணியினை அனுபவித்து, ஈடுபடுத்திக் கொண்டு, ரசித்து செய்யும் போது, மனம் உண்மையிலேயே அதில் முழுமையாக ஈடுபடும். மேலும் முழு ஒருமைப்பாடு கிடைக்கும். அப்பணியும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்.

Wednesday, September 14, 2016

உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும்.

நம்மால் ஒண்ணும் பண்ணமுடியாது .

இருந்தாலும் தெரிந்து வைத்துகொள்வோம்

உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும்.

முதலாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்.

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

இரண்டாவது மோசடி:

சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

மூன்றாவது மோசடி:

 தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது.
ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும்.

ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.
நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது.
துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.

அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.
ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள்.  மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.

Meet Ramesh Babu, the billionaire barber who travels in Rolls Royce!

Meet Ramesh Babu, the billionaire barber who travels in Rolls Royce!


Meet Ramesh Babu, the billionaire barber who travels in Rolls Royce!
Bangalore: In the business world, it is often said that if you have some foresight, are honest and can work hard, then nothing can stop you from earning decent amount of money or getting rich. The story of Ramesh Babu from Bangalore is a glaring example of how you can surge ahead in this cut-throat competitive business environment while doing things that you love.
Bangalore resident Ramesh Babu, is a star in his own league who runs the business of cutting and styling hair. He is an ordinary businessman, with an extraordinary wealth. He is a billionaire and owns a rent-a-car fleet of 67 alternative cars.
“Somehow, things have clicked for me,” says Babu, whose clients embody politicians, military officers as well as movie stars such as Salman Khan, Aamir Khan as well as Aishwarya Rai Bachchan.
On most of the days, Ramesh comes to his workplace driving a Rs 3.1 crore Rolls Royce Ghost. In his words he handles the car’s dashboard with the same deft touch and care as when he is shaping somebody’s coif. The interesting part is that there are only five other people in the city who own such a luxurious car. Babu had purchased the Rolls Royce with his own hard earned money.
Though his income from the saloon is modest, it is the lucrative luxury car rental business that has earned him his fortune. That also makes him one of India’s richest hairstylists. The man has a collector’s passion for fancy cars which he looks after with utmost care.
However, things were not so easy back in 1989. Ramesh’s father who owned a small saloon died when Ramesh was a young boy and and the only means for his survival was a barber shop that his father left for him. His mother leased the shop for Rs 5 a day and took up work as a domestic help to make ends meet.
“I remember the day my father passed away, leaving our family and his barbershop,” he recalls in a wispy voice. In 1994, Ramesh preferred to run his father's shop rather than continue his education. The salon, named Inner Space, was in a shopping complex by the school where he studied. It soon became a trendy styling outlet for youngsters.
While running the saloon, he cherished the dream of owning a car. Three years later, Babu purchased a Maruti Omni to rent it to people for their personal use. This became the turning point in his life. One of his mother’s employers advised him to lease the Omni to Intel, the company she worked with.

The returns through the car rental business were encouraging and they supplemented his income from the salon. As his reputation grew, so did the car rental business.
By the end of 1990, he was running a successful taxi operation business by the name of Ramesh Tours and Travels.
In 2004, he got into the luxury car rental and self-drive business after the government opened up the tourism sector. Ramesh Tours and Travels hasn’t looked back since.
He first invested in a Mercedes E Class luxury sedan that cost him Rs 38 lakh. The fleet grew with three more Mercedes cars and four BMWs, which is, however, dominated by dozens of Toyota Innovas.
At the moment his fleet consists of around 200 cars, vans and mini-buses, including imported vehicles—a Rolls-Royce Silver Ghost, Mercedes C, E and S class and BMW 5, 6 and 7 series. He has a fleet of imported Mercedes vans and Toyota mini-buses.
“This is more of a passion,” he says. As for being a barber, “I will continue to be one as long as my hands are healthy.”
Amazingly, Ramesh charges Rs 75000 a day for the Rolls and his usual clients are corporate bigwigs and visiting Bollywood and Tollywood stars.
However, Ramesh’s fancy automotive fleet does not include only cars, he also owns a Suzuki Intruder high-end bike that is worth Rs 16 lakh. He rides this bike during weekends and uses it only for private purposes.
Even today, being such a rich man he did not forget his roots. He cuts the hair of his regular customers for just Rs 65.
Babu owes his success to doing what he thought was best. “Whatever I did, I did well, that’s all I can say,” he smiles.

16-ம் பெற்று வாழ சாணக்கியத் தன சிந்தனைகள்..

சமகால வெற்றிக்கு 16-ம் பெற்று வாழ சாணக்கியத் தன சிந்தனைகள்...!!

1. வளைந்து கொடுப்பதால் வீழ்ச்சிகள் தவிர்க்கப் படுகின்றன. எப்போதும் நிமிர்ந்தே இருப்பது மரங்களைப் போலவே மனிதர்களுக்கும் ஆபத்து...!!

2. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது.

3. விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் சீறுவது அவசியம்.

4. பெரும்பாலான நட்புகளின் பின்னனியில் ஏதேனும் சுயநலம் இருந்தே தீரும். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

5. ஒவ்வொரு வேலையைத் தொடங்கும் போதும் உங்களுக்குள்ளே மூன்று கேள்விகளை கேளுங்கள். 
இதை ஏன் செய்கிறேன்??.
இந்தச் செயலின் விளைவுகள் என்ன?
இதை வெற்றிகரமாகச் செய்வேனா?

6. அச்சம் எப்போது நெருங்குகிறதோ, அப்போதே அதை எதிர்த்து, அடித்துக் கொன்று விடுங்கள்...!!

7. ஒரு வேலையை செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள்.

8. காற்று வீசும் திசையில்தான் மலரின் வாசனை பரவும். ஆனால் உங்கள் நல்ல இயல்புகள் எல்லாத் திசையிலும் பரவும்.

9. உண்மையான மகிழ்ச்சியுடன் யார் உழைக்கிறார்களோ, அவர்களே உலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.

10. உங்கள் குழந்தைகளை முதல் ஐந்து வயது வரை கொஞ்சிக் கொஞ்சி வளர்த்துங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் கண்டிப்புக் காட்டுங்கள். அதற்குப் பிறகு நண்பர்களாய் நடத்துங்கள்.

11. எல்லா இடங்களிலும் மதிப்பைப் பெற்றுத் தருவது கல்வி. இளமையின் அழகைக் காட்டிலும் உயர்ந்தது கல்வியின் மதிப்பு.

12. பார்க்க முடியாதவர் முன்னால் நிலைக் கண்ணாடி எப்படி பயன்படாதோ அது போல் முட்டாள்களுக்குப் பரிசளிக்கும் புத்தகங்களும் பயன்படாது.

13. ஆணவம் மிக்கவரை மரியாதை காட்டி வெற்றி கொள்ளலாம். முட்டாள்களை அவர்கள் முட்டாள் தனத்தைப் பொருட்படுத்தாததன் மூலம் வெற்றி கொள்ளலாம். அறிவாளியை உண்மையின் மூலம் வெற்றி கொள்ளலாம்.

14. அற்பமான ஜந்துக்களிடம் கூட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள்.

15. அரசர் எளிய குடிமகன் போல் வாழ்கிற தேசத்தில், குடிமக்கள் அரசர்களைப் போல் வாழ்வார்கள்.

16. தோல்வியின் இன்னொரு பெயர் பொறாமை...!!

நீடூழி வாழ வாழ்த்துக்கள்...!!

பழனி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்

பழனி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்

* பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரு நகரங்களான மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து சமதூரத்தில் உள்ளது இக்கோவில்.

*  இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

* தமிழ்க்கடவுளான முருகனை வழிபட கேரளாவில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். அருகிலேயே பொள்ளாச்சி  அருகே கேரள எல்லை ஆரம்பிப்பதால் கேரளாவில் இருந்து விரதம் இருந்து அதிக அளவு வருகிறார்கள்.

*முதன் முதலில் நேமங்கோவில் குமரப்பன் என்பவர்தான் பழனிக்கு காவடி எடுக்கும் வழிபாட்டை அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பழனி முருகன் கோவிலுக்கு விரதம் இருந்து காவடி தூக்கி செல்லும் பாதயாத்திரை முறையை ஆரம்பித்து இன்று வரை சிறப்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்திவருவது காரைக்குடி  நகரத்தார்கள்தான் என்பது மறுக்க முடியாதது.

* இவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த முறையால் இன்று தென் தமிழகம் முழுவதும் பழனிக்கு காவடி எடுத்து சென்று வணங்கும்  பக்தர்களை அதிகப்படுத்தியது.

* பாரம்பரியமிக்க, தெய்வீகமான இந்த பழநி பாதயாத்திரையை முருக பக்தர்கள் யாரும், சாதாரணமான விசயமாக, விளையாட்டாக எண்ணிவிடாமல் உண்மையான பக்தியோடு, உண்மையான கட்டுப்பாட்டோடு மாலையணிந்து, விரதமிருந்து கந்தனை உள்ளன்போடு நினைத்து பழநிக்கு பாதயாத்திரை வந்தால், எம்பெருமான் முருகன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுடனேயே இருந்து உங்களுக்கு நல்வழி காட்டுவான் என்பது நம்பிக்கை.

* இங்குள்ள முருகனது சிலை 18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில், குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

* முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

* பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திரு ஆவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.

*  பழனித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகலிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழனி மாமலை மீதினிலேயுறை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழனி என்கிறார்.

* பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளைக் கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

* பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலைச் சார்ந்த 38 - உப கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களில் கீழ்கண்ட கோயில்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1. அருள்மிகு திரு ஆவினன் குடி கோயில்
2. அருள்மிகு பெரிய ஆவுடையார் கோயில்
3. அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயில்
4. அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் - ஒட்டன்சத்திரம்
5. அருள்மிகு குறிஞ்சியாண்டவர் கோயில் - கொடைக்கானல்
6. அருள்மிகு இடும்பன் மலைக் கோயில் - பழனி

* 18 சித்தர்களில் ஒருவரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி பழனி மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* திருவண்ணாமலை போன்றே எண்ணற்ற மகான்கள் இந்த பழனியில் வாழ்ந்திருக்கின்றனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

Tuesday, September 13, 2016

தம்பிரான் சித்தரின் சமாதி பீடம்

கொங்கண சித்தரின் ஒளி ஐக்கியம் பீடம் ...மற்றும் தம்பிரான் சித்தரின் சமாதி பீடம் --ஊதியூர்.

கொங்கண சித்தரின் ஒளி ஐக்கியம் பீடம் ...மற்றும் தம்பிரான் சித்தரின் சமாதி பீடம் --ஊதியூர்.

>> பொன்னூதிமாமலை எனும் ஊதியூர் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஊராகும் ..இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இம்மலையின் பழமையான பெயரே பொன்னூதிமாமலை என்பதாகும் .
>> ஊதியூர் மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது மிகவும் பழமை வாய்ந்த கோவிலில் "உத்தண்டவர்" எனும் திருநாமத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார் ..இங்குள்ள உத்தண்டவர் கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் .இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் ..
>> பின்பு சற்று தள்ளி மேலே "தம்பிரான் சித்தர் சமாதி" உள்ளது . ""தப்பித்தது தம்பிரான் புண்ணியம்"" எனும் பழமொழி இன்னும் நமது பேச்சு வழக்கத்தில் உள்ளது ...ஆபத்தின் உச்சிக்கு சென்றவர் கூட தம்பிரானை தரிசிக்க -மயிரிலையில் அவர்கள் காப்பாற்றப் படுவார்கள்..தம்பிரானின் ஜீவ சமாதி இங்குதான் உள்ளது .இவ்விடம் வந்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் .தமது அடியார்களை துணிந்து காப்பதில் வல்லண்மை பொருந்திய தம்பிரானுக்கு இவ்விடம் மட்டுமே சன்னதி உள்ளது ..வேறு எங்கும் இருப்பதாக நான் அறியவில்லை ..
>> "தம்பிரான் சித்தர் சமாதிக்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு மலை பாதையில் நடந்து சென்றால் வருவது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான வல்லண்மை பொருந்திய "கொங்கண சித்தரின் " பல ஆண்டுகள் தவம் செய்து பரிபூரண கிருபை பொருந்திய இடமாகும் ..இங்கு தான் கொங்கண சித்தர் பல ஆண்டுகள் தவம் செய்துள்ளார் . சொர்ண ஆகார்ஸன பைரவ பெருமான் கொங்கண சித்தருக்கு காட்சி தந்து பொன்னை செய்யும் கலையை அருளியுள்ளார் ..
>> அதற்கும் சற்று மேலே கொங்கண சித்தரின் ஒளி ஐக்கியம் பெற்ற குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் . அமைதியான சூரிய வெளிச்சம் உள்ளே வரமுடியாத ....தவத்திற்கு ஏற்ற .... அருமையான இடமாகும்..படத்தில் நாங்கள் குகைக்குள் அமர்ந்து இருக்கிறோம் கேமரா வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல் தெரிகிறது ...உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி ...உள்ளே வரவும் ..வெளியே செல்லவும் படுத்து தவழ்ந்து தான் போக ,வரமுடியும்

>> இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது ..அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை செய்த மலையாதலால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது ..கொங்கன சித்தர் இம்மலையில் தான் பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார் .நன்றி மறந்த தன்மையுடனும் சுயநலமும் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி பொன் செய்யும் கலையை விடுத்து ..அவர் வைத்திருந்த பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர் தம்பிரான் சித்தரிடம் கொடுத்து ..இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என கூறி மறைத்து வைக்கும்மாறு சொல்லி தவத்தில் ஆழ்ந்தார் .கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்று குரு தண்டனை பெற்று திருவருளால் அருகில் உள்ள நீரூற்றில் ஜல சமாதியானார் ..

> ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி எல்லோருக்கும் அளிப்பார்கள் ,முடிந்தவர்கள் சென்று ரசத்தை அருந்தி வாருங்கள் .கொங்கணர் ஜனன நட்சத்திரம் உத்திராடம் அன்று குரு பூஜை நடைபெறுகிறது ...அருமையான பார்க்க வேண்டிய புண்ணிய தலம் ஒரு முறை சென்று வாருங்கள்

Friday, September 9, 2016

திருச்செந்தூர் முருகன்

💜 திருச்செந்தூர் முருகன் 💜

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார்.

அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.

பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, பிறகு "திருச்செந்தூர்' என மருவியது.

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.

மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

திருசெந்தூரில் குரு அம்சமாக அருளோடும் கருணை பொழியும் முகத்தோடும் கடலோரத்தில் காட்சி தருகிறார் ..முருக பெருமானை ஆராதனை செய்து ஆலயம் எழுப்பி அறப்பணி ஆற்றிய அடியார்கள் மூவரின் ஜீவசமாதி கோவிலுக்கு அருகே வாகனம் நிறுத்துமிடத்தில் உள்ளது ...மூவர் சமாதி கோவில் என கேட்டால் சொல்வார்கள் ..

1.ஸ்ரீ மௌன சாமி,
2.ஸ்ரீ காசி சாமி,
3.ஆறுமுக சாமி ,

மூவர் சமாதிகள் அடுத்தடுத்து வரிசையாக உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டியது இவர்கள்தான், ஒரு 10 நிமிடம் சமாதியில் அமர்ந்து நமது கோரிக்கையை வேண்டினால் உடனே நடைபெரும்.

இங்கு தரும் பன்னீர் இலை அபி ஷேக விபூதி தீராத நோய்கள் தீர்க்கும் அற்புதமான பிரசாதம். மேலும்
பஞ்சலிங்கம், வள்ளி குகை,நாழிகிணறு ஆகிய இடங்கள் வரலாற்று சிறப்புடையவை. அனைவரும் நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.

ஓம் சரவணபவ குகனே சரணம்

Thursday, September 8, 2016

கற்களின் தரம் அறிவது எப்படி???*

*கற்களின் தரம் அறிவது எப்படி???* 


*முத்து* :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.


*மரகதம்* :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.


*பச்சைக்கல்* :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.


*வைரம்* :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.


*பவளம்* :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.


*கோமேதகம்* :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும். 


*புஷ்ப ராகம்* :- சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.


*வைடூரியம்* :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.


*நீலக்கல்* :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.


 அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

Wednesday, September 7, 2016

ஓம் ஓம் குரு குரு சப்தரிஷிகளே சரணம்

ஓம் ஓம் குரு குரு சப்தரிஷிகளே சரணம்

நட்புக்களே இன்றைய பதிவு மிகமிக மிக முக்கியமான பதிவு.பல பேர் அறியாத விஷயங்கள்,படிக்க தவறாதீர்கள் .

இந்த கலியுகபடைப்பாளிகள்தான் இந்த சப்தரிஷிகள்.அனைத்து ஜீவராசிகளும் மனித இனமும் .பல சித்தர்களும் தோன்ற காரணமான முனிவர்கள். மனித இனத்தின் விதையே இவர்கள்தான்...

காச்யப முனிவர் 🌷
******************

தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து தோன்றியதே மனித குலம்!

அத்ரி முனிவர் 🌷
***************

இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும் அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை வாழ்த்துகிறது ரிக்வேதம்.

பரத்வாஜர் முனிவர் 🌷
*********************

இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர் என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

விஸ்வாமித்திரர் முனிவர் 🌷
***************************

இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர். விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு
.

கவுதமர் முனிவர் 🌷
*******************

அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.

ஜமதக்னி முனிவர் 🌷
********************

துஷ்டர்களை அடக்க அவதாரம் ஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

வசிஷ்டர் முனிவர் 🌷
********************

அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும் சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம் வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி! ஆவணி மாத வளர்பிறை 5-ம் நாளில் இவர்களை வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது புராணம்.

குரு நாளில் மட்டுமில்லாது அனைத்து நாட்களிலும் இவர்கள் காயத்ரி ஜெபிக்க
சகல தோஷங்களும் விலகும். இது பலர் அறியா ரகசிய வழிபாடாகும்.வழிபட்டு பயன்பெறுங்கள் நண்பர்களே. ..

🌻 சப்தரிஷிகள் காயத்திரி மந்திரங்கள்🌻
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காஸ்யபர்
ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தன்னோ காஸ்யப ப்ரசோதயாத்

அத்ரி
ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தன்னோ அத்ரி ப்ரசோதயாத்

பரத்வாஜர்
ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தன்னோ பரத்வாஜ ப்ரசோதயாத்

விஸ்வாமித்ரர்
ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தன்னோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்

கவுதமர்
ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தன்னோ கௌதம ப்ரசோதயாத்

ஜமதக்னி
ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தன்னோ ஜமத்கனி ப்ரசோதயாத்

வசிஷ்டர்
ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரம்ஹசுதாய தீமஹி
தன்னோ வசிஷ்ட ப்ரசோதயாத்

ஓம்சிவசிவஓம் 🌸 ஓம்சிவசிவஓம்