Thursday, May 19, 2016

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் சந்தோசமாய் இருங்கள்

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. 
.**

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. 

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா . 
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

விட்டொழியுங்கள்.
***
#சந்தோசமாய் இருங்கள்,..

பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் மசூத் ஹாசன் இந்தியாவின் பெருமையை அடுக்கிக் கொண்டே சொல்கிறார்.

பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் மசூத் ஹாசன் இந்தியாவின்  பெருமையை அடுக்கிக் கொண்டே சொல்கிறார். 

இந்திய மருத்துவ உற்பத்தி இப்பொழுது ஆண்டுக்கு 30000 கோடி, ஏற்றுமதி 10000 கோடி.

பன்னாட்டு கம்பெனிகளின் பங்கு இந்திய சந்தையில் 75 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக குறைந்து, பாரதக் கம்பெனிகளின் பங்கு 25 முதல் 65 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

மூலிகை வியாபாரம் ஆண்டுக்கு 4000 கோடி.

அமெரிக்கா, ஜப்பான் தவிர சூப்பர் கம்பியூட்டர் நிறுவிய நாடு இந்தியா

விண்கலம் செலுத்தும் ஆறு உலக நாடுகளில் இந்தியாவும்  ஒன்று. ஜெர்மனி, பெல்ஜியம் கூட அந்த சாதனையைச் செய்யவில்லை.

உலகில் பத்தில் ஒன்பது வைரக்கல்,இந்திய நாட்டில் தான் கட் பாலீஷ் செய்யப்படுகிறது. இதன்மூலம் உலகின் வைரத் தொழிலில் பாரதம் முதலிடம் பெற்றுள்ளது.

85 பில்லியன் டாலராக (அதாவது ரூ. 3,80,000 கோடி ) இருந்த அன்னிய செலாவணி இப்போது 118 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. 

ஐ.எம்.எஃப். நிறுவனத்தின் கடனை முன்கூட்டியே அடைத்துவிட்டு, உலகின் பல நாடுகளுக்கும் நிதியுதவி செய்கிறது இந்தியா.

இந்தியாவில் எம்.பி.ஏ படித்தவரை உருவாக்க ரூ 70000 தான் செலவாகிறது. இதுவே அமெரிக்காவில் 54 லட்சம் செலவு. 

ஒரு கார் தயாரிக்க ஆராய்ச்சி செலவு  அமெரிக்காவில் ரூ 4500 கோடி என்றால் , பாரதத்தில் அதில் பாதிதான் செலவு. ஆனாலும் அதே நேர்த்தி. 

அமெரிக்காவில் காட்டராக்ட் செய்ய 7000 ரூபாய். அதே நேர்த்தியுடன் இந்தியாவில் செய்ய 600 ரூபாய் தான். "

இதய ஆபரேஷன் செய்ய அமெரிக்காவில் 6 லட்சம் செலவானால், இந்தியாவில் 40000 மட்டுமே. " . 
கடைசியாக சொல்கிறார்

இந்த முன்னேற்றங்கள் ஒரே நாளிலோ அல்லது அதிர்ஷ்ட வசமாகவோ ஏற்பட வில்லை. முன்னேர வேண்டும் என்ற உத்வேகம் , 

நாம் விரோதித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்தியா முன்னேறிக் கொண்டே இருக்கிறது. "

நாடு பிரியும் போது மஹரிஷி அரவிந்தர் சொன்னார். .....
" இந்தப் பிளவு செயற்கையானது. பாரதம் என்பது சக்தியின் வடிவம். அது இயற்கையின் அமைப்பு. இந்தப் பிளவு செயற்கை. இது மாற வேண்டும். மாறும். "

மனசு சஞ்சலப்படுகிறதா?

மனசு சஞ்சலப்படுகிறதா?

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.

புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.

ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.

நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார்.

சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும்.

நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது
நடக்கும்.

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...)

மூன்று பாடங்கள்...!!!
*************************

(கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...)

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்..


JC.Dr.Star Anand ram

மூச்சைக் கவனி..... பேச்சை குறை.

மூச்சைக் கவனி.....
பேச்சை குறை.........
JC.Dr.Star Anand ram 

#வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள் கூடும்.ஆயுள் மட்டுமல்ல அறிவும் வளரும்.புத்தி தெளிவடையும். அதே சமயம் இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆயுள் குறையும்.

#புத்தி பேதலிக்கும். நாம் கோபப்படும் போதும்,பரபரப்படையும் போதும் நமது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.மூச்சின் அளவும் அதிகரிக்கும்.அதனால் தான் கோபம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.அதற்காக தியானம்,பிராணயாமம் போன்ற பல்வேறு வழிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றார்கள். இதில் பிராணயாமம் என்ற மூச்சுப்பயிற்சியை முறையாகக் கற்றவர்களே செய்ய வேண்டும். பல எளிய முறை மூச்சுப்பயிற்சிகளும் உள்ளன.அவற்றைப் பின்பற்றினாலே நமக்கு பல நன்மைகள் விளையும். இதில் ஓஷோ கூறியுள்ள ஒரு தியானமுறையைப் பார்ப்போம்.

#சுவாசத்தைக் கவனித்தல்(தியானம்)
"எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும். 

 #சுவாசத்தைக் கவனித்தல் என  பொருள்   இது மிகவும் எளிய முறை.

 #எப்போது - நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும்,ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..காலம் - 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.
 முதல் படி - உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா. வேறு எண்ணங்களை விட்டுவிடு.

#நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.

நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.

 #பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள். இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய்.தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.

 #உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது.

அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.

 #சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.

 ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.

#அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.
ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.

#காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்."

#எண்ணங்களைக் குறைத்தால் பேச்சுக் குறையும்.பேச்சைக் குறைத்தால் மூச்சு குறையும். மூச்சைக் குறைத்தால் சித்தம் தெளிவடையும்.சித்தம் தெளிவடைந்தால் மொத்தமும் கிடைக்கும்.

Wednesday, May 18, 2016

Who is Poor? - Worth Reading

Who is Poor? - Worth Reading
**********************************
A wealthy woman goes to a saree store and tells the boy at the counter "Bhaiya show some cheap sarees. It is my son's marriage and I have to give to my maid."

After sometime, the maid comes to the saree shop and tells the boy at the counter "Bhaiya show some expensive sarees. I want to gift my Mistress on her son's marriage"

Poverty is in the mind or in the purse?

Who is Rich?

Once, a lady with her family was staying in a 3-star hotel for a picnic. She was the mother of a 6 month old baby.
"Can I get 1 cup of milk?" asked the lady to the 3-star hotel manager.
"Yes madam", he replied.
"But it will cost 100 bucks". "No problem", said the lady.
While driving back from hotel, the child was hungry again.
They stopped at a road side tea stall and took milk from the tea vendor
"How much?” she asked the tea vendor.
"Madam, we don't charge money for kid's milk", the old man said with a smile.
"Let me know if you need more for the journey". The lady took one more cup and left.
She wondered, "Who’s richer? The hotel manager or the old tea vendor?

Sometimes, in the race for more, you forget that we are all humans.

 Let's help someone in need, without expecting something in return. It will make us feel better than what money can.

Coffee never knew that it would taste so nice and sweet, before it met milk and sugar.
We are good as individuals but become better when we meet and blend with the right people....

Stay connected.

"The world is full of nice people... If you can't find one... Be one."- jC.Dr.Star Anand Ram

புதையல் மற்றும் எதிர்பாராத பண வரவை தரும் எள்

புதையல் மற்றும் எதிர்பாராத பண வரவை தரும் எள்


புகழ் பெற்ற 'திறந்திடு 'சீசேம்' (ஆங்கிலத்தில்) வாசகத்திற்கு பெயர் பெற்ற எள்ளிற்கு எதிர்பாராத பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தால் பண வரவை ஏற்படுத்தும் தன்மை உண்டு. சிறிய கண்ணாடி குப்பியில் எள் நிரப்பி வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் திறந்த படி வைத்திருக்க மேற்கண்ட நன்மைகளை எதிர்பார்க்கலாம். மாதம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் விட்டு புதிதாக மாற்றி வரவும்.

தொழிலுக்கு அவசியம்

தொழிலுக்கு அவசியம் இலக்கும், உத்திகளும். எதை அடைவது என்பது இலக்கு. அதை எப்படி அடைவது என்று தீர்மானிப்பது உத்தி. எந்த பிசினஸுக்கும் குறிக்கோளும் அதை குறிபார்த்து அடிக்கும் திறனும் வேண்டும். மார்க்கெட்டிங் என்பதே உத்திகள்தானே. அவை எப்படி இருக்க வேண்டும், அமைக்க வேண்டும் என்று ஹார்வர்ட் யூனிவர்ஸிடியின் நிர்வாகவியல் பேராசிரியர் ‘மைக்கேல் போர்ட்டர்’ விளக்கியுள்ளார். 1980ல் ‘காம்பெடிடிவ் ஸ்ட்ரேடஜி’ என்ற தன் புத்தகத்தில் ‘ஜெனரிக் ஸ்ட்ரேடஜீஸ்’ என்ற சித்தாந்தத்தை அவர் அறிமுகப்படுத்தினார். 
மார்க்கெட்டில் போட்டிகளை சமாளிக்க, காலகாலத்துக்கும் ப்ராண்டு களை பாதுகாக்க தொழிலுக்கு மூன்று வித உத்திகள் இருக்கின்றன என்கிறார் போர்ட்டர். ஒவ்வொரு கம்பெனியும் தனக்கேற்றபடி அந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கேற்ப தன் தொழிலை வடிவமைக்கவேண்டும். தேர்ந்தெடுத்த அந்த உத்திதான் தொழிலின் ஒவ்வொரு அசைவையும், செயலையும் நிர்ணயிக்கவேண்டும் என்கிறார். 
அந்த மூன்று உத்திகளுக்கு நிர்வாக உலகம் அவர் பெயரையே வைத்து ‘போர்ட்டர்ஸ் ஜெனரிக் ஸ்ட்ரேடஜீஸ்’ என்றழைக்கிறது. எந்த தொழிலுக்கும் அதன் உத்திகளுக்கும் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் அந்த மூன்று தாய் உத்திகளை இப்பொழுது பார்ப்போம். 
தயாரிப்பு செலவைக் கட்டுக்குள் வைத்தல் (Overall cost leadership)
பொருள் வகையில் மற்றவர்களை விட தயாரிப்பு செலவை கணிசமாகக் குறைத்து அனைவரையும் விட குறைவான விலையில் விற்பது முதல் வகை உத்தி. இது லேசுபட்ட காரியம் அல்ல. அனைவருக்கும் சாத்தியப்படக்கூடியதும் அல்ல. வெறும் செலவைக் குறைப்பது மட்டுமல்ல இவ்வகை உத்தி. 
மற்றவர்கள் நெருங்க முடியாத வண்ணம் செலவுகளை குறைத்து விலை விஷயத்தில் மற்றவர்களுக்கு தலைவனாய் இருப்பதே இந்த உத்தி. இந்த உத்தியைத் தேர்ந்தெடுக்கும் கம்பெனியின் விலைக்கு தன் விலையை குறைத்து விற்கும் போட்டியாளர்கள் அந்த விலையில் நஷ்டம்தான் அடையமுடியும் என்கிற நிலையை உருவாக்கும் உத்தி இது. ’சரவணா ஸ்டோர்ஸ்’ சக்கைப் போடு போடுவது இந்த உத்தியைக் கையாண்டுதான்.
வித்தியாசப்படுத்திக் காட்டுதல் (Differentiation)
முதல் உத்திக்கு நேர் எதிர் இது. இதில் விலை முக்கியமல்ல; தயாரிப்பு செலவு ஒரு பொருட்டல்ல. போட்டியாளர்களைவிட தங்கள் ப்ராண்டை ஏதோ ஒரு வகையில் வித்தியாசப்படுத்தி காட்டும் உத்தி இது. ப்ராண்டின் வடிவிலோ, இமேஜிலோ, வாடிக்கையாளர் சேவையிலோ அல்லது இதன் கலவையாலோ ப்ராண்டை வித்தியாசப்படுத்தி காட்டுவது. ‘சரவண பவன்’ தேர்ந்தெடுத்திருப்பது இதையே.
ஒருமுகப்படுத்தல் (Focus)
ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவையோ, பொருள் வகையையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஊரையோ மட்டும் குறிவைத்து விற்பது இவ்வகை. குறிவைத்த பிரிவுக்கு மட்டும் ப்ராண்டை வடிவமைத்து, அந்த பிரிவுக்கு மட்டும் விலையை குறைத்தோ அல்லது ப்ராண்டை வித்தியாசப்படுத் தியோ காட்டும் முயற்சி இது. ‘டெக்கத்தலான்’ என்கிற ப்ராண்ட் பெரிய அளவில் பல ஊர்களில் கடை திறந்து சிறந்த சேவையுடன் விளையாட்டு சாதனங்களை விற்கிறது. அதை மட்டுமே விற்கிறது. சிலர் பிசினஸை விளையாட்டாய் பார்க்க, டெக்கத்தலான் விளையாட்டை பிசினஸாய் பார்க்கிறது!
இந்த மூன்று வகை உத்திகள் தான் தொழிலுக்கு ஆதாரமானது. எந்த கம்பெனியும் இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப தன் தொழிலை வடிவமைக்கவேண்டும் என்கிறார் போர்ட்டர். பலத்திற்கேற்ப, திறமைக்கேற்ப, மற்றவர்களால் காப்பியடிக்க முடியாத உத்தியை அழகாய் தேர்ந்தெடுத்து, அதற்கு அமர்க்களமாய் செயல் வடிவம் கொடுத்து, அதை அட்டகாசமாய் நிர்வகிப்பதுதான் வெற்றியின் ரகசியம் என்கிறார்.
தெளிவாக உத்தியைத் தேர்ந் தெடுக்காமல் தொழில் செய்பவர்களும் ஒரு உத்தியை தேர்ந்தெடுத்து இன்னொரு உத்தியை சேர்த்து பிரயோகிப்பவர்கள் குழப்பத் திலகர்கள். தோல்வியடைய காத்திருப்பவர்கள். ‘ஃபுட்வோர்ல்ட்’ டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல.
‘ஆர்பிஜி’ குரூப்பும் ‘டெய்ரி பார்ம் இண்டர்நேஷனல்’ என்ற பன்னாட்டு நிறுவனமும் சேர்ந்து தொடங்கிய கம்பெனி இது. டிஃப்பரென்சியேஷன் உத்தியை தேர்ந்தெடுத்து தொழில் தொடங்கினார்கள். நகரின் பிரதான சாலைகளில் பெரிய கடைகள், ஏசி வசதி, பார்க்கிங், தேர்ந்த விற்பனையாளர்கள் என்று பிசினஸை வடிவமைத்தனர். ஆனால் நாளடைவில் விற்பனையை அதிகரிக்கும் பேராசையுடன் ‘சேல்’, ‘இலவசம்’, ‘இது வாங்கினால் அது ஃப்ரீ’ என்று டிஃப்பரென்சியேஷனோடு சேர்ந்து விலைக்குறைப்பு உத்தியையும் கையாண்டனர்.
ஃபுட்வோர்ல்ட் தலைகீழாக நின்றாலும் அவர்கள் விலைகள் மற்ற கடைகளை விடக் குறைவாக இருக்க முடியாதே. ஏனெனில் ஃபுட்வோர்ல்ட் மலிவான விலைக்கு விற்கும்படி வடிவமைக்கப்படவில்லை. விலை குறைப்பால் பணவரவும் குறைந்து வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையையும் வழங்க முடியவில்லை. 
அதனால் வெறுப்படைந்த வாடிக்கையாளர்கள் ’இது புட்வோர்ல்ட் அல்ல. பேட் வோர்ல்ட்’ என்று பைபை காட்டி பக்கத்து கடைக்குப் போய்விட்டனர். டெய்ரி பார்ம் கம்பெனிக்கு அசாத்திய கோபம். ‘உங்களுக்கு பிசினஸ் செய்யவே தெரியல. நாங்க போறோம். நீங்கள் எக்கேடுகெட்டு போங்கள்’ என்று ஆர்பிஜியுடன் பார்ட்னர்ஷிப்பை முறித்துக்கொண்டனர். அதோடு ஃபுட்வோர்ல்ட் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்று கூறிவிட்டனர். ஃபுட்வோர்ல்ட் ‘ஸ்பென்சர்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
‘ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை, ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை’ என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னது போலவே நடந்து தொலைத்தது!
போர்ட்டர் சொன்னபடி செய்து வெற்றிகரமாக செயல்படும் கம்பெனி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வகையிலேயே உண்டு - ‘நீல்கிரீஸ்’. கடை தொடங்கியது முதல் அவர்கள் தேர்ந்தெடுத்தது டிப்ரென்ஷியேஷன் உத்தியை. ‘உலகத் தர ஷாப்பிங் அனுபவத்தை தருவதே எங்கள் உத்தி’ என்று வரையறுத்தது நீல்கிரீஸ். இன்று வரை அது போலவே தொழில் புரிந்து வருகிறது.
பிரதான சாலைகளில் கடை விரித்து, பரந்த பரப்பளவுடன் அமைத்து, பார்க்கிங் வசதி படைத்து, ஏசி குளுமை கொடுத்து, தேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் கொண்டு தங்கள் உத்திக்கேற்ப தொழிலை வடிமைத்தது நீல்கிரீஸ். ‘உலகத்தர சேவை’ என்ற உத்திக்கு என்ன தேவையோ அதைச் செய்தனர். அதை மட்டுமே செய்தனர்.
அதனால் நீல்கிரீஸ்ஸில் ’சேல்’, ‘விலைக் குறைப்பு’ போன்றவற்றை பார்க்க முடியாது. ஏனெனில் நீல்கிரீஸ் வாடிக்கையாளர்கள் இதை எதிர்பார்த்து வருவதில்லை. ‘எனக்கு விலை பொருட்டல்ல, நல்ல ஷாப்பிங் அனுபவம் தான் முக்கியம்’ என்று நினைப்பவர்களை மட்டுமே கவர்வதால் தான் நீல்கிரீஸ், சேவை மூலம் தங்களை வித்தியாசப்படுத்த முடிகிறது. இன்று வரை இந்தியாவின் தலைசிறந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் ஒன்றாக வெற்றியுடன் திகழ முடிகிறது.
ஒவ்வொரு கம்பெனியும் தங்கள் திறமைக்கேற்ப, தேவைக்கேற்ப ஓர் உத்தியைத் தேர்ந்தெடுத்து வகுத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு உத்தியை மட்டும் வைத்துக்கொள்வதற்கு பதில் இரண்டாய் வைத்துக்கொண்டால் இன்னும் பெட்டர் போல தோன்றும். ஃபுட்வோர்ல்ட் நினைத்தது போல. ஆனால் அது தப்பாட்டம். 
தொழில் புரிய பிரதான உத்திகளை விவரமாக விளக்கி உங்கள் பிசினஸ் சுமையை இறக்கி வைத்திருக்கும் இந்த போர்ட்டருக்கு நீங்கள் டிப்ஸ் ஏதும் தரவேண்டாம். அவர் சொன்ன டிப்ஸ் படி நடந்துகொண்டால் போதும்!

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள்

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள்


கெட்ட கனவுகள், நிம்மதியற்ற உறக்க நிலை,பேய்-ஆவி பயம் நீங்க சிறிய வெள்ளை துணியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் கருப்பு உப்பை சிறிதளவு முடிந்து தலையணை அடியில் வைத்து உறங்க மேற்கண்டவை நீங்கும். அனைத்து தீய சக்திகளையும் ஓட்ட வல்லது கருப்பு உப்பு.

Sunday, May 15, 2016

ஓஷோ வாழ்க்க்கை

ஓஷோ வாழ்க்க்கை
ஓஷோவின் வாழ்க்கைக் குறிப்பு
1931 – 1953  ஆரம்ப வருடங்கள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 11 ந் தேதி ஓஷோ பிறந்தார். துணிக்கடை வைத்திருந்த ஒரு ஜைனரின் பதினோரு குழந்தைகளில் ஓஷோதான் மூத்தவர். அவரைப் பற்றிய கதைகள், சிறுவயது முதலே அவர் சுதந்திரமானவராகவும், எதிர்க்கத் தயங்காதவராகவும் எல்லா சமூக, மத, தத்துவரீதியான நம்பிக்கைகளையும் எதிர்த்து கேள்வி கேட்பவராகவும் இருந்ததாக அவரை விவரிக்கின்றன. இளைஞனாக இருந்தபோது அவர் பல தியான முறைகளை சோதனை செய்து பார்த்தார். ஜபல்பூரில் உள்ள டி.என். ஜெயின் கல்லூரியில் தத்துவயியல் பயின்று கொண்டிருக்கையில் தனது இருபத்தி ஒன்றாவது வயதில் 1953 ஆம் வருடம் மார்ச் 21 ந் தேதி ஓஷோ ஞானமடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும். கௌதமபுத்தர், கபீர், இரமணர், மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.

1953 – 1956 கல்வி

1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.

 1957 – 1968 பல்கலைகழக பேராசிரியர் மற்றும் பொதுமேடை சொற்பொழிவாளர் 

1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார்.

1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.

ஆணித்தரமாகவும் அருமையாகவும் பேசக் கூடிய பேச்சாளரான ஓஷோ இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று ஏராளமானமுறை பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் சொற்பொழிவாற்றி வருகிறார்.  பொதுக் கூட்டத்திலேயே சம்பிராயமான மத தலைவர்களுக்கு சவால் விடுக்கிறார்.

1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் உள்ள பரந்த மைதானங்களில் 20,000 முதல் 50,000 பேர் வரை திரளும் கூட்டங்களிடையே அவர் உரையாற்றுகிறார். பத்து நாட்கள் தியான பயிற்சி கொண்ட முகாம்களை வருடத்திற்கு நான்கு முறை நடத்துகிறார்.  1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார். எந்த கட்டுப்பாடும் அற்ற மூச்சு விடுதல் பயிற்சியும், உள் உணர்வுகளை வெளிக் கொட்டுதலும் பின் மௌனமும் அசையாதிருத்தலும் ஆகிய செய்முறைகளைக் கொண்ட தியானம் இது. இந்த தியானம் அப்போதிலிருந்து உலகம் முழுவதிலும் உள்ள டாக்டர்கள், ஆசிரியர்கள், தொழில்முறை பயிற்சியாளர்கள் மனோதத்துவ வல்லுனர்கள் என எல்லோராலும் இன்று வரை உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது.

1969 – 1974 பம்பாய் வருடங்கள்  

1960 ன் பிற்பகுதியில் அவர் இந்தியில் பேசிய பேச்சுக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாயின.

1970 ஜூலையில் பம்பாய்க்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் இந்த உலகத்தையோ மற்ற எதையுமோ துறக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘துறவறம்’  என்பதைப் பற்றி ஓஷோ கூறுவது வழிவழியாக உள்ள கிழக்கத்திய முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவரைப் பொறுத்தவரை இந்த வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.

நாடு முழுவதிலிருந்து பேசுவதற்கு வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதை அவர் நிறுத்தி விடுகிறார். ஆனால் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் தியான முகாம்களை தொடர்ந்து நடத்துகிறார். தனது சக்திகள் அனைத்தையும் தன்னைச் சுற்றி பெருகி கொண்டே வரும் தனது சன்னியாசிகளுக்காகவே அர்ப்பணிக்கிறார்.

இந்த சமயத்தில் வெளிநாட்டவர்களும் வருகின்றனர். புது சன்னியாசம் பெறுகின்றனர். அவர்களில் பலர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மனித வளர்ச்சியின் உயர் சாத்தியக்கூறு பற்றிய இயக்கத்தை சேர்ந்த முன்னிலை மனோ தத்துவவியலாளர்கள் ஆவர். அவர்கள் தங்களது அடுத்த கட்ட உள் வளர்ச்சி நிலைக்காக அவரை தேடி வருகின்றனர். கிழக்கின் ஞானமும் மேற்கின் அறிவியலும் இணைந்த இந்த கால மனிதனுக்கான புதிய, அசலான, தியானமுறை அனுபங்களை அவர்கள் ஓஷோவிடம் அடைகின்றனர்.

1974 – 1981 பூனா ஆசிரமம்

இந்த ஏழு வருடங்கள் ஓஷோ ஒவ்வொரு நாள் காலையிலும் 90 நிமிடங்கள் ஒரு மாதம் இந்தியிலும் அடுத்த மாதம் ஆங்கிலத்திலும் என ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் யோகா, ஜென், தாவோ, தந்திரா, சூபி என எல்லா ஆன்மீக பாதைகளின் உட்பொருளையும் எடுத்துக் காட்டி உரை நிகழ்த்துகிறார். கௌதமபுத்தர், ஜூஸஸ், லாவோட்ஸீ மற்றும் அனைத்து ஞானமடைந்த ஞானிகளை பற்றியும் எடுத்துரைக்கிறார். இந்த உரைகள் 300 புத்தகங்களாக தொகுக்கப்பட்டு 20 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.

இந்த வருடங்களில் மாலையில் அன்பு, பொறாமை, தியானம், கோபம் போன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ‘தரிசனம்’ எனப்படும் இந்த கேள்வி – பதில் 64 தொகுப்புகளாக உள்ளது. அவற்றில் 40 மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காலக் கட்டத்தில்தான் கிழக்கத்திய தியான முறைகளையும் மேற்கத்திய மனோதத்துவ முறைகளையும் உள்ளடக்கிய பல்வேறு குழு மற்றும் தனி அகச்சிகிச்சை முறைகள் ஓஷோவை சுற்றி எழுந்த கம்யூனில் உருப்பெற்றது. உலகின் பல்வேறு இடத்திலிருந்தும் மனோ தத்துவ நிபுணர்கள் வந்தனர். 1980 ல் ‘உலகின் மிக சிறந்த அருமையான வளர்ச்சி மற்றும் அக சிகிச்சை மையம்’ என்ற பெருமையை ஓஷோ கம்யூன் பெற்றது. ஒவ்வொரு வருடமும் 1,00,000 மக்கள் வந்து சென்றனர்.

1981 – ஓஷோவிற்கு முதுகுவலி மோசமானது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் தினமும் உரையாற்றி வந்த ஓஷோ 1981 மார்ச்சில் சொற்பொழிவிலிருந்து அமைதிநிலையை தானே மேற்கொள்கிறார். அவசரமாக அறுவை சிகிச்சை செய்யும் நிலை வரலாம் என்பதால், அவரது டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அமெரிக்கா பயணப்படுகிறார்.  இந்த வருடத்திலேயே அவரது அமெரிக்க சீடர்கள் 64,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவில் ஓரேகான் என்று அழைக்கப்படும் ஒரு மாநிலத்தில் வாங்கி அவரை அங்கு அழைக்கின்றனர். இப்படியாக அவர் அமெரிக்காவில் தங்கி இருக்க சம்மதித்து நிரந்தர குடியிருப்புக்கு ஒரு விண்ணப்பம் அவர் சார்பில் கொடுக்க அனுமதிக்கிறார்.

1981 – 1985 ரஜ்னீஷ்புரம் 

தரிசு நிலமாக பாழடைந்துள்ள மத்திய ஓரேகானின் பகுதியிலிருந்து விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட, தன்னிறைவு பெற்ற,  முன்மாதிரியான கம்யூன் ஒன்று எழுச்சி பெறுகிறது. அதிக உழைப்பு தேவைப்படுவதாலும், லாபமீட்டும் அளவு பயன்கொடுக்காது என்பதாலும் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையாக்கப்படுகின்றன. ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே  அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது.

கம்யூனிற்க்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுத்தது. சமூகத்திற்கு எதிரான புது எழுச்சிகளை கண்டு எரிச்சலுறுகின்ற தன்மை அமெரிக்க சமுதாயத்தில், ஜனாதிபதி ரீகனின் இந்த காலகட்டத்தில் எல்லா மட்டத்திலும் பரவி கிடந்தது. அதற்கு ஏற்றார்ப்போல உள்ளுர் மாநில மத்திய அமெரிக்க அரசியல்வாதிகள் ரஜனீஷ்புர மக்களுக்கு எதிராக அனல் கக்கும் பேச்சை வெளிப்படுத்தினர். அமெரிக்க குடியுரிமை சேவை மையம் (INS), அமெரிக்க உளவுத்துறை(FBI), அமெரிக்க கருவூலத்துறை, மது புகையிலை மற்றும் ஆயுத ஏஜென்ஸி(ATF) போன்ற பல பல ஏஜென்ஸிகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாய் செலவு செய்து, தேவையற்ற மற்றும் எந்த பயனும் அளிக்காத கம்யூன் பற்றிய ஆய்வுகளில், கம்யூனை தொந்தரவு செய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஈடுபட்டன. அதே போன்று மிகவும் பணச் செலவு செய்து கம்யூனுக்கு எதிரான பிரசாரம், ஓரேகான் மாநிலத்தில் நடத்தப்பட்டது.

1984 அக்டோபர் – ஓஷோ மூன்றரை வருட மௌனத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திலேயே ஒரு சிறு குழுவினரிடம் பேச ஆரம்பிக்கிறார்.

1985 ஜீலை – ஜூலையிலிருந்து ஓஷோ தனது காலை சொற்பொழிவை ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடும் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள தியான மண்டபத்தில் பேச ஆரம்பிக்கிறார்.

1985 செப் – அக் ஓரேகான் கம்யூன் அழிக்கப்படுகிறது.

1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின. நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.

அக்டோபர் 23 – அமெரிக்காவின் போர்ட்லேண்ட் மாநில தலைமை நீதிபதி ஓஷோ மற்றும் ஏழு பேர் குடியுரிமை சட்டத்தை ஏமாற்ற முயன்றதாக சிறிய குற்றங்களை ரகசியமாக சுமத்துகிறார்.

அக்டோபர் 28 – எந்தவித வாரண்ட்- டும் இல்லாமல் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர். ஐந்து மணி நேரத்தில் ஓரேகான் வந்தடைந்து விடக்கூடிய பயணம் வந்துசேர நான்கு நாட்கள் பிடிக்கிறது. வழியில் ஓக்லஹோமா நகர சிறையில் ஓஷோ அவரது சொந்த பெயரில் இல்லாமல் டேவிட் வாஷிங்டன் என்ற பொய் பெயரில் வெளிஉலகத்திற்குத் தெரியாமல் வற்புறுத்தி அடைத்து வைக்கப்பட்டார். அவர் அந்த சிறையில் இருந்தபோதுதான் அவருக்கு ‘தாலியம்’ என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதற்க்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

நவம்பர் – ஓஷோவின் குடியுரிமை வழக்கிற்கு எதிராக பிரச்சாரங்களும் குரல்களும் கிளம்ப ஆரம்பிக்கின்றன. பாதுகாப்பற்ற ஓரேகானில் அவரது உயிரையும் மற்ற சந்நியாசிகளின் நிலையையும் கருத்தில் கொண்டு ஓஷோவின் வக்கீல்கள் அவர் மீது போடப் பட்ட 35 வழக்குகளில் இரண்டை “ஏற்கும் கோரிக்கை” என்ற பிரிவின் கீழ் ஒத்துக் கொள்கின்றனர். இந்த கோரிக்கையின் விதிகளின்படி பிரதிவாதி தனது குற்றமற்ற தன்மையை தொடர்ந்து வலியுறுத்தும் அதே சமயம் அரசு தரப்பில் அவரை குற்றவாளி என்று கருத இடமுண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறார். ஓஷோவும் அவரது வக்கீல்களும் ஓஷோவின் குற்றமற்ற தன்மையை கோர்ட்டில் தொடர்ந்து வலியுறுத்தவே செய்தனர். ஆனால் ஓஷோவுக்கு நான்கு லட்சம் டாலர்கள் அபராதமும் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.

ரஜனீஷ்புரத்தை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பலரும் கூறியது போலவே சார்லஸ் டர்னர் என்ற போர்ட்லேண்டின் அரசாங்க வக்கீல் பொது மேடையிலேயே அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

1985 – 1986 உலக சுற்றுப் பயணம்

டிசம்பர் 1985 – ஓஷோவின் அந்தரங்க பணியாளர்களுக்கு விசா கொடுக்க மறுத்து இந்திய அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது.

1986 ஜன, பிப்ர – ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். அங்கு அவர் இருந்த இந்த இரண்டு மாதங்களும் தினமும் இருவேளையும் சொற்பொழிவாற்றுகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.

பிப்ர, மார்ச் – முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்க்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.

இதைத் தொடர்ந்த இரண்டு வாரங்களில் அவர் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள 17 நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை.

மார்ச் – ஜூன் – மார்ச் 19ஆம் தேதி அவர் உருகுவே நாட்டிற்குச் செல்கிறார். மே 14ந் தேதி அந்த அரசாங்கம் ஓஷோ உருகுவேயின் நிரந்தர குடிமகனாக அங்கீகரிக்கப்படுவார் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்க்காக பத்திரிக்கையாளர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த கூட்டத்திற்க்கு முந்தியதினம் இரவு வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து டெலிபோன் மூலம் உருகுவே ஜனாதிபதி சன்குன் நெட்டியை அழைத்து ஓஷோவை உருகுவேயில் தங்க அனுமதித்தால் உருகுவே அமெரிக்காவிற்க்கு தர வேண்டிய 6 மில்லியன் டாலர் கடனை உடனடியாக அடைக்க வேண்டியிருக்கும் என்றும் மேற்கொண்டு கடன் எதுவும் தரப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டதாக ஜனாதிபதி சன்குன் நெட்டி பின்னர் ஒத்துக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஜீன் 18ந் தேதி ஓஷோவை உருகுவேயை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

ஜூன் – ஜூலை – இந்த மாதங்களில் அவர் முறையே ஜமைக்காவிலிருந்தும் போர்ச்சுக்கல்லில் இருந்தும் வெளியேற்றப் பட்டார். ஆக மொத்தத்தில் இதுவரை 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.

1987 – 1989 ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்

1987 ஜனவரி – அவர் பூனாவில் உள்ள ஆசிரமத்திற்கு திரும்ப வருகிறார். அது இப்போது ‘ரஜனீஷ்தாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் ஓஷோவின் அன்பர்கள் என அறியப்பட்ட வெளிநாட்டவர் அனைவருக்கும் அனுமதி மறுப்பதை தொடர்ந்து செய்கிறது.

1988 ஜூலை – ஒவ்வொரு நாள் மாலை உரையின் இறுதியிலும் ஒரு தியானத்தை தானே முன்னின்று நடத்தத் துவங்குகிறார். இது இந்த 14 வருடங்களில் இதுவே முதல் முறை. மேலும் மிஸ்டிக் ரோஸ்  (சூட்சம ரோஜா) என்ற புரட்சிகரமான ஒரு புதிய தியான யுக்தியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.

1989 ஜன – பிப்ர – அவர் பகவான் என்ற பெயரை விட்டுவிட்டு ரஜனீஷ் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொள்கிறார். அப்போது அவரது சீடர்கள் அவரை ஓஷோ என அழைக்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார். வில்லியம் ஜேம்ஸின் வார்த்தையான ‘ஓஷியானிக்’ என்ற வார்த்தையிலிருந்து தான் ஓஷோ என்ற தன் பெயர் உருவானதாக விளக்குகிறார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து விடும் அனுபவம், அப்போது அதை அனுபவிப்பவர் எங்கே ? அதற்குத்தான் நாம் ஓஷோ என்று கூறுகிறோம். ‘வானம் மலர் தூவி வாழ்த்தும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவர் ‘ என்ற அர்த்தத்தில் ‘ஓஷோ’ என்ற வார்த்தை கிழக்கு நாடுகளில் முற்காலத்தில் குறிக்கப் பட்டிருப்பதை பின்னர் ஓஷோ கண்டறிகிறார்.

1989 – மார்ச் – ஜூன்  அவருக்கு கொடுக்கப்பட்ட விஷம் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்ததால் அதனுடைய பாதிப்புகளிலிருந்து மீள அவர் ஓய்வு எடுக்கிறார்.

1989 ஜூலை – அவரது உடல்நிலை சிறிது சீர்படுகிறது. ஓஷோ குருபூர்ணிமா கொண்டாட்டம் என்று பெயர் மாற்றப்பட்ட விழா நாட்களில் இருவேளையும் மௌன தரிசனம் தருகிறார்.

1989 ஆகஸ்ட் – மாலை வேளை தினமும் கௌதமபுத்தா மண்டபத்தில் தரிசனத்திற்கு வந்தமர்கிறார். அவர் மௌனமாக அமர்ந்திருக்க, இசை இசைக்கப்படுகிறது. “விவரிக்க இயலாத அதை உணர மட்டுமே வேண்டும். இது உள் நிலையை, தியான வெளியைப் பெறும் ஒரு மிகப் பெரிய அனுபவம்” என்று அவர் விளக்குகிறார். அவர் ‘ஓஷோ வெள்ளை உடை சகோதர சந்திப்பு’ எனக் கூறப்படும் விசேஷமான குழுவை ஏற்படுத்துகிறார். மாலை தரிசனத்திற்காக வரும் மக்கள் அனைவரும் வெள்ளை உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். “இந்த சந்திப்பில் ஒரு அற்புதமான சக்தி சேகரமாகும், நாளுக்கு நாள் அவற்றின் திறன் மேலும் மேலும் பெருகும்.” என ஓஷோ கூறுகிறார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் மூன்றுநாள் தியானமுகாம் ஓஷோவால் வடிவமைக்கப்பட்ட தியான பயிற்சிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. பங்கேற்பவர் அனைவரும் மெரூன் நிற அங்கி அணிந்துவர கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் ஆசிரமத்தில் வேலை செய்யும் சந்நியாசிகள் அனைவரும் பகல் நேரத்தில் மெரூன் நிற அங்கியே அணியுமாறு ஓஷோ ஆலோசனை கூறுகிறார். அதனால் கம்யூன் பகல் நேரத்தில் மெரூன் நிற ஆடை அணிந்த மக்களாலும், மாலையில் வெள்ளை நிற ஆடை அணிந்த மக்களாலும் நிரம்பியிருக்கும் எனக் கூறுகிறார்.

1989 – செப் – ஓஷோ தனது ரஜனீஷ் என்ற பெயரை முற்றிலுமாக விட்டு விடுகிறார். அதன் மூலம் கடந்த காலத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விடுகிறார். அவர் ஓஷோ என்றே குறிப்பிடப் படுகிறார் அவரது ஆசிரமம் ‘ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்’ எனக் குறிப்பிடப் படுகிறது.

1990 ஓஷோ தனது உடலை விட்டு நீங்குகிறார்.

1990 ஜனவரி – ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஓஷோவின் உடல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் சீர் கெடுகிறது. ஜனவரி 18ந் தேதி மாலை கௌதம புத்தா மண்டபத்துக்கு வரமுடியாத அளவு அவர் மிகவும் பலவீனமடைகிறார்.

ஜனவரி 19 – அவரது நாடித்துடிப்பு தாறுமாறாகிறது. அவரது டாக்டர்கள் அவரிடம் இருதய சீரமைப்பு கருவி கொண்டுவருவதற்காக கேட்கும்போது ஓஷோ, “இல்லை, என்னைப் போக விடுங்கள், இயற்கை நேரத்தை நிர்ணயித்து விட்டது.” என்கிறார். அவர் மாலை 5 மணிக்கு உடலை விட்டு நீங்குகிறார். மாலை 7 மணிக்கு அவரது உடல் கௌதம புத்தா ஹாலுக்கு இறப்பு கொண்டாட்டத்திற்காக கொண்டு வரப் படுகிறது. பின் எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறது. இரண்டு நாட்களுக்குப்பின் அவரது சாம்பல் ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனலுக்கு கொண்டு வரப் பட்டு சாங் டு ஸூ அரங்கத்திலுள்ள அவரது சமாதியில் வைக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்த நாட்களில் ஓஷோவின் மணமாக கம்யூனில் வீசும் அன்பும் தியானமும் கலந்த சூழ்நிலையை அனுபவிக்கவும் கொண்டாடவும் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பறந்து வந்த வண்ணம் உள்ளனர். அவர் தனது உடலை நீக்குமுன், “என்னை கடந்த காலத்தில் பேச வேண்டாம். என்னுடைய சுமையான இந்த உடலில் இருப்பதை விட இந்த உடலை விட்டபின் என்னுடைய இருப்பு பல மடங்கு மகத்தானதாக இருக்கும். எனது மக்களிடம் கூறுங்கள். அவர்கள் என்னை பலமடங்கு அதிகமாக உணரலாம். உடனடியாக என்னை அவர்கள் அறியலாம்.” என்று கூறுகிறார்.

எப்படி இந்த கம்யூன் தொடர்ந்து பெரிதாக வேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகிறார். இனி நான் உடலில் இல்லாமல் போய் விடுகையில் மேலும் பலர் வருவார்கள், மேலும் பலர் ஆர்வம் காட்டுவார்கள், அவரது கம்யூன் நமது கற்பனைக்கு எட்டாத வகையில் விரிவடையும் எனவும் கூறுகிறார்.  பிறகு கூறுகிறார், “நான் எனது கனவுகளை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.”

1980 ல் உடலை விட்டு நீங்கியபின் என்ன நிகழும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஓஷோ, “நான் என் மக்களிடம் கரைந்து விடுவேன். எப்படி கடலின் எந்த துளியை சுவைத்தாலும் அது ஒரே போல உப்பு சுவை கொண்டிருக்குமோ, அதே போல என் சந்நியாசிகள் எல்லோரிடமும் நீ ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவனின் சுவையை உணரலாம். நான் என் மக்கள் ஆனந்தமாகவும், பரவசமாகவும் வாழ தயார் செய்திருக்கிறேன், அதனால் நான் உடலில் இல்லாதது அவர்களிடம் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் அதே போலவே வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் எனது இறப்பு அவர்களிடம் மேலும் ஆழத்தை ஏற்படுத்தும்.” என்கிறார்.

1989 ல் இத்தாலியன் நாட்டு டிவி- யின் அதே போன்று கேள்விக்கு பதிலளித்த ஓஷோ, “நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால் அது அழியாமல் நிலைத்திருக்கும். என்னுடைய பணியில் ஆர்வமுள்ள மக்கள் எனது தீபத்தை தொடர்ந்து ஏந்தி செல்வர். ஆனால் எதையும் யார்மீதும் கத்தியின் மூலமாகவோ, ரொட்டியின் மூலமாகவோ, உணவைக் காட்டியோ திணிக்க மாட்டார்கள். நான் எனது மக்களுக்கு தொடர்ந்து ஒரு முன்னுதாரணமாக இருப்பேன், அப்படித்தான் எனது சந்நியாசிகளும் உணர்வார்கள். நான் அவர்கள் அவர்களாகவே வளர வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான அன்பு, அதன் அடிப்படையில் எந்த சர்ச், கோயில் போன்ற ஸ்தாபனங்களையும் உருவாக்க முடியாது, அதே போன்று விழிப்புணர்வு, அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது, அதே போன்று கொண்டாட்டம், மனமற்று அனுபவித்தல், குழந்தை போன்ற தூய்மையான கண்களோடு இருத்தல் போன்ற குணங்கள் கொண்டவர்களாய், எல்லா மக்களும் வேறு யாரோ ஒருவரின் படி அல்லாமல் தாங்களோ தங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கான வழி உள்ளே இருக்கிறது.”