Showing posts with label Sales skills training company in tripur. Show all posts
Showing posts with label Sales skills training company in tripur. Show all posts

Friday, October 16, 2015

100 MINUTES That’ll change THE WAY YOU LIVE

வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதாரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் இல்லை. டாக்டர். எல்.பிரகாஷ் எழுதிய ‘100 MINUTES That’ll change THE WAY YOU LIVE’ புத்தகத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டும் இங்கே…
அந்த 100 நிமிடங்கள்! ஆளுமைத் திறன் !!
எதை மறக்கக் கூடாது என்பதில் கவனம் தேவை!
ஆனந்த் தனது ஐந்தாவது திருமண நாள் கொண்டாட்டங்களுக்குத் தனது நண்பர்கள், உறவினர்களை அழைத்திருந்தான். பெண்கள் டி.வி. அறையில் அரட்டை அடிக்க, ஆண்களின் கச்சேரி ஹாலில் களைகட்டிஇருந்தது. பேச்சுவாக்கில் முந்தைய நாள் ஹோட்டல் டின்னர்பற்றி சிலாகித்த ஆனந்த், ”அந்த ஹோட்டல் இங்கேதான் அண்ணா நகர் ரவுண்டானாகிட்டே… பேருகூட நல்ல பேருப்பா! ஆங்… மறந்துருச்சே. இது இந்த ராக்கெட்ல நிலவுக்குப் போச்சே ஓர் அமெரிக்கப் பொண்ணு… அட ‘கஜினி’ படத்துலகூட அசின் பேருப்பா!” என்று யோசிக்க, ‘கல்பனா கல்பனா!’ என்று எடுத்துக் கொடுத்தார் நண்பர் ஒருவர். ”ஆங்! கல்பனா.” என்று பிரகாசமான ஆனந்த், உள்ளே டி.வி. அறை நோக்கித் திரும்பி, ”கல்பனா… கல்பனா மை டார்லிங். நேத்து நாம சாப்பிட்ட ஹோட்டல் பேர் என்னடா குட்டி? சட்டுனு மறந்துருச்சு!” என்றார்!
எல்லாமே நல்லதாக இருந்தால், எங்கோ… ஏதோ தப்பு!
உலகின் ஐந்தாவது பணக்காரர் அவர். நியூயார்க் ஏர்போர்ட்டில் அவர் நுழைந்தபோது தூக்க முடியாமல் இரண்டு சூட்கேஸ்களைக் கைக்கு ஒன்றாகச் சுமந்தபடி சிரமப்பட்டு நடந்துகொண்டு இருந்த ஒருவனைக் கண்டார். அவனிடம் இவர், ”மணி எத்தனை?” என்று கேட்டார். உடனே அவன், அந்த இரண்டு பெட்டிகளையும் கவனமாகக் கீழேவைத்துவிட்டு, தன் முழுக்கை சட்டைக்குள் ஒளிந்திருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் இருந்து உலகத்தின் முக்கிய நகரங்களின் நேரங்களைத் துல்லியமாகச் சொன்னான். மில்லியனர் ஆச்சர்யம் காட்டவும், ‘இதில் செய்திகளும் வரும்!’ என்று அதன் சின்ன ஸ்க்ரீனில் லைவ் நியூஸ் காண்பித்தவன், அந்த வாட்ச்சில் இருந்தே தன் மனைவியின் செல்போனுக்கு அழைத்துப் பேசினான். பிறகு, அந்த மில்லியனருடன் அந்த வாட்ச்சிலேயே போட்டோ எடுத்துக்கொண்டு அதை அவருக்கு அந்த வாட்ச்சிலிருந்தே இ-மெயில் செய்தான். அசந்துபோன மில்லியனர் எந்தப் பேரத்துக்கும் இடம் கொடுக்காமல், அவன் சொல்லிய விலையைக்காட்டிலும் இரு மடங்கு கொடுத்து அந்த வாட்ச்சை வாங்கிக்கொண்டார். பெருமையாக அந்த வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டு மில்லியனர் நடக்கத் துவங்க, அவரைத் தடுத்து நிறுத்திய அவன், ”நீங்கள் அந்த வாட்ச்சின் பேட்டரியை மறந்துவிட்டுச் செல்கிறீர்கள்!” என்று அந்தக் கனத்த இரண்டு சூட்கேஸ்களைக் காட்டினான்!
சத்தியம் செய்யும் முன் சகலமும் யோசி!
கண்ணாடிக் கடையில் கண்ணின் பவர் பரிசோதிக்கப்படக் காத்திருந்த பெரியவர், கடைச் சிப்பந்தியிடம், ‘புதுக் கண்ணாடி மாட்ட எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று கேட்டார். ‘அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகும்!’ ‘நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். ஒரு மணி நேரம்தான் ஆகுமா? ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நான் இந்தப் புத்தகத்தை எழுத்துக் கூட்டி வாசிக்க முடியும்தானே?’ என்று கையில் இருந்த புத்தகத்தைக் காட்டி உறுதி கேட்டார். ‘ம்ம்… 15 நிமிடம் முன்னே பின்னே இருந்தாலும், அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்துக்குள் நீங்கள் கண்ணாடி அணிந்து வாசிக்க முடியும்!’ என்றார் சிப்பந்தி. இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்ட அந்தப் பெரியவர் இறுமாப்போடு முணுமுணுத்தார்… ‘யாரை ஏமாத்தாப் பாக்குறாய்ங்க… நான் எழுத்துக் கூட்டி வாசிக்க ஆறுல இருந்து எட்டு மாசம் ஆகும்னு முதியோர் கல்வி வாத்தியார் சொன்னானே. கண்ணாடி கைக்கு வரட்டும். வெச்சுக்குறேன் அவனை!’
எதிர்பார்ப்புகளுக்கும் உண்டு எல்லை!
கசக்கிக் கட்ட கந்தைகூட இல்லாத ஏழை அவன். தன் வறுமையைப் போக்க இறைவனிடம் வரம்வேண்டி இமயமலைக்குச் சென்று தவம் இருந்தான். முழுதாக 36 வருடங் கள் கழித்து அவன் முன் தோன்றி னார் இறைவன். ‘அடக் கடவுளே! 36 வருடங்களுக்குப் பிறகுதான் என் பக்தி உன்னை எட்டியதா?’ என்று அவன் கேட்க, மெலிதாகச் சிரித்தார் இறைவன். ‘பக்தா தேவ லோகத்தில் நாளும், நேரமும் மிக மிக மெதுவாகத்தான் பயணிக்கும். பூலோகத்தின் 36 வருடங்கள் தேவலோகத்தில் ஒரு நொடிக்கும் குறைவான நேரம். என்னைப் பொறுத்தவரை நீ தவத்துக்கு என அமர்ந்ததுமே நான் உன் முன் தோன்றிவிட்டேன்!’ உடனே வியப்படைந்த பக்தன், ‘ஆஹா… அப்போ இதேபோல செல்வத்தின் மதிப்பும் பூலோகத்தைக் காட்டிலும் பெருமளவு வேறுபடுமா?’ என்று ஆர்வமாகக் கேட்டான். ‘நிச்சயம் பக்தா. தேவலோகத்தின் ஒரு தங்கக் காசை வைத்து இந்த பூமியையே விலைக்கு வாங்கிவிடலாம்!’ என்றார். உடனே கண்கள் மின்ன, ‘ஆஹா! சாமி இதற்காகத்தானே காத்திருந்தேன்… எனக்கு இரண்டே இரண்டு தங்கக் காசுகள் மட்டும் கொடுங்களேன்!’ என்றார் அந்த பக்தன். ‘ஒரே ஒரு நிமிஷம் பொறு பக்தனே. இதோ வருகிறேன்!’ என்று விஷ்ஷ்ஷ்க்கென மறைந்தார் கடவுள். காத்திருக்கத் தொடங்கினார் பக்தன்!
கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றாதீர்கள்!
ஆளை மூழ்கடிக்கும் வேகத்துடன் வெள்ளம் பாயும் ஓர் ஆற்றங்கரை. மூன்று ஜென் துறவிகள் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டு இருக்கிறார்கள். மடத்தில் புதிதாகச் சேர்ந்த இளந்துறவியும் அவர்களைப் பார்த்து அங்கேயே அமர்ந்து ஜெபம் செய்கிறார். சீனியர் துறவிகளில் ஒருவர் திடீரென எழுந்து ஆற்றின் மீது நடந்து சென்றார். சிறிது நேரத்தில் மற்ற இருவரும் அப்படியே நடந்து செல்கிறார்கள். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட இளந்துறவி, தன்னாலும் அப்படி நடக்க முடியும் என்று முடிவெடுத்து ஆற்றுக்குள் கால்வைக்கிறார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார். அதைப் பார்த்த சீனியர் துறவி ஒருவர் மெல்லிய குரலில் முணுமுணுக்கிறார், ‘ஆற்றுக் குள் கால்வைத்து நடக்க எங்கெங்கு கற்கள் புதைந்திருக்கின்றன என்பதை நாம் அவருக்குச் சொல்லிஇருக்க வேண்டும்!’
எதிர்மறை விளைவுகளுக்கும் தயாராக இருங்கள்!
அவனுக்கு அன்றுதான் திருமணம் முடிந்தது. தன் மனைவியை உயர் ரக அரபுக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச்சென்றுகொண்டு இருந்தான். பாதையில் ஒரு குழியில் விழுந்து எழுந்தது சாரட் வண்டி. ‘முதல் எச்சரிக்கை!’ என்றவன், குதிரையின் முதுகில் சாட்டையில் ஒரு இழு இழுத்தான். சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்தது வண்டி. ‘இரண்டாவது எச்சரிக்கை!’ என்றவன் மீண்டும் சாட்டையால் குதிரையை அடித்தான். மூன்றாவது முறையும் சாரட் பள்ளத்தில் விழுந்து எழ, கோபத்துடன் சாரட்டை விட்டுக் கீழே இறங்கினான். துப்பாக்கியை எடுத்து குதிரை யைச் சுட்டுக் கொன்றுவிட்டான். அதிர்ச்சியடைந்த மனைவிசாரட்டை விட்டு இறங்கி, ‘உனக்கு அறிவே இல்லையா? அந்தக் குதிரை எத்தனை காஸ்ட்லி தெரியுமா?’ என்று கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன், ‘முதல் எச்சரிக்கை!’ என்றான். அதன்பிறகு 40 வருடங்கள் தங்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லாமல், அந்தத் தம்பதி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினார்கள்!

Monday, August 10, 2015

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யம் - www.happy4all.org

பஞ்சகவ்யம்

பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. குணமுடையன இவற்றின் கலவை சிறந்த சத்துணவு . கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன.

பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கியபூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு.

பசும்பால் :ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தி
பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி
பசும்நெய்:மோட்சம்
கோசலம் :தீட்டு நீக்கம்
கோமலம்:கிருமி ஒழிப்பு

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் நிறையும்.கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன .பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒழி புகுந்து படிவதில்லை எனவே மிக குளிர்ச்சி,மிக்க இருட்டின் காரணமாககருவறைகள் , சிலைகள், இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ,அவற்றை அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு அதிகமாக உண்டு.

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக மதிக்கபடுகிறது.

பல திறம்பட அருமையான பொருள்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல்
அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும் .

பஞ்சகவ்வியப் பெருமை :

பசுவும்.பசு தரும் பஞ்சகவ்வியமும் தெய்வத் தன்மை கொண்டவை, என்றென்றும் புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை முக்கியமான நிலைத்த இடத்தை பெற்று விளங்குகின்றன.

பஞ்சகவ்வியம் இந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில் இதற்கெனத் தனி இடம் உண்டு. இந்த பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்கின்றனர். பசுவின் பால்,தயிர், நெய். கோமயம், சாணம் னும் இவ்வைந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் எனப்படும்
இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருள்(உரம்) ஆகும்.

அபிஷேகத்திற்கான பஞ்ச கவ்வியம் செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன.

பசும்பால் :1 அளவு
பசுந்தயிர் :2 அளவு
பசும்நெய்  அளவு
கோசலம் :1 அளவு
கோமயம் : 1 அளவு
தர்ப்பை கலந்த நீர் 3 அளவு

பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது .
பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன .பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்வு உண்டு.
பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும்
நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும்,
கருநிறப் பசுவிடமிறந்து நெயும் ,
செந்நிற பசுவிடமிருந்து கோசலமும்,
தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயாரிக்க வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்கலில் பஞ்ச கவ்வியமே சிறந்தது .

இவ்வாறு சிறந்த பஞ்சகவ்வியத்தை தமிழில் "ஆனைந்த "என்பர் .

பசும் பாலில் சந்திரனும் ,
பசுவின் தயிரில் வாயு பகவானும்,
கோமயத்தில் வருண பகவானும்,
பசும் சாணத்தில் அக்னிதேவனும் ,
நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் .


வேளாண்மையில் பயன்பாடு
1. பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
2. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்
பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள்
1. பசுஞ்சாணம்-5 கிலோ,
2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,
3. பசும்பால்-2 லிட்டர்,
4. பசு தயிர்-2 லிட்டர்,
5. பசு நெய்-1 லிட்டர்,
6. கரும்புச்சாறு-1 லிட்டர்,
7. தென்னை இளநீர்-1 லிட்டர்,
8. வாழைப்பழம்-1 கிலோ.
பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.
• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.
• ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.

Sunday, July 12, 2015

போதிதர்மா-ஒரு முழு வரலாறு

போதிதர்மா-ஒரு முழு வரலாறு

போதிதர்மா-ஒரு முழு வரலாறு 

போதிதர்மா...rko..

போதிதர்மா பிறந்த பல்லவ குலம் எங்கிருந்தது? 

 அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வெற்றிபெற்றது, பின் தாய்நாடு திரும்பியது பற்றி அனைவருக்கும் தெரியும். போகும் பொழுது தாம் வென்ற பகுதிகளை நிர்வாகம் செய்ய அவர் ஒரு படைத் தளபதியையும் படை வீரர்களையும் விட்டுச் சென்றார் என்கிறது வரலாறு.
அலெக்சாண்டர் great..rko..

அந்தக் காலகட்டத்தில்தான் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தார். சில காலத் திற்குப் பின் மௌரியப் பேரரசு வலிகுன்றியது. 
சந்திரகுப்த மௌரிய
அதேசமயத்தில் அதாவது கி.மு. 234-ல் சாதவாகனப் பேரரசு தக்காணத்தில் தோன்றியது. இவர்கள் பிராமண மதத்தைப் பின்பற்றியவர்கள். ஏறக்குறைய 450 ஆண்டுக்காலம் சாதவாகனர்களின் பேரரசு நீடித்திருந்தது. அது வலி குன்றிய காலத்தில் பல்லவ ஆட்சி தொடங்கியது.

அதற்கு முன்பு பல்லவர்கள் சாதவாகனப் பேரரசின் படைத் தலைவர்களாய் இருந்தனர் என்று தெரிகிறது. கி.பி. 80 முதல் கி.பி. 104 வரையில் அரசாண்ட சாதவாகனப் பேரரசனான கௌதமி புத்திர சதகர்ணி சகர், பல்லவர், யவனர் ஆகியவர்களை அழித்தவனென்று வர்ணிக்கப்பட்டான். இதன்மூலம் அலெக்சாண்டர் படையெடுப்பின்போது வந்த யவனர்கள் வடஇந்தியா மட்டுமல்லாது தென்னிந்தியா வரை பரவி, அங்கங்கே படைத் தளபதிகளாய் இருந்தனர் என்பதை அறியலாம்.

இப்படி ஆந்திர நாட்டிலிருந்து வடஇந்தியா வரை பரவியிருந்த மிகப் பெரிய சாதவாகனப் பேரரசு அழிந்தபோது, அதன் பல பகுதிகளையும் ஆங்காங்கு பொறுப்பில் இருந்தவர்கள் ஆளத் தொடங்கினர். 
அப்படித்தான் அந்தப் பேரரசின் தென்கிழக்குப் பகுதியில் பல்லவர்கள் தங்களுடைய ஆட்சியை நிறுவினார்கள். அவர்கள் தங்களைப் பரத்துவாஜ கோத்திரத்தினர் என்று கூறிக்கொண்டனர்.

பல்லவர்கள் பிராமண மதத்தைப் பின்பற்றினார் கள். அவர்கள் ஆட்சி பெற்ற முதல் சில நூற்றாண்டு களில் வெளியிட்ட செப்பேடுகளும் பட்டயங்களும் வடமொழியிலேயே அமைந்திருந்தன. பாரவி, தண்டி போன்ற வடமொழிப் புலவர்களையே ஆதரித்தனர். யாகங்களைச் செய்து தான- தருமங்களையும் செய்தனர்.

முற்காலப் பல்லவனான ஸ்கந்தவர்மன் அரசனாயி ருந்த காலத்தில் பல்லவ ராஜ்ஜியம் வடக்கே கிருஷ்ணா நதி வரையிலும், மேற்கே அரபிக்கடல் வரையிலும் பரவியிருந்தது. இடைக்காலப் பல்லவருள் ஒருவனான குமாரவிஷ்ணு கைநழுவிப் போயிருந்த காஞ்சியைக் கைப்பற்றினான். இவனுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவரே போதிதர்மர் என்று அறியப்பெற்ற புத்த வர்மன் ஆவார்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
(THANKS WIKIPEDIA ) 

போதிதர்மா வரலாறு .


போதி தருமன் ஒரு தமிழன். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன். தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன். அரசு, ஆட்சியை விரும்பாமல் – மனம் சொல்லும் வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான பௌத்த துறவியை தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான். 

புத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்பி, கடல் வழியே - இன்றைய – மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கி.பி.527ல் சீனா சென்றடைந்திருக்கிறான். சீனாவில் (போதி) தருமன் – தா மோ என்று அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான். அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம் ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு -மன்னனின் கோபம், விரோதம். அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு. பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ, யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின் கோயிலை அடைகிறான். 
  
கோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான். மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள் ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து கடுமையான தவத்தை மேற்கொள்கிறான். தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று, ஷாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம், தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். (சீனாவில் தா மோ ) சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன் போதி தருமன். போதி தருமன் என்கிற தமிழனால் உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம். புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் ஜப்பானிலும் -வேறு வடிவங்களில் தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன் அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான். 

சீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள் வழங்குகின்றன.அவன் 150 வயது வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு ஜியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.ஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து, பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன் சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, தர்மா “என் வீட்டிற்கு செல்கிறேன்” என்று சொன்னாராம். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும், ஜப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவன் தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து சென்றவன் என்பதும், சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும் உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான் என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான் கூறப்பட்டுள்ளன. உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. 

அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு - தமிழ் நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே.

சீனாவில் பௌத்த மதம் செல்வாக்கோடு திகழ்ந்த போதிலும் அதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டியிருந்தது. எனவே சீனாவின் தென்பகுதியை ஆண்ட லொயாங் அரச மரபைச் சேர்ந்த சக்கரவர்த்தி வு டியின் வேண்டு கோளுக்கு இணங்க, 27-ஆவது குரு பரம்பரையைச் சேர்ந்த பிரஜ்னதாரா என்பவர் தமது சீடரான போதிதர்மாவை அங்கு செல்லும்படி கட்டளையிட்டார்.

அவர் கட்டளையை ஏற்று கடல்வழியாக சீனா புறப் பட்ட போதிதர்மா ஜாவா வழியாகக் கான்டன் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்து நான்ஜிங் சென்றவரை சக்கரவர்த்தி வு டியே நேரில் சென்று வரவேற்றார். பெரிய கண்கள், ஆக்ரோஷமான முகம், அச்சந்தரும் தோற்றம், கையில் நீளமான தடியுடன் போதிதர்மாவைப் பார்த்த சக்கரவர்த்திக்கு அச்சம் பிறந்தது.

அரண்மனையிலேயே தங்கும்படி சக்கரவர்த்தி கேட்டுக்கொண்டும் மறுத்துவிட்ட போதிதர்மர் ஷாங் மலையில் உள்ள ஷாவோலின் கோவிலுக்குச் சென்று தங்குகிறார். விடியற்காலையில் தனியே வந்து சக்கரவர்த்தி யைப் பார்த்து "மனதைத் தேடிக் கண்டுபிடி' என்று சொல்லி தியானத்தில் அமரச் சொல்லுகிறார். தியானத்தில் தன்னை மறந்து போகும் சக்கர வர்த்தியைப் பாராட்டுகிறார்.

அதன்பிறகு அந்த மலையில் உள்ள சிறிய குகை ஒன்றில் புகுந்து அதன் சுவரைப் பார்த்தபடி அமர்ந்து கொள்கிறார். சுமார் ஒன்பது வருடங்கள் தியானத்தில் இருக்கும் அவரை ஹியூகி என்பவன் திரும்பி அனைவரையும் பார்க்கும்படிச் செய்கிறான். அவனையே முதல் சீடனாக ஏற்றுக்கொள்கிறார். 

அதன்பிறகு மேலும் மூன்று சீடர்கள் சேருகிறார்கள்.

ஷாவோலின் துறவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பிய போதி தர்மா தென்னிந்தியக் களரிச் சண்டை முறையை சீன நாட்டில் அன்றிருந்த சண்டை முறையோடு கலந்து குங்ஃபூ என்ற தற்காப்புக் கலையை உருவாக்கி அனைவருக்கும் கற்றுத் தந்தார்.

துறவிகள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முற்றிலும் புதிய "டாய்சீ' என்ற நடனக் கலை யைக் கற்றுத் தந்தார். ஸென் என்னும் புதிய தியான முறையைக் கண்டுபிடித்து சீனாவில் புகுத்தினார். ஷாவோலின் துறவிகள் கட்டாயம் வைத்தியம் செய்யத் தெரிந்திருக்க வேண்டுமென்று எண்ணி அதையும் கற்றுக்கொடுத்தார். இவருடைய முறைகள் சீனா முழுவதும் பிரபலமானது.

தனக்குப் பிறகு தான் கண்டுபிடித்தவற்றைத் தொடர்ந்து பரப்புவதற்கு வாரிசு ஒருவரை நியமிக்க எண்ணி, முதல் சீடனான ஹியூகியைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பும் செய்தார். அதனால் பொறாமையும் சினமும் கொண்ட மற்ற மூன்று சீடர்களில் ஒருவன் அன்றி ரவு அவருடைய உணவில் விஷத்தை வைத்துவிட்டான்.

போதிதர்மா இறந்ததும் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. அவர் இறந்த சில நாட்கள் கழித்து இமயமலையின் சாரல் பக்கமாக போதிதர்மரைப் போன்ற ஒருவர் தடியோடு சென்றதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

துறவிகள் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகப் தன்னுடைய கண்ணிமைகளில் இருந்து பிடுங்கி எறிந்த உரோமங்களே தேயிலைச் செடிகளாக முளைத்தன என்று ஒரு செய்தியும் சீனா வில் உலவுகிறது. என்ஸைக்ளோபிடியா ஆப்பிரிட் டானிக்காவிலும் இந்தச் செய்தி இருக்கிறது.

மேலே உள்ள செய்திகள் சரித்திரத்தின் அடிப்படை யில் தரப்பட்டன. போதிதர்மர் தமிழரா அல்லவா என்ற விவாதத்திற்குள் நுழைய நான் விரும்பவில்லை. இன்று உலகிலுள்ள மக்களில் பெரும்பாலோர் பல்வேறு கட்டங்களில் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகி தனித் தன்மையை இழந்துவிட்டிருக்கிறார்கள் என்பதே ஆராய்ச்சியாளரின் துணிபு.

சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!


போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றா
ம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

குங்ஃபூவும் போதி தருமனும்


போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

தவிரவும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கின்படி தமிழ் பேசி தமிழ்நாட்டில் வசித்து வரும் அனைவரும் தமிழரே. 

அப்படியானால் போதிதர்மாவும் தமிழர்தானே. ,,,,.....,,,

Saturday, July 11, 2015

மூளைக்கு என்னென்ன தேவை


மூளைக்கு என்னென்ன தேவை




**காலை உணவு**


காலை உணவை கண்டிப்பா சாப்பிடணும்... தவிர்க்காதீங்க... இரவு முழுக்க உணவில்லாமல் இருப்பதால் நமது ரத்தத்தில் சக்கரை அளவு குறையும் வாய்ப்பு இருக்கிறது.

காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் நமது மூளைக்கு செல்லும் சத்துக்கள் குறைவதால் மூளை மந்தமாக ஆவது நிச்சயம்!

ஓவரா சாப்பிடாதீங்க! ரொம்ப அதிகமா சாப்பிடறவங்களுக்கு ஒரு முக்கிய அவசர அட்வைஸ்.
உடனடியா ஓவரா சாப்பிடறதை நிறுத்துங்க. ஏன்னா மூளையில இருக்கும் ரத்த குழாய்கள் இறுகிடுமாம். இதனால் ரத்த ஓட்டம் குறைஞ்சு மூளை கொஞ்சம் மெதுவா தான் வேலை செய்யுமாம்!


**புகை பிடிக்காதீங்க**


ஸ்டைலுக்கு என்று ஆரம்பிச்சு வாழ்க்கைய கரியாக்கிற இந்த புகை பழக்கத்தை விட்டிருங்க! பல மூளை குறைபாடுகளை உண்டு பண்ணும். இறுதியில் அல்ஜீமர்ஸ் நோயில் தள்ளிடும்!


**அதிக சர்க்கரை ஆபத்து***



ரொம்ப சக்கரையும் கெடுதல். அதிக இனிப்பு, குறிப்பா சக்கரை இனிப்புகள், புரதங்களையும், சத்துகளையும் நம்ம உடம்பு ஏற்றுக் கொள்வதை குறைச்சிடுமாம். இதனால் மூளை வளர்ச்சி கூட பாதிக்கபடுமாம்!


***அசுத்தமான காற்று***


நமது மூளைக்கு மிக மிக தேவை ஆக்ஸிஜன். 4 நிமிடங்களுக்குள் மூச்சு இல்லை என்றால் நமது மூளை மீட்க முடியாத நிலைக்கு, அதாவது கோமாவிற்கு சென்று விடும்.
நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பெரும் பகுதி மூளைக்குத் தான் செல்கிறது. அதனால் சுத்தமான காற்றை சுவாசிக்காவிட்டால் மூளை மச்கர் செய்வது நிச்சயம்.

** தூக்கம்***


8 மணி நேர தூக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம் நமது மூளைக்கு. நாம் தூங்கும் போது தான் மூளைக்கும் ஓய்வு. நாம் அதிக நேரம் தூங்காம அதிக நாள் இருந்தா நமது மூளை செல்கள் கொஞ்சம் கொஞ்சமா அழியும் அபாயம் இருக்காம்.
நல்லா தூங்குங்க. மூளைக்கு ஓய்வு கொடுங்க! அப்பத்தான் மூளை சுறுசுறுப்பா இயங்கும்!


**முகத்தை மூட வேண்டாம்**


தூங்கும் போது முகத்தை மூடாதீங்க! சரியான படி தூங்க வேண்டும். நாம முகத்தை இறுக மூடி கொண்டு அல்லது தலை மேல போர்வையை  போர்த்தி கொண்டு தூங்கினால் நாம் அதிக ஆக்ஸிஜனை சுவாசிக்காம கார்பன்டை ஆக்சைட்டை தான் சுவாசிப்போம்.
இதனால் நிச்சயம் மூளை பாதிக்கப்படும்.


***நெக்ஸ்டு...ரெஸ்ட்டு..



உடம்பு சரியில்லைன்னா ரெஸ்ட் எடுங்க! உடம்பு சரியில்லைன்னா அதிக உழைப்பு அல்லது அதிக படிப்பு மூளைய சோர்வடைய செய்யுமாம். மூளைய வீக் ஆகிடுமாம். ஜாக்கிரதை.


**திங்க் பண்ணுங்க***


நிறைய எண்ணங்கள் ரொம்ப முக்கியம். நினைப்பு தான் நம்ப மூளைய சுறுசுறுப்பா வெச்சிருக்குமாம். அதனால் பல விதமா ‘திங்க்! பண்ணுங்க. இல்லைன்னா உங்க மூளை சுருங்கிடுமாம். சிந்தியுங்க மக்களே!


**விவாதிங்க***


பட்டிமன்றம் தேவை. விவாதங்கள் ரொம்ப முக்கியமாம். மூளை சுறுசுறுப்பிற்கும் வளர்ச்சிக்கும். பட்டிமன்றம், திண்ணைபேச்சு, கிசு கிசு பக்கங்கள் இனி தைரியமா பங்கேற்கலாம். படிக்கலாம், ரசிக்கலாம் தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான்!

Wednesday, July 8, 2015

பகவான் ரமணர் அடிக்கடி கூறுவது

பகவான் ரமணர் அடிக்கடி கூறுவதுபோல், இவ்வுலகில் எதற்காவது நிரூபணம் தேவை இல்லை என்றால் அது “நான் இருக்கின்றேனா?” என்ற ஒரே ஒரு கேள்விக்குத்தான். அதை யாரும் கேட்பதில்லை என்பது வேறு விஷயம். எவருக்கும் எந்த விஷயத்திலும் சந்தேகம் என்றால் உடனே அதற்கு நிரூபணம் கேட்பார்கள். தான் இருப்பதை யாரும் சந்தேகப்படாததால் அந்தக் கேள்வியும் எழுவதில்லை. கேள்வி எழாதது மட்டும் அல்ல, அப்படி யாராவது கேட்டாலும் அவர்களை ‘இது என்ன பைத்தியக்காரன் போல கேட்கிறானே?” என்று கூட சந்தேகமாகப் பார்ப்பார்கள். அதாவது தான் இருப்பதில் யாருக்கும் எள்ளளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனாலும் “நான் யார்?” என்ற கேள்வி நல்ல மன நிலையில் இருப்பவர்கள் எவர் கேட்டாலும், அது அவர் தம் வாழ்வின் அர்த்தங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும். அப்படி ஒருவன் கேள்வி கேட்பது அவனது மனமும் புத்தியும் இயங்கும் சாதாரண மன நிலையில் தான். அதற்கு பதிலும் அந்த நிலையிலேயே வருவதைவிட, அதனினும் சூட்சமமான அனுபவ நிலையில் வருவது விசேஷமானது தான். அது ஏன் என்பதைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
“நான் யார்?” என்ற கேள்வியைக் கேட்கும் முன், நாம் என்ன நிலையில் இருந்துகொண்டு கேட்கிறோம் என்று பார்க்க வேண்டும். நம் தினசரி அனுபவங்களை மட்டும் கருத்தில் கொண்டு வேறு எந்த விதமான யூகங்களும் இல்லாது நம் நிலையை அலசிப் பார்ப்போம். நாம் உலகில் உள்ள எதையுமே நமது ஐம்புலன்களின் உதவியால்தான் அறிகிறோம். அதன்பின் நமது ஆறாவது அறிவையும் கொண்டு அவைகளை அலசிப் பார்த்து சில பல எண்ணங்களையும் உணர்வுகளையும் வளர்த்துக் கொள்கிறோம்; அவைகளை மனதளவிலும் நிறுத்திக் கொள்கிறோம். இப்படியாகச் செய்து உலகில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுகிறோம். இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதும், அவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறதல்லவா? அப்படி இல்லையென்றால் மனது ஒரு பக்கமும் பார்வை ஒரு பக்கமும் இருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்படி மனது குவிந்திருந்தாலும் சிதறியிருந்தாலும் அது நம் விழிப்பு நிலையில் தான் நடந்து கொண்டிருக்கிறது.
இது நமக்கு உணர்த்துவது என்ன? நாம் விழித்திருக்கும்போதும் நினைவிருக்கும்போதும், உலகத்தைக் காண்கிறோம்; உலகத்தில் உள்ளவைகளுடன் விதவிதமான அனுபவங்கள் அடைகிறோம். அப்படியாக நமது வாழ்க்கை அனுபவங்கள் ஒரு தொடர் நிகழ்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால், என் உலகத்தில் நீங்கள் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நான் இல்லை. நான் பார்ப்பவனாக, அனுபவிப்பவனாக மட்டும் தான் இருக்கிறேன். அதே போல் உங்கள் உலகத்தில் நான் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நீங்கள் இல்லை. அதாவது ஒவ்வொருவரும் தம் தம் உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கின்றனர். காணும் தன்னை விட்டு உலகம் என்று தனியாக எதுவும் கிடையாது. தனது எண்ணங்களுக்கும், ஆசை அபிலாஷைகளுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் உலகத்தில் நடந்து கொள்கின்றனர். பொதுவாக மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். முடியாத போது மற்றவர்களிடம் அனுசரித்துப் போகின்றனர். ஆக இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது நடக்கின்றது என்பதைத் தவிர இதில் வேறு ஏதும் ஒற்றுமை கிடையாது. நம் விழிப்பு நிலை (ஜாக்ரத்) தவிர வேறு நிலைகளும் நம் அனுபவத்தில் உண்டு. அவை என்ன?
விழிப்பு நிலையிலேயே நம்மால் எப்போதும் இருக்க முடிகிறது என்றால், நம் அனுபவங்கள் அனைத்தையும் உண்மை என்று கொள்ளலாம். அப்படி இல்லையே! நம்மால் ஒரு நாளோ இரண்டு நாளோ விழித்திருக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் கண்ணயர்ந்து தூங்கப் போய்விடுவோம் அல்லவா? அப்போது நமக்கு எங்கே உலகம் தெரிகிறது? ஏன் நம்மைப் பற்றியே அப்போது நமக்கு உணர்வு இல்லையே. தூக்க நிலையிலிருந்து விழித்தபின் தன்னை உணர்கிறோம், அப்புறம்தானே உலகத்தையும் உணர்கிறோம்? அதாவது தானும் உலகும் ஒன்றாகத் தான் உதிக்கிறது; விழித்திருக்கும்போது தான் உலகம் தெரிகிறது, ஆனாலும் அந்த நிலையில் நம்மால் தொடர்ந்து இருக்க முடியாது. உலகமே தெரியாத ஆழ்தூக்க நிலைக்கு (ஸுஷுப்தி) நாம் தினம் தினம் சென்றால் தான் உலகம் பற்றிய அனுபவங்களைப் பெறமுடிகிறது. அப்படி இருந்தும் நமது விழிப்பு நிலை அனுபவங்களுக்கே நாம் மிகுந்த முக்கியம் கொடுக்கிறோம். இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் நமது தனித்தனி உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கிறோம் ; அது மட்டுமன்றி அவ்வுலகம் எப்போதும் உள்ளதாகவும் நினைத்துக் கொள்கிறோம். உண்மை என்றால் அது எப்போதும் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லவா? ‘இப்போது உள்ளது, அப்புறம் இல்லாதது’ என்ற தன்மை கொண்ட உலகத்தையும் அதன் அனுபவங்களையும் உண்மை என்று எப்படிக் கொள்ள முடியும்?
சிலர் ‘இல்லையே நீ தூங்கும்போதும் உலகம் இருக்கிறதே’ என்று சொல்வார்கள். உண்மையில் அது தூங்கும் எனக்கு இல்லை, வேறு யார் விழித்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இருக்கிறது. ஆனாலும் தூக்கத்தில் நாம் இல்லாது போய்விட்டோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு தூக்கத்திலும் ஒரு அனுபவம் இருப்பதால் தான், விழித்ததும் ‘நன்கு தூங்கினோம்’ என்று சொல்கிறோம். அப்போது நம்மை நாம் உணர்வதில்லை, உலகம் இருப்பதையும் அறிவதில்லை, ஆனாலும் ஆழ்ந்த தூக்கத்தில் அனுபவம் உண்டு என்றால் நாம் இருக்கிறோம் என்றுதானே அர்த்தம்? அது மட்டுமல்ல; அப்படி நன்கு தூங்கிய பின் நமக்கு ஒரு ஆனந்த மயமான உணர்ச்சி வருகிறதல்லவா? அந்த உணர்ச்சியை நாம் விழித்திருக்கும் போதும் அனுபவிக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை நாம் இவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட கனவு நிலை (ஸ்வப்னம்) மூலம் மேலும் அறிந்து கொள்ளலாம்.
lady-dreamsவிழிப்பு, ஆழ்நிலைத் தூக்கம் தவிர மூன்றாவதாக நமக்கு கனவு நிலையும் ஒரு அனுபவமே. ஆனால் அப்போது நடப்பதை நாம் மட்டுமே அறிவோம். இது மற்ற இரு நிலைகளின் கதம்பம் என்று கூடச் சொல்லலாம். விழிப்பு நிலை போன்ற அனுபவங்களும் இங்கு உண்டு; தூக்க நிலை போன்று அதன் இறுதியில் ஒன்றும் நிலையாத தன்மையும் இங்கு உண்டு. கனவு நிலை அனுபவங்களின் உண்மைத் தன்மைதான் என்ன? கனவு முடிந்ததும் ஏதும் இல்லை என்றாலும், கனவு காணும் போது அது முடியும் வரை அவை அனைத்துமே உண்மை என்றுதான் உணர்வோம். அங்கும் உணர்வதற்கு ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் கனவு முடிந்தபின் விழிப்பு நிலையில் தான் அதன் விவரங்களைக் கூற முடியும். அனுபவம் ஒரு நிலையிலும், அதைப் பற்றிய விளக்கம் வேறு நிலையிலும் என்பது தான் கனவிற்கும் தூக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை. விழிப்பு நிலையில் நாம் இருப்பது போலவே கனவு நிலையில் நம்மைப் போன்று ஒருவரையும், உலகம் ஒன்றையும் உருவகப்படுத்தி நாம் கனவை அனுபவிக்கிறோம். கனவு காணும் போது அது நாம் உருவகப்படுத்தியது தான் என்பதை நாம் விழிக்கும் வரை உணரமுடியாது. ஆனாலும் அனுபவங்கள் உண்டு. இல்லையென்றால் விழித்தபின் அவைகளைச் சொல்லமுடியாதே. ஆக இவைகள் அனைத்திலிருந்தும் நமக்குத் தெரிவது என்ன?
1. கனவு நிலையிலும், தூக்க நிலையிலும் அனுபவிப்பவன்(ள்) என்று ஒருவன்(ள்) இருக்கிறான்(ள்) அல்லது ஒன்று இருக்கிறது.
2. தூக்க நிலையில் ஒரு அமைதியும் ஆனந்தமும் கிடைக்கிறது.
3. விழிப்பு நிலையில் உள்ளது போலவே வரும் கனவு நிலை அனுபவங்கள் நிரந்தரமற்றவை; உண்மையல்ல.
4. நிரந்தரமாயிருக்கும் ஆனந்தத்தைத் தேடும் ஒருவன் விழிப்பு நிலை அனுபவங்கள் எதனின்றும் தூக்கத்தில் கூட கிடைக்கும் அந்த ஆனந்த நிலையை இன்னமும் அடையவில்லை.
நாம் தினம் தினம் அனுபவிக்கும் இந்த மூன்று நிலைகளுக்கும் மேலே நாலாவது நிலை (துரீயம்) ஒன்று உள்ளது என்றும், அதுதான் இம்மூன்று நிலைகளுக்கும் ஆதாரமாக உள்ளது என்றும் முற்றும் உணர்ந்த ஞானிகள் கூறுகின்றனர். அதை உணர்ந்தால் நாம் பிறந்த பயனை அடைந்து, வாழ்க்கையின் இரகசியத்தையும் அறிவோம் என்றும் கூறுகின்றனர். அப்போது கனவு அனுபவங்கள் எப்படி உண்மையில்லை என்று விழித்தபின் உணர்கிறோமோ, அதே போன்று நனவு அனுபவங்களும் உண்மையானது அல்ல என்று அந்த முதிர்ந்த நிலையில் உணர்வோம்.
இந்த அளவு வரையில் நாம் நமது அனுபவங்களை புத்தி பூர்வமாக அலசி ஆராய முடியும். இதற்கும் மேலே சென்று நாம் தூக்கத்தில் அடையும் “என்றும் உள்ள அந்த ஆனந்த” நிலையை நமது பயிற்சி (Abhyasa) சாதனைகள் (Sadhanas) மூலமும், சாதுக்கள் சகவாசம் மூலமும் அடைய முயற்சி செய்யவேண்டும். அப்போது என்றும் ஆனந்தமாய் உள்ள பரமார்த்திக பெருநிலையை அடைவோம். இப்போது நாம் அமைதியாக இருக்கும்போதும், ஆழ்ந்த தூக்கத்திலும் அடையும் அந்த இன்பமே அது என்றும், அது நிரந்தரமாக நம்மில் உள்ளது என்றும் உணர்வோம். அதை நம்மிடம் இருந்து மறைத்து வைக்கும் நமது பழைய எண்ணங்களும், செயல்பாடுகளும் விலகுவதற்கே நாம் எண்ணிலாப் பிறவி எடுக்கிறோம். அதை உணர்ந்து நாம் உலகத்தில் செயல்பட, அவைகள் ஒன்றன்பின் ஒன்றாக விலக, என்றும் உள்ளது தவிர வேறு உண்மை எதுவும் இல்லை என்பது நமது அனுபவத்தில் இப்பிறவியிலேயே வரும். அதற்கு என்றும் எங்கும் உள்ள அந்த உண்மைப் பொருளே அருள் கொடுக்கும்.
அதை இப்போதே ஏன் கொடுக்கவில்லை என்கிறீர்களா? அப்படிக் “கேட்பது யார்?” என்ற கேள்வியுடன் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்!