Thursday, May 19, 2016

நான்கு மனைவிகள் வாழ்க்கையின் உண்மை

வாழ்க்கையின் உண்மை

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். 
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த 
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
Have a Healthy Day

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் சந்தோசமாய் இருங்கள்

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. 
.**

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. 

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா . 
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

விட்டொழியுங்கள்.
***
#சந்தோசமாய் இருங்கள்,..

பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் மசூத் ஹாசன் இந்தியாவின் பெருமையை அடுக்கிக் கொண்டே சொல்கிறார்.

பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் மசூத் ஹாசன் இந்தியாவின்  பெருமையை அடுக்கிக் கொண்டே சொல்கிறார். 

இந்திய மருத்துவ உற்பத்தி இப்பொழுது ஆண்டுக்கு 30000 கோடி, ஏற்றுமதி 10000 கோடி.

பன்னாட்டு கம்பெனிகளின் பங்கு இந்திய சந்தையில் 75 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக குறைந்து, பாரதக் கம்பெனிகளின் பங்கு 25 முதல் 65 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

மூலிகை வியாபாரம் ஆண்டுக்கு 4000 கோடி.

அமெரிக்கா, ஜப்பான் தவிர சூப்பர் கம்பியூட்டர் நிறுவிய நாடு இந்தியா

விண்கலம் செலுத்தும் ஆறு உலக நாடுகளில் இந்தியாவும்  ஒன்று. ஜெர்மனி, பெல்ஜியம் கூட அந்த சாதனையைச் செய்யவில்லை.

உலகில் பத்தில் ஒன்பது வைரக்கல்,இந்திய நாட்டில் தான் கட் பாலீஷ் செய்யப்படுகிறது. இதன்மூலம் உலகின் வைரத் தொழிலில் பாரதம் முதலிடம் பெற்றுள்ளது.

85 பில்லியன் டாலராக (அதாவது ரூ. 3,80,000 கோடி ) இருந்த அன்னிய செலாவணி இப்போது 118 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. 

ஐ.எம்.எஃப். நிறுவனத்தின் கடனை முன்கூட்டியே அடைத்துவிட்டு, உலகின் பல நாடுகளுக்கும் நிதியுதவி செய்கிறது இந்தியா.

இந்தியாவில் எம்.பி.ஏ படித்தவரை உருவாக்க ரூ 70000 தான் செலவாகிறது. இதுவே அமெரிக்காவில் 54 லட்சம் செலவு. 

ஒரு கார் தயாரிக்க ஆராய்ச்சி செலவு  அமெரிக்காவில் ரூ 4500 கோடி என்றால் , பாரதத்தில் அதில் பாதிதான் செலவு. ஆனாலும் அதே நேர்த்தி. 

அமெரிக்காவில் காட்டராக்ட் செய்ய 7000 ரூபாய். அதே நேர்த்தியுடன் இந்தியாவில் செய்ய 600 ரூபாய் தான். "

இதய ஆபரேஷன் செய்ய அமெரிக்காவில் 6 லட்சம் செலவானால், இந்தியாவில் 40000 மட்டுமே. " . 
கடைசியாக சொல்கிறார்

இந்த முன்னேற்றங்கள் ஒரே நாளிலோ அல்லது அதிர்ஷ்ட வசமாகவோ ஏற்பட வில்லை. முன்னேர வேண்டும் என்ற உத்வேகம் , 

நாம் விரோதித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்தியா முன்னேறிக் கொண்டே இருக்கிறது. "

நாடு பிரியும் போது மஹரிஷி அரவிந்தர் சொன்னார். .....
" இந்தப் பிளவு செயற்கையானது. பாரதம் என்பது சக்தியின் வடிவம். அது இயற்கையின் அமைப்பு. இந்தப் பிளவு செயற்கை. இது மாற வேண்டும். மாறும். "

மனசு சஞ்சலப்படுகிறதா?

மனசு சஞ்சலப்படுகிறதா?

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.

புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.

ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.

நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார்.

சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும்.

நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது
நடக்கும்.

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...)

மூன்று பாடங்கள்...!!!
*************************

(கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...)

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்..


JC.Dr.Star Anand ram

மூச்சைக் கவனி..... பேச்சை குறை.

மூச்சைக் கவனி.....
பேச்சை குறை.........
JC.Dr.Star Anand ram 

#வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள் கூடும்.ஆயுள் மட்டுமல்ல அறிவும் வளரும்.புத்தி தெளிவடையும். அதே சமயம் இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆயுள் குறையும்.

#புத்தி பேதலிக்கும். நாம் கோபப்படும் போதும்,பரபரப்படையும் போதும் நமது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.மூச்சின் அளவும் அதிகரிக்கும்.அதனால் தான் கோபம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.அதற்காக தியானம்,பிராணயாமம் போன்ற பல்வேறு வழிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றார்கள். இதில் பிராணயாமம் என்ற மூச்சுப்பயிற்சியை முறையாகக் கற்றவர்களே செய்ய வேண்டும். பல எளிய முறை மூச்சுப்பயிற்சிகளும் உள்ளன.அவற்றைப் பின்பற்றினாலே நமக்கு பல நன்மைகள் விளையும். இதில் ஓஷோ கூறியுள்ள ஒரு தியானமுறையைப் பார்ப்போம்.

#சுவாசத்தைக் கவனித்தல்(தியானம்)
"எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும். 

 #சுவாசத்தைக் கவனித்தல் என  பொருள்   இது மிகவும் எளிய முறை.

 #எப்போது - நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும்,ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..காலம் - 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.
 முதல் படி - உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா. வேறு எண்ணங்களை விட்டுவிடு.

#நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.

நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.

 #பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள். இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய்.தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.

 #உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது.

அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.

 #சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.

 ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.

#அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.
ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.

#காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்."

#எண்ணங்களைக் குறைத்தால் பேச்சுக் குறையும்.பேச்சைக் குறைத்தால் மூச்சு குறையும். மூச்சைக் குறைத்தால் சித்தம் தெளிவடையும்.சித்தம் தெளிவடைந்தால் மொத்தமும் கிடைக்கும்.

Wednesday, May 18, 2016

Who is Poor? - Worth Reading

Who is Poor? - Worth Reading
**********************************
A wealthy woman goes to a saree store and tells the boy at the counter "Bhaiya show some cheap sarees. It is my son's marriage and I have to give to my maid."

After sometime, the maid comes to the saree shop and tells the boy at the counter "Bhaiya show some expensive sarees. I want to gift my Mistress on her son's marriage"

Poverty is in the mind or in the purse?

Who is Rich?

Once, a lady with her family was staying in a 3-star hotel for a picnic. She was the mother of a 6 month old baby.
"Can I get 1 cup of milk?" asked the lady to the 3-star hotel manager.
"Yes madam", he replied.
"But it will cost 100 bucks". "No problem", said the lady.
While driving back from hotel, the child was hungry again.
They stopped at a road side tea stall and took milk from the tea vendor
"How much?” she asked the tea vendor.
"Madam, we don't charge money for kid's milk", the old man said with a smile.
"Let me know if you need more for the journey". The lady took one more cup and left.
She wondered, "Who’s richer? The hotel manager or the old tea vendor?

Sometimes, in the race for more, you forget that we are all humans.

 Let's help someone in need, without expecting something in return. It will make us feel better than what money can.

Coffee never knew that it would taste so nice and sweet, before it met milk and sugar.
We are good as individuals but become better when we meet and blend with the right people....

Stay connected.

"The world is full of nice people... If you can't find one... Be one."- jC.Dr.Star Anand Ram

புதையல் மற்றும் எதிர்பாராத பண வரவை தரும் எள்

புதையல் மற்றும் எதிர்பாராத பண வரவை தரும் எள்


புகழ் பெற்ற 'திறந்திடு 'சீசேம்' (ஆங்கிலத்தில்) வாசகத்திற்கு பெயர் பெற்ற எள்ளிற்கு எதிர்பாராத பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தால் பண வரவை ஏற்படுத்தும் தன்மை உண்டு. சிறிய கண்ணாடி குப்பியில் எள் நிரப்பி வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் திறந்த படி வைத்திருக்க மேற்கண்ட நன்மைகளை எதிர்பார்க்கலாம். மாதம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் விட்டு புதிதாக மாற்றி வரவும்.

தொழிலுக்கு அவசியம்

தொழிலுக்கு அவசியம் இலக்கும், உத்திகளும். எதை அடைவது என்பது இலக்கு. அதை எப்படி அடைவது என்று தீர்மானிப்பது உத்தி. எந்த பிசினஸுக்கும் குறிக்கோளும் அதை குறிபார்த்து அடிக்கும் திறனும் வேண்டும். மார்க்கெட்டிங் என்பதே உத்திகள்தானே. அவை எப்படி இருக்க வேண்டும், அமைக்க வேண்டும் என்று ஹார்வர்ட் யூனிவர்ஸிடியின் நிர்வாகவியல் பேராசிரியர் ‘மைக்கேல் போர்ட்டர்’ விளக்கியுள்ளார். 1980ல் ‘காம்பெடிடிவ் ஸ்ட்ரேடஜி’ என்ற தன் புத்தகத்தில் ‘ஜெனரிக் ஸ்ட்ரேடஜீஸ்’ என்ற சித்தாந்தத்தை அவர் அறிமுகப்படுத்தினார். 
மார்க்கெட்டில் போட்டிகளை சமாளிக்க, காலகாலத்துக்கும் ப்ராண்டு களை பாதுகாக்க தொழிலுக்கு மூன்று வித உத்திகள் இருக்கின்றன என்கிறார் போர்ட்டர். ஒவ்வொரு கம்பெனியும் தனக்கேற்றபடி அந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கேற்ப தன் தொழிலை வடிவமைக்கவேண்டும். தேர்ந்தெடுத்த அந்த உத்திதான் தொழிலின் ஒவ்வொரு அசைவையும், செயலையும் நிர்ணயிக்கவேண்டும் என்கிறார். 
அந்த மூன்று உத்திகளுக்கு நிர்வாக உலகம் அவர் பெயரையே வைத்து ‘போர்ட்டர்ஸ் ஜெனரிக் ஸ்ட்ரேடஜீஸ்’ என்றழைக்கிறது. எந்த தொழிலுக்கும் அதன் உத்திகளுக்கும் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் அந்த மூன்று தாய் உத்திகளை இப்பொழுது பார்ப்போம். 
தயாரிப்பு செலவைக் கட்டுக்குள் வைத்தல் (Overall cost leadership)
பொருள் வகையில் மற்றவர்களை விட தயாரிப்பு செலவை கணிசமாகக் குறைத்து அனைவரையும் விட குறைவான விலையில் விற்பது முதல் வகை உத்தி. இது லேசுபட்ட காரியம் அல்ல. அனைவருக்கும் சாத்தியப்படக்கூடியதும் அல்ல. வெறும் செலவைக் குறைப்பது மட்டுமல்ல இவ்வகை உத்தி. 
மற்றவர்கள் நெருங்க முடியாத வண்ணம் செலவுகளை குறைத்து விலை விஷயத்தில் மற்றவர்களுக்கு தலைவனாய் இருப்பதே இந்த உத்தி. இந்த உத்தியைத் தேர்ந்தெடுக்கும் கம்பெனியின் விலைக்கு தன் விலையை குறைத்து விற்கும் போட்டியாளர்கள் அந்த விலையில் நஷ்டம்தான் அடையமுடியும் என்கிற நிலையை உருவாக்கும் உத்தி இது. ’சரவணா ஸ்டோர்ஸ்’ சக்கைப் போடு போடுவது இந்த உத்தியைக் கையாண்டுதான்.
வித்தியாசப்படுத்திக் காட்டுதல் (Differentiation)
முதல் உத்திக்கு நேர் எதிர் இது. இதில் விலை முக்கியமல்ல; தயாரிப்பு செலவு ஒரு பொருட்டல்ல. போட்டியாளர்களைவிட தங்கள் ப்ராண்டை ஏதோ ஒரு வகையில் வித்தியாசப்படுத்தி காட்டும் உத்தி இது. ப்ராண்டின் வடிவிலோ, இமேஜிலோ, வாடிக்கையாளர் சேவையிலோ அல்லது இதன் கலவையாலோ ப்ராண்டை வித்தியாசப்படுத்தி காட்டுவது. ‘சரவண பவன்’ தேர்ந்தெடுத்திருப்பது இதையே.
ஒருமுகப்படுத்தல் (Focus)
ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவையோ, பொருள் வகையையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஊரையோ மட்டும் குறிவைத்து விற்பது இவ்வகை. குறிவைத்த பிரிவுக்கு மட்டும் ப்ராண்டை வடிவமைத்து, அந்த பிரிவுக்கு மட்டும் விலையை குறைத்தோ அல்லது ப்ராண்டை வித்தியாசப்படுத் தியோ காட்டும் முயற்சி இது. ‘டெக்கத்தலான்’ என்கிற ப்ராண்ட் பெரிய அளவில் பல ஊர்களில் கடை திறந்து சிறந்த சேவையுடன் விளையாட்டு சாதனங்களை விற்கிறது. அதை மட்டுமே விற்கிறது. சிலர் பிசினஸை விளையாட்டாய் பார்க்க, டெக்கத்தலான் விளையாட்டை பிசினஸாய் பார்க்கிறது!
இந்த மூன்று வகை உத்திகள் தான் தொழிலுக்கு ஆதாரமானது. எந்த கம்பெனியும் இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப தன் தொழிலை வடிவமைக்கவேண்டும் என்கிறார் போர்ட்டர். பலத்திற்கேற்ப, திறமைக்கேற்ப, மற்றவர்களால் காப்பியடிக்க முடியாத உத்தியை அழகாய் தேர்ந்தெடுத்து, அதற்கு அமர்க்களமாய் செயல் வடிவம் கொடுத்து, அதை அட்டகாசமாய் நிர்வகிப்பதுதான் வெற்றியின் ரகசியம் என்கிறார்.
தெளிவாக உத்தியைத் தேர்ந் தெடுக்காமல் தொழில் செய்பவர்களும் ஒரு உத்தியை தேர்ந்தெடுத்து இன்னொரு உத்தியை சேர்த்து பிரயோகிப்பவர்கள் குழப்பத் திலகர்கள். தோல்வியடைய காத்திருப்பவர்கள். ‘ஃபுட்வோர்ல்ட்’ டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல.
‘ஆர்பிஜி’ குரூப்பும் ‘டெய்ரி பார்ம் இண்டர்நேஷனல்’ என்ற பன்னாட்டு நிறுவனமும் சேர்ந்து தொடங்கிய கம்பெனி இது. டிஃப்பரென்சியேஷன் உத்தியை தேர்ந்தெடுத்து தொழில் தொடங்கினார்கள். நகரின் பிரதான சாலைகளில் பெரிய கடைகள், ஏசி வசதி, பார்க்கிங், தேர்ந்த விற்பனையாளர்கள் என்று பிசினஸை வடிவமைத்தனர். ஆனால் நாளடைவில் விற்பனையை அதிகரிக்கும் பேராசையுடன் ‘சேல்’, ‘இலவசம்’, ‘இது வாங்கினால் அது ஃப்ரீ’ என்று டிஃப்பரென்சியேஷனோடு சேர்ந்து விலைக்குறைப்பு உத்தியையும் கையாண்டனர்.
ஃபுட்வோர்ல்ட் தலைகீழாக நின்றாலும் அவர்கள் விலைகள் மற்ற கடைகளை விடக் குறைவாக இருக்க முடியாதே. ஏனெனில் ஃபுட்வோர்ல்ட் மலிவான விலைக்கு விற்கும்படி வடிவமைக்கப்படவில்லை. விலை குறைப்பால் பணவரவும் குறைந்து வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையையும் வழங்க முடியவில்லை. 
அதனால் வெறுப்படைந்த வாடிக்கையாளர்கள் ’இது புட்வோர்ல்ட் அல்ல. பேட் வோர்ல்ட்’ என்று பைபை காட்டி பக்கத்து கடைக்குப் போய்விட்டனர். டெய்ரி பார்ம் கம்பெனிக்கு அசாத்திய கோபம். ‘உங்களுக்கு பிசினஸ் செய்யவே தெரியல. நாங்க போறோம். நீங்கள் எக்கேடுகெட்டு போங்கள்’ என்று ஆர்பிஜியுடன் பார்ட்னர்ஷிப்பை முறித்துக்கொண்டனர். அதோடு ஃபுட்வோர்ல்ட் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்று கூறிவிட்டனர். ஃபுட்வோர்ல்ட் ‘ஸ்பென்சர்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
‘ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை, ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை’ என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னது போலவே நடந்து தொலைத்தது!
போர்ட்டர் சொன்னபடி செய்து வெற்றிகரமாக செயல்படும் கம்பெனி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வகையிலேயே உண்டு - ‘நீல்கிரீஸ்’. கடை தொடங்கியது முதல் அவர்கள் தேர்ந்தெடுத்தது டிப்ரென்ஷியேஷன் உத்தியை. ‘உலகத் தர ஷாப்பிங் அனுபவத்தை தருவதே எங்கள் உத்தி’ என்று வரையறுத்தது நீல்கிரீஸ். இன்று வரை அது போலவே தொழில் புரிந்து வருகிறது.
பிரதான சாலைகளில் கடை விரித்து, பரந்த பரப்பளவுடன் அமைத்து, பார்க்கிங் வசதி படைத்து, ஏசி குளுமை கொடுத்து, தேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் கொண்டு தங்கள் உத்திக்கேற்ப தொழிலை வடிமைத்தது நீல்கிரீஸ். ‘உலகத்தர சேவை’ என்ற உத்திக்கு என்ன தேவையோ அதைச் செய்தனர். அதை மட்டுமே செய்தனர்.
அதனால் நீல்கிரீஸ்ஸில் ’சேல்’, ‘விலைக் குறைப்பு’ போன்றவற்றை பார்க்க முடியாது. ஏனெனில் நீல்கிரீஸ் வாடிக்கையாளர்கள் இதை எதிர்பார்த்து வருவதில்லை. ‘எனக்கு விலை பொருட்டல்ல, நல்ல ஷாப்பிங் அனுபவம் தான் முக்கியம்’ என்று நினைப்பவர்களை மட்டுமே கவர்வதால் தான் நீல்கிரீஸ், சேவை மூலம் தங்களை வித்தியாசப்படுத்த முடிகிறது. இன்று வரை இந்தியாவின் தலைசிறந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் ஒன்றாக வெற்றியுடன் திகழ முடிகிறது.
ஒவ்வொரு கம்பெனியும் தங்கள் திறமைக்கேற்ப, தேவைக்கேற்ப ஓர் உத்தியைத் தேர்ந்தெடுத்து வகுத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு உத்தியை மட்டும் வைத்துக்கொள்வதற்கு பதில் இரண்டாய் வைத்துக்கொண்டால் இன்னும் பெட்டர் போல தோன்றும். ஃபுட்வோர்ல்ட் நினைத்தது போல. ஆனால் அது தப்பாட்டம். 
தொழில் புரிய பிரதான உத்திகளை விவரமாக விளக்கி உங்கள் பிசினஸ் சுமையை இறக்கி வைத்திருக்கும் இந்த போர்ட்டருக்கு நீங்கள் டிப்ஸ் ஏதும் தரவேண்டாம். அவர் சொன்ன டிப்ஸ் படி நடந்துகொண்டால் போதும்!

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள்

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள்


கெட்ட கனவுகள், நிம்மதியற்ற உறக்க நிலை,பேய்-ஆவி பயம் நீங்க சிறிய வெள்ளை துணியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் கருப்பு உப்பை சிறிதளவு முடிந்து தலையணை அடியில் வைத்து உறங்க மேற்கண்டவை நீங்கும். அனைத்து தீய சக்திகளையும் ஓட்ட வல்லது கருப்பு உப்பு.