Saturday, December 12, 2015

உயிரோடு இருக்கும்வரை ஏதாவது செய்து கொண்டிருங்கள்

உயிரோடு இருக்கும்வரை ஏதாவது செய்து கொண்டிருங்கள்,எதுவும் செய்ய முடியாத போது செத்துப் போங்கள் !"என்று தொழில் போதையில் மூழ்கிவிட்டவர்கள் கூறுகிறார்கள். வேலை ஒன்றைத் தவிர,வாழ்க்கை பற்றிய வேறு கண்ணோட்டமே அவர்களுக்கு கிடையாது,எதற்கு வேலை?மனிதன் ஏன் வேலை செய்ய வேண்டும்?
உயிர் வாழ்வதற்காக மனிதன் வேலை செய்கிறான்.வாழ்வது என்றால் என்ன?வாழ்வது என்பது,வாழ்வைக் கொண்டாடுவது தான்.நாம் தொழில் செய்வதே,நம் வாழ்வில் ஆடிப்பாடி மகிழும் பொழுதுகளுக்காகத்தான்.உண்மையில் தொழில் வாழ்வின் கொண்டாட்டத்திற்க்கு உதவும் ஒரு வழிமுறை.
ஆனால்,இதில் வேடிக்கை என்னவென்றால்,வாழ்வில் ஆடிப்பாடி மகிழ நேரமில்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!வழி முறையையே முடிவான குறிக்கோளாக நாம் மாற்றி விட்டோம்.எல்லாமே நமக்கு வேலை.வாழ்க்கையின் முடிவெல்லாம் வேலையே.அதனால் வாழ்க்கை நம் வீட்டிற்கும்,அலுவலகத்திற்கும் இடையில் அடங்கி போய்விடுகிறது.

இயற்கையின் சிறப்பு பெண்

தாய் - கருவில் சுமப்பவள்!
தாரம் - கழுத்தில் சுமப்பவள்!!

தாய் - பெத்தெடுப்பவள்!
தாரம் - தத்தெடுப்பவள்!!

தாய் - இதயத் துடிப்பு தந்தவள்!!
தாரம் - இயக்கத்தில் துடிப்பு தருபவள்!!

தாய் - அனைவருக்கும் முதல் தொட்டில்!
தாரம் - இரண்டாவது தொட்டில்!!

தாய் - உலகில் முதல் தெய்வம்!
தாரம் - தாய்க்கு நிகரான தெய்வம்!!

தாய் - பந்தய களம்வரை அழைத்து வருபவள்!
தாரம் - பந்தயத்தில் பங்கு பெறுபவள்!!

தாய் - உயிர்!
தாரம் - உடலும் உயிரும்!!

தாய் - நேற்று இன்று!
தாரம் - இன்று நாளை!!

தாய் - உலகின் தோற்றம்!
தாரம் - உலகின் வளர்ச்சி!!

தாரம் - இல்லாமல் அமையாது சிறந்த தாய்மை!!!
தாய்மை - இல்லாமல் அமையாது சிறந்த பெண்மை!!!

இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு!!!
பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு !!!

Friday, December 11, 2015

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா 
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்.
"அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"
அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் .....
"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய #பாசம் இருக்கும்..
ஆனால்..
"இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!!
#அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே....என் உயிர் என் அம்மாதான்.!!!!!

ஒரு மனிதன் புதிதாக திருமணம் நடந்து , தேனிலவுக்கு பிறகு

Dear divine. Happy morning.  

Count count count.  

ஒரு மனிதன் புதிதாக திருமணம் நடந்து , தேனிலவுக்கு பிறகு , அவரது மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் . அவர்கள் ஒரு படகில் ஆற்றினை கடந்த போது, திடீரென ஒரு பெரும் புயல் எழுந்தது. மனிதன் ஒரு போராளி, ஆனால் அது கிட்டத்தட்ட நம்பிக்கையற்றதாகவே தோன்றியது, ஏனெனில் பெண் மிகவும் பயந்து விட்டாள்
படகு மிகவும் சிறியது மற்றும் புயல் உண்மையில் பெரியதாக இருந்தது, மற்றும் எந்த நேரத்திலும் அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள் என்றே அந்த பெண் அஞ்சினால் . ஆனால் மனிதன் மனதில் எதுவும் நிகழவில்லை , அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.
இதை கண்ட பெண் அதிர்ந்து கூறினார், "நீங்கள் பயமில்லாமல் இருகறீர்கள் ?". இந்த தருணம் நம் வாழ்க்கையின் கடைசி நேரமாகவும் இருக்கலாம்! நாம் மற்ற கரையை அடைய முடியும் என்று தெரியவில்லை. எதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே நாம் தப்பிக்க முடியும் இல்லையெனில் மரணம் நிச்சயம். நீங்கள் எப்படி பயமில்லாமல் இருகறீர்கள் ? நீங்கள் பைத்தியமா ? நீங்கள் ஒரு கல்லா ?
மனிதன் சிரித்தபடி கத்தியை உறையிலிருந்து உருவி.பெனின் கழுத்தருகில் ஒரு சிறு இடைவெளியில் பிடித்தார் , கிட்டத்தட்ட பெண்ணின் கழுத்தை தொட்டு இருந்தது........
பெண் குழம்பிப்போனாள்: 
அவர், "நீ பயப்படுகிறாயா ? ', என்றார்
அவள் சிரிக்க தொடங்கினாள் மற்றும் நான் ஏன் பயப்பட வேண்டும்? கத்தி உங்கள் கையில் தான் உள்ளது என்றால், நான் ஏன் பயப்பட வேண்டும் ", என்றார்? நீ தான் என்னை காதலிக்கிறாய்.
'அவர் திரும்பி கத்தியை நோக்கி: இதுதான் என் பதில் ". நான் கடவுளை நம்புகிறேன் எனக்கு அவரும் என்னை விரும்புகிறார் என்று தெரியும் மற்றும் புயல் அவரது கையில் தான் உள்ளது
எனவே நல்லது மட்டுமே நடக்க வேண்டும் நாம் நலமுடன் வாழ்ந்தாலும் சரி , வாழாவிட்டாலும் சரி ; எல்லாம் அவரது கையில் தான் உள்ளது,
கதையின் நெறி : நம்பிக்கையும் பொறுமையுமே .......வாழ்க்கையில் .பெரும் மாற்ற்ங்களின் வேறாகும்

Monday, December 7, 2015

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு..?

நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு..?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்” என்பது பழமொழி. 

இதே போல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். 

நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. 

சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக் கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக்காக்கும்.

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை

சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 

21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். 

பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி செய்ய வேண்டும். 

15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். 

அதன் பிறகு வாயை நன்கு கழுவிக்கொள்ளவும்.

oil pulling
எந்தநேரத்தில் செய்யவேண்டும்..?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. 

நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்..?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும் வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். 

ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

 நன்மைகள்:

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள். 

தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி , பற்கள் வெள்ளையாகவும் , ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

வாய்துர்நாற்றம்:

தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

 ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு:

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். 

பல் கூச்சம் நின்று பல் வலி மறையும்.

at_home_dental_hygiene_oil_pulling
உடலின் எனர்ஜி அதிகரிக்கும்:

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஒற்றை தலைவலி:

ஒற்றை தலை வலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

3D Character with head in hands, sitting on the word Stress

சைனஸ் ஆஸ்துமா:

சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால் , இந்த பிரச்சனைகள் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்:

தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பொலிவான சருமம்:

ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.

தைராய்டு:

தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக்க ட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பார்வைக்கோளாறு:

பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.

மூட்டுபிரச்சனைகள்:

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

 சிறுநீரக செயல்பாடு:

தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக செயல்படும். தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது. 

கை ,கால், விரல்கள் மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும். 

தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும். பொடுகு தொல்லை தீரும். 

பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.

ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை

ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை-
______________________________________

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.

பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .

ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .

கடலை எப்படி வற்றவைப்பது?

முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.

இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.

இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.

அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.

மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.

உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.

உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.

நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.

முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .

அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார். 
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.

அன்பு நண்பர்களே . 

எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.
பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும். 

எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிடுங்கள். உழைத்துடுங்கள் .

Sunday, December 6, 2015

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்................பகிருங்கள் நண்பர்களே 
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!

கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா?

அங்கோர்வாட் கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க  சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும், முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை
...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்.
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் 
குடவோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள். நாம் இவற்றை பாதுகாத்து அழியாமல் காப்பாற்றினாலே  போதும். இவையணைத்தும் நான் படித்து ரசித்ததையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன். நிறைய பகிருங்கள்.


நமது வரலாற்றை அறிய முயற்சிப்பதும், அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிப்பதும் முன்னோர்க்கு தமிழராகிய நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
வணக்கம்.

ஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்

ஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்

ஜாதகத்தில் மாந்தி என்பது நம்ம தமிழ்நாட்டில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை..ஆனா கேரளாவில் அதை முக்கியமாக எடுத்துக்குவாங்க..சனி புத்திரன் மாந்தி ..எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும் என்பார்கள்..அதாவது ஜூனியர் சனிபகவான் .

இவர் ஜாதகத்தில் எங்கெங்கு நின்றால் என்னென்ன பலன்களை தருவார் என பொதுவாக பார்ப்போம்...இதை அப்படியே எடுத்துக்கொள்ள தேவையில்லை..சுபருடன் சேர,சுபர் பார்க்க நல்ல பலனும் உண்டாகும்.

மாந்தி நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல கெடுப்பர்.லக்னத்தில் நிற்க நோய் உண்டாகும்.ஊனம் உண்டாகும்...அதிக மன சோர்வு,உடல் சோர்வு கெட்ட குணநலன்,கெட்ட நண்பர்கள் சேர்க்கை உண்டாகும் .

லக்னத்துக்கு 2ல் நிற்க,மோசமான பேச்சு ,வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா இருக்கும்.நஷ்டம் அதிகம் சந்திப்பார்...சிலர் மிக கருமியாகவும் இருப்பர்..குடும்ப வாழ்வில் சோதனைகள் அதிகம் உண்டாகும்.

3ல் நின்றால் தனக்கு பின் பிறந்த இளைய சகோதரன் ,சகோதரிகளுடன் பகை உண்டாகும் அல்லது அவர்கள் முன்னேற இயலாமல் வாழ்க்கையில் போராடி கொண்டிருப்பர்.

4ல் நின்றால் இவர் பிறந்த காலத்தில் தாயார் மிகவும் துன்பப்பட்டிருப்பார்...பிற்காலத்தில்தான் அவருக்கு சுகம் உண்டு.இவருக்கு நிறைய அலைச்சல் உண்டாகும்...முறையான சுகம் கிடைப்பதில் தடங்கல் ,சொத்துக்களில் சிக்கல் காணப்படும்.

5ல் மாந்தி புத்திர தோசம்..குழந்தைகளால் கவலை,ஏமாற்றம் எந்த காரியம் தொட்டாலும் தடங்கல் தாமதம் உண்டாகும்..

6ல் நிற்க ,சுற்றம் நட்பு பகையாகும் எதுக்கெடுத்தாலும் கையை ஓங்கி விடுவார் ..வம்பு,வழக்குகளை சந்திக்க நேரும்

7ல் நிற்க,களத்திர தோசம்..கணவன் /மனைவி குணநலன் கெடுகிறது...வாக்குவாதம் அதிகரிக்கும்.

8ல் மாந்தி அவமானம் அடிக்கடி சந்தித்தல் ,உடல் ஆரோக்கியம் கெடுதல் ,அதிர்ஷ்டமின்மை

9ல் மாந்தி பூர்வீகம் கெடுகிறது...தந்தையுடன் மனக்கசப்பு...எதையும் குதர்க்கமாக பேசி தன்னை கெடுத்துக்கொள்ளுதல் 

10ல் மாந்தி தொழில் மேன்மை,பதவி,புகழ் கிடைக்கும்

11ல் நிற்க ,எப்போதும் தன லாபம்

12ல் நிற்க,தூக்கமின்மை,அடிக்கடி பயணம் ,தீய கனவுகள்

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!