Showing posts with label meditation class in coimbatore. Show all posts
Showing posts with label meditation class in coimbatore. Show all posts

Monday, June 6, 2016

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

பத்து கட்டளைகள்:

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!

Thursday, July 9, 2015

பிரம்ம தேஜோ பலம் பலம் - மும்மூர்த்திகளின்அருளையும் பெற


தானத்தில் சிறந்தது அன்னதானம். திதிகளில் சிறந்தது துவாதசி திதி. மாதங்களில் சிறந்தது மார்கழி. அதுபோல் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி  என்பார்கள். கிருஷ்ண பரமாத்மாவும் கீதையில், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என்கிறார்.

கௌசிகன் எனும் மன்னன் தம் தவப்பயனால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று எல்லாராலும் அழைக்கப்பட்டார். இவரே வரப்பிரசாதமான காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர். பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு காயத்ரி மந்திரமே ஆதாரம். இதை "பிரம்ம தேஜோ பலம் பலம்' எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர். மகிமைவாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை காயத்ரி தேவி. 

ஒருமுறை பிரம்மன் புஷ்கரம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் ஒரு யாகத்தைத் தொடங்கினார். அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி தேவி வராததால், நான்முகன் தனதுசக்தியால் ஸ்ரீகாயத்ரி தேவியை சிருஷ்டித்தார். காயத்ரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள். பிரம்மனும் தன் யாகத்தை முடித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த தேவி செம் பருத்திப்பூ போன்ற சிவந்த நிறம் கொண்டவள். செந்தாமரையில் எழுந்தரு ளும் அன்னையான இவள் ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் கொண்டு திகழ்கிறாள். 

காயத்ரி தேவி தன் பத்து கைகளில் வர ஹஸ்தம், அபய ஹஸ்தம், அங்குசம், சாட்டை (உட்புறமும் வெளிப்புறமும் உள்ள தீயசக்திகளை நீக்குவது)கபாலம் (சிவ தத்துவம்), கதை (விஷ்ணு தத்துவம்), சங்கு, சக்கரம், இரண்டு கைகளில் தாமரை ஏந்தியவள்; நான்கு வேதங்களையும் நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது.

காயத்ரி என்கிற பதம் காய்+ த்ரீ எனப் பிரிந்து பொருள் தரும். அதாவது "காய்' என்றால் கானத்திற்கு உரியது. பாடப்பெறுவது எனப் பொருள் கொள்ளலாம். காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு.

"த்ரீ' என்பது "த்ராயதே' என்று  விரிந்து "காப்பாற்று' எனப் பொருள்படும். அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள்.

கா+ ய+ ஆ+ த்ரீ எனும் நான்கு எழுத்துக்களின் சேர்க்கைதான் காயத்ரி. இதில் கா- என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன். ய- என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது. இதற்கு அதிதேவதை விஷ்ணு. 

ஆ- என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்ரர். த்ரீ- எனும் பதம் இம்மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றியருள்வர் என்பதைக் குறிக்கும். 

எனவே ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின்அருளையும் பெறலாம்

"ஓம் பூர்புவஸ் ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்.'

இதுவே காயத்ரி மந்திரம். "எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக' என்பதே இம்மந்திரத்தின் பொருளாகும். 

எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் பிரார்த்தனை மற்றும் தியான சுலோகமாக உள்ளது. எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரியாகும். இதுதவிர மற்ற தெய்வங்களுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்களும் உண்டு.



காயத்ரி மந்திர நியதிகளும் பலன்களும்


காயத்ரி மந்திரத்தைப் பொருள்புரிந்து குருமுகமாக உபதேசம் பெற்று ஜெபிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை ஜெபம் செய்யும்போது காயத்ரி தேவியையும், சூரிய பகவானையும், ஸ்ரீமந் நாராயணனையும் தியானித்து பக்தி சிரத்தையோடு ஜெபம் செய்யவேண்டும். இதனால் மனோபலமும் வசீகர சக்தியும் கூடும். 

காயத்ரி மந்திரத்துக்கு ஆத்ம சுத்தி, சரீர சுத்தி மிக அவசியம். ஜெபம் செய்வதற்கான இடம், சுத்தமும் காற்றோட்டமும் வெளிச் சமும் உள்ள இடமாகத் திகழ்தல் வேண்டும்.

நதிக்கரைகள், திருக்குளங்கள், அமைதியான மலைப்பிரதேசங்கள், மகான் களின் அதிஷ்டானம், திவ்யதேசங்கள் போன்ற இடங்களில் அமர்ந்து தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

பசு மடத்தில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும். அதுபோன்று கோவில் கும்பாபிஷேக காலத்தில் யாக சாலையில் அமர்ந்து ஜெபம் செய்தால் பலகோடி நன்மைகள் பெறலாம்.

மான்தோலில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் மன அமைதியும் ஞானமும் பெருகும். துளசி, பவழ மாலை, பொன்மணி மாலை, ருத்ராட்ச மாலை ஆகியவற்றை ஜெபம் செய்ய எடுத்துக்கொள்ளலாம்.

சூரியோதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் காலம்வரை எப்போதும் இம்மந்திரத்தை ஜெபிக்கலாம். வைகறை யிலும், அந்தி வேளையிலும் செய்வது உத்தமம். இரவு வேளைகளில் மானசீகமாக ஜெபிக்கலாம்.

காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியவாறும் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம். எரிகின்ற தீபத்தைப் பார்த்தோ, அம்பாள் படத்தைப் பார்த்தவாறோ ஜெபித்தால் கூடுதல் பலனைப் பெறலாம். ஜெபம் செய்யும்போது இடையில் எழுந்து செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், மீண்டும் கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டுஜெபத்தைத் தொடர்ந்து செய்யலாம்.

காயத்ரி மந்திரத்தின் அட்சரங்கள்


காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் உள்ளன. அவையனைத்தும் 24 ரிஷிகள், 24 தேவதைகள், 24 பலன்களைக் குறிக்கும். 24 பாவங்களையும் நீக்கும். 24 அட்சரங்களை 3 வேதத்திற்குரியவாறு பிரித்துள்ளனர். 

காயத்ரி மந்திரம் பற்றி பலருக்கும் தெரிந்திருந்தாலும், அந்த மகத்தான மந்திரத்தின் பின்னணியில் உள்ள காயத்ரி தேவதை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். காயத்ரி மந்திரம் ரிக்வேதத் திலுள்ள ஆயிரக்கணக்கான மந்திரங்களில் ஒன்றுதான் என்றாலும், 24 எழுத்துக் களைக் கொண்ட காயத்ரி மந்திரம் வேத மந்திரங்களின் சாராம்சமாகக் கருதப் படுகிறது. தன்னை ஜெபிக்கின்றவர் களுக்குப் பாதுகாப்பளித்து ஓர் அரணாகத் திகழ்வதால் காயத்ரி மந்திரத்திற்கு அப் பெயர் ஏற்பட்டது.

சந்தஸ் அமைப்பிலுள்ள காயத்ரி மந்திரத்தையே வேத மாதாவாக நாம் போற்றுகிறோம். காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளுமே  காயத்ரி மந்திரத்தின் அதிதேவதையாகக் கருதப்படுகின்றனர். காயத்ரி தேவி காலை சந்தியாவந்தனத்தின்போது அதி தேவதையாகவும், ரிக்வேத ரூபிணியாகவும், மூன்று அக்னிகளில் கார்ஹபத்ய அக்னியாகவும் வணங்கப்படுகிறாள். நண்பகலில் யஜுர் வேத சொரூபிணியான சாவித்ரியாகவும்,  மாலை வேளையில் சரஸ்வதி தேவி, சாமவேதத்தின் தேவதையாக, ஆவஹணீய அக்னியாகப் போற்றப்படுகிறாள்.

ஐந்து தலைகளோடும், பத்து கைகளோடும் தாமரை அல்லது அன்ன வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கும் காயத்ரிதேவி பிரம்மாவின் மனைவி என்பதால், தன்னுடைய ஒரு முகத்தோடு, பிரம்மாவின் நான்கு முகங்களையும் கொண்டுள்ளதாக ஐதீகம். காயத்ரி தேவியின் ஐந்து முகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதனம், அனுக்ரஹம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில், சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, மஹேஸ்வரி, மனோன்மணி என்ற தேவதைகளின் ஐந்து முகங்களைக் குறிப் பிடுவதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களோடு தேவி சித்தரிக்கப்படுகிறாள்.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் தேவியான சரஸ்வதி, காக்கும் கடவுளான  ஸ்ரீமகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி, அழிக்கும் கடவுளான சிவபெருமானின் தேவியான பார்வதி ஆகிய மூவரும் ஓருருவமாக- காயத்ரி தேவியாக விளங்கி நமக்கு ஞானத்தையும் வைராக்கியத்தையும் அருளுகிறார்கள். ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு, முத்து நிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய நிறங்களில் காயத்ரி தேவியின் ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன. காயத்ரி தேவியின் இருபுறங்களிலும் மகாலட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்திருப்பதுபோலக் காட்டப்படுவதுண்டு.

வால்மீகி முனிவர், காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துகளில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஆயிரம் ஸ்லோகமாக 24,000 ஸ்லோகங்களைக் கொண்டு தனது இராமாயணத்தை இயற்றியுள் ளார். 12 ஸ்காந்தங்கள், 318 அத்தியாயங்கள், 18,000 சுலோகங்களையும் கொண்ட மிகச்சிறந்த புராணம் ஸ்ரீதேவி பாகவதம். வியாச முனிவரால் தனது புதல்வர் சுகருக்கு உபதேசிக்கப்பட்டு, சனகாதி முனிவர்களுக்கு சூதரால் கூறப்பட்ட பெருமையுடைய இந்த தேவி பாகவதத்தில் 12-ஆவது ஸ்காந்தத்தில் 51 மற்றும் 52-ஆவது அத்தியாயங்களாக அமைந்திருப்பவைதான் காயத்ரி மஹாத்மியமும், காயத்ரி ஸஹஸ்ர நாமமும். நாரத முனிவருக்கு நாராயண ரிஷியால் இவை உபதேசிக்கப்பட்டன. காயத்ரி மஹாத்மியத்தில் 24 சுலோகங்களைக் கொண்ட காயத்ரி  ஸ்தோத்திரம் அடங்கியுள்ளது. காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலட்சுமியாக வும், பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும், ருத்ர லோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் விளங்குவதாக இது குறிப்பிடுகிறது.

காயத்ரி மந்திரத்தை இடைவிடாது நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெபம் செய்து அலைபாய்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்தி சாதனை படைத்தவர்கள் பலர். அறிவுக்கூர்மை பெறவும், ஞாபக சக்தி வளரவும், அச்ச உணர்வு அகலவும், எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது.

"காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை; தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை; காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை' என்கிறது ஒரு சுலோகம்.

ஒவ்வோர் ஆண்டும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜெபம் வரும். அன்றைய தினம் 1,008 முறை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்பது மரபு.

அன்றாடம் சந்தியாவந்தனத்தின் போதெல் லாம் முடிந்த அளவுக்கு காயத்ரி ஜெபம் செய்வது விசேஷமானதாகும்.

Wednesday, July 1, 2015

சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (share) செய்யுங்கள்) = www.v4all.org
Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்
Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்
Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்
Adalarasan - ஆடலரசன்
Adalazagan - ஆடலழகன்
Adalerran - அடலேற்றன்
Adalvallan - ஆடல்வல்லான்
Adalvidaippagan - அடல்விடைப்பாகன்
Adalvidaiyan - அடல்விடையான்
Adangakkolvan - அடங்கக்கொள்வான்
Adarchadaiyan - அடர்ச்சடையன்
Adarko - ஆடற்கோ
Adhaladaiyan - அதலாடையன்
Adhi - ஆதி
Adhibagavan - ஆதிபகவன்
Adhipuranan - ஆதிபுராணன்
Adhiraiyan - ஆதிரையன்
Adhirthudiyan - அதிர்துடியன்
Adhirunkazalon - அதிருங்கழலோன்
Adhiyannal - ஆதியண்ணல்
Adikal - அடிகள்
Adiyarkkiniyan - அடியார்க்கினியான்
Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்
Adumnathan - ஆடும்நாதன்
Agamabodhan - ஆகமபோதன்
Agamamanon - ஆகமமானோன்
Agamanathan - ஆகமநாதன்
Aimmukan - ஐம்முகன்
Aindhadi - ஐந்தாடி
Aindhukandhan - ஐந்துகந்தான்
Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்
Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்
Ainthozilon - ஐந்தொழிலோன்
Aivannan - ஐவண்ணன்
Aiyamerpan - ஐயமேற்பான்
Aiyan - ஐயன்
Aiyar - ஐயர்
Aiyaranindhan - ஐயாறணிந்தான்
Aiyarrannal - ஐயாற்றண்ணல்
Aiyarrarasu - ஐயாற்றரசு
Akandan - அகண்டன்
Akilankadandhan - அகிலங்கடந்தான்
Alagaiyanrozan - அளகையன்றோழன்
Alakantan - ஆலகண்டன்
Alalamundan - ஆலாலமுண்டான்
Alamarchelvan - ஆலமர்செல்வன்
Alamardhevan - ஆலமர்தேன்
Alamarpiran - ஆலமர்பிரான்
Alamidarran - ஆலமிடற்றான்
Alamundan - ஆலமுண்டான்
Alan - ஆலன்
Alaniizalan - ஆலநீழலான்
Alanthurainathan - ஆலந்துறைநாதன்
Alappariyan - அளப்பரியான்
Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்
Alavayadhi - ஆலவாய்ஆதி
Alavayannal - ஆலவாயண்ணல்
Alavilan - அளவிலான்
Alavili - அளவிலி
Alavilpemman - ஆலவில்பெம்மான்
Aliyan - அளியான்
Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்
Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்
Aluraiadhi - ஆலுறைஆதி
Amaivu - அமைவு
Amaiyanindhan - ஆமையணிந்தன்
Amaiyaran - ஆமையாரன்
Amaiyottinan - ஆமையோட்டினன்
Amalan - அமலன்
Amararko - அமரர்கோ
Amararkon - அமரர்கோன்
Ambalakkuththan - அம்பலக்கூத்தன்
Ambalaththiisan - அம்பலத்தீசன்
Ambalavan - அம்பலவான்
Ambalavanan - அம்பலவாணன்
Ammai - அம்மை
Amman - அம்மான்
Amudhan - அமுதன்
Amudhiivallal - அமுதீவள்ளல்
Anaiyar - ஆனையார்
Anaiyuriyan - ஆனையுரியன்
Anakan - அனகன்
Analadi - அனலாடி
Analendhi - அனலேந்தி
Analuruvan - அனலுருவன்
Analviziyan - அனல்விழியன்
Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்
Anandhan - ஆனந்தன்
Anangkan - அணங்கன்
Ananguraipangan - அணங்குறைபங்கன்
Anarchadaiyan - அனற்சடையன்
Anarkaiyan - அனற்கையன்
Anarrun - அனற்றூண்
Anathi - அனாதி
Anay - ஆனாய்
Anban - அன்பன்
Anbarkkanban - அன்பர்க்கன்பன்
Anbudaiyan - அன்புடையான்
Anbusivam - அன்புசிவம்
Andakai - ஆண்டகை
Andamurththi - அண்டமூர்த்தி
Andan - அண்டன்
Andan - ஆண்டான்
Andavan - ஆண்டவன்
Andavanan - அண்டவாணன்
Andhamillariyan - அந்தமில்லாரியன்
Andhivannan - அந்திவண்ணன்
Anekan - அனேகன்/அநேகன்
Angkanan - அங்கணன்
Anip Pon - ஆணிப் பொன்
Aniyan - அணியன்
Anna - அண்ணா
Annai - அன்னை
Annamalai - அண்ணாமலை
Annamkanan - அன்னம்காணான்
Annal - அண்ணல்
Anthamillan - அந்தமில்லான்
Anthamilli - அந்தமில்லி
Anthanan - அந்தணன்
Anthiran - அந்திரன்
Anu - அணு
Anychadaiyan - அஞ்சடையன்
Anychadiyappan - அஞ்சாடியப்பன்
Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்
Anychaiyappan - அஞ்சையப்பன்
Anychezuththan - அஞ்செழுத்தன்
Anychezuththu - அஞ்செழுத்து
Appanar - அப்பனார்
Araamuthu - ஆராஅமுது
Aradharanilayan - ஆறாதாரநிலயன்
Araiyaniyappan - அறையணியப்பன்
Arakkan - அறக்கண்
Arakkodiyon - அறக்கொடியோன்
Aran - அரன்
Aranan - ஆரணன்
Araneri - அறநெறி
Aranivon - ஆறணிவோன்
Araravan - ஆரரவன்
Arasu - அரசு
Araththurainathan - அரத்துறைநாதன்
Aravachaiththan - அரவசைத்தான்
Aravadi - அரவாடி
Aravamudhan - ஆராவமுதன்
Aravan - அறவன்
Aravaniyan - அரவணியன்
Aravanychudi - அரவஞ்சூடி
Aravaraiyan - அரவரையன்
Aravarcheviyan - அரவார்செவியன்
Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்
Aravaziandhanan - அறவாழிஅந்தணன்
Aravendhi - அரவேந்தி
Aravidaiyan - அறவிடையான்
Arazagan - ஆரழகன்
Arccithan - அர்ச்சிதன்
Archadaiyan - ஆர்சடையன்
Areruchadaiyan - ஆறேறுச்சடையன்
Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்
Arikkumariyan - அரிக்குமரியான்
Arivaipangan - அரிவைபங்கன்
Arivan - அறிவன்
Arivu - அறிவு
Arivukkariyon - அறிவுக்கரியோன்
Ariya Ariyon - அரியஅரியோன்
Ariya Ariyon - அறியஅரியோன்
Ariyan - ஆரியன்
Ariyan - அரியான்
Ariyasivam - அரியசிவம்
Ariyavar - அரியவர்
Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்
Ariyorukuran - அரியோருகூறன்
Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்
Arpudhan - அற்புதன்
Aru - அரு
Arul - அருள்
Arulalan - அருளாளன்
Arulannal - அருளண்ணல்
Arulchodhi - அருள்சோதி
Arulirai - அருளிறை
Arulvallal - அருள்வள்ளல்
Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்
Arulvallan - அருள்வல்லான்
Arumalaruraivan - அறுமலருறைவான்
Arumani - அருமணி
Arumporul - அரும்பொருள்
Arunmalai - அருண்மலை
Arunthunai - அருந்துணை
Aruran - ஆரூரன்
Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்
Arurmudiyan - ஆறூர்முடியன்
Arut Kuththan - அருட்கூத்தன்
Arutchelvan - அருட்செல்வன்
Arutchudar - அருட்சுடர்
Aruththan - அருத்தன்
Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி
Arutpizambu - அருட்பிழம்பு
Aruvan - அருவன்
Aruvuruvan - அருவுருவன்
Arvan - ஆர்வன்
Athikunan - அதிகுணன்
Athimurththi - ஆதிமூர்த்தி
Athinathan - ஆதிநாதன்
Athipiran - ஆதிபிரான்
Athisayan - அதிசயன்
Aththan - அத்தன்
Aththan - ஆத்தன்
Aththichudi - ஆத்திச்சூடி
Atkondan - ஆட்கொண்டான்
Attugappan - ஆட்டுகப்பான்
Attamurthy - அட்டமூர்த்தி
Avanimuzudhudaiyan - அவனிமுழுதுடையான்
Avinasi - அவிநாசி
Avinasiyappan - அவிநாசியப்பன்
Avirchadaiyan - அவிர்ச்சடையன்
Ayavandhinathan - அயவந்திநாதன்
Ayirchulan - அயிற்சூலன்
Ayizaiyanban - ஆயிழையன்பன்
Azagukadhalan - அழகுகாதலன்
Azakan - அழகன்
Azal Vannan - அழல்வண்ணன்
Azalarchadaiyan - அழலார்ச்சடையன்
Azalmeni - அழல்மேனி
Azarkannan - அழற்கண்ணன்
Azarkuri - அழற்குறி
Azicheydhon - ஆழிசெய்தோன்
Azi Indhan - ஆழி ஈந்தான்
Azivallal - ஆழிவள்ளல்
Azivilan - அழிவிலான்
Aziyan - ஆழியான்
Aziyar - ஆழியர்
Aziyarulndhan - ஆழியருள்ந்தான்
Bagampennan - பாகம்பெண்ணன்
Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்
Budhappadaiyan - பூதப்படையன்
Budhavaninathan - பூதவணிநாதன்
Buvan - புவன்
Buvanankadandholi - புவனங்கடந்தொளி
Chadaimudiyan - சடைமுடியன்
Chadaiyan - சடையன்
Chadaiyandi - சடையாண்டி
Chadaiyappan - சடையப்பன்
Chalamanivan - சலமணிவான்
Chalamarchadaiyan - சலமார்சடையன்
Chalanthalaiyan - சலந்தலையான்
Chalanychadaiyan - சலஞ்சடையான்
Chalanychudi - சலஞ்சூடி
Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்
Changarthodan - சங்கார்தோடன்
Changarulnathan - சங்கருள்நாதன்
Chandramouli - சந்ரமௌலி
Chargunanathan - சற்குணநாதன்
Chattainathan - சட்டைநாதன்
Chattaiyappan - சட்டையப்பன்
Chekkarmeni - செக்கர்மேனி
Chemmeni - செம்மேனி
Chemmeni Nathan - செம்மேனிநாதன்
Chemmeniniirran - செம்மேனிநீற்றன்
Chemmeniyamman - செம்மேனியம்மான்
Chempavalan - செம்பவளன்
Chemporchodhi - செம்பொற்சோதி
Chemporriyagan - செம்பொற்றியாகன்
Chemporul - செம்பொருள்
Chengkankadavul - செங்கன்கடவுள்
Chenneriyappan - செந்நெறியப்பன்
Chenychadaiyan - செஞ்சடையன்
Chenychadaiyappan - செஞ்சடையப்பன்
Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடையன்
Cherakkaiyan - சேராக்கையன்
Chetchiyan - சேட்சியன்
Cheyizaibagan - சேயிழைபாகன்
Cheyizaipangan - சேயிழைபங்கன்
Cheyyachadaiyan - செய்யச்சடையன்
Chirrambalavanan - சிற்றம்பலவாணன்
Chiththanathan - சித்தநாதன்
Chittan - சிட்டன்
Chivan - சிவன்
Chodhi - சோதி
Chodhikkuri - சோதிக்குறி
Chodhivadivu - சோதிவடிவு
Chodhiyan - சோதியன்
Chokkalingam - சொக்கலிங்கம்
Chokkan - சொக்கன்
Chokkanathan - சொக்கநாதன்
Cholladangan - சொல்லடங்கன்
Chollarkariyan - சொல்லற்கரியான்
Chollarkiniyan - சொல்லற்கினியான்
Chopura Nathan - சோபுரநாதன்
Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி
Chudalaiyadi - சுடலையாடி
Chudar - சுடர்
Chudaramaimeni - சுடரமைமேனி
Chudaranaiyan - சுடரனையான்
Chudarchadaiyan - சுடர்ச்சடையன்
Chudarendhi - சுடரேந்தி
Chudarkkannan - சுடர்க்கண்ணன்
Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து
Chudarkuri - சுடற்குறி
Chudarmeni - சுடர்மேனி
Chudarnayanan - சுடர்நயனன்
Chudaroli - சுடரொளி
Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி
Chudarviziyan - சுடர்விழியன்
Chulaithiirththan - சூலைதீர்த்தான்
Chulamaraiyan - சூலமாரையன்
Chulappadaiyan - சூலப்படையன்
Dhanu - தாணு
Dhevadhevan - தேவதேவன்
Dhevan - தேவன்
Edakanathan - ஏடகநாதன்
Eduththapadham - எடுத்தபாதம்
Ekamban - ஏகம்பன்
Ekapathar - ஏகபாதர்
Eliyasivam - எளியசிவம்
Ellaiyiladhan - எல்லையிலாதான்
Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்
Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்
Emperuman - எம்பெருமான்
Enakkomban - ஏனக்கொம்பன்
Enanganan - ஏனங்காணான்
Enaththeyiran - ஏனத்தெயிறான்
Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்
Engunan - எண்குணன்
Enmalarchudi - எண்மலர்சூடி
Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை
Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை
Ennuraivan - எண்ணுறைவன்
Ennuyir - என்னுயிர்
Enrumezilan - என்றுமெழிலான்
Enthai - எந்தை
Enthay - எந்தாய்
En Tholar - எண் தோளர்
Entolan - எண்டோளன்
Entolavan - எண்டோளவன்
Entoloruvan - எண்டோளொருவன்
Eramarkodiyan - ஏறமர்கொடியன்
Ereri - ஏறெறி
Eripolmeni - எரிபோல்மேனி
Eriyadi - எரியாடி
Eriyendhi - எரியேந்தி
Erran - ஏற்றன்
Erudaiiisan - ஏறுடைஈசன்
Erudaiyan - ஏறுடையான்
Erudheri - எருதேறி
Erudhurvan - எருதூர்வான்
Erumbiisan - எரும்பீசன்
Erurkodiyon - ஏறூர்கொடியோன்
Eruyarththan - ஏறுயர்த்தான்
Eyilattan - எயிலட்டான்
Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்
Ezhaipagaththan - ஏழைபாகத்தான்
Ezukadhirmeni - எழுகதிமேனி
Ezulakali - ஏழுலகாளி
Ezuththari Nathan - எழுத்தறிநாதன்
Gangaichchadiayan - கங்கைச்சடையன்
Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னியான்
Gangaichudi - கங்கைசூடி
Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்
Gnanakkan - ஞானக்கண்
Gnanakkozunthu - ஞானக்கொழுந்து
Gnanamurththi - ஞானமூர்த்தி
Gnanan - ஞானன்
Gnananayakan - ஞானநாயகன்
Guru - குரு
Gurumamani - குருமாமணி
Gurumani - குருமணி
Idabamurvan - இடபமூர்வான்
Idaimarudhan - இடைமருதன்
Idaiyarrisan - இடையாற்றீசன்
Idaththumaiyan - இடத்துமையான்
Ichan - ஈசன்
Idili - ஈடிலி
Iirottinan - ஈரோட்டினன்
Iisan - ஈசன்
Ilakkanan - இலக்கணன்
Ilamadhichudi - இளமதிசூடி
Ilampiraiyan - இளம்பிறையன்
Ilangumazuvan - இலங்குமழுவன்
Illan - இல்லான்
Imaiyalkon - இமையாள்கோன்
Imaiyavarkon - இமையவர்கோன்
Inaiyili - இணையிலி
Inamani - இனமணி
Inban - இன்பன்
Inbaniingan - இன்பநீங்கான்
Indhusekaran - இந்துசேகரன்
Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்
Iniyan - இனியன்
Iniyan - இனியான்
Iniyasivam - இனியசிவம்
Irai - இறை
Iraivan - இறைவன்
Iraiyan - இறையான்
Iraiyanar - இறையனார்
Iramanathan - இராமநாதன்
Irappili - இறப்பிலி
Irasasingkam - இராசசிங்கம்
Iravadi - இரவாடி
Iraviviziyan - இரவிவிழியன்
Irilan - ஈறிலான் -
Iruvareththuru - இருவரேத்துரு
Iruvarthettinan - இருவர்தேட்டினன்
Isaipadi - இசைபாடி
Ittan - இட்டன்
Iyalbazagan - இயல்பழகன்
Iyamanan - இயமானன்
Kadaimudinathan - கடைமுடிநாதன்
Kadalvidamundan - கடல்விடமுண்டான்
Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை
Kadavul - கடவுள்
Kadhir Nayanan - கதிர்நயனன்
Kadhirkkannan - கதிர்க்கண்ணன்
Kaichchinanathan - கைச்சினநாதன்
Kalabayiravan - காலபயிரவன்
Kalai - காளை
Kalaikan - களைகண்
Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்
Kalaiyan - கலையான்
Kalaiyappan - காளையப்பன்
Kalakalan - காலகாலன்
Kalakandan - காளகண்டன்
Kalarmulainathan - களர்முளைநாதன்
Kalirruriyan - களிற்றுரியன்
Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போர்வையான்
Kallalnizalan - கல்லால்நிழலான்
Kalvan - கள்வன்
Kamakopan - காமகோபன்
Kamalapathan - கமலபாதன்
Kamarkayndhan - காமற்காய்ந்தான்
Kanaladi - கனலாடி
Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்
Kanalendhi - கனலேந்தி
Kanalmeni - கனல்மேனி
Kanalviziyan - கனல்விழியன்
Kananathan - கணநாதன்
Kanarchadaiyan - கனற்ச்சடையன்
Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்
Kandan - கண்டன்
Kandthanarthathai - கந்தனார்தாதை
Kandikaiyan - கண்டிகையன்
Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்
Kangkalar - கங்காளர்
Kangkanayakan - கங்காநாயகன்
Kani - கனி
Kanichchivanavan - கணிச்சிவாணவன்
Kanmalarkondan - கண்மலர்கொண்டான்
Kanna - கண்ணா
Kannalan - கண்ணாளன்
Kannayiranathan - கண்ணாயிரநாதன்
Kannazalan - கண்ணழலான்
Kannudhal - கண்ணுதல்
Kannudhalan - கண்ணுதலான்
Kantankaraiyan - கண்டங்கறையன்
Kantankaruththan - கண்டங்கருத்தான்
Kapalakkuththan - காபாலக்கூத்தன்
Kapali - கபாலி
Kapali - காபாலி
Karaikkantan - கறைக்கண்டன்
Karaimidarran - கறைமிடற்றன்
Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்
Karanan - காரணன்
Karandthaichchudi - கரந்தைச்சூடி
Karaviiranathan - கரவீரநாதன்
Kariyadaiyan - கரியாடையன்
Kariyuriyan - கரியுரியன்
Karpaganathan - கற்பகநாதன்
Karpakam - கற்பகம்
Karraichchadaiyan - கற்றைச்சடையன்
Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடையான்
Karumidarran - கருமிடற்றான்
Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்
Karuththan - கருத்தன்
Karuththan - கருத்தான்
Karuvan - கருவன்
Kathalan - காதலன்
Kattangkan - கட்டங்கன்
Kavalalan - காவலாளன்
Kavalan - காவலன்
Kayilainathan - கயிலைநாதன்
Kayilaikkizavan - கயிலைக்கிழவன்
Kayilaimalaiyan - கயிலைமலையான்
Kayilaimannan - கயிலைமன்னன்
Kayilaippadhiyan - கயிலைப்பதியன்
Kayilaipperuman - கயிலைபெருமான்
Kayilaivendhan - கயிலைவேந்தன்
Kayilaiyamarvan - கயிலையமர்வான்
Kayilaiyan - கயிலையன்
Kayilaiyan - கயிலையான்
Kayilayamudaiyan - கயிலாயமுடையான்
Kayilayanathan - கயிலாயநாதன்
Kazarchelvan - கழற்செல்வன்
Kedili - கேடிலி
Kediliyappan - கேடிலியப்பன்
Kezalmaruppan - கேழல்மறுப்பன்
Kezarkomban - கேழற்கொம்பன்
Kiirranivan - கீற்றணிவான்
Ko - கோ
Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்
Kodikkuzagan - கோடிக்குழகன்
Kodukotti - கொடுகொட்டி
Kodumudinathan - கொடுமுடிநாதன்
Kodunkunrisan - கொடுங்குன்றீசன்
Kokazinathan - கோகழிநாதன்
Kokkaraiyan - கொக்கரையன்
Kokkiragan - கொக்கிறகன்
Kolachchadaiyan - கோலச்சடையன்
Kolamidarran - கோலமிடற்றன்
Koliliyappan - கோளிலியப்பன்
Komakan - கோமகன்
Koman - கோமான்
Kombanimarban - கொம்பணிமார்பன்
Kon - கோன்
Konraialangkalan - கொன்றை அலங்கலான்
Konraichudi - கொன்றைசூடி
Konraiththaron - கொன்றைத்தாரோன்
Konraivendhan - கொன்றைவேந்தன்
Korravan - கொற்றவன்
Kozundhu - கொழுந்து
Kozundhunathan - கொழுந்துநாதன்
Kudamuzavan - குடமுழவன்
Kudarkadavul - கூடற்கடவுள்
Kuduvadaththan - கூடுவடத்தன்
Kulaivanangunathan - குலைவணங்குநாதன்
Kulavan - குலவான்
Kumaran - குமரன்
Kumaranradhai - குமரன்றாதை
Kunakkadal - குணக்கடல்
Kunarpiraiyan - கூனற்பிறையன்
Kundalachcheviyan - குண்டலச்செவியன்
Kunra Ezilaan - குன்றாஎழிலான்
Kupilan - குபிலன்
Kuravan - குரவன்
Kuri - குறி
Kuriyilkuriyan - குறியில்குறியன்
Kuriyilkuththan - குறியில்கூத்தன்
Kuriyuruvan - குறியுருவன்
Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்
Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்
Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்
Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்
Kurrudhaiththan - கூற்றுதைத்தான்
Kurumpalanathan - குறும்பலாநாதன்
Kurundhamarguravan - குருந்தமர்குரவன்
Kurundhamevinan - குருந்தமேவினான்
Kuththan - கூத்தன்
Kuththappiran - கூத்தபிரான்
Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்
Kuvilanychudi - கூவிளஞ்சூடி
Kuvindhan - குவிந்தான்
Kuzagan - குழகன்
Kuzaikadhan - குழைகாதன்
Kuzaithodan - குழைதோடன்
Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்
Kuzarchadaiyan - குழற்ச்சடையன்
Machilamani - மாசிலாமணி
Madandhaipagan - மடந்தைபாகன்
Madavalbagan - மடவாள்பாகன்
Madha - மாதா
Madhavan - மாதவன்
Madhevan - மாதேவன்
Madhimuththan - மதிமுத்தன்
Madhinayanan - மதிநயனன்
Madhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்
Madhivanan - மதிவாணன்
Madhivannan - மதிவண்ணன்
Madhiviziyan - மதிவிழியன்
Madhorubagan - மாதொருபாகன்
Madhupadhiyan - மாதுபாதியன்
Maikolcheyyan - மைகொள்செய்யன்
Mainthan - மைந்தன்
Maiyanimidaron - மையணிமிடறோன்
Maiyarkantan - மையார்கண்டன்
Makayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்
Malaimadhiyan - மாலைமதியன்
Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்
Malaivalaiththan - மலைவளைத்தான்
Malaiyalbagan - மலையாள்பாகன்
Malamili - மலமிலி
Malarchchadaiyan - மலர்ச்சடையன்
Malorubagan - மாலொருபாகன்
Malvanangiisan - மால்வணங்கீசன்
Malvidaiyan - மால்விடையன்
Maman - மாமன்
Mamani - மாமணி
Mami - மாமி
Man - மன்
Manakkuzagan - மணக்குழகன்
Manalan - மணாளன்
Manaththakaththan - மனத்தகத்தான்
Manaththunainathan - மனத்துணைநாதன்
Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்
Manavalan - மணவாளன்
Manavazagan - மணவழகன்
Manavezilan - மணவெழிலான்
Manchumandhan - மண்சுமந்தான்
Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்
Mandhiram - மந்திரம்
Mandhiran - மந்திரன்
Manendhi - மானேந்தி
Mangaibagan - மங்கைபாகன்
Mangaimanalan - மங்கைமணாளன்
Mangaipangkan - மங்கைபங்கன்
Mani - மணி
Manidan - மானிடன்
Manidaththan - மானிடத்தன்
Manikantan - மணிகண்டன்
Manikka Vannan - மாணிக்கவண்ணன்
Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்
Manikkam - மாணிக்கம்
Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்
Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்
Manimidarran - மணிமிடற்றான்
Manivannan - மணிவண்ணன்
Maniyan - மணியான்
Manjchan - மஞ்சன்
Manrakkuththan - மன்றக்கூத்தன்
Manravanan - மன்றவாணன்
Manruladi - மன்றுளாடி
Manrulan - மன்றுளான்
Mapperunkarunai - மாப்பெருங்கருணை
Maraicheydhon - மறைசெய்தோன்
Maraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்
Maraineri - மறைநெறி
Maraipadi - மறைபாடி
Maraippariyan - மறைப்பரியன்
Maraiyappan - மறையப்பன்
Maraiyodhi - மறையோதி
Marakatham - மரகதம்
Maraniiran - மாரநீறன்
Maravan - மறவன்
Marilamani - மாறிலாமணி
Marili - மாறிலி
Mariyendhi - மறியேந்தி
Markantalan - மாற்கண்டாளன்
Markaziyiindhan - மார்கழிஈந்தான்
Marrari Varadhan - மாற்றறிவரதன்
Marudhappan - மருதப்பன்
Marundhan - மருந்தன்
Marundhiisan - மருந்தீசன்
Marundhu - மருந்து
Maruvili - மருவிலி
Masarrachodhi - மாசற்றசோதி
Masaruchodhi - மாசறுசோதி
Masili - மாசிலி
Mathevan - மாதேவன்
Mathiyar - மதியர்
Maththan - மத்தன்
Mathuran - மதுரன்
Mavuriththan - மாவுரித்தான்
Mayan - மாயன்
Mazavidaippagan - மழவிடைப்பாகன்
Mazavidaiyan - மழவிடையன்
Mazuppadaiyan - மழுப்படையன்
Mazuvalan - மழுவலான்
Mazuvalan - மழுவாளன்
Mazhuvali - மழுவாளி
Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்
Mazuvendhi - மழுவேந்தி
Mazuvudaiyan - மழுவுடையான்
Melar - மேலர்
Melorkkumelon - மேலோர்க்குமேலோன்
Meruvidangan - மேருவிடங்கன்
Meruvillan - மேருவில்லன்
Meruvilviiran - மேருவில்வீரன்
Mey - மெய்
Meypporul - மெய்ப்பொருள்
Meyyan - மெய்யன்
Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்
Mikkarili - மிக்காரிலி
Milirponnan - மிளிர்பொன்னன்
Minchadaiyan - மின்சடையன்
Minnaruruvan - மின்னாருருவன்
Minnuruvan - மின்னுருவன்
Mudhalillan - முதலில்லான்
Mudhalon - முதலோன்
Mudhirappiraiyan - முதிராப்பிறையன்
Mudhukattadi - முதுகாட்டாடி
Mudhukunriisan - முதுகுன்றீசன்
Mudivillan - முடிவில்லான்
Mukkanmurthi - முக்கண்மூர்த்தி
Mukkanan - முக்கணன்
Mukkanan - முக்கணான்
Mukkannan - முக்கண்ணன்
Mukkatkarumbu - முக்கட்கரும்பு
Mukkonanathan - முக்கோணநாதன்
Mulai - முளை
Mulaimadhiyan - முளைமதியன்
Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்
Mulan - மூலன்
Mulanathan - மூலநாதன்
Mulaththan - மூலத்தான்
Mullaivananathan - முல்லைவனநாதன்
Mummaiyinan - மும்மையினான்
Muni - முனி
Munnayanan - முன்னயனன்
Munnon - முன்னோன்
Munpan - முன்பன்
Munthai - முந்தை
Muppilar - மூப்பிலர்
Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்
Murramadhiyan - முற்றாமதியன்
Murrunai - முற்றுணை
Murrunarndhon - முற்றுணர்ந்தோன்
Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்
Murththi - மூர்த்தி
Murugavudaiyar - முருகாவுடையார்
Murugudaiyar - முருகுடையார்
Muthaliyar - முதலியர்
Muthalvan - முதல்வன்
Muththan - முத்தன்
Muththar Vannan - முத்தார் வண்ணன்
Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி
Muththiyar - முத்தியர்
Muththu - முத்து
Muththumeni - முத்துமேனி
Muththuththiral - முத்துத்திரள்
Muvakkuzagan - மூவாக்குழகன்
Muvameniyan - மூவாமேனியன்
Muvamudhal - மூவாமுதல்
Muvarmudhal - மூவர்முதல்
Muvilaichchulan - மூவிலைச்சூலன்
Muvilaivelan - மூவிலைவேலன்
Muviziyon - மூவிழையோன்
Muyarchinathan - முயற்சிநாதன்
Muzudharindhon - முழுதறிந்தோன்
Muzudhon - முழுதோன்
Muzhumudhal - முழுமுதல்
Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி
Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்
Nadan - நடன்
Nadhichadaiyan - நதிச்சடையன்
Nadhichudi - நதிசூடி
Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்
Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்
Naduthariyappan - நடுத்தறியப்பன்
Naguthalaiyan - நகுதலையன்
Nakkan - நக்கன்
Nallan - நல்லான்
Nallasivam - நல்லசிவம்
Nalliruladi - நள்ளிருளாடி
Namban - நம்பன்
Nambi - நம்பி
Nanban - நண்பன்
Nandhi - நந்தி
Nandhiyar - நந்தியார்
Nanychamudhon - நஞ்சமுதோன்
Nanychanikantan - நஞ்சணிகண்டன்
Nanycharththon - நஞ்சார்த்தோன்
Nanychundon - நஞ்சுண்டோன்
Nanychunkantan - நஞ்சுண்கண்டன்
Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்
Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்
Nanychunporai - நஞ்சுண்பொறை
Narchadaiyan - நற்ச்சடையன்
Naripagan - நாரிபாகன்
Narravan - நற்றவன்
Narrunai - நற்றுணை
Narrunainathan - நற்றுணைநாதன்
Nasaiyili - நசையிலி
Nathan - நாதன்
Nathi - நாதி
Nattamadi - நட்டமாடி
Nattamunron - நாட்டமூன்றோன்
Nattan - நட்டன்
Nattavan - நட்டவன்
Navalan - நாவலன்
Navalechcharan - நாவலேச்சரன்
Nayadi Yar - நாயாடி யார்
Nayan - நயன்
Nayanachchudaron - நயனச்சுடரோன்
Nayanamunran - நயனமூன்றன்
Nayananudhalon - நயனநுதலோன்
Nayanar - நாயனார்
Nayanaththazalon - நயனத்தழலோன்
Nedunychadaiyan - நெடுஞ்சடையன்
Nellivananathan - நெல்லிவனநாதன்
Neri - நெறி
Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்
Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்
Nerrikkannan - நெற்றிக்கண்ணன்
Nerrinayanan - நெற்றிநயனன்
Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்
Nesan - நேசன்
Neyyadiyappan - நெய்யாடியப்பன்
Nidkandakan - நிட்கண்டகன்
Niilakantan - நீலகண்டன்
Niilakkudiyaran - நீலக்குடியரன்
Niilamidarran - நீலமிடற்றன்
Niilchadaiyan - நீள்சடையன்
Niinerinathan - நீனெறிநாதன்
Niiradi - நீறாடி
Niiranichemman - நீறணிச்செம்மான்
Niiranichudar - நீறணிசுடர்
Niiranikunram - நீறணிகுன்றம்
Niiranimani - நீறணிமணி
Niiraninudhalon - நீறணிநுதலோன்
Niiranipavalam - நீறணிபவளம்
Niiranisivan - நீறணிசிவன்
Niirarmeniyan - நீறர்மேனியன்
Niirchchadaiyan - நீர்ச்சடையன்
Niireruchadaiyan - நீறேறுசடையன்
Niireruchenniyan - நீறேறுசென்னியன்
Niirran - நீற்றன்
Niirudaimeni - நீறுடைமேனி
Nirupusi - நீறுபூசி
Nikarillar - நிகரில்லார்
Nilachadaiyan - நிலாச்சடையன்
Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்
Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்
Nimalan - நிமலன்
Ninmalan - நின்மலன்
Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து
Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்
Niramayan - நிராமயன்
Niramba Azagiyan - நிரம்பஅழகியன்
Niraivu - நிறைவு
Niruththan - நிருத்தன்
Nithi - நீதி
Niththan - நித்தன்
Nokkamunron - நோக்கமூன்றோன்
Nokkuruanalon - நோக்குறுஅனலோன்
Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்
Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்
Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்
Noyyan - நொய்யன்
Nudhalorviziyan - நுதலோர்விழியன்
Nudhalviziyan - நுதல்விழியன்
Nudhalviziyon - நுதல்விழியோன்
Nudharkannan - நுதற்கண்ணன்
Nunnidaikuran - நுண்ணிடைகூறன்
Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்
Nunniyan - நுண்ணியன்
Odaniyan - ஓடணியன்
Odarmarban - ஓடார்மார்பன்
Odendhi - ஓடேந்தி
Odhanychudi - ஓதஞ்சூடி
Olirmeni - ஒளிர்மேனி
Ongkaran - ஓங்காரன்
Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்
Opparili - ஒப்பாரிலி
Oppili - ஒப்பிலி
Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்
Oruthalar - ஒருதாளர்
Oruththan - ஒருத்தன்
Oruthunai - ஒருதுணை
Oruvamanilli - ஒருவமனில்லி
Oruvan - ஒருவன்
Ottiichan - ஓட்டீசன்
Padarchadaiyan - படர்ச்சடையன்
Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்தான்
Padhimadhinan - பாதிமாதினன்
Padikkasiindhan - படிகாசீந்தான்
Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்
Padiran - படிறன்
Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்
Pakavan - பகவன்
Palaivana Nathan - பாலைவனநாதன்
Palannaniirran - பாலன்னநீற்றன்
Palar - பாலர்
Palichchelvan - பலிச்செல்வன்
Paliithadhai - பாலீதாதை
Palikondan - பலிகொண்டான்
Palinginmeni - பளிங்கின்மேனி
Palitherchelvan - பலித்தேர்செல்வன்
Pallavanathan - பல்லவநாதன்
Palniirran - பால்நீற்றன்
Palugandha Iisan - பாலுகந்தஈசன்
Palvanna Nathan - பால்வண்ணநாதன்
Palvannan - பால்வண்ணன்
Pambaraiyan - பாம்பரையன்
Pampuranathan - பாம்புரநாதன்
Panban - பண்பன்
Pandangkan - பண்டங்கன்
Pandaram - பண்டாரம்
Pandarangan - பண்டரங்கன்
Pandarangan - பாண்டரங்கன்
Pandippiran - பாண்டிபிரான்
Pangkayapathan - பங்கயபாதன்
Panimadhiyon - பனிமதியோன்
Panimalaiyan - பனிமலையன்
Panivarparru - பணிவார்பற்று
Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்
Paramamurththi - பரமமூர்த்தி
Paraman - பரமன்
Paramayoki - பரமயோகி
Paramessuvaran - பரமேச்சுவரன்
Parametti - பரமேட்டி
Paramparan - பரம்பரன்
Paramporul - பரம்பொருள்
Paran - பரன்
Paranjchothi - பரஞ்சோதி
Paranjchudar - பரஞ்சுடர்
Paraparan - பராபரன்
Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்
Parasupani - பரசுபாணி
Parathaththuvan - பரதத்துவன்
Paridanychuzan - பாரிடஞ்சூழன்
Paridhiyappan - பரிதியப்பன்
Parrarran - பற்றற்றான்
Parraruppan - பற்றறுப்பான்
Parravan - பற்றவன்
Parru - பற்று
Paruppan - பருப்பன்
Parvati Manalan - பார்வதி மணாளன்
Pasamili - பாசமிலி
Pasanasan - பாசநாசன்
Pasuveri - பசுவேறி
Pasumpon - பசும்பொன்
Pasupathan - பாசுபதன்
Pasupathi - பசுபதி
Paththan - பத்தன்
Pattan - பட்டன்
Pavala Vannan - பவளவண்ணன்
Pavalach Cheyyon - பவளச்செய்யோன்
Pavalam - பவளம்
Pavan - பவன்
Pavanasan - பாவநாசன்
Pavanasar - பாவநாசர்
Payarruraran - பயற்றூரரன்
Pazaiyan - பழையான்
Pazaiyon - பழையோன்
Pazakan - பழகன்
Pazamalainathan - பழமலைநாதன்
Pazanappiran - பழனப்பிரான்
Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்
Pemman - பெம்மான்
Penbagan - பெண்பாகன்
Penkuran - பெண்கூறன்
Pennagiyaperuman - பெண்ணாகியபெருமான்
Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்
Pennanaliyan - பெண்ணாணலியன்
Pennanmeni - பெண்ணாண்மேனி
Pennanuruvan - பெண்ணானுருவன்
Pennidaththan - பெண்ணிடத்தான்
Pennorubagan - பெண்ணொருபாகன்
Pennorupangan - பெண்ணொருபங்கன்
Pennudaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை
Penparrudhan - பெண்பாற்றூதன்
Peralan - பேராளன்
Perambalavanan - பேரம்பலவாணன்
Perarulalan - பேரருளாளன்
Perayiravan - பேராயிரவன்
Perchadaiyan - பேர்ச்சடையன்
Perezuththudaiyan - பேரெழுத்துடையான்
Perinban - பேரின்பன்
Periyakadavul - பெரியகடவுள்
Periyan - பெரியான்
Periya Peruman - பெரிய பெருமான்
Periyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்
Periyasivam - பெரியசிவம்
Periyavan - பெரியவன்
Peroli - பேரொளி
Perolippiran - பேரொளிப்பிரான்
Perrameri - பெற்றமேறி
Perramurthi - பெற்றமூர்த்தி
Peruman - பெருமான்
Perumanar - பெருமானார்
Perum Porul - பெரும் பொருள்
Perumpayan - பெரும்பயன்
Perundhevan - பெருந்தேவன்
Perunkarunaiyan - பெருங்கருணையன்
Perunthakai - பெருந்தகை
Perunthunai - பெருந்துணை
Perunychodhi - பெருஞ்சோதி
Peruvudaiyar - பெருவுடையார்
Pesarkiniyan - பேசற்கினியன்
Picchar - பிச்சர்
Pichchaiththevan - பிச்சைத்தேவன்
Pidar - பீடர்
Pinjgnakan - பிஞ்ஞகன்
Piraichchenniyan - பிறைச்சென்னியன்
Piraichudan - பிறைசூடன்
Piraichudi - பிறைசூடி
Piraikkanniyan - பிறைக்கண்ணியன்
Piraikkirran - பிறைக்கீற்றன்
Piraiyalan - பிறையாளன்
Piran - பிரான்
Pirapparuppon - பிறப்பறுப்போன்
Pirappili - பிறப்பிலி
Piravapperiyon - பிறவாப்பெரியோன்
Piriyadhanathan - பிரியாதநாதன்
Pitha - பிதா
Piththan - பித்தன்
Podiyadi - பொடியாடி
Podiyarmeni - பொடியார்மேனி
Pogam - போகம்
Pokaththan - போகத்தன்
Pon - பொன்
Ponmalaivillan - பொன்மலைவில்லான்
Ponmanuriyan - பொன்மானுரியான்
Ponmeni - பொன்மேனி
Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்
Ponnambalam - பொன்னம்பலம்
Ponnan - பொன்னன்
Ponnarmeni - பொன்னார்மேனி
Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வோன்
Ponnuruvan - பொன்னுருவன்
Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்
Poraziyiindhan - போராழிஈந்தான்
Porchadaiyan - பொற்சசையன்
Poruppinan - பொருப்பினான்
Poyyili - பொய்யிலி
Pugaz - புகழ்
Pugazoli - புகழொளி
Pulaichchudi - பூளைச்சூடி
Puliththolan - புலித்தோலன்
Puliyadhaladaiyan - புலியதலாடையன்
Puliyadhalan - புலியதளன்
Puliyudaiyan - புலியுடையன்
Puliyuriyan - புலியுரியன்
Pulkanan - புள்காணான்
Punachadaiyan - புனசடையன்
Punalarchadaiyan - புனலார்சடையன்
Punalchudi - புனல்சூடி
Punalendhi - புனலேந்தி
Punanular - பூணநூலர்
Punarchadaiyan - புனற்சடையன்
Punarchip Porul - புணர்ச்சிப் பொருள்
Punavayilnathan - புனவாயில்நாதன்
Punchadaiyan - புன்சடையன்
Pungkavan - புங்கவன்
Punidhan - புனிதன்
Punniyamurththi - புண்ணியமூர்த்தி
Punniyan - புண்ணியன்
Puramaviththan - புரமவித்தான்
Purameriththan - புரமெரித்தான்
Purameydhan - புரமெய்தான்
Puramureriththan - புரமூரெரித்தான்
Puranamuni - புராணமுனி
Puranan - புராணன்
Puranycherran - புரஞ்செற்றான்
Puranychuttan - புரஞ்சுட்டான்
Purathanan - புராதனன்
Purichadaiyan - புரிசடையன்
Purinunmeni - புரிநூன்மேனி
Purameriththan - புரமெரித்தான்
Puranan - பூரணன்
Purari - புராரி
Purridankondar - புற்றிடங்கொண்டார்
Pusan - பூசன்
Puthanathar - பூதநாதர்
Puthanayakan - பூதநாயகன்
Puthapathi - பூதபதி
Puthiyan - புதியன்
Puthiyar - பூதியர்
Puththel - புத்தேள்
Puuvananaathan - பூவனநாதன்
Puuvananaathan - பூவணநாதன்
Puyangan - புயங்கன்
Saivan - சைவன்
Saivar - சைவர்
Sakalasivan - சகலசிவன்
Samavethar - சாமவேதர்
Sampu - சம்பு
Sangkaran - சங்கரன்
Santhirasekaran - சந்திரசேகரன்
Saranan - சாரணன்
Sathasivan - சதாசிவன்
Sathikithavarththamanar - சாதிகீதவர்த்தமானர்
Saththan - சத்தன்
Sathuran - சதுரன்
Sayampu - சயம்பு
Sedan - சேடன்
Seddi - செட்டி
Selvan - செல்வன்
Semman - செம்மான்
Sempon - செம்பொன்
Senneri - செந்நெறி
Sevakan - சேவகன்
Sevalon - சேவலோன்
Seyyan - செய்யன்
Shivan - சிவன்
Silampan - சிலம்பன்
Silan - சீலன்
Singkam - சிங்கம்
Siththan - சித்தன்
Siththar - சித்தர்
Sittan -
சிட்டன்
Sivakkozundhu - சிவக்கொழுந்து
Sivalokan - சிவலோகன்
Sivamurththi - சிவமூர்த்தி
Sivan - சி

Sunday, April 19, 2015

குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.

கடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.

தலைமுறைகள் கடந்து வாழும் நம்மில் பலருக்குத் தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது. சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும் வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குலதெய்வ வரிசையில் வருவதில்லை.

குலதெய்வம் என்பது ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.

ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது. அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.

இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். 

எப்போது வழிபடுவது?

கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய் கின்றார்கள்.

வழிபாடு பலன்கள்...........

குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.

திருச்செந்தூர் முருக கடவுளே குலதெய்வம்..........

பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.

இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.

பகவத் கீதை தரும் விளக்கம்....... 

குல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:- யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.

உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குல தெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற் றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது. 

ராசிப்படி குலதெய்வம்.....

ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.

ராசி - குலதெய்வம்

மேஷம் - மதுரைவீரன்
ரிஷபம் - ஐயனார்
மிதுனம் - காளியம்மன்
கடகம் - கருப்பன்னசாமி
சிம்மம் - வீரபத்திரன்
கன்னி - அங்காளம்மன்
துலாம் - முனீஸ்வரன்
விருச்சிகம் - பெரியாச்சி
தனுசு - மதுரைவீரன்
மகரம்- ஐயனார்
கும்பம் - காளியம்மன
மீனம் - மதுரைவீரன்