Tuesday, September 13, 2016

தம்பிரான் சித்தரின் சமாதி பீடம்

கொங்கண சித்தரின் ஒளி ஐக்கியம் பீடம் ...மற்றும் தம்பிரான் சித்தரின் சமாதி பீடம் --ஊதியூர்.

கொங்கண சித்தரின் ஒளி ஐக்கியம் பீடம் ...மற்றும் தம்பிரான் சித்தரின் சமாதி பீடம் --ஊதியூர்.

>> பொன்னூதிமாமலை எனும் ஊதியூர் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஊராகும் ..இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இம்மலையின் பழமையான பெயரே பொன்னூதிமாமலை என்பதாகும் .
>> ஊதியூர் மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது மிகவும் பழமை வாய்ந்த கோவிலில் "உத்தண்டவர்" எனும் திருநாமத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார் ..இங்குள்ள உத்தண்டவர் கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் .இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் ..
>> பின்பு சற்று தள்ளி மேலே "தம்பிரான் சித்தர் சமாதி" உள்ளது . ""தப்பித்தது தம்பிரான் புண்ணியம்"" எனும் பழமொழி இன்னும் நமது பேச்சு வழக்கத்தில் உள்ளது ...ஆபத்தின் உச்சிக்கு சென்றவர் கூட தம்பிரானை தரிசிக்க -மயிரிலையில் அவர்கள் காப்பாற்றப் படுவார்கள்..தம்பிரானின் ஜீவ சமாதி இங்குதான் உள்ளது .இவ்விடம் வந்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் .தமது அடியார்களை துணிந்து காப்பதில் வல்லண்மை பொருந்திய தம்பிரானுக்கு இவ்விடம் மட்டுமே சன்னதி உள்ளது ..வேறு எங்கும் இருப்பதாக நான் அறியவில்லை ..
>> "தம்பிரான் சித்தர் சமாதிக்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு மலை பாதையில் நடந்து சென்றால் வருவது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான வல்லண்மை பொருந்திய "கொங்கண சித்தரின் " பல ஆண்டுகள் தவம் செய்து பரிபூரண கிருபை பொருந்திய இடமாகும் ..இங்கு தான் கொங்கண சித்தர் பல ஆண்டுகள் தவம் செய்துள்ளார் . சொர்ண ஆகார்ஸன பைரவ பெருமான் கொங்கண சித்தருக்கு காட்சி தந்து பொன்னை செய்யும் கலையை அருளியுள்ளார் ..
>> அதற்கும் சற்று மேலே கொங்கண சித்தரின் ஒளி ஐக்கியம் பெற்ற குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் . அமைதியான சூரிய வெளிச்சம் உள்ளே வரமுடியாத ....தவத்திற்கு ஏற்ற .... அருமையான இடமாகும்..படத்தில் நாங்கள் குகைக்குள் அமர்ந்து இருக்கிறோம் கேமரா வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல் தெரிகிறது ...உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி ...உள்ளே வரவும் ..வெளியே செல்லவும் படுத்து தவழ்ந்து தான் போக ,வரமுடியும்

>> இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது ..அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை செய்த மலையாதலால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது ..கொங்கன சித்தர் இம்மலையில் தான் பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார் .நன்றி மறந்த தன்மையுடனும் சுயநலமும் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி பொன் செய்யும் கலையை விடுத்து ..அவர் வைத்திருந்த பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர் தம்பிரான் சித்தரிடம் கொடுத்து ..இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என கூறி மறைத்து வைக்கும்மாறு சொல்லி தவத்தில் ஆழ்ந்தார் .கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்று குரு தண்டனை பெற்று திருவருளால் அருகில் உள்ள நீரூற்றில் ஜல சமாதியானார் ..

> ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி எல்லோருக்கும் அளிப்பார்கள் ,முடிந்தவர்கள் சென்று ரசத்தை அருந்தி வாருங்கள் .கொங்கணர் ஜனன நட்சத்திரம் உத்திராடம் அன்று குரு பூஜை நடைபெறுகிறது ...அருமையான பார்க்க வேண்டிய புண்ணிய தலம் ஒரு முறை சென்று வாருங்கள்

Friday, September 9, 2016

திருச்செந்தூர் முருகன்

💜 திருச்செந்தூர் முருகன் 💜

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார்.

அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.

பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, பிறகு "திருச்செந்தூர்' என மருவியது.

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.

மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

திருசெந்தூரில் குரு அம்சமாக அருளோடும் கருணை பொழியும் முகத்தோடும் கடலோரத்தில் காட்சி தருகிறார் ..முருக பெருமானை ஆராதனை செய்து ஆலயம் எழுப்பி அறப்பணி ஆற்றிய அடியார்கள் மூவரின் ஜீவசமாதி கோவிலுக்கு அருகே வாகனம் நிறுத்துமிடத்தில் உள்ளது ...மூவர் சமாதி கோவில் என கேட்டால் சொல்வார்கள் ..

1.ஸ்ரீ மௌன சாமி,
2.ஸ்ரீ காசி சாமி,
3.ஆறுமுக சாமி ,

மூவர் சமாதிகள் அடுத்தடுத்து வரிசையாக உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டியது இவர்கள்தான், ஒரு 10 நிமிடம் சமாதியில் அமர்ந்து நமது கோரிக்கையை வேண்டினால் உடனே நடைபெரும்.

இங்கு தரும் பன்னீர் இலை அபி ஷேக விபூதி தீராத நோய்கள் தீர்க்கும் அற்புதமான பிரசாதம். மேலும்
பஞ்சலிங்கம், வள்ளி குகை,நாழிகிணறு ஆகிய இடங்கள் வரலாற்று சிறப்புடையவை. அனைவரும் நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.

ஓம் சரவணபவ குகனே சரணம்

Thursday, September 8, 2016

கற்களின் தரம் அறிவது எப்படி???*

*கற்களின் தரம் அறிவது எப்படி???* 


*முத்து* :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.


*மரகதம்* :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.


*பச்சைக்கல்* :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.


*வைரம்* :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.


*பவளம்* :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.


*கோமேதகம்* :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும். 


*புஷ்ப ராகம்* :- சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.


*வைடூரியம்* :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.


*நீலக்கல்* :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.


 அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

Wednesday, September 7, 2016

ஓம் ஓம் குரு குரு சப்தரிஷிகளே சரணம்

ஓம் ஓம் குரு குரு சப்தரிஷிகளே சரணம்

நட்புக்களே இன்றைய பதிவு மிகமிக மிக முக்கியமான பதிவு.பல பேர் அறியாத விஷயங்கள்,படிக்க தவறாதீர்கள் .

இந்த கலியுகபடைப்பாளிகள்தான் இந்த சப்தரிஷிகள்.அனைத்து ஜீவராசிகளும் மனித இனமும் .பல சித்தர்களும் தோன்ற காரணமான முனிவர்கள். மனித இனத்தின் விதையே இவர்கள்தான்...

காச்யப முனிவர் 🌷
******************

தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து தோன்றியதே மனித குலம்!

அத்ரி முனிவர் 🌷
***************

இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும் அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை வாழ்த்துகிறது ரிக்வேதம்.

பரத்வாஜர் முனிவர் 🌷
*********************

இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர் என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

விஸ்வாமித்திரர் முனிவர் 🌷
***************************

இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர். விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு
.

கவுதமர் முனிவர் 🌷
*******************

அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.

ஜமதக்னி முனிவர் 🌷
********************

துஷ்டர்களை அடக்க அவதாரம் ஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

வசிஷ்டர் முனிவர் 🌷
********************

அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும் சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம் வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி! ஆவணி மாத வளர்பிறை 5-ம் நாளில் இவர்களை வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது புராணம்.

குரு நாளில் மட்டுமில்லாது அனைத்து நாட்களிலும் இவர்கள் காயத்ரி ஜெபிக்க
சகல தோஷங்களும் விலகும். இது பலர் அறியா ரகசிய வழிபாடாகும்.வழிபட்டு பயன்பெறுங்கள் நண்பர்களே. ..

🌻 சப்தரிஷிகள் காயத்திரி மந்திரங்கள்🌻
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காஸ்யபர்
ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தன்னோ காஸ்யப ப்ரசோதயாத்

அத்ரி
ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தன்னோ அத்ரி ப்ரசோதயாத்

பரத்வாஜர்
ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தன்னோ பரத்வாஜ ப்ரசோதயாத்

விஸ்வாமித்ரர்
ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தன்னோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்

கவுதமர்
ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தன்னோ கௌதம ப்ரசோதயாத்

ஜமதக்னி
ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தன்னோ ஜமத்கனி ப்ரசோதயாத்

வசிஷ்டர்
ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரம்ஹசுதாய தீமஹி
தன்னோ வசிஷ்ட ப்ரசோதயாத்

ஓம்சிவசிவஓம் 🌸 ஓம்சிவசிவஓம்

Monday, September 5, 2016





8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்

சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அகமுடையார் குலத்தில் பிறந்தார் என போகர் தெரிவிக்கிறார். யோகத்தில் நீண்ட காலம் அமர்ந்திருந்து சித்துக்கள் பல புரியும் ஆற்றல் பெற்றுள்ளார். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார். இவரின் குரு சட்டை முனி என்று சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.
அபிஷேக பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் சச்சிதானந்த வடிவாகிய சுந்தரானந்த சித்தர் மதுரையம்பதி கடை வீதி, சித்திரக்கூடம், நாற்சந்தி வீதி, உப்பரிகை போன்ற இடங்களில் திரிந்து பல சித்துக்களை விளையாடினார். இந்திரஜாலமாக மறைந்தும், பெண்ணை ஆணாக்கியும், ஆணை பெண்ணாக்கியும், ஊனமுற்றவர்களை சுகப்படுத்தியும், இரும்பு, செம்புகளை தங்கமாக்கியும் பற்பல ஜாலங்கள் புரிந்திருக்கிறார். இதைக் கண்டு அதிசயித்த மக்கள் மன்னனுக்கு செய்தியை தெரிவித்தனர். மன்னன் சித்திரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனை தன்னை வந்து பார்க்கும் படியாகச் சொல்லியனுப்பினார்.
சித்தரை சந்திக்க அரசர் ஆவலோடு வந்தார். சித்தரிடம் ஊர், பேர் முதலியவைகளைக் கேட்க தாம் பல சித்து விளையாட்டுகளை செய்து காட்டும் சித்தரெனக் கூறினார். அப்போது கையில் கரும்புடன் ஒருவன் வந்தான் அதைக்கண்ட அரசர் அக்கரும்பை வாங்கி சித்தரிடம் கொடுத்து “இக்கரும்பை இங்கு கற்சிலையாக நிற்கும் கல்யானையை உண்ணும்படிச் செய்தால் நீங்கள் சித்தர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றார்.
சித்தரும் சம்மதித்து கரும்பை கையில் வாங்கி கல் யானையிடம் நீட்டி கண்ணசைத்தார். அனைவரும், அரசரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கல்யானை துதிக்கையை நீட்டி கரும்பை வாங்கி உண்டு ஏப்பம் விட்டு பிளிரியது. அரசனும் அனைவரும் அதிசயித்து அன்பும், பக்தியும் பெருக்கெடுக்க சித்தர் திருவடிகளில் வணங்கினர்.
நிமிர்ந்த போது யானை மறுபடியும் கல்யானையாக காட்சியளித்தது. சித்தரும் கோவிலுக்குள் சென்று மறைந்தார். இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சித்த்தராக சமாதியில் வீற்றிருக்கின்றார்.


சுந்தரானந்தர் இயற்றிய நூல்கள்:

1. சுந்தரானந்தர் காவியம்
2. சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
3. சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
4. சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
5. சுந்தரானந்தர் கேசரி
6. சுந்தரானந்தர் சித்த ஆனம்
7. சுந்தரானந்தர் தீட்சா விதி
8. சுந்தரானந்தர் பூசா விதி
9. சுந்தரானந்தர் அதிசய காரணம்
10. சுந்தரானந்தர் சிவயோக ஞானம்
11. சுந்தரானந்தர் மூப்பு
12. சுந்தரானந்தர் தண்டகம்
ஆகிய நூல்களை எழுதினார். மேலும் பயிர் தொழில் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் கூறியுள்ளார்.


தியானச்செய்யுள்

சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவரே
ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்பதி வாழ் மகத்துவமே
உன் பாதம் சரணம்.


சுந்தரானந்தர் பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் ஐந்து முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.


பதினாறு போற்றிகள்

1. ஒளி பொருந்தியவரே போற்றி!
2. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
3. லோக ஷேம சித்தரே போற்றி!
4. யோக மூர்த்தியே போற்றி!
5. அவதார புருஷரே போற்றி!
6. அபயமளிப்பவரே போற்றி!
7. சிவ யோகியே போற்றி!
8. இந்திரனுக்கு அருளியவரே போற்றி!
9. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
10. சகல சித்திகளையும் உடையவரே போற்றி!
11. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
12. சுகங்களைத் தருபவரே போற்றி!
13. தாய் போல் காப்பவரே போற்றி!
14. தண்டனைகளை நீக்குபவரே போற்றி!
15. தைரியத்தை கொடுப்பவரே போற்றி!
16. சித்த மருத்துவத் தெய்வமே ஸ்ரீ சுந்தரானந்த சித்தரே போற்றி! போற்றி!
எனக் கூறி நிவேதனமாகக் கடலை, வெண்பொங்கல் படைத்து இவற்றுடம் மஞ்சள் வஸ்திரம் அல்லது காவி வஸ்திரம் படைத்து வியாழன் அன்று வழிபட வேண்டும். நிறைவாக “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சுவாமியே போற்றி! போற்றி!” என 108 முறை கூறி வழிபட வேண்டும்.


சுந்தரானந்த சித்தரின் பூசை பலன்கள்:

1. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
2. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை ஏற்படாது.
3. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
4. புத்திர பாக்கியம் உண்டாகும்.
5. குரு பிரீதி அடைவர்.
6. புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. சித்த பிரமை அகலும்.
8. ஞாபக சக்தி அதிகரிக்கும்.
9. வறுமை அகன்று வளமான வாழ்வு அமையும்.
சுந்தரானந்த சித்தர் வரலாறு முற்றிற்று.





கோவில் கருவறையின் தேவ ரகசியம்

கோவில் கருவறையின் தேவ ரகசியம்


மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது.இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் டங்கியுள்ளன.வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள்,பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும்.பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர்.எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி

எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும்
பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு.
கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும்.ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள்.
இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.

அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள்பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன.

 இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன.
மிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது.மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.கஜம் என்றால் யானை,ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம்.இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். 

அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும்,பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை.கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம்.மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள்.கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை
கர்ப்பக கிரக லட்சணம் என்றனர்.கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். 


இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும்.உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர்.


கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன.அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது.வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.


கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும்.இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது.கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள
யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும்.இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும்.இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். 


அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம்.குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம்.இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதையாராலும் மறுக்க முடியாது.

இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது.கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம்,குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.



கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்தியமருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும்.கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள்.தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். 

திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்தஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.


கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.

ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.


இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன்‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன.

எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.வெளியே வெயில் உள்ளே குளிர்ச்சி கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. 

இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்தகல்லால் ஆனது.இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும். 

அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்

கோவில்களில் அர்ச்சனை செய்வதன் முக்கியத்துவம் என்ன?

கோவில்களில் அர்ச்சனை செய்வதன் முக்கியத்துவம் என்ன?

 அர்ச்சனை செய்பவரின் பெயருடன் நட்சத்திரம், கோத்திரம் இவற்றை ஏன் சொல்கிறார்கள்?

சத்குரு: சில குறிப்பிட்ட வழிகளில் தெய்வங்கள் உருவாக்கப்பட்டபோது, பெயர், நட்சத்திரம், கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது போன்ற விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. 

வாழ்க்கையின் நுட்பமான தாத்பரியங்களை புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட கலாச்சாரம் இது. ஆனால் அதை ஒரு தலைமுறையிலிருந்து, மற்றொரு தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அமைப்புகள், கடந்த ஆயிரத்து எண்ணூறு வருடங்களில், படையெடுப்புகள் மற்றும் பல காரணங்களால் மோசமாக நிலைகுலைந்துவிட்டன. 

இல்லாவிட்டால், இது மிக நுணுக்கமான ஒரு விஞ்ஞான முறையாக இருந்திருக்கும். இப்போது இவை மிகவும் தாறுமாறாக ஆகிவிட்டன. ஆசியாவை சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட விதமான மரபணு இருப்பதால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அக்காலத்தில், அனைவரும் அனைத்துக் கோவில்களுக்கும் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. 

சில கோவில்கள் மட்டும் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் கட்டப்பட்டிருக்கும். அங்கு மட்டும் அனைவரும் சென்று வந்தனர். ஆனால் குறிப்பிட்ட சில பலன்களுக்காக, பிரார்த்தனைகளுக்காக என்றால், மக்கள் அவரவர் குலதெய்வங்களின் கோவிலுக்குத்தான் சென்றனர். இன்றும் கூட அந்தப் பழக்கம் சிலகுடும்பங்களில் எஞ்சியிருக்கிறது. 

ஆனால் அந்த தெய்வங்கள் முன்போல் விஞ்ஞான முறைப்படி உருவாக்கப்படுவதில்லை. யாரோ ஒருவர் நூறு வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டாலும், இன்று அந்த உடலைத்தேடி, தோண்டி எடுத்து, அதில் ஒரு சிறு எலும்புத் துண்டு கிடைத்தாலும் அதை பரிசோதனைக்கூடத்தில் மரபணு சோதனையெல்லாம் செய்து, ‘இவர்தான் உங்கள் தாத்தா’ என்று சொல்ல முடியும். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்த யாரோ ஒருவருடைய எஞ்சிய பாகத்தை வைத்து பரிசோதனைகள் செய்யமுடியும். 

எகிப்தில் இருக்கும் மம்மிக்களின் மரபணுவை எடுத்து பரிசோதித்து, அதை இப்போது எகிப்தின் தெருக்களில் நடந்து போய்க் கொண்டிருக்கும் யாரோ ஒருவருடைய மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இவர்தான் அந்த மம்மியின் வம்சாவழியில் வந்தவர் என்று சொல்ல முடியும். நவீன விஞ்ஞானம் இந்த வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கியுள்ளது. 

இதேபோலத்தான், நாமும் நம் குல தெய்வத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் அனைத்தையுமே நாம் சரியாக பராமரித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். சமீபத்தில் ஹரியானாவில் காப் பஞ்சாயத்துக்களில் ‘ஒன்றுவிட்ட அண்ணன் தங்கைளுக்குள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, அது பாவம்‘ என்று போராட்டங்கள் நடந்தது உங்களுக்குத் தெரியும். 

அவர்கள் இதையெல்லாம் புரிந்து கொண்டு போராட்டம் நடத்துகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் அதை புரிந்துகொண்டு செய்திருந்தால், அவர்களுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் அவர்களுடைய வழக்கங்களை உடைக்கிறீர்கள் என்று அவர்கள் போராட்டம் நடத்தினாலும், ஆயிரக்கணக்கான வருடங்களாக தங்களது வம்சாவளி அமைப்பை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமுறை, தலைமுறையாய் தொடரும் கோத்திர முறையை குழப்பாமல் இருந்தால் புதிய தலைமுறைகள் நல்ல முறையில் உருவாகும் என்பதால் அதில் குழப்பம் ஏற்பட அவர்கள் விரும்பவில்லை. 

அது மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட ஒரு சக்தியின் இழையை தொடரச்செய்ய முடியும். அப்படி இருந்தால் உங்கள் குலத்தில் இருப்பவர்கள் அனைவருமே கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் மட்டும் சென்று பிரார்த்தித்தால், அனைவரும் பலனடைவார்கள். ஏனென்றால் அனைவருமே ஒரே சக்தியின் ஒருங்கிணைப்பில் இருக்கிறீர்கள். நாளைய மருத்துவ அறிவியல் இப்படிப்பட்ட ஒரு புதுமையை நிகழ்த்தலாம். உங்கள் மரபணுவுக்கு மட்டும் செயல்படுவதைப் போன்றதொரு விஷயத்தை அவர்கள் கண்டுபிடித்தால், அதை காற்றில் பரவவிட்டால், அதே மரபணுவகை இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் அதன் நன்மைகள் உடனடியாகக் கிடைக்கும்படி செய்யலாம்.

 அதற்கு வாய்ப்பு உண்டு. ஆசியாவை சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட விதமான மரபணு இருப்பதால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அமெரிக்கர்களுக்கு வேறுவிதமான மரபணுக்கள் இருப்பதால், அவர்களுக்கு வேறுவிதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆகவே நீங்கள் ஒரே ஒரு மாற்று வகை உணவை, ஆசியர்களின் உணவுமுறையில் புகுத்திவிட்டால், மக்கள் வாழும் முறைகளையே மாற்றிவிட முடியும். அமெரிக்காவில் இது நடந்திருக்கிறது. பிரட் தயாரிப்பில் குறிப்பிட்ட ஒரு பொருளை மாற்றியதன் மூலம், ஆயிரத்தித் தொள்ளாயிரத்து ஐம்பது, அறுபதுகளில் அந்த நாட்டில் நிலவி வந்த பல நோய்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. 

ஏனென்றால் அந்த மக்களெல்லாம் குறிப்பிட்ட வகையான மரபணு உடையவர்களாக இருந்ததால், அவர்களுடைய நோய்களுக்கு அதைப் பற்றிய விவரங்கள் தெரியாமலேயே பிரட் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இந்தியாவில் இன்று இருப்பதைப் போன்று அப்போது அமெரிக்காவில், நீரிழிவு நோய் மிகக் கடுமையாகப் பரவியிருந்தது. 

ஆகவே ‘டி3’ என்ற வைட்டமினை மக்களின் உணவில் சேர்த்தால், நீரிழிவு நோய் நீங்கிவிடும் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். பிரட்டை தயாரிக்கும்போது, ‘டி3 வைட்டமினை’ சேர்த்தார்கள். இன்று அமெரிக்காவில் நீரிழிவு நோய் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டது. அந்த நோய் இப்போது நம்மிடம் வந்திருக்கிறது. ஆனால் ஆசிய மரபணு உள்ளவர்களுக்கு ‘டி3 வைட்டமின்’ வேலை செய்யாது. 

நமக்கு வேறு ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே நம் கலாச்சாரத்தில் இதைப் புரிந்து கொண்டு, ‘வம்சாவழி’ என்னும் முறையை மிகவும் நேர்த்தியாக பராமரித்து வந்தார்கள். அத்தோடு தங்களுடைய சக்திநிலையின் ஆதாரத்தை நிலை நாட்டி வைத்திருந்தார்கள். கோவிலுக்குப் போகும் போது, அவர்கள் எங்கோ மேலே இருக்கும் கடவுளிடம் பேசுவதில்லை. அவர்கள் தங்களையே பதிவு செய்துகொள்கிறார்கள். 



‘இது நான், நான் இந்த வம்சாவழியைச் சேர்ந்தவன், இது என் கோத்திரம், இது என் நட்சத்திரம், இது என் குலம்‘ என்று அவர்கள் பதிவுசெய்து கொள்கின்றனர். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ‘இதுதான் என் மரபணு. எனக்கு நல்லது செய்து கொடு,’ என்று வேண்டுகிறார்கள். இது ஒரு விஞ்ஞானபூர்வமான வழி. ஆனால் ‘வம்சாவழி’ என்னும் தன்மை சரியான கண்ணோட்டத்தோடு தொடரப்படாததால், இன்று அனைத்துமே ஒன்று கலந்துவிட்டன. 

இன்று பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நீங்கள் காதலில் விழுகிறீர்கள். அவள் எந்த குலமாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள். உங்கள் விருப்பங்கள்தான் உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டன. ஆகவே இதுபோன்ற விஷயங்கள் முக்கியத்துவம் இழந்துவிட்டன. ஆனால் இவற்றையெல்லாம் சரியாக பராமரித்திருந்தால், இவையெல்லாம் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையவையாக இருந்திருக்கும். வாழ்க்கையைப் பற்றியும், மரபணுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் அற்புதமான புரிதல்களாகவும் இருந்திருக்கும்

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?



வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.


பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம்.பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. 

முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.

தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.

பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு.


மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.

மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர்

பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.


மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார்

மன ஆரோக்கியம் என்றால் என்ன?

மன ஆரோக்கியம் என்றால் என்ன?

மன ஆரோக்கியம் என்பது, நமது வாழ்க்கையை அனுபவிக்கவும் அன்றாட வாழ்வின் தேவைகளை சமாளிக்கவுமான நமது திறன் ஆகும்.
நல்ல மன ஆரோக்கியம் என்பது நாம் உற்பத்தித் திறன் கொண்டிருக்கவும், மற்றவர்களுடன் நிறைவான உறவுகளைக் கொண்டிருக்கவும், மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவும், சோதனையான நேரங்களை சமாளிக்கவும் உதவுகிறது.
மன ஆரோக்கியத்திற்கு பல கூறுகள் பங்களிக்கின்றன:
  • சுய நம்பிக்கை மற்றும் சுய அறிவு
  • உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி
  • குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் உறவுகள்
  • நிதிநிலைகள்
  • சமூக ஈடுபாடு
  • மனஅழுத்தத்தை நீங்கள் சமாளிக்கும் விதம்
  • உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தும் விதம்
குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்கு நாம் முறையற்ற வகையில் எதிர்வினை காட்டுவது அல்லது விரக்தியாக அல்லது "ஊக்கம் குன்றியதாக" ("down") உணர்வது போன்றவற்றை நாம் அனைவருமே சில நேரங்களில் அனுபவிக்கிறோம். நல்ல மன ஆரோக்கியம் கொண்ட நபர், இத்தகைய நேரங்களை சமாளிக்கவும் விரைவாக அதைக் கடந்து செல்லவும் இயலும்.
புதிய நாட்டுக்குக் குடிவரவு செய்யும்போது நல்ல மன ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதாவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து தனிமைப்படுவது, நிதிநிலை உறுதிப்பாட்டை இழப்பது, புதிய மொழியைக் கற்பது, புதிய பண்பாட்டுக்கு தகவமைத்துக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறனுடையவராக நீங்கள் இருக்க வேண்டும்.
yours Happily
Jc.Dr.Star Anand Ram
www.moneyattraction.in

விநாயகரை வணங்குவதால் என்ன பயன் கிடைக்கும்?

விநாயகர் கடவுளே கிடையாது சித்தர்கள் ரகசியம் 


விநாயகரை வணங்குவதால் என்ன பயன் கிடைக்கும்?

விநாயகப் பெருமான், சிவசக்தியின் முழுமையான திருவருள் பெற்ற தெய்விக பக்தர் ஆவார். விநாயகரை வழிபடுவதால் ஒருவர் மூன்று பயன்களை அடையலாம் என ஔவையார் கூறுகிறார்.

"வாக்குஉண்டாம் நல்ல மனம்உண்டாம் மாமலராள் 
நோக்குஉண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்புஆர் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு"
-மூதுரை

இப்பாடலில் விநாயகனை வணங்குகிறவர்கள் பெறும் பயன்களாகப் பின்வருவனவற்றை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
1. சொல்வன்மை பெருகும்.
2. உறுதியான மனமும் நல்ல எண்ணங்களும் உருவாகும்.
3. செல்வ வளம் பெருகும். 

சரஸ்வதி, லட்சுமி, பார்வதி - ஆகிய முப்பெரும் சக்தியின் திருவருளையும் விநாயகப் பெருமானை வணங்குவதால் பெறலாம்.

செல்வம் என்றால் ரூபாய் நோட்டு அல்ல. செல்வம் என்றால் மகிழ்ச்சியான வாழ்க்கை, ஆரோக்கியமான வாழ்க்கை, நீண்டநாள் வாழ்க்கை, நல்ல பண்புடைய பிள்ளைகள் போன்றவை ஆகும்.

தெய்வங்களை பூஜிக்க பொன்னோ பணமோ தேவையில்லை; மலர்களே போதும். பூக்களைக் கொண்டு வழிபாடு செய்வதால் தான் இதற்கு 'பூசெய்' என்ற பெயர் வந்தது.

பூஜை செய்யும்போது முழுமனதுடன் வேறு எதையும் சிந்திக்காமல் இறையருளை மட்டுமே வேண்டி செய்யவேண்டும். இதையே ஔவையார் 'மேனி நுடங்காது' என்றார்.

சொல் விளக்கம்:

வாக்கு உண்டாம் - சொல்வண்மை பெருகும்
நல்ல மனம் உண்டாம் - உறுதியான மனமும் நல்ல எண்ணங்களும் வளரும்
மாமலராள் - லட்சுமிதேவி
நோக்கு உண்டாம் - திருவருள் கிடைக்கும்
மேனி நுடங்காது - உடலில் சோர்வு இல்லாமல்
பூக்கொண்டு - பூக்களைக் கொண்டு வழிபடுதல்
துப்புஆர் திருமேனி தும்பிக்கையான் - பவளம் போன்ற திருவுடலை உடைய விநாயகர்
பாதம் - திருவடி
தப்பாமல் சார்வார் தமக்கு - மறவாமல் வணங்குபவர்களுக்கு