Monday, August 4, 2014

வெற்றியின் படிகள் மூன்று


வெற்றியின் படிகள் மூன்று

ஒரு செயலினை சிறப்பாக செய்து முடிப்பதற்கு தன்னறிவு, தன்னம்பிக்கை, சுய முயற்சி ஆகியவை தேவை. இவை மூன்றும் தான் வெற்றியின் முக்கிய மூன்று படிகள். எந்த வேலை தன்னறிவுடனும், ஆழ்ந்த ஈடுபாட்டு டனும் செய்யப்படுகிறதோ அந்த வேலையே மிகச்சிறந்த பலனைத் தருகிறது.
தன்னறிவு

தன்னைப் பற்றிய அறிவு, தனது தகுதிகள், திறமைகள், எல்லைகள் ஆகியவற்றை ஒருவன் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இது எல்லோருக்கும் அவசியம். இது பற்றிய ஒரு பழமையான கருத்து உள்ளது.

தெரியாது என்று தெரியாதவனுக்குத்

தெரியாதுஅவனை விட்டுவிடு

தெரியாது என்று தெரிந்தவனுக்கு

தெரியாதுஅவனுக்குக் கற்றுக்கொடு

தெரியும் என்று தெரியாதவனுக்குத்

தெரியும்அவனை விழிக்கச் செய்

தெரியும் என்று தெரிந்தவனுக்கு

தெரியும்அவனைப் பின்பற்று.

தன்னம்பிக்கை

சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்களைப் பற்றி தெரியும். அவர்களும் வாழ்க்கையில் தோல்வி காண்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? தன்னம்பிக்கை இல்லாமை. அறிவையும் செயலையும் இணைக்கின்றசங்கிலி அது. நம்மைப் பற்றிய அறிவு நமது முயற்சிகளில் இணைந்து வெற்றியைத் தர வேண்டுமானால் தன்னம்பிக்கை வேண்டும்.

தன்னம்பிக்கை என்றால் என்ன? நமது மனத்தை நம்புவது தான் தன்னம்பிக்கை.

ஆனால் காமம், கோபம் போன்ற எதிர்மறைப் பண்புகள் பல நமது மன ஆழங் களில் உள்ளன. அப்படி இருக்கின்றமனத்தை எப்படி நம்புவது? இதனால்தான் பலர் தங்களை விட அடுத்தவர்களை அதிகமாக நம்புகின்றனர்.

காமம் முதலானவை நம்மில் இருப்பது உண்மைதான். ஆனால் அதே மன ஆழங்களில்தான் அன்பு, கருணை, தூய்மை, சிறப்பு, ஆற்றல் போன்றநற்பண்புகளும் உள்ளன. அவற்றில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

உலகம் உண்மையிலேயே நல்லது. நன்மையும் உண்மையும் எங்கே உள்ளனவோ அங்கே வெற்றி உறுதி என்பதனைப் பரிபூரணமாக நம்பினால் மன ஆழங்களில் உள்ள நற்பண்புகள் தாமாக வெளிப்படத் தொடங்கும். இந்த நற்பண்புகள் தீய பண்புகளைப் படிப் படியாகக் கட்டுப்படுத்தத் தொடங்கும். மனத்தைத் தூய்மை செய்தல் என்று இதையே நாம் சொல்கிறோம்.

இவ்வாறு தீய பண்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு நாம் மனத்தை நம்பலாம். இது ஒருவிதமான தன்னம்பிக்கை.

மற்றொரு தன்னம்பிக்கையும் உள்ளது. நம்மில் ஆழ்மனம் என்றஒன்று இருப்பது போலவே ஆன்மா என்றஒன்றும் உள்ளது. இது நமது உயர் பரிமாணம். இந்த ஆன்மா தெய்வத்திலிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சம். இதுதானே ஒளிர்வது. ஆனந்த மயமானது. சுதந்திரமானது. எல்லா அறிவிற்கும் ஆன்மீக சக்திக்கும் இருப்பிடம் அதுவே. அதன் ஒளியைச் செலுத்துவதன் மூலம் மனத்தின் எந்தப் பகுதியையும் தூய்மையாக்கலாம், கட்டுப்படுத்தலாம்.

இந்த ஆன்மாவே நமது உண்மை இயல்பு. இந்த ஆன்மாவில் நிலைபெற்று, அதைச் சார்ந்து வாழ்வதும் தன்னம்பிக்கைதான். இது உயர்நிலை தன்னம்பிக்கை.

சுயமுயற்சி

தன்னறிவும், தன்னம்பிக்கையும் ஒருவனை வெற்றிக்குத் தகுதியுடையவன் ஆக்குகின்றன. ஆனால் வெற்றி கிடைக்க வேண்டுமானால் மூன்றாவது ஒன்று அதற்கு வேண்டும். அதுவே சுயமுயற்சி.

தன்னம்பிக்கை என்பது செயலில் பிரதி பலிக்க வேண்டும். இல்லாவிட்டால் தன்னைப் பற்றியே நினைத்து நினைத்து ஒருவன் தனக்குள்ளே அமுங்கிப் போவதற்கான (ஐய்ற்ழ்ர்ஸ்ங்ழ்ள்ண்ர்ய்) வாய்ப்பு உண்டு. இது மனநலத்திற்கு மிகவும் ஊறு விளைவிப்பதாகும்.

அறிவு, கல்வி போன்றவற்றிற்கு வாழ்க்கையில் உண்மையிலேயே பலன் உண்டு. ஆனால் அவற்றையே முதலும் முடிவுமாகக் கொண்டு அவற்றிலேயே மூழ்கிக் கிடப்பது ஒருவன் முயற்சிகளில் ஈடுபடாமல் தடுக்கிறது. அவனை எதற்கும் உதவாத சோம்பேறி ஆக்குகிறது.

வாழ்க்கையில் செயல்படுத்தி, பரிசோதிக்கப் பட்டால் மட்டும் அறிவினால் பலன் உண்டு. அப்படி பரிசோதிப்பது எப்படி? வேலைகளின் மூலம் தான்.

செயல்முறைஅறிவு இல்லாமல் வெறும் புத்தக அறிவு மட்டுமே கொண்ட ஒருவனிடம் யாரும் போய் உதவி கேட்க மாட்டார்கள். நடைமுறையில் வாழ்ந்து காட்டாதவனால் தனக்கும் பிரயோஜனம் (உபயோகம்) இல்லை, மற்றவர்களுக்கும் பயனில்லை. நமது துன்பங் களில் பாதி அறியாமையினால் உண்டாகிறது என்றால், மீதி, வேலை செய்யாமல் சோம்பேறி யாக இருப்பதால் உண்டாகிறது.

நாம் ஏன் வேலை செய்யாமல் இருக்கிறோம்? எங்கே தவறுகள் நேர்ந்து விடுமோ என்றபயத்தால்தான்.

ஆனால் சும்மா இருப்பதால் இந்த பயம் போகாது. வேலைகள் செய்வதன் மூலமே இந்தப் பயத்தைக் கடக்க முடியும். எனவே வேலை செய்வதால் அதிக தவறுகள் உண்டாகும் என்றாலும் தயங்காமல் வேலை செய்தே தீர வேண்டும்.

என்னுடைய மாணவர்களிடம் நான், “ஒரு தவறு செய்வது போதாது, ஏழு தவறுகளாவது செய்யுங்கள்என்பேன். “எங்கே தவறு செய்து விடுமோமோஎன்று பயந்து கொண்டு இருப்பவன் நின்ற இடத்திலேயே நிற்கிறான். தயங்காமல், தவறுகளைப் பற்றி கவலைப் படாமல் செயல்படுபவன் முன்னேறிச் செல்கிறான்.

ஆன்மிக வாழ்வு என்று வரும்போது இதனைப் பிரத்தியட்சமாக காணலாம். புத்தகத்திலிருந்து ஆன்மீக சாதனைகள் பற்றி படிக்கின்றோம். குருவிடமிருந்து கேட்கிறோம். ஆனால் இவற்றைவாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

அதிகம் படிப்பதால் மனம் குழம்புகிறது. எல்லாவற்றையும் அடைந்து விட்டது போன்று பிரமை ஏற்படுகிறது. இது அறிவற்றவனாக இருப்பதை விட மோசமானது. அதனால்தான்வெறுமனே சில வார்த்தைகளைப் படிப்பதான வெற்றறிவு ஓர் அடர்ந்த காடு. இந்தக் காடு மனித மனத்தை வெறுமனே அலைந்து திரிய வைக்கிறதுஎன்று கூறப்படுகிறது.

ஞானம், பக்தி என்றெல்லாம் நாம் சொல்லிக் கொள்வதும் இந்தப் பிரிவிலேயே அடங்கும். பசித்தவனுக்கு உடனடியாக வேண்டியது உணவு. பசியைப் பற்றிய ஒரு கவிதையோ, சத்துணவைப் பற்றிய கட்டுரையோ அவனுக்குப் பயனற்றது.

அதுபோலவே, கடவுளுக்காக ஏங்குகின்ற மனிதன் பக்தியைப் பற்றியோ ஞானத்தைப் பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டான். கடவுளுடன் எப்படி நேரடியாகத் தொடர்பு கொள்வது என்ற ஒரே நோக்கத்துடன் தீவிரமாகப் பாடுபடுவான். சுயமுயற்சியுடன் கூடிய தன்னறிவும் தன்னம்பிக்கையும் நிச்சயம் வெற்றியை ஈட்டித்தரும்.


பேரா. ரா. பிரபாகரன்

தோல்விக்கான விதிகள்…



பிஸினஸில் தோல்வியைச் சந்திக்க பத்து விதிகள்’ – என்ன இதுதலைப்பே தடாலடியாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களாகோகோ – கோலா கம்பெனியின் முன்னாள் தலைவர் டொனால்ட் ஆர் கியோக் எழுதிய இந்த புத்தகம் தான் இன்றைக் ஹாட் கேக்காக விற்பனையாகிறது.
மாறுதல் நிறைந்த பிஸினஸ் உலகில் வெற்றி பெறத்தான் புதுப்புது விதிகளும்வழிகளும் தேவை. ஆனால் அவற்றை வரையறை செய்வது கடினம். இன்று சரியென்று தெரியும் பாதைநாளை தவறானதாக மாறிவிடும் வாய்ப்பு அதிகம்.
ஆனால்ஏற்கனவே தோல்வியைத் தழுவியஇனி தழுவப்போகும் அனைத்துபிஸினஸ்களும் எதைச் செய்ததால் / செய்தால் தோல்வியை உறுதியாகத் தழுவலாம்என்று பட்டியலிட்டால் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பத்தே விதிகள் தான்மிஞ்சும்.
இந்த விதிகளைத் தவிர்த்தாலே நீங்கள் வெற்றிக்கு வழி கண்டுவிடுவீர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும்இவற்றைப் பின்தொடர்ந்தால் தோல்விநிச்சயம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் டொனால்ட்.

வாழ்நாள் முழுக்க அவர் பெற்ற அனுபவத்தை சாறுபிழிந்துபிஸினஸ் மேனேஜர்களுக்கும் சி.இ.ஓ. களுக்கும் 10 விதிகளாகச் சொல்கிறார்.

1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.
2. 
மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்
3. 
மேனேஜரோ/சி.இ.ஓ.வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல்பழகாமல் தனிமையில் வாழுங்கள்.
4. 
நான் தவறே செய்யமாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.
5. 
தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள் தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.
6. 
எதையும் யோசித்து செய்யாதீர்கள்.
7. 
வெளியாட்களின் சிறப்பறிவை (எக்ஸ்பர்ட்டைஸ்) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.
8. 
உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான்எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்துஅனுபவியுங்கள்.
9. 
வரும்ஆனா வராதுகிடைக்கும்ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.
10. 
எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல்படுங்கள்.

இந்த விதிகளை விதிகளாக மட்டும் சொல்லாமல் அவருடைய நேரடியான சொந்தஅனுபவங்களிலிருந்து பல்வேறு உதாரணங்களைச் சுட்டிக்காட்டியும்அவருடையகேள்வி ஞானத்திலிருந்து பல்வேறு முன்னனி நிறுவனங்களில் நடந்த சில நடைமுறை உதாரணங்களைச் சுட்டிக்காட்டியும் எழுதியுள்ளார்.
உதாரணத்திற்குஉங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல் பழகாமல் தனிமையில் வாழுங்கள் என்ற விதியை ஃபாலோ செய்வது மிகவும் சுலபமானதுஎன்று அடித்துச் சொல்கின்றார் அவர். உங்களின் கீழ் வேலை பார்ப்பவர்களைஉங்களுக்குத் தொல்லை தருபவர்களாக நினைத்துக் கொள்ளுங்கள். எப்போதுபார்த்தாலும் உங்களிடம் வந்து அதில் பிரச்னை இதில் மாற்றம் தேவை என்றுநச்சரித்து உங்கள் நேரத்தை வீணடிப்பார்கள். உங்கள் நேரம் எவ்வளவு பொன்னானதுÐஎனவேஒருவரையும் உங்களை அண்டவிடாமல் வாழப் பழகுங்கள்.

கூட இருக்கின்றவர்கள் பேரைக்கூட தெரிந்து கொள்ளாதீர்கள். பேரைத் தெரிந்து வைத்து என்ன பிரயோஜனம்ஒருநாள் அந்த நபர் உங்கள் நிறுவனத்திலிருந்து வேலையைவிட்டு போய்விடுவார். பெயரைத் தெரிந்து வைத்துக்கொள்ள நீங்கள் செலவிட்ட நேரம் வேஸ்ட்தானேРஎன்று சுவாரஸ்யமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்.
இன்னமும் மேலேபோய் உங்கள் ஆபீஸில் போட்டோகாப்பியர் எங்கே இருக்கின்றதுஎன்பதைக்கூட தெரிந்து கொள்ளாதீர்கள். அப்போதுதான் நிச்சயமாகத் தோல்வியைத்தழுவ முடியும் என்பது அவர் செய்யும் உச்சகட்ட கேலி.

இப்படிச் செய்துவீட்டீர்கள் என்றால் உங்களை நாடி வருபவர்கள் எல்லோரும் நல்லசெய்தியை மட்டுமே கொண்டுவருவார்கள். இதையும் தாண்டி கெட்ட செய்திகளைதப்பித்தவறி யாரும் கொண்டுவந்து விட வாய்ப்புள்ளது. அதனால்எல்லோர்மனதிலும் பயத்தை உண்டு பண்ணுவதுபோல் நடந்து கொள்ளுங்கள். யாரும் உங்களை அண்ட மாட்டார்கள் என்கிறார்.

சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இருக்கும் இந்த புத்தகத்துக்கு வாரன்பஃபெட் முன்னுரை எழுதபில்கேட்ஸ்ஜாக் வெல்ச்ரூபர்ட் முர்டாக் போன்றபிஸினஸ் ஜாம்பவான்கள் இந்த புத்தகத்தைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தைத் தொழில் முனைவோர்களும்மேனேஜர்களும் வருடம் ஒருமுறையாவது படித்து தங்கள் செயல்பாடுகளில் இந்த விதிகள் தப்பித்தவறிஒட்டிக்கொண்டுள்ளதா என்று பார்ப்பது அவசியம்.

தொழிலில் வெற்றி



சமீபத்தில் ஒருவர் மின்னஞ்சலில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் இரண்டு முறை தொழில் தொடங்கியதாகவும் அந்த இரண்டிலும் தோற்று போனதாகவும் தெரிவித்திருந்தார்.

நண்பருக்காகவும் மற்றும் அவரைப் போன்ற வளரும் இளம் தொழில் அதிபர்களுக்காகவும் இந்த தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
  • வெறுமே யோசித்துக்கொண்டே இருக்காதீர்கள்வெறுமே ஆசைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்உண்மையிலேயே நீங்கள் தீவிரமாக இருந்தால்களத்தில் குதித்து அதைச் செய்யுங்கள்.
  • ஒரு முறை உள்ளே இறங்கிவிட்டால்அதன் அடி ஆழம் வரை புகுந்துபுறப்படுங்கள்அதை விட்டு வெளியேறுவதை ஒரு வாய்ப்பாக ஒருபோதும் பார்க்காதீர்கள்.
  • நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… உங்கள் முயற்சி தோற்றால்,தோற்றது உங்கள் ஐடியாதானே தவிரநீங்கள் அல்ல!!! (தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறைவெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்).
  • பெரிய நிறுவனங்கள் பெரிய மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. தனி மனிதன் தனியொரு ஆளாகச் சாதிக்க முடிவது மிகக் குறைவே!
  • சரியான குழுவை ஒன்றிணையுங்கள் (அளவுக்கதிகமான திறமைகள்,மதிப்புகளைவிடகோட்பாடுகளும் அணுகுமுறையும்தான் முக்கியம்).
  • திட்டங்களை தீட்டுங்கள்ஆனால்சந்தையில் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்பஎல்லா வாய்ப்புகளுக்குமே தயாராக இருங்கள்.
  • பெரிதாக நினையுங்கள்உங்களுடைய உயர்வை ஏற்கனவே அடைந்திருந்தால் எப்படி நடந்துகொள்வீர்களோஅப்படி நடந்துகொள்ளுங்கள்.
  • வேலையையும் வாழ்க்கையையும் சமமாக வைத்துக்கொள்ளுங்கள்.
Urs Happily 
Dr.Star Anand Ram
www.v4all.org 

Sunday, August 3, 2014

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..!


உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான 

"வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..!


1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....
2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்
3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை
4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது
5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....
6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....
7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது
(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது
8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....
9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....
10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க
நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது
எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :
1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே...

Urs Happy 
Dr.Star Anand ram
www.v4all.org 

Saturday, August 2, 2014

நன்னடத்தை - நற்செயல் - மூச்சடக்கல்- புலனடக்கல்-சரப்பழக்கம்-இரண்டறக் கலத்தல்-இருக்கை-சமநிலை

நன்னடத்தை

"உடலை வளர்ப்பது உணவு, உள்ளத்தை வளர்ப்பது நமது இந்து சமய கருத்துக்களால் கிடைக்கும் இறைஉணர்வு"

நமது உடலை வளர்ப்பதற்கு சத்தான உணவுப் பொருட்கள் வாங்கி பக்குவமாக சமைக்க தெரிய வேண்டும். இதைப் போல உள்ளத்தில் இறைவனை நிலை நிறுத்துவதற்கு இங்கே கூறப்பட்டிருக்கும் இந்து சமயக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு பரிபக்குவமாக இறைவனை நினைக்கத் தெரிய வேண்டும்.

இதனால் நன்னடத்தை நம்மோடு இணைந்துவிடும். உலக வாழ்க்கைக்கு வெற்றி கிடைக்கும், மறுமை வாழ்க்கைக்கு அருள் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் யாருடைய மனம் படிப்படியாக திருந்தியமைகின்றதோ அம்மனிதரே உண்மையான நன்னடத்தை உடையவர் ஆகிறார். இந்த நன்னடத்தைதான் ஒருவரை பகவானிடம் இணைய வைக்க உறுதுணையாக இருக்கிறது. பொதுவாக கெட்டதைப் போக்க நாம் நம்மிடம் நல்லதைப் பெருக்க வேண்டும்.

நற்செயல்:

நன்னடத்தை உடையவர்கள்தான் நற்செயல்கள் செய்ய முன்வருகின்றனர். நற்செயலால், தான் சேர்த்த செல்வத்தை தெய்வீக காரியங்களில் ஈடுபடுத்தி மக்களுக்கு பக்தி பெறுக பயன்படுத்துகின்றனர்

மூச்சடக்கல்:

இறைவனை நினைப்பதற்கு சோம்பல் நிலை இருக்கக் கூடாது. இதைப் போக்க காலை நேரங்களில் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு செய்வதால் மனம் சுறுசுறுப்படையும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

        மூச்சுப் பயிற்சி செய்கின்ற நேரத்தில் பகவானை நினைத்துக் கொண்டே செய்வது அவசியமாகும்.

புலனடக்கல்:

       "மனவலிமை இல்லாதவர் நல்ல சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறார்,
        மனவலிமை உடையவர் நல்ல சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறார்."

இதனால், நம் ஐம்புலன்களை வெளியில் போக விடாது, முறையாக அடிக்கடி இறைவனை நினைப்பதால், மந்திரம் கூறுவதால் மன வலிமை உண்டாகும். இந்த லட்சியம் உள்ளவர்களுக்கு புலனடக்கம் எளிதில் வந்து விடும்.

குடும்ப வாழ்க்கையில் புலனடக்கத்தோடு வாழும் தம்பதிகள் விந்து, யோனிதம் என்ற உயர்ந்த உயிர் அணுக்களை அதாவது விதைப் பொருட்களை அனாவசியமாக விதைப்பதில்லை. அப்படி அவர்கள் விதைக்க முற்படும் போது அங்கே இறை நினைப்பாளர்கள் உண்டாக்கப்படுகிறார்கள். தன் உள்ளத்தை ஒழுங்குபடுத்துபவரே உலகத்தை ஜெயிக்கும் உத்தமராவார்.

சரப்பழக்கம்

        இறைவனை நினைப்பதில் எல்லோர்க்கும் தடை ஏற்படுவது இயல்பே!
        மனம் ஓர் இடத்தில் லயிக்க மாட்டாது. இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்,
  1. மனதிற்குள்ளே மந்திரம் கூறிப் பழகுவது.
  2. மனக்கோயிலில் பகவானைச் சுற்றி சுற்றி வருவது.
  3. அடிக்கடி பகவானின் பாதத்தில் விழுந்து வணங்குவது.
  4. பகவானுக்கு பாத பூஜை பண்ணுவது.
  5. பகவானுக்கு தீப ஆர்த்தி எடுப்பது.
  6. இறை நினைப்போடு எந்தக் காரியத்தையும் தொடங்குவது.
  7. காரியம் கைகூடிய பின் பகவானுக்கு நன்றி கூறுவது.

இதை அடிக்கடி மானசீகமாக தனது மனக்கோயிலில் செய்து வருவதே சரப்பழக்கம் ஆகும்.

இரண்டறக் கலத்தல்

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இணையும் தன்மையே இரண்டறக் கலத்தல் ஆகும்.

மேலே கூறப்பட்ட நன்னடத்தை, நற்செயல், மூச்சடக்கல், புலனடக்கல், சரப்பழக்கம் யாவும் நமக்கு இருக்குமேயானால் நமது ஜீவாத்மா பரமாத்மாவில் இரண்டறக் கலந்து விடும். இதனால் தெய்வீகத் தன்மை வெளிப்படும். மற்றவர்கள் நலனில் அக்கறை இருக்கும்.

       "தெளிந்த மனம்தான் புனிதமான கோயிலாகிறது
        உயர்ந்த உள்ளம்தான் கோயிலின் மூலஸ்தானமாகிறது"

இருக்கை

மனம் எந்த நேரத்திலும் பகவானது சிந்தனையிலே இருக்குமேயானால் அங்கே பகவான் காட்சியளிப்பார். அங்கே புலன்களுக்கு வேலை இல்லை. இதனால், இறைவன் நமது உள்ளத்தினுள் ஒளிர்கிறார்!

        கெட்ட உணர்வை நாம் ஒதுக்கித் தள்ள முடியுமானால், பகவானை நம் உள்ளே நாம் உணர முடியும்.

அப்படி உணருகின்ற ஆற்றல் நமக்கு வந்துவிட்டால் நமது உள்ளக் கோயிலில் பகவானை சிம்மாசனத்தில் அமர்த்தி, எண்ணத்தால் வலது பக்கம் திடமாக நாம் அமர்ந்து கொள்ள வேண்டும். இதுவே இறைவன் அருகாமையில் இருக்கும் இருக்கை.

உயிர்களிடத்தில் சமநிலை:

மானசீகமாக பகவான் அருகில் இடைவிடாது இருக்கப் பழகி விட்டால் உயிர்களிடத்தில் சமநிலை தானாக வந்துவிடும்.

இரட்டைகளாகிய நல்லது-கொட்டது, இன்பம்-துன்பம் இரண்டிற்கும் மனம் பதற்றப்படாது. தெளிவும், தெய்வீக நினைப்பும் எப்பொழுதும் இருக்கும். பந்தமும், பாசமும் ஒதுங்கி அங்கே அன்பு மலரும். அன்பு பொது நலம். ஆனால் பந்தமும் பாசமும் சுய நலம்.

       "பகவானிடம் சரணடைந்தவருக்கு ஒருபோதும் தளர் நடை உண்டாவதில்லை.
        எல்லா உயிர்களிடத்தில் சமநிலை இருக்கும்."

Friday, August 1, 2014

கடவுளை சந்திப்பது எப்போது? - தாகூர்



* உலகில் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. அதை மறந்து, தனித்து ஒதுங்கி, தாம் மட்டுமே இறைவனை அடைய வேண்டுமென முற்படுவோர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

* இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.

* காணிக்கையுடன் வரும்போது தான், நாம் உண்மையாகவே கடவுளைச் சந்திக்கின்றோம், தேவைகளுடன் வரும்போது அல்ல.

* உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. அந்தப் பொருளை கொண்டு எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

* பொருள் கிடைத்தும் ஆசை அடங்காவிட்டால் ஆசையும் நிறைவேறாது, செயலும் நிறைவேறாது.

* பிறர் ஆறுதல் சொல்வதால் வருத்தம் தீர்வதில்லை. அவரவர் மனதை சீர்படுத்திக் கொள்வது தான் கவலை தீர்க்கும் மருந்தாக இருக்கும்.

* நாம் உலகத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, அது நம்மை ஏமாற்றுகிறதே என்று சொல்கிறோம். சரியான முறையில் உலகத்தின் நடப்பை தெரிந்து கொண்டால் வாழ்வில் வெல்லலாம்.

- தாகூர்

உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15படிப்பினைகள் -FRED DELUCA(Founder of Subway Restaurants)



உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15படிப்பினைகள் -FRED DELUCA(Founder of Subway Restaurants)
                          40000 த்திற்கும் மேற்பட்ட  உலகின் மிகப் பெரிய சங்கிலி தொடர்உணவகத்தை (World’s Largest restaurant chain) கொண்டுள்ளது Subway Restaurants (சப்வே)Subway Restaurantsஐ தொடங்கியவர் Fred Deluca (ப்ரெட் டிலூகா) .2012-ல் இந்த நிறுவனம் ஈட்டிய வருமானம் 18.1 பில்லியன் டாலர் .இத்தனை வளர்ச்சிப் பெற்ற நிறுவனம் வெறும் ஆயிரம் டாலர் மட்டுமே முதலீடாக கொண்டுஆரம்பிக்கப்பட்டது என்பதுதான் வியப்பு!.
                   Fred Deluca(ப்ரெட் டிலூகா) தனது தொழில் அனுபவங்களை கொண்டு தொழில்முனைவோர்களுக்காக START SMALL FINISH BIG  அதாவது  சிறியதாய் தொடங்கி பெரியதாய் முடியுங்கள் என்ற நூலை எழுதியுள்ளார் . அந்த நூலில் தொழில்முனைவோர்கள் வெற்றி பெறுவதற்கான உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த  15 படிப்பினைகள் (15 key Lessons)  என்று அவர் தன் அனுபவங்களைப் படைத்துள்ளார்.

Fred Deluca(ப்ரெட் டிலூகா)-ன் 15 படிப்பினைகள்(15 key lesson to start & run your own successful business :-
1.சிறியதாக ஆரம்பியுங்கள். ஆரம்பிக்காமலே  இருப்பதற்கு சிறியதாகத்தொடங்குவது பரவாயில்லை (Start small. It’s better than never starting at all).
2.சிறிய லாபத்தில் தொடங்குங்கள் .இது மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான சிறந்த பயிற்சியாகும் (Earn a few pennies . It’s good practice before earn those Dollars).
3.யோசனையோடு  தொடங்குங்கள் (Begin with an Idea).
4. ஒரு தீர்க்கதரசிப் போல் சிந்தியுங்கள்.எப்போதும்  பெரிய கண்ணோட்டத்தோடுபாருங்கள் (Think like a visionary. Always look for the Big Picture).
உங்கள்மீதும்  உங்கள் தொழில்மீதும்  நம்பிக்கை  வையுங்கள் (Believe in Yourself and Your business. Keep the faith).
6.தயாரானதுமே சுட்டுவிடுங்கள். தயங்கினீர்கள் என்றால் எப்போதும் சுடமாட்டீர்கள் (Ready,Fire,aim! If You think too much about it, You may never).
7. செலவை குறையுங்கள்விற்பனையை அதிகரியுங்கள் செலவு அதிகரித்தாலும் அல்லது விற்பனை குறைந்தாலும் உங்கள் தொழில் வீழ்ச்சியுறும் (Increase sales,Decrease cost. Anything less  and Your business will perish).
8.நேர்மறை எண்ணங்களோடு இருங்கள். எப்போதும் மனதில் வெற்றி எண்ணங்களே ஆக்கிரமிக்கட்டும்  (Be Positive).
9.தொழிலை தொடர்ச்சியாக உயர்த்திக்கொண்டே இருங்கள். வாடிக்கையாளர்களை ஈர்பதற்கும்விற்பனை மற்றும் லாபம் உருவாவதற்கும் இதுதான் சிறந்த வழி(Continuously improve Your business . It’s the best way to attract customers and generate sales and profits).
10.உங்களிடம் வேலை பார்ப்பவர்களை நம்புங்கள்(Believe in Your people).
11.லாபம் முழுவதையும் செலவழித்து விடாதீர்கள். இதுதான்  நீங்கள் தொழிலில்கற்கவேண்டிய  மிக முக்கியப் பாடம்(Never run out of money. It’s the most important lesson in business).
12 ஒவ்வொரு நாளும் புது வாடிக்கையாளர்களை பிடிக்கவேண்டும் என்று வெறியுடன் உழையுங்கள்(Attract new customers every day).
13. விடாப்பிடியாக இருங்கள். குறிக்கோளை  விட்டுவிடாதீர்கள்விட்டுவிடும்போதுநீங்கள்  தோல்வியடைகிறீர்கள் (Be persistent. Don’t give up. You only fail if You Quit).
14. தொழிலின்  முத்திரை குறியீட்டை உருவாக்குங்கள்நற்பெயரைசம்பாதியுங்கள் (Build a Brand Name. Earn Your reputation).
15.வாய்புகள்  யாருக்காகவும் காத்திருக்காது . கிடைத்தவுடன் தாவிப் பிடித்துகொள்ளுங்கள் (Opportunity waits for no one).

Yours happily 

Dr.Star Anand Ram
www.v4all.org 

பக்தி வளர நாம் உயர்வு பெற குடும்பத்தின் பங்கு என்ன?

பக்தி வளர நாம் உயர்வு பெற குடும்பத்தின் பங்கு என்ன?

       "என்னையே நினை என் பக்தனாகு.
        எனக்குப் பணிவிடை செய்து பக்தி செலுத்தி என்னிலே கரைந்துவிடு.
        நிச்சயமாக நீ என்னை வந்தடைவாய்!"

                                                                                                    - பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 


நம்முள் பல மக்கள் இறைவனை நினைப்பதை, வணங்குவதை அலட்சியப்படுத்துகிறார்கள். ஏதோ உணவிற்குப் பதில் ஊறுகாயைச் சாப்பிட்டு பசி தீர்க்க முயற்சிப்பது போல் இருக்கிறது அவர்களுடய பக்தி. இது உயர்வளிக்காது. இனிமேல் வரும் இளைஞர்களே! சுதாரித்துக் கொள்ளுங்கள். பக்தி என்பது சோலார் எனர்ஜி போன்ற ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.

       "தேனியின் உழைப்பால் தேன் கிடைக்கிறது.
                பக்தனின் இறை நினைப்பால் அருள் கிடைக்கிறது."


        ஒவ்வொரு வீட்டிலும் சிறு குழந்தைகளில் இருந்தே பக்தி, படிப்பு, உழைப்பு என்ற மூன்றையும் கலந்தூட்டி நாம் வளர்க்க வேண்டும். அருளும் பொருளும் சேர்ந்து சம்பாதனை செய்ய போதிக்க வேண்டும். இதை அமெரிக்கா, பிரிட்டன் முதல் ஜப்பான் வரை கடைப்பிடிக்கிறார்கள். பக்தியில் அருள் பொருள் எல்லாமே அடங்கியிருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட்டுப் பிரார்த்தனை என்று இறைவழிபாடுகள் இருக்கின்றது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

       "பகவானிடம் மந்திரம் கூறி பிரார்த்தனை பண்ணத்.
                தெரிந்த பக்தனுக்கு எல்லாமே வெற்றிதான்"



        எங்கள் அனுபவத்தில் பெரும்பாலான இந்து அப்பா அம்மாக்கள் ஒரு மந்திரம் கூட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அதை அடிக்கடி சொல்ல வேண்டும், பகவானை நினைக்க வேண்டும் என்று போதித்ததில்லை. அதுவும் கிராமங்களில் ரொம்ப மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்.

        எத்தனையோ இந்து மக்கள் பக்தியின் சக்தியை அறியாது ஏமாற்றம் அடைகின்றார்கள் என்று நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக உள்ளது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான பரிபூரணமடைந்த ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சற்குருமார்கள் இந்து மதத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. ஒரு சிறிய வீட்டிற்குக் கூட பணம் கட்டி மின்சாரம் வாங்க நினைக்கும் நம்மவர்கள் இறைவனின் இலவச கரண்ட்டை வாங்கி தன்னை அருள் வெளிச்சமாக்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

       "உண்மையான பக்தரையே அதிர்ஷ்டம் விரும்பிசேரும்.
        

        இறைவனிடம் இருந்து நமது வீட்டிற்கு மின்சாரம் கொண்டு வர பணம் கட்ட வேண்டிய அவசியமில்லை. கரண்ட் கம்பிகள் இழுத்துக் கொண்டு வந்து இணைக்க வேண்டியதில்லை. மந்திரம் என்ற சொற்கள்தான் பகவானின் கம்பி இல்லாத அன்பு கரண்ட் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக இந்து மக்கள் பக்தியில் வெற்றி பெற புதிய யுக்திகளைக் கையாள வேண்டும். அவசர உலகிற்கு ஏற்றவாறு பயணத்திலும், வேலை நேரங்களிலும் பகவானின் நாமங்களை உச்சரிக்கப் பழக வேண்டும்.

       "எனது பக்தர்களின் சிந்தனைகள், அவர்களது வாழ்வு என்னிலே அடங்கி இருக்கின்றன. என்னைப் பற்றிய சிந்தனையிலே அவர்கள் இருக்கின்றனர். ஒருவருக் கொருவர் பேசும் போதும் என்னைப் பற்றியே பேசி மகிழ்வும் ஆனந்தமும் அடைகின்றனர்" - கீதையில் பகவான்

        ஞாயிறு தோறும் பக்திப் பேச்சுக்களைக் கேட்டு தன் மனதை பகவான் பக்கம் திருப்ப வேண்டும். தேவையற்ற நாடகத் தொடர்கள் உங்கள் மனதை வேறுபக்கம் கூட்டிச்செல்லும். இவைகளைத் தவிர்க்க வேண்டும். உங்கள் கண்களில் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டால் ஊரே குளுமையாகத் தெரியுமல்லவா! இதைப்போன்று முதலில் தன்னைக் குளுமையாக்க இறைவன் பாதம் பற்ற வேண்டும். பிறகு கூட்டு முயற்சியில் சற்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது பக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். விவாதம் தேவையில்லை. நல்ல செய்திகளை சேமித்த பிறகு பேச முயலுங்கள். உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலவும். மந்திரம் மனதினில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

       "என்னையே நினை என் பக்தனாகு.
        அன்பருக் கன்பான் மெய்யன் - ஐயன்.
        ஆனந்த மோனன் அருட்குரு நாதன்
        தன்பாதம் சென்னியில் வைத்தான் - என்னைத்
        தானறிந் தேன்மனந் தானிறந் தேனே
                                                                                                    - தாயுமானவர் 


       'உலகில் உள்ள பக்தர்களாகிய அன்பர்களுக்கெல்லாம் உண்மையான அன்புள்ளம் கொண்ட பகவான், ஆனந்தமோனன் என்ற அருட்குரு நாதன் வடிவில் வந்து எனது உள்ளத்தில் பாதம் வைத்துவிட்டார், குடி புகுந்துவிட்டார். என்னை நான் அறிந்தேன் என்னை இதுவரை துன்புறுத்திய மனம் அறிவோடு சேர்ந்த நிலையை உணர்ந்தேன்' என்று தாயுமானவர் கூறுகிறார்.

       உலகப் பணக்காரர்களாக இருப்பவர்கள் கூட பக்தி செலுத்தி வருகிறார்கள். பக்தி செலுத்த நேரமில்லை என்று கூறாதீர்கள். உங்கள் வேலையில் இறைவனையும் சேர்த்துக் கொள்ளுங்க்ள் எல்லோரும் உயர்வு பெறுவீர்கள்!