வெற்றியை கொண்டாடும் விஜயதசமி நாளில் பெற்ற வெற்றியும் ?? பெறவிருக்கும் வெற்றியும் !! வெற்றி அருளியது யார் ?? என்பது குறித்தே இப்பதிவு ஈசன் திருவருளால் ( கொஞ்சம் பெரிய பதிவு தான் படித்தால் பயனுண்டு என்று எண்ணம் )
நமசிவாய
வெற்றி பெற்றதால் தான் வாழ்கிறோம் ??
பல லட்சம் விந்து அணுவில் முந்திசென்று தாயின் கருமுட்டை அடைந்ததே முதல் வெற்றி !! நீ வாழ காரணமான வெற்றி !!
நாளும் நமது கழிவுகள் நமது உடலில் தங்காது வெளியேறுகிறது அதுவும் வெற்றி தானே !!
பல கோடி பேரில் உனக்கான அடையாளமும் அங்கமும் பெற்றது வெற்றி தானே !!
பலர் மனதை வெல்லும் ஆற்றல் பெற்று பலரும் மதிக்கும்படி வாழ்கிறோம் அதுவும் வெற்றிதானே !!
உனக்கான அனைத்தையும் உன் விருப்பப்படியே அமைத்துக்கொண்டு வாழ்கிறோம் அதுவும் வெற்றிதானே !!
இதுபோல் நீ இயங்க ஒரு உலகம், வாழ வீடு, அரவணைக்க உறவு, தோள்கொடுக்க தோழன், பயணிக்க வாகனம், உன் சுவைக்கு ஏற்ற உணவு, என்று எத்தனையோ வெற்றி தினம்தினம் பெற்று கொண்டே வாழ்கிறோம் !!
( மற்றவனோடு உன்னை ஒப்பிட்டு கொண்டு வாழ்வதால் பெற்ற வெற்றி தெரிவது இல்லை !! வாழ்கிறாயே அதுதானே அடிப்படை வெற்றி )
பெறவிருக்கும் வெற்றி ??
நாளும் தினமும் உன்னுடைய செயலில், எண்ணத்தில், கையாளும் விதத்தில், பக்குவபட்டுகொண்டே தானே இருக்கிறாய் !! நீயே உன் வாழ்கையை ஒரு வருடம் பின்நோக்கி பார்த்தல் உனக்கே தெரியும் !! அதுபோல ஒவ்வொரு நாளும் வெற்றிபெற்று அடுத்தநாள் அதைவிட பக்குவப்பட்டு வெற்றிபெற்றுகொண்டு தான் இருகிறாய்,
ஆனால் உன் வெற்றியை பிறர் வெற்றியோடு ஒப்பிடும்போது உன்னுடைய வெற்றி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாம் உணர்வது இல்லை !! நீ ஒப்பிடும் ஒருவரும் இன்னொருவர் வெற்றியை தானே பார்கிறார் அவர் வெற்றியை நீ பார்க்கிறாய் !! இதுதான் இயக்கம் !!
உன் வெற்றியை உணர்ந்தால் இயக்கத்தின் இயக்கமாக வெற்றியின் இயக்கமாக உன்னை உணர்வாய் !!
சரி இவ்வளவு வெற்றி பெற்று விட்டோம் !! இந்த வெற்றிக்கு வித்திட்டவன் யார் ?
வெற்றி என்ற உணர்வை உணரவைத்து !!
அதன்மூலம் கிட்டும் இன்பத்தை இன்பமாக அனுபவிக்க வைத்து!!
அந்த வெற்றியை அடைய உடல் அருளி !! உறுப்பு அருளி !!
நீ உன்னுடையதாக எண்ணும் அனைத்தும் தன்னுடையது என்று தன்னை காட்டாமல் அருளி !!
உன்னை அனுபவிக்கவிட்டு, ஆனந்தப்பட வைத்து, துன்பம் என்று நீயாக நினைப்பதை நீ நினைத்தவழிய போக்கும் வழியும் காட்டி !!
மற்றவனை காட்டி அவனை போல் வாழவேண்டும் என்ற எண்ணும் காட்டி!!
உனக்கான அண்டத்தையே இயக்கி, அதன்வழியே அகிலத்தையே இயக்கி, அதில் வாழும் உன்னை இயக்கி, உனக்கு தேவையென்று கருதும் அனைத்தையும் இயக்கி !!
உன்னை வெற்றிபெற வைக்கவே இத்தனையும் செய்யும் ஒருவன் மாபெரும் கருணையாளன் ஈசனே, அப்படி வாழ்விக்கும் வள்ளல் ஈசனை தவிர வேறு யார் இருக்க முடியும் !!!!!
இந்த நாள் முதலாவது நீ பெற்ற அனைத்திலும் தானே இருந்து அவை அனைத்திலும் வெற்றியே அருளி உன்னை வாழ்விக்கும் வள்ளலை உணர்ந்துகொள் !!
சிக்கன பற்று சிந்தையே சிவமாக கொண்டு வாழு !! வேறெவர் முன்னும் கையேந்தி பிச்சை கேட்டு !! வாழ்விக்கும் வள்ளலை கேவலபடுத்தாதே !!
வெற்றியானவன் திருவடி பணிந்து பெற்ற, பெற்றுக்கொண்டு இருக்கும், பெறப்போகும் வெற்றியாவும் ஈசன் திருவருளே என்று போற்றி கொண்டாடி வெற்றியை – ஈசனை அனுபவித்து வாழ்வோம் !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமசிவாயவே
- Fb Anantha kumar
- www.moneyattraction.in
No comments:
Post a Comment