தீபாவளியன்று செய்ய வேண்டிய குபேர பூஜை
தீபாவளி திருநாளில், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையே குபேர பூஜை செய்வதும் வழக்கம். அனைத்து ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும் குபேர பூஜையை தீபாவளி தினத்திலோ அல்லது அதற்கு மறுநாளோ செய்யலாம்.
குபேர பூஜை செய்யும் முறை
வீட்டில் இருக்கும் அல்லது புதிதாக வாங்கி வந்து லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம், லட்சுமியுடன் கூடிய குபேரனின் படம் ஆகியவற்றை பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். படத்தின் முன் வாழை இலை போட்டு, சாணப்பிள்ளையாரை வைக்கலாம். சிலர் மங்களகரமாக இருக்க மஞ்சள் பிள்ளையாரை வைப்பார்கள். இலையில் நெல்லை குவியலாக கொட்டி, வசதி உள்ளவர்கள் தங்க நகைகளை அதில் வைக்கலாம். மேலும் வெற்றிலை, பாக்கு, பழம், பஞ்சாமிர்தம், இனிப்பு பதார்த்தங்களை வாழை இலையில் படைக்க வேண்டும்.
108 லட்சுமி காசு , புனுகு ,லட்சுமி குபேர விளக்கு , லட்சுமி குபேர யந்திரம் ,இந்து உப்பு மற்றும் தனகர்ஷ்ண பொருள்களுடன்.
பின்னர் திருவிளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். வடக்கு நோக்கி நின்று குபேரனை நினைத்து வழிபட வேண்டும். முதலில் நமக்குக் கிடைத்த வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்துவிட்டு, இது என்றும் நிலைத்திருக்க அருள் புரிய வேண்டும் என பிரார்த்தனை செய்ய வேண்டும். எனது குடும்ப வறுமை நீங்கி போதுமான செல்வம் கிடைத்திட அருள் செய்ய பிரார்த்திக்கலாம்.
பூஜையின் போது,
ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே,
தேஹி தபாயஸ்வாஹ! என்று குபேர மந்திரத்தை சொல்லி குபேரனின் அருளைப் பெறலாம்.
ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே,
தேஹி தபாயஸ்வாஹ! என்று குபேர மந்திரத்தை சொல்லி குபேரனின் அருளைப் பெறலாம்.
பூஜைக்கு பிறகு, ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யலாம். கோயிலுக்கு சென்று மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
இந்த பூஜை செய்தால், செல்வம் வீட்டில் தங்கும். லட்சுமி கடாட்சமாய் வீடு திகழும் என்பது நம்பிக்கை. குபேர பூஜையன்று இதையெல்லாம் செய்ய வசதி இல்லை என்றால், பசுக்களுக்கு பழம் வாங்கிக் கொடுத்து குபேரனை நினைத்து வழிபாட்டாலே போதும்; கோடி புண்ணியம் தேடி வரும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
இந்த வகையில் குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யங்கள் நிலைக்கும் என்பது ஐதீகம்.
லட்சுமி குபேர பூஜை உபகாரணங்கள் order செய்ய
No comments:
Post a Comment