Saturday, October 29, 2016

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்
ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார். பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. "சித்தன் அருளை" வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.
தேவையானவை:-
வாழை இலை
பச்சை கற்பூரம்
சீரகம்
பருத்திக் கொட்டை
கல் உப்பு
மிளகு
நவ தான்யங்கள்
கோதுமை
நெல் (அவிக்காதது)
முழு துவரை
முழு பச்சை பயிறு
கொண்ட கடலை
மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)
முழு வெள்ளை மொச்சை
கருப்பு எள்
முழு கொள்ளு
முழு கருப்பு உளுந்து
விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42
தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21
செய்யும் முறை:-
எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.
துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதிலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி கோட்டை, கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் போகிறது.
ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும், ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).
இறுதியாக இறைவனிடம் "இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம். மேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே" என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். வேண்டுமானால், உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.
மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும். இது கட்டாயம்.
ஒரு அருள் வாக்கில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார். அதனால், கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும். கோவிலில் முன் அனுமதி பெறுவது மிக முக்கியம்
# Nanrigal kodi siththanarul
About temple & Details - Divine Mr.Sathasivam - 81448 42722
பணவளக்கலை - 98946 24425

1 comment:

  1. Astrologer Master Rudra Ji is the best astrologer in New York who was practicing Vedic Astrologer for the past many years and memorizing the shades of its several fields in the numerous cities.
    astrologer in new york

    ReplyDelete