நிலவேம்பு குடிநீர் கசாயம் குடித்தால் 6 மாதங்களுக்கு வீட்டுப் பக்கம் காய்ச்சல் எட்டிப் பார்க்காதுனு தினமணியில் தொடர்ந்து எழுதினோம். அதை அரசு மருத்துவமனைகளிலும் கசாயமாக தருகிறார்கள். அதற்கு தினமணியின் பங்கும் முக்கியம்.
இந்தக் கசாயம் காய்ச்சலுக்கு எமன். தலை தலையா அடிச்சுகிட்டேனே ... என கிராமத்தில் சொல்வார்கள். அப்படித்தான் தினமணியில் நாங்களும் சொன்னோம். இப்பவும் சித்த வைத்தியர்களும் சொல்கிறார்கள். தயவுசெய்து நிலவேம்பு கசாயம் போட்டுக் குடியுங்கள். வீட்டில் எல்லோரும். மூன்று நாள். 6 மாசம் நிச்சயம் காப்பாற்றும். எந்தக் காய்ச்சலும் எட்டிப் பார்க்காது. சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு ஸ்பூன் பவுடருக்கு ஒரு டம்ளர் தண்ணீர். பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, வடிகட்டி, குடிக்கிற பதத்துக்கு ஆற வைத்து குடியுங்கள். கசக்கும். கசப்பு தாங்க முடியாதென்றால் பனங்கற்கண்டு, கருப்பட்டி ஏதாவது கொஞ்சம் வாயில் போட்டுக்கலாம்.
இதெல்லாம் விவேக்கிற்கு தெரியாமலா போயிருக்கும் என விதண்டாவாதம் பேச வேண்டாம். அவசரத்தில் மறந்து இருக்கலாம் பாவம் பெற்ற மகனை இழந்து தவிக்கிறார். எவ்வளவு பணம் இருந்தும் கண் எதிரே இழந்துவிட்டாரே.... படத்தைப் பாருங்கள். இப்படியொரு மகனின் இழப்பை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?
நிலவேம்பு சாவை தடுக்கும்னு சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான காய்ச்சலைத் தடுக்கும். வெறும் ரூ.100 தான் ஒரு பாக்கெட். இந்த விஷயத்தில் தயவுசெய்து இங்கிலீஷ் டாக்டர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அவர்களைப் பொருத்த வரை நாம் எல்லாம் பணம் காய்க்கும் மரம். மருந்து மாத்திரைகள் வாங்க நாம் செலவழித்தால்தான் அவர்களுக்கு பொழப்பு.
அடுத்த முதல் வேலை நிலவேம்புக் குடிநீர் பொடி வாங்குவதாக இருக்கட்டும்
No comments:
Post a Comment