Wednesday, July 30, 2014

அன்பால் வெற்றி கொள்!- சாய்பாபா



எதை எதிர்பார்க்கிறாயோஅதை கடவுளிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி நம்பிக்கைக்கு உண்டு.
சந்தேகம் என்னும் அரக்கனை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். நம்பிக்கை முன்வாசலில் நுழைந்தால்சந்தேகம் பின்வாசலில் வெளியேறி விடும்.


சந்தோஷச் சிறகுகளை வெட்டி விடும் சந்தேகத்தை தூக்கி எறியுங்கள். நம்பிக்கையை நலிவடையச் செய்யும் சந்தேகம் நமக்கு வேண்டவே வேண்டாம்.
தேடும் இயல்புள்ளவர்கள் தடைகள் பலவற்றை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.ஒவ்வொன்றும் ஒரு சவால் போலத் தான். இருந்தாலும் முயற்சியைத் தொடர்ந்தால்வெற்றி கிடைத்து விடும்.
ஒருமுறை கோபம் வந்தால் மூன்று மாத ஆரோக்கியம் போய் விடும். கோபத்தை தைரியத்தாலும்பொறாமையை அன்பாலும் வெற்றி கொள்ள வேண்டும்.
- 
சாய்பாபா

Tuesday, July 29, 2014

நீங்கள் ஜெயிக்கத் தயாரா? - வெற்றிபெற, முன்னேற விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டியது மூன்று முக்கிய ” D ” க்கள். அவை

வெற்றிபெற, முன்னேற விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டியது மூன்று முக்கிய ” D ” க்கள். அவை

1.            Desire – விருப்பம்

பல நேரங்களில் நம்முடைய சக்தி என்ன என்று தெரியாததற்குக் காரணம், நம்முடைய ஆசை அல்லது விருப்பம் எது என்று நமக்குத் தெரியாமல் இருப்பதுதான்.

2.            Direction – வழிமுறை ( பாதை )

வாழ்க்கை வழிமுறையும், ஊருக்கச் செல்வதற்கான பாதையும் ஒன்றுதான். அதற்கான பாதையில் சென்றால்தான் வெற்றியை / ஊரை அடைய முடியும்.

3.            Dedication – ( அர்ப்பணிப்பு )

மனப்பூர்வான ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல்கள் வெற்றியை, நிறைவைத் தருவதில்லை. எதன் மீது உனக்கு அக்கரை இருக்கிறதோ அதன்மீது உனது பார்வை எப்போதும் இருக்கும்.

இந்த அடிப்படைப் பண்புகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் வெற்றியாளாக மாறலாம்.

இந்தப் பண்புகளை, அடிப்படைகளை வளர்த்துக் கொள்வதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை நீங்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டும்.

1.            Compassion – மனித நேயம்

உங்களது ஒவ்வொரு செயலும், வெற்றியும் மனித நேயம் மிக்கதாக, பிறரை துன்புறுத்தாமல் பெற்றதாக இருக்க வேண்டும்.

2. Perfection – மிகச் சரியானதாக / மிகத் துல்லியமானதாக

உங்களுடைய ஒவ்வொரு செயலும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் முழு மன நிறைவைத் தருவதாக, சிறப்பு மிக்கதாக அமைய வேண்டும்.

3. Value added Servive – மதிப்புக கூட்டும் சேவை.

நீங்கள் செய்யக்கூடிய பணி / சேவை கடமையே என இல்லாமல், அதை பெறுவர் மகிழ்வோடு, மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளும்படியான, சேவையாக அமையவேண்டும்.

4. Building Relations – உறவுகளை வளர்த்தல்

நம்மோடு பணியாற்றுவோர் / தொழில் செய்வோர் / குடும்பத்தில் உள்ளோர் / நண்பர்கள் என எல்லா நிலைகளிலும் நமது உறவு மேம்பாடு அடைய பாடுபட வேண்டும். அப்போதுதான் தொடர் வெற்றிகள் கிட்டும்.

5. Activity – செயல்பாடு

அறிவு எவ்வளவு இருக்கிறது என்பது முக்கயமல்ல, அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம், எப்படித் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.

6.            Leave the Comfort zone – இருப்பதுதான் சௌகரியமான வாழ்க்கை என்று, இருப்பதை அப்படியே ஏற்றுக்க கொள்ளாமல், நமது ஒவ்வொரு செயலும் நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.

7. Learning is a continuous process

கற்றுக் கொள்ளுதல் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சி, இது வாழும் வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.


இந்த உலகில்மாற்றம்என்ற ஒன்றுதான் மாறாதது. எனவே, மாற்றத்திற்கு தயாராய் இருப்பார்களே வெற்றிபெறத் தகுதி டைத்தவர்கள்.

Yours Happily

Dr.Star Anand Ram
Life Skills Trainer
www.v4all.org
cell -9790044225 

இணையம் உருவான வரலாறு தெரியுமா


நீர் மட்டுமல்ல, இணையம் இன்றியும் இந்த உலகம் வாழாது என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகிறோம். நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர், முக்கிய சில திருப்பங்களை இணைய வளர்ச்சியில் ஏற்படுத்தி பங்காற்றியுள்ளனர். அவர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் இங்கு காணலாம்.
மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreesen): Mosaic என்னும் பிரவுசரை உருவாக்கியவர். முதல் நிலையில், இணையத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றதில், இந்த பிரவுசருக்கு இடம் உண்டு. பின்னால், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற இணைய பிரவுசரை உருவாக்குவதில் இவர் அதிகம் துணை புரிந்தார். 1990 ஆம் ஆண்டுவாக்கில், இணையப் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்த போது, இந்த பிரவுசரின் இடமும் முதல் இடத்தில் இருந்தது.
விண்ட் செர்ப் (Vint Cerf): இணையத்தை உருவாக்கிய தந்தை என, Bob Kahnஎன்பவரோடு சேர்த்து அழைக்கப்படுபவர் விண்ட் செர்ப். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணி அதிகம் உதவியது. இவர் அமைத்த MCI mail சிஸ்டம் தான் இன்றைய மின் அஞ்சல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது. இணைய பெயர்களை வரையறை செய்திடும் ICANN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers என்னும் அமைப்பினை உருவாக்கிய முன்னோடி இவர்.
இராபர்ட் பாப் கான் (Robert “Bob” Kahn): இவருடைய தோழரும் உடன் பணியாற்றியவருமான விண்ட் செர்ப் போல இவரும் இணையத்தை உருவாக்கிய தந்தை என அழைக்கப்படுகிறார். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணியும் அதிகம் உதவியது. இவர் ஆய்வுகளை மேற்கொள்ள உதவியாக Corporation for National Research Initiatives (CNRI) என்னும் அமைப்பினை உருவாக்கினார். இந்த அமைப்பு நெட்வொர்க் தொழில் நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்தியது.
லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் (Larry Page and Sergey Brin): ஆய்வுத் திட்டமாக முதலில் கூகுள் என்ற ஒன்றைத் தொடங்கியவர்கள் இவர்கள். அப்போது ஸ்டான்போர்ட் பல்கலையில் மாணவர்கள். இவர்கள் உருவாக்கிய கூகுள் கட்டமைப்பு இணையப் பயனாளர்கள் தகவலைத் தேடி அறிவதில் புதிய வழிகளை மாற்றிக் காட்டியது. இன்று Google.com என்பது இணையத்தின் மாறா நிலை தளமாக இயங்கி வருகிறது.
ஜிம் கிம்சி (Jim Kimsey): இணைய சேவை வழங்குவதில் உலகிற்கே முன்னோடியாக விளங்கும் AOL நிறுவனத்தை நிறுவி, அதன் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றியவர். ஒரு சமயம், இந்நிறுவனத்தின் இணைய சேவையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. இணையத்தில் ஒருவருக் கொருவர் நேரடியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் internet chat மற்றும் instant messaging இவர் நிறுவனத்தால் பிரபலமாகியது. மேலும், தங்களுக்கேற்ற வகையில் இணைய தளத்தினை உருவாக்கிய வழிகளும் இவர் தந்தவையே.
ஹெடி லமார் (Hedy Lamarr): இவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த நடிகை. 1930 முதல் 1950 வரை பிரபல நடிகையாக இருந்தவர். இவர் ஜார்ஜ் அன் தெய்ல் (George Antheil) என்பவருடன் இணைந்து அலைவரிசையைத் தாண்டி தகவல்கள் அனுப்பும் முறையைக் கண்டறிந்தார். அதுவே பின்னாளில், வயர் இணைப்பு இல்லாத இணையத்திற்கு அடிகோலியது.
ஜெப் பெஸோஸ் (Jeff Bezos): அமேஸான் நிறுவனத்தை உருவாக்கிய அதன் தலைமை நிர்வாகி. இணைய வழி வர்த்தகத்தினைக் கொண்டு வந்து இன்று பல நாடுகளில் அதனையே நடைமுறையாகக் கொண்டு வந்தவர். இணைய வர்த்தகத்தில் நம்பிக்கை வைத்திடும் பழக்கத்தினை இவரது நிறுவனம் மக்களிடையே விதைத்து ஊன்றியது. இணையம் வழி மக்கள் எதனையும் வாங்கலாம் என்ற சித்தாந்தத்தை மக்கள் நம்பும்படி வளர்த்தது இந்த நிறுவனம் தான்.
ரே டாம்லின்சன் (Ray Tomlinson): 1970 ஆம் ஆண்டுகளில், ARPANET என்னும் மின் அஞ்சல் கட்டமைப்பினை உருவாக்குவதில் பெரிதும் உதவியவர். பயனாளரையும், அவருக்கான சர்வர் கம்ப்யூட்டரையும் “÷” என்ற அடையாளம் இட்டு வேறுபடுத்தி அஞ்சல் முகவரி யினை முதல் முதலில் அமைத்துப் பயன்படுத்தியவர் இவரே.
இலன் மஸ்க் (Elon Musk): X.com என்ற நிதி சார்ந்த இணைய தளத்தின் தலைவர் இவரே. Confinity என்ற நிறுவனத்தை வாங்கி, பின்னாளில் Paypal என்னும் இணைய நிதி நிறுவனத்தை உருவாகியவர் இவர். இதில் இவருக்கு Max Levch in, Peter Thiel, Luke Nosek, மற்றும் Ken Howery. ஆகியோர் துணைபுரிந்தனர்.

டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee): இன்றைய இணையத்தை அதன் தொடக்க நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி, மாற்றங்களை அறிமுகப்படுத்தியவர்கள் பலர். இதில் world wide web என்ற கட்டமைப்பினை உருவாக்கிய டீம் பெர்னர்ஸ் லீ என்பவருக்குச் சிறப்பான இடம் உண்டு. இணையத்தில் டேட்டா பரிமாற்றத்திற்கான அடிப்படை வழிமுறையான Hypertext Transfer Protocol (HTTP) என்பதனை உருவாக்கித் தந்தவர் இவர்.

Monday, July 28, 2014

பில்கேடஸ்ன் வெற்றியின் இரகசியங்கள்

வில்லியன் ஹென்றி பில்கேடஸ்ன் வெற்றியின் இரகசியங்கள்



பிறந்தது 1955 ல். சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம். பதின்மூன்று வயதிலேயேகம்ப்யூட்டர் ஆர்வம் வந்துவிட்டது. காரணம்பள்ளியில் கம்ப்யூட்டர்களை வாங்கியது. பள்ளி கம்ப்யூட்டர்களில் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. பதினாறு வயதில் அவருடைய நெருங்கிய நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து சின்னதாய் ஒரு கம்ப்யூட்டர் குழுவைத் துவக்கியிருக்கிறார். அவர்கள் பகுதியிலிருந்த கம்ப்யூட்டர்களுக்கு புரோகிராம் எழுதித் தந்து சம்பாதித்துக் கொண்டிருந்தது அந்தக் குழு.

இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். ஒருமுறை உள்ளூர் கம்பெனி ஒன்று சம்பள பட்டுவாடாவுக்கு ஒரு புரோக்ராம் எழுதிக் கொடுக்கச் சொன்னது. அந்த காண்ட்ராக்ட்டை கேட்ஸின் நண்பர்கள் குழு ஏற்றுக் கொண்டது. ஆனால் அதில் ஒரு பிரச்னை. கிடைக்கும் பணத்தைப் பிரித்தால் குழுவிலிருக்கும் அனைவருக்கும் போதுமானதாக இல்லை.

அதனால் யாராவது ஒருவரை குழுவிலிருந்து வெளியில் அனுப்பிவிட முடிவுசெய்தார்கள். அவர்கள் வெளியே துரத்த முடிவு செய்தது பில்கேட்ஸை. அப்போதுபில்கேட்ஸ் அவர்களிடம் இப்படிச் சொன்னாராம். ‘‘நான் போகிறேன். ஆனால்என்தேவை ஏற்பட்டு திரும்ப அழைத்தால் சும்மா வரமாட்டேன். இந்தக் குழுவுக்குதலைவனாகத்தான் வருவேன். ஆனால்அதில் கொஞ்சம் அபாயம் இருக்கிறது. நான்ஒருமுறை தலைவனானால்அதன்பிறகு நானே தான் தலைவனாய் இருப்பேன். என்னை மாற்ற முடியாது.’’ பில்கேட்ஸின் வார்த்தைகளிலிருந்த தீவிரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் அவரை வெளியே அனுப்பாமலே சமாளித்துக் கொண்டார்கள். ஆனால்பில்கேட்ஸின் தன்னம்பிக்கையான வார்த்தைகள் இன்று உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக அவரை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இப்படித் தொடங்கிய பில்கேட்ஸின் வாழ்க்கைகம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்றே கழிந்தது. ஒரே ஆர்வம். ஒரே கவனம். வேறு எங்கும் மனம் அலை பாயாமல் கம்ப்யூட்டர்அதில் புரோக்ராமிங்அதில் கிடைக்கும் பணம் இவற்றில் மட்டுமே மனம் ஈர்த்து நின்றது.
கல்லூரிக் கல்விக்கு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால்படிப்பு மேல் கவனம் போகவில்லை. ஒரு வருடத்தில் படிப்பை உதறி கம்ப்யூட்டர் பிஸினஸைத் தொடர்ந்தார்.

1975_ல் நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைத் துவக்கியதுஅப்போது பரபரப்பாக இருந்த ஸ்டீவ் ஜோஸ்பின் ஆப்பிள் கம்ப்யூட்டருடன் போட்டி போட்டதுகம்ப்யூட்டர் தயாரிப்பில் முதலிடத்தில் இருந்த ஐ.பி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதுஅதன் மூலம் உலகம் முழுவதும் பரந்து விரிந்து ஆ! பில்கேட்ஸ்’ என்று பிரமிக்க வைத்தது எல்லாம் வரலாறு.

இந்த வெற்றி வரலாறுக்குஅடிப்படையில் ஐந்து விஷயங்கள்தான் இருந்தன என்று குறிப்பிடுகிறார் பில்கேட்ஸ். அந்த ஐந்து விஷயங்களைக் கவனிப்போம்.



1.      ஆர்வம்

 ‘எனக்கு கம்ப்யூட்டரில் அணையா ஆர்வம் இருந்தது’ என்கிறார் பில்கேட்ஸ். அந்த ஆர்வம் இன்றுவரை குறையாமல் இருப்பதால்தான் ஈடுபாடோடு வேலை பார்க்க முடிகிறது. வெற்றிகொள்ள முடிகிறது என்கிறார்.

2.      புத்திசாலித்தனம்

எந்தச் செயலிலும் புத்திசாலித்தனம் இருக்க வேண்டும் என்பது பில்கேட்ஸின் வாழ்க்கையைப் பார்த்தாலே தெரிகிறது. அவர் ஒவ்வொரு நிறுவனத்திடமும் போட்ட ஒப்பந்தங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். எல்லாமே பில்கேட்ஸின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துக்குச் சாதகமாகவும் அதன் எதிர்காலத்துக்கு உதவுவதாகவும்தான் இருந்திருக்கின்றன. ‘‘எதிராளியை குறைத்து மதிப்பிடாமல் அவனை வெல்வது எப்படி என்று யோசித்தாலே புத்திசாலித்தனம் வந்துவிடும்’’என்கிறார் பில்கேட்ஸ்.

3.      உண்மையான உழைப்பு

நம்முடைய உழைப்பு உண்மையானதாகநேர்மையானதாக இருக்க வேண்டும் என்கிறார் பில்கேட்ஸ். கடமைக்கு உழைப்பதால் எந்தப் பலனும் இல்லை. வெற்றி பெற வேண்டும்இந்தச் செயலால் நமக்கு பெயர்புகழ்பணம் கிடைக்க வேண்டும் என்று முனைப்போடு தொழில் புரிபவர்களால் தான் வெற்றி காண முடியும் என்பதுபில்கேட்ஸின் தத்துவம்.

4.      நல்ல குழு

பள்ளியில் படிக்கும் போதே நல்ல குழு இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பது பில்கேட்ஸக்குத் தெரிந்திருக்கிறது. அதனாலேயே தன்னுடைய முயிற்சிகள் எல்லாவற்றிலும் தன் நண்பர்களை இணைத்துக் கொண்டார். நிறுவனத்திலும் மிகச் சிறந்த தொழில்நுட்பாளர்களையே பணிக்குச் சேர்த்தார். கெட்டிக்கார குழுஅமைந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது அவர் சித்தாந்தம்.

5.      தலைமை

ஓர் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்அதன் தலைமை. கெட்டிக்கார குழு இருந்தாலும் அதனை வழி நடத்த திறமையானசெயல்திறன் கொண்ட தலைவன் இல்லாவிடில் வெற்றி கிடைக்காது என்பது பில்கேட்ஸின் வாதம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்.
பில்கேட்ஸின் இந்த ஐந்து சமாச்சாரங்களில் வெற்றி கிடைக்கவில்லையென்றால் வேறு எதிலும் கிடைக்காது.

Yours Happily 

Dr.Star Anand Ram
Motivation Trainer 
www.v4all.org 

சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.



பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?


இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது

Sunday, July 27, 2014

புதுக்கோட்டை மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு. சின்னப்பாவின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.

பேக்கரி மஹராஜ்

என் கடைகளை வாடிக்கையாளர்கள் நடத்துகிறார்கள்.

புதுக்கோட்டை மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு. சின்னப்பாவின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.
உங்கள் தொடக்க காலம் பற்றி எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?

எங்கள் முன்னோர்கள்காரைக்குடியில் பேக்கரி துறையில் மிகவும் சிறிய அளவில் ஈடுபட்டவர்கள். எங்கள் தாத்தாரொட்டிக்கு ஈஸ்ட் கிடைக்காத காலத்தில்புளிக்க வைப்பதற்காகவே பனங்கள்ளைப் பயன்படுத்தியவர். சிரமமான சூழ்நிலையில்,காரைக்குடியில் நடத்தி வந்த பேக்கரிக்குப் பிறகு முதல் முதலாக 1984ல் புதுக்கோட்டை பர்ஜீமியன் பஜாரில் பேக்கரியைத் துவங்கினேன்.

உங்கள் இளமைக்காலப் போராட்டங்கள் பற்றி சொல்ல முடியுமா?

உயர்நிலைப் பள்ளியில் எனது படிப்பை முழுமையாக நிறைவு செய்ய முடியாதநிலையில் தொழிலில் ஈடுபட்டேன். தொழிலை கற்றுக் கொள்ளவே தொழிலை செய்தேன். நான் உற்பத்தி செய்த பேக்கரி தயாரிப்புகளை நானே மறுநாள் சைக்கிளில்ஏற்றிக்கொண்டுதிருத்துறைப் பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை வழியாக பட்டுக் கோட்டை வரை சாலையோர கடைகளுக்கு விற்பனை செய்தேன். இதை வாரந்தோறும் இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தேன்.
ஒருமுறை வீட்டில் எனது தாயார் திட்டியதால் வீட்டில் சொல்லாமல் வெளியேறி 17வது வயதில் பட்டுக்கோட்டையில் ஆறுமாதங்கள் சிறிய பேக்கரியை வாடகைக்குஎடுத்து நடத்தினேன். லாபமாக நடத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டு ஒரு நாள்சாப்பாட்டுக்கே கஷ்டமாக முடிந்தது.

அப்போது வாடகை கொடுக்காததால் கடைக்காரர் எனது பொருள்களையும் சேர்த்துகடையை பூட்டி சென்றுவிட்டார். கையிலே காசு இல்லை. உடுத்த துணியில்லை.சாப்பிட வழியில்லை. மதுக்கூர் ரோட்டில் உள்ள ஆற்றில் குளிக்க சென்று மாலை 5மணி முதல் 6.30 மணி வரை மாற்றுத் துணியில்லாமல் நான் குளித்ததுஅன்று இரவு சாப்பிட வழியில்லாமல் கடைத்தெருவில் சுற்றி வந்ததுஎதிரில் எனது ஊர்க்காரர்கள் வந்தபோது மறைந்து கொண்டதுஇரவு 11 மணியளவில் படுக்க இடம் தேடி பஸ் ஸ்டாண்ட் சென்றது. அங்கு ஒரு சர்பத் ஸ்டால் மூடும் வரை காத்திருந்து அதில் நிம்மதியோடு படுத்தபோது ஒருவர் அந்த இடத்தை அவர் இடமாக கூறி என்னை விரட்டியது. அதற்கு பிறகு ரயில்வே ஸ்டேஷன் சென்றது. அங்கு போலீஸ் விரட்டியது. எப்படியோ அன்றைய தினம் இரவு கழிந்தது. என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.

எடுத்த எடுப்பிலேயே சொந்தமாக தொழில் தொடங்கினீர்களா?

இல்லை. 1952ல் புயலில் சொத்தை இழந்தது எங்கள் குடும்பம். கடும் வறுமை,தொழில் கற்கும் ஆசையில் ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேதொடர்ந்து நாட்கள் தூங்கவிடாமல் வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.மூன்றாவது நாள் கண்ணை அசத்தியது.

அந்த கடைக்காரர் மனைவி உடனே குச்சியால் தொடையில் அடிப்பார். விழித்துக்கொள்வேன். சிறிது நேரம் கழித்து அவர் அடித்துக் கொண்டேயிருக்க அந்த வலிகூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தேன்.

பிறகு சந்தைகளுக்கு பகோடாபிஸ்கட் போட்டு கண்ணாடிப் பெட்டியில் எடுத்துக் கொண்டு 20 கி.மீ. சைக்கிளிலேயே போவேன். விடாமுயற்சியுடன் மெல்ல மெல்ல வளர்ந்து சொந்தமாக தொழில் தொடங்கினேன்.

பூர்வீகத்தில் என் தாத்தா இழந்த அதே பூமியைஅதன் விலைக்கு வாங்கியபண்ணையாரிடம்அவர் கேட்ட விலைக்கு மீண்டும் வாங்கினேன். அது பெரும்மனநிறைவைத் தந்தது.

இன்று பல இடங்களில் உங்கள் கிளைகள் இயங்குகின்றன. தொடர்ந்து கிளைகள்தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?ஏழை எளிய மக்கள் வந்து போகும் விதத்தில்,அவர்களுக்குரிய விலையில் பேக்கரி தயாரிப்புகள் இருந்ததாலும் அதன் தரத்தைக் கண்டு செல்வந்தர்களும்தேடிவரத் தொடங்கினர். தரமான பேக்கரி தயாரிப்புகளுக்கு உள்ள தேவைகளை உணர்ந்து தொடர்ந்து கிளைகள் திறந்தேன். அதற்கு நல்ல அதரவும் கிடைத்தது.

ஒரே வீதியில் இரண்டு மூன்று கிளைகள் கூட வைத்துள்ளீர்களே?

வாடிக்கையாளர்தான் ஒரு தொழிலுக்கு முக்கியமானவர். அவர்களுக்கு நினைத்ததும் நினைத்த பொருள் உடனே கிடைக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. பொதுவாகவே வீடுகளுக்கு கேக் வாங்கிப் போகிற பழக்கம் வளர்ந்து வருகிறது. எனவேபக்கம்பக்கமாகவும் கிளைகள் துவங்கினேன்.

வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள என்ன செய்கிறீர்கள்?

வருடம் தவறாமல் வாடிக்கையாளர் தினவிழா’ நடத்துகிறோம். குறைகள்,கோரிக்கைகளை வாடிக்கையாளர்கள் சொன்னால் உடனே அதற்கான இன்ஸ்டன்ட்தீர்வுகளும் தருகிறோம். இந்த உறவு காரணமாய்கடையை மக்கள்கண்காணிக்கிறார்கள். என் கடையை வாடிக்கையாளர்களே நடத்துகிறார்கள்.ஊழியர்கள் தவறு செய்தால் உடனுக்குடன் தொலைபேசியில் தெரிவிக்கிறார்கள். உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்.

எல்லாத் தொழில்களுக்குமே போட்டி உண்டு. உங்கள் தொழிலில் உங்களுக்குப்போட்டி என்று யாரையாவது கருதுகிறீர்களா?என் பேக்கரி தயாரிப்புகளுக்கு போட்டி,நானே தயாரிக்கும் இனிப்புகள்தான். நாங்கள் தயாரிக்கும் மகா லட்டு’ திருப்பதி லட்டுக்குத் தம்பி மாதிரி அதே அளவில் இருக்கிறதாய் மக்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக தயாரான உணவுப்பொருட்கள் எளிதில் கெட்டுப் போக வாய்ப்புள்ளது.இவற்றைஎப்படி பாதுகாப்பாக தயாரித்து விற்க முடிகிறது?அன்றாட தேவைக்குமட்டும் எங்களது பேக்கரி தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றது. ஒருசில நாளில்விற்பனை ஆகாத பொருள்கள் கெட்டுவிடும். ஆகையால் உடனுக்குடன் அழிக்கப்பட்டு விடும்.

இந்தத் தொழிலுக்கான ஆட்களை எப்படி தயார் செய்கிறீர்கள்?

ஆட்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். தேர்வு செய்தவர்களை உரியமுறையில் பயிற்றுவித்து தொழிலில் ஈடுபடுத்துகிறேன்.

புதுக்கோட்டை போன்ற நகரங்களில் தொழில் நடத்துவதற்கும் பெரிய நகரங்களில்தொழில் நடத்துவதற்கும் வேறுபாடு ஏதாவது உள்ளதாமற்ற நகரங்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் உண்டா?

புதுக்கோட்டைகாரைக்குடி மட்டும் தொடர்ந்து தொழில் செய்யவே விரும்புகின்றோம். மற்ற நகரங்களில் செய்ய வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேற முயற்சிக்கின்றேன். எங்களது பேக்கரி தயாரிப்புகளை அனைத்து பெருநகரங்களிலும் இருந்து வருகின்ற வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.

உங்கள் வெற்றிக்கு அடித்தளமாக எதைக் கருதுகிறீர்கள்?

என்னை வளர்த்த தாத்தா திரு.சோமசுந்தரம் சேர்வை அவர்கள் அளித்தஅறிவுரைகள்தான் என்னுடைய வெற்றியின் மூலதனம். கிராமத்தில்மரியாதைக்குரியவர். ஆன்மீகத்தில் அதிக பற்று உள்ளவர். எதிலும் நேர்மையைகடைபிடிப்பவர். ஒழுக்கத்தில் சிறந்தவர். எங்கள் கிராமம் பாமணியில் அனைவராலும் மதிக்கத்தக்க அய்யாவின் ஆசியோடு அவரின் பேரனாக வாழ்வதில்பெருமையடைகிறேன்.

புதிதாக தொழில் தொடங்குவோர்க்கு நீங்கள் தரும் ஆலோசனைகள் என்ன?

எந்த தொழில் செய்ய நினைத்தாலும் மனதில் உறுதி வேண்டும். எந்த நேரமும்தொழிலை பற்றிய சிந்தனை வேண்டும்.அதிக நண்பர்கள் வட்டம் இல்லாமல் நல்லஆலோசனை வழங்கக் கூடிய ஒன்று அல்லது இரண்டு நண்பர்கள் போதும்.குறிப்பிட்ட நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தொழிலின் மூலதனத்தை அதிக படுத்திக்கொண்டே போக வேண்டும்.தொழிலின் வளர்ச்சியை மற்றவர்கள் பாராட்டும் முகமாக நேர்மையாக நாணயமாக நல்ல தரத்துடன் செய்தால் தொழிலில் வெற்றி பெறலாம்.

சமூக நலப்பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறீர்கள். இந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?

எனது சமூகப் பணிகள் மூலம் நான் சமுதாயத்தில் அக்கறை உள்ளவனாக,மனிதநேயம் உள்ளவனாகஉதவி செய்பவனாக வாழ்வதால் என்னுடைய நிறுவனத்துக்கும்எனக்கும் பெருமையும் புகழும் கிடைக்கின்றது. இதுகூட தொழில் வளர்ச்சியடைய காரணமாகிறது.

நீங்கள் வாங்கிய விருதுகள்வகித்துவரும் பொறுப்புகள் பற்றி….?

சிறந்த தொழிலதிபருக்கான விருதினை ஜேசீஸ் சங்கம்சுழற்சங்கம் ஆகியவைவழங்கியிருக்கின்றன. இலக்கியப் பேரவை இளம் வள்ளல்” விருது கொடுத்துப்பாராட்டியுள்ளது. தமிழ்நாடு பேக்கரி பெடரெஷன் துணைத்தலைவர் மாவட்ட சாரணர்சாரணீய தலைவர்அறங்காவல் குழு நியமன உறுப்பினர்ரோட்டரி முன்னாள் தலைவர் உலக திருக்குறள் பேரவை புரவலர்.

Yours happily 

Dr.Star Anand Ram
Self motivational Trainer 
www.v4all.org