Friday, May 20, 2016

Seven Leadership Principles to learn from an eagle..

Seven Leadership Principles to learn from an eagle..

(1)  Eagles fly alone and at high altitudes. 
They don't fly with sparrows or other small birds. 

Stay away from (narrow minded people)  sparrows and ravens, those that bring you down.
 Eagles fly with Eagles. Keep good company. 

(2) Eagles have an accurate vision. They have the ability to focus on something as far as 5km. 
No matter the obstacles, the eagle will not move his focus from the prey until he grabs it.

Have a vision and remain focused no matter what the obstacle and you will succeed.

(3) Eagles do not eat dead things. They feed only on fresh prey. 

Do not rely on your past success, keep looking for new frontiers to conquer. Leave your past where it belongs, in the past. 

(4) Eagles love the storm. When clouds gather, the eagles get excited. The eagle uses the storm’s wind to lift it higher. Once it finds the wind of the storm, the eagles uses the raging storm to lift him above the clouds. This gives the eagle an opportunity to glide and rest its wings. In the meantime, all the other birds hide in the leaves and branches of the trees. 

Face your challenges knowing that these will make you emerge stronger and better than you were. We can use the storms of life to rise to greater heights. Achievers are not afraid of challenges rather they relish them and use them profitably.

(5) When a female eagle meets a male and they want to mate, she flies down to earth with the male pursing her and she picks a twig. She flies back into the air with the male pursuing her.
Once she has reached a height high enough for her, she lets the twig fall to the ground and watches it as it falls. The male chases after the twig. The faster it falls, the faster he chases until he reaches it and has to catch it before it falls to the ground, then bring it back to the female eagle.

The female eagle grabs the twig and flies to a much higher altitude, and then drops the twig for the male to chase.
This goes on for hours, with the height increasing until the female eagle is assured that the male eagle has mastered the art of picking the twig which shows commitment, then and only then, will she allow him to mate with her!

Whether in private life or in business, one should test commitment of people intended for partnership.

(6) Eagles prepare for training. They remove the feathers and soft grass in the nest so that the young get uncomfortable in preparation for flying. 

Leave your comfort zone, there is no growth there.

(7) When the Eagle grows old, his feathers become weak and cannot take him as fast as he should. 
When he feels weak and about to die, he retires to a place far away in the rocks. 
While there, he plucks out every feather on his body until he is completely bare. He stays in this hiding place until he has grown new feathers  then he can come out. 

We occasionally need to shed off old habits, things that burden us, or add no value to our  lives.

Yes eagles never give up ...

மனதிற்கான மருந்துகள்

மனதிற்கான மருந்துகள்

மனவளக் கட்டுரை

1) செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக்
கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்கா
விட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப்
 பணத்தைச் செலவழியுங்கள்.

2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள்

3. முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள். பணத்தை வைத்துப்
பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.

4.உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக்குழந்தைகளையோ,
நீங்கள் செத்தபிறகுதான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும்
என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கிவிடாதீர்கள்.

5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ
அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள்
என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப்போவதில்லை.

6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்
ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும்
அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை
மனதில் வையுங்கள்!

7. உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலைவிதிப்படிதான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ!

8. நீங்கள் மாங்கு மாங்கென்று என்னதான் உழைத்தாலும், தினசரி
வாழ்க்கை  ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த
காலத்தில் இருந்து சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம்வரை
ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்?
ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி
இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக்கொள்ளுங்கள்.

”வந்ததை வரவில் வையுங்கள்
சென்றதை செலவில் வையுங்கள்”
அதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்த மகிழ்ச்சிக்கான
சூத்திரம்!

9. எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய்,
நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது!.

10. உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள்
வாழ்க்கை தனிமைப்பட்டுப் போய்விடும்!

11. மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும்,
நடப்பிற்கும் உள்ள இடைவெளிதான் மன அழுத்தத்தை உண்டு
பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக அதிகமாக மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

12. அடிக்கு அடி, சரிக்குச் சரி, என்ற போட்டி மனப்பான்மையை
உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக்
கடிக்க முடியாது. ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள்.
அதுதான் நல்லது.

சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச்
செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
 நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்

Thursday, May 19, 2016

ஜனநாயகமும், கடவுளும்

ஜனநாயகமும், கடவுளும்

1. காசு கொடுத்து ஓட்டுப் பெறுகிறான்.
 2. காசு பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறான்.
 3. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறான்.
 4. ஓட்டின் பலன் என்ன, அதை எப்படி, எதற்கு பயன்படுத்துவது என்ற அறிவே இல்லாமல் ஓட்டுப் போடுகிறான். இவ்வளவுதானா?

ஜாதிப் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறான்;

(தன்) ஜாதியான் என்பதற்காக ஓட்டுப் போடுகிறான்.

 இவை ஜனநாயக பிரதிநிதித்துவ நிலைமை என்றால் நாட்டின் நிலைமையோ மக்கள் ஒருவனை ஒருவன் தொட முடியாத நான்கு ஜாதி, ஒருவருக்கொருவர் உண்ணல் கொடுக்கல் வாங்கல் இல்லாத 400 உள்பிரிவு, 

ஒருவருக்கொருவர் வெறுப்புக் கொண்ட பல மதம், கடவுள்கள், பல வேதங்கள், பல தர்மங்கள், இவற்றுள் பல ஜாதித் தொழில்கள், அவற்றின் படி ஒருவரை ஒருவர் அடக்கி ஆள பல இலட்சியங்கள், சூழ்ச்சிகள் இவை மாத்திரமேயல்லாமல் பெரிதும் கொள்கையே இல்லாத பல பதவி வேட்டைக் கட்சிகள்; இவற்றிற்கு ஏற்ற பத்திரிகைகள்;

 சாக்கடை கழுவுகிறவன் முதல் அய்க்கோர்ட் ஜட்ஜ், சீப் செகரட்டரி வரை ஜாதி உணர்ச்சி, ஜாதி அகம்பாவம், மற்ற ஜாதியை ஆள வேண்டுமென்கிற உணர்ச்சியை மூச்சாகக் கொண்ட சிப்பந்திகள், பதவியாளர்கள், பதவியையும் சம்பளத்தையும் வருவாயையுமே முக்கிய இலட்சியமாகக் கொண்ட மந்திரிகள், பிரசிடென்ட்கள், சட்டசபை, பார்லிமென்ட் மெம்பர்கள். 

இந்த நிலையில் ஜனநாயகம் என்றால் இதற்குப் பொருள் கடவுள் என்பதற்கு உண்டான பொருள் அல்லாமல் ஜனநாயகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புவது போன்றவர்கள் என்பது அல்லாமல் வேறு என்ன?

-  பெரியார் `”விடுதலை”, 3.11.1968

ஹரித்வாரில் அருணகிரியார்.

ஹரித்வாரில் அருணகிரியார்.

சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம்
சிதறியலைந்து போவது செயலாசை
மகர நெருங்க வீழ்வது மகமாய
மருவி நினைந்திடா அருள் புரிவாயே
அகர நெருங்கின் ஆமயம் உறவாகி 
அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி
ககனம் இசைந்த சூரியர் புக, மாயை
கருணை பொழிந்து மேவிய பெருமாளே.

  இந்த பாடலில் உள்ள சந்தத்தை வைத்தே. இந்த பாடல் யாருக்கு சொந்தம் என்பதை நீங்கள்  கண்டு பிடித்து இருப்பீர்கள்.  ஆம் இது அருணகிரி நாதரின் திருப்புகழ். சந்தம் அருணகிரிக்கு சொந்தம்.  

என்னது? தமிழ் கடவுள் முருகனுக்கு அருணகிரி நாதர் காலத்திலேயே ஹரித்வாரில் கோவிலா என்று நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது. முருகனுக்கு தனிக்கோவில் ஹரித்வாரில் இல்லை. ஆனால் ஹரித்வார் அமைந்துள்ள உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்திர பிரயாகை அருகேயுள்ள கணக் செளரி என்கிற சிறு கிராமத்தில் கார்த்திகேயன் என்கிற திருநாமத்தோடு கார்த்திக் சாமியாக. முருக பெருமான் அருள் பாலிக்கிறார். இந்த ஸ்தலம் ஹரித்வாரில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரம்` 

ஹரித்வாருக்கு அருணகிரி நாதர் திருப்புகழ் பாடியிருக்கிறார். அந்த பாடல் தான் இது. 

 அருணகிரி பெருமான் வட நாட்டுக்கு என்று அருளிய திருப்புகழ் மொத்தம் 6. ஸ்ரீசைலம்; திருவேங்கடம்; காசி, பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள 'வயிரவி வனம், திருக்கயிலை மலை, மற்றும் மாயாபுரி என்னும் ஹரித்வார். திருவண்ணாமலை முதல் திருக்கைலாயம் வரை. அருணகிரி நாதர் நடந்தே இவ்ளவு ஆலயங்களை தரிசனம் செய்து உள்ளார். 

வட நாட்டுத் தலங்களைப் பாடுகையில். குறிப்பிட்ட 1,2 கோவில்களை பற்றி மட்டும் பாடாது. அப்பகுதி முழுவதையுமே ஆறுமுகனின் திருக்கோயிலென அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். எவ்வாறு சிவனும், சக்தியும் வேறு இல்லையோ. அதேபோல் சிவனும், முருகனும் வேறு, வேறு அல்ல. நமசிவாய ஐந்தெழுத்து சிவம். சரவணபவ ஆறெழுத்து சிவம். 

 சரி மேலே நாம் கண்ட அந்த ஹரித்வார் திருப்புகழின் அர்த்தம் என்ன. 

நமசிவாய என்கிற 5 எழுத்தில். ம' என்பது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்து  விடுவிக்கும். சி' என்பது மனவடக்கம், சிவஞானம்  இவற்றை தரும். ஆணவம், கன்மம், மாயை என்கிற 3 மலங்களில் இருந்து நாம் விடுபட்டால் தானே நமக்கு மண அடக்கம் வரும். மனம் ஒடுங்கினால்  ஞானமும் வரும்.அத்தகைய பெருநிலையை எனக்கு அருள்வாய். முன்பு சூரனால் துன்புற்ற சூரிய தேவன் உன்னிடத்தில் சரணடைய. சூரியனை காத்து இந்த மாயாபுரிதன்னில் வீற்றிருக்கும் முருக பெருமானே.  என்கிறார் அருணகிரி நாதர். 

 மேலும் என்னை பொறுத்தவரை. இறைவனை தமிழ் கடவுள், மலையாள கடவுள், தெலுங்கு கடவுள், ஹிந்தி கடவுள், அரேபிய கடவுள், ஐரோப்பிய கடவுள் என்று கடவுளை ஒரு குறிப்பிட்ட ஒரு மொழி, தேசம், கண்டம் இவற்றுக்குள் அடைப்பதில் உடன்பாடு இல்லை. அந்த சூரியன் அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றால். பலகோடி சூரியன்கள் அண்டத்தில் உண்டு. பலகோடி கோள்களையும், வீண் மீன்களையும் படைத்த அந்த இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் அல்லவா. 

 சரி. ஹரித்வாருக்கு மாயாபுரி என்கிற பெயர் எதனால்? வந்தது. தலைவலி போக்கும் மாத்திரையை நாம் தலைவலி மாத்திரை என்று தான் சொல்வோம். பூச்சியை அழிக்கும் மருந்தை நாம் பூச்சி மருந்து என்று தான் சொல்வோம். கொசுவை  கொல்லும் மருந்தை நாம் கொசு மருந்து என்று தான் சொல்வோம். அதே போல். இந்த ஸ்தலம் மாயையை அழிக்கும். பலநுறு பிறவிகளாக நம்மை தொடரும் மாய பேயை அழிக்கும் ஸ்தலம் இந்த மாயாபுரி. 

  இந்த மாயாபுரிக்கு வரும் மே 15 நமது ஹரிகேசா டிராவல்ஸ் மூலம் வர பலர் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். நீங்கள் அடியேனுடன் வருவதாக இருந்தாலும். இல்லை தனியாக செல்வதாக இருந்தாலும். அட்வான்சாக புக் செய்தால் தான். வயதானவர்களுக்கு லோயர் பர்த் கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

For Enquiry, Booking- Mail id- krishnaprasad.hv@gmail.com.


Address- Door Number 22/32, Thillai Ganga Nagar 23rd Street, Nanganallur, Chennai- 600061. Nearest Landmark Devi Karumari Amman Temple. Near to Thillai Ganga Nagar Subway.

   தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

இஸ்லாமியர்கள் முரசு கொட்டும் திருத்தணி.

இஸ்லாமியர்கள் முரசு கொட்டும் திருத்தணி. 

விரையிடங் கொளும் போதினுள் மிக்க பங்கயம் போல் 
திரையிடங்  கொளும் நதிகளிர் சிறந்த கங்கையைப் போல் 
தரையிடங் கொளும் பதிகளிர் காஞ்சி யந்தலம் போல் 
வரையிடங்களிர் சிறந்த[து] இத் தனிகை மால் வரையே.

என்று  கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்திலே சொல்கிறார். 

 இதன் பொருள். மலர்களிலே சிறந்தது தாமரை, நதிகளில் சிறந்தது கங்கை, நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகர். அதே போல் மலைகளில் இந்த திருத்தணி மலை மிக சிறந்தது என்று முருகபெருமான் வீற்று இருக்கும் எந்த மலைக்கும் கொடுக்காத சிறப்பை கச்சியப்ப சிவாச்சாரியார் இந்த தணிகை மலைக்கு கொடுக்கிறார். 

அதுசரி. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கச்சியப்ப சிவாச்சாரியார் சொல்கிறார் என்றால். அவர் தொண்டை நாட்டு காரர். காஞ்சிபுரம் அவரது சொந்த ஊர் என்று நாம் சற்று அலட்சியமாக அவர் சொல்வதை ஒதுக்கி விடலாம். ஆனால்?  காஷ்மீர கவி காளி தாசர் நகரேஷு காஞ்சி என்று காஞ்சியை போற்றுகிறார். 

ஏசு கிருஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே காஞ்சி புகழ்பெற்ற ஒரு நகராக. அதிலும் குறிப்பாக கல்விக்கு புகழ்பெற்ற ஒரு நகராக விளங்கியிருக்கிறது. 

2600 ஆண்டுகள் பழமையான பீகார் நாளந்தா பல்கலைகழகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்பித்த நாளந்தா பின்னர் அன்னியர் படை எடுப்பின் பொழுது அழிக்கப்பட்டது. கிட்டதிட்ட நாளந்தா போன்றே பல கல்லூரிகள், பல்கலை கழகங்கள் காஞ்சியிலும் நாளந்தா காலத்திலேயே இருந்து இருக்கிறது என்பது நமக்கு சில சங்க இலக்கிய பாடல்கள், நுல்கள் மூலம் தெரியவருகிறது. ஆனால் போதிய ஆதாரம்.இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. மேலும் நாளந்தாவில் அன்று பேராசிரியர்களாக இருந்த தர்ம பாலர் போன்ற  பலர் காஞ்சிபுரத்து காரர்கள்  தான். விஞ்ஞானி பாஸ்க்கராசார்யா காஞ்சிபுரத்து காரர் தான். 

 அன்று தெற்க்கே காஞ்சி, வடக்கே காசி, காஷ்மீரம் முதலான இடங்களில் பல பல்கலைகழகங்கள் இருந்து உள்ளது. அன்று வட நாட்டில் இருந்து பலர் காஞ்சிக்கு வந்து படித்து உள்ளார்கள். 

திருத்தணியின் சிறப்புகள் 

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால்  பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால்   புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. 

365 நாட்களை குறிக்கும் விதமாக 365 படிகள். 

பெருமாள் கோவில் போல் சடாரி சார்த்தி துளசி தீர்த்தம் தரும் ஒரே முருகன் கோவில் இது தான். 

அருணகிரி நாதர் வள்ளிமலையை தரிசனம் செய்து விட்டு திருத்தணி வந்தார். இத்தனை ஆண்டுகள். நாம் தணிகை வேலணை தரிசனம் செய்யாமல் இருந்து விட்டோமே என்று வருந்துகிறார்.  66 திருப்புகழ் திருத்தணிக்காக பாடியிருக்கிறார். 

 அருணகிரி நாதரின் அதிக திருப்புகழ் பெற்ற முருகன் ஸ்தலங்களில் திருத்தணியும் ஒன்று. 

 சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி. முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி. 

பசுவின் உடல் முழுக்க பால் இருந்தாலும். அதன் மடியிலிருந்து  தான் நாம் பால் பெற முடியும். அதன் காதிலிருந்தோ, கொம்பிலிருந்தொ முடியாது. அதே போல். முருக பெருமானின் அருட் பேராற்றல் உலகம் முழுவதும். பல்வேறு இடங்களில், ஸ்தலங்களில் பரவியிருந்தாலும். ஒவ்வொரு ஷேத்ரதிற்கும் தனியாக ஒரு விசேஷம் உண்டு. அதை போல் தான் இந்த திருத்தணியும்.

  இங்கே முருக பெருமான் கோபம் தணிந்து மிகுந்த மகிழ்ச்சியோடு, குளிர்ச்சியோடு அமர்ந்து இருக்கிறார். இவரை நாம் வழிபட்டால். நமக்கும் அதே மகிழ்ச்சி, குளிர்ச்சி கிடைக்கும். இவரை தொடர்ந்து நாம் வழிபட, வழிபட. நமது மனதில் உள்ள தீய எண்ணங்களான காமம், மோகம் முதலியவை  நெருப்பில் இட்ட பஞ்சு போல் அழிந்து போகும்.

 மேலும் பழனி முருகன் நவ பாஷாணத்தால் ஆனவர் என்பது. முருக பக்தர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. திருத்தணி முருக பெருமானும் நவ பாஷாணத்தால் ஆனவர் தான். திருத்தணி முருகன் மார்பில் ஒரு குழி  உண்டு. அதில் சார்த்தப்படும் சந்தனம் எல்லா பிணிகளையும் போக்கவல்லது. 

 மேலும் தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் வெள்ளை யானை. கற்ப்பக விருட்சம், காமதேனு போல் செல்வம் தரும் ஒன்று. அந்த யானைக்கு இந்த திருத்தணி மிக பிடித்து போக அது இங்கேயே தங்கி விட்டது. அதனால் இந்திரனின் செல்வம் குறைய ஆரம்பித்தது. பின்னர் முருக பெருமான் ஆணையிட. அது கிழக்கு பக்கம் தேவ லோகத்தை நோக்கி தனது இரண்டு பார்வைகளில்   ஒன்றை செலுத்தியது. அதனால் இந்திரனின் பிரச்சனையும்  தீர்ந்தது. இங்கே மயிலுக்கு பதில் யானை வாகனமாக இருக்க இது தான் காரணம். 

 சப்த ரிஷிகளும் இங்கே வழிபட்டு 7சுனைகளை இங்கே அமைத்து உள்ளார்கள்.  

 சங்க கால புலவர் நக்கீரரால் பாட்பெற்ற ஸ்தலம் திருத்தணி 

திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். திருத்தணிக்கு கழுக்குன்றம் என்றும் ஒரு பெயர் உண்டு. 

முருக பக்தர்களில் 20 ம் நுற்றாண்டில் முருகனை கண்ணால் கண்ட 2 மிகப்பெரிய மகான்கள் ஒருவர் பாம்பன் ஸ்வாமிகள், இன்னொருவர் வள்ளிமலை ஸ்வாமிகள். இருவரது வாழ்விலும் திருத்தணி முருகன் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். 

 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்ஷிதர் பல பாடல்களை பாடியுள்ளார். அவரை முதலில் பாட வைத்தது இந்த திருத்தணி முருகன் தான். திருத்தணி முருகனை தரிசிக்க வந்தார் முத்துஸ்வாமி தீட்சிதர். அவர் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்லும்போது எதிர்ப்பட்ட முதியவர் ஒருவர், ‘முத்துஸ்வாமி!’ என்று அழைத்து தீட்சிதரின் வாயில் கற்கண்டு ஒன்றைப் போட்டாராம். அந்தக் கற்கண்டை சுவைத்ததும் பரவச நிலை அடைந்தார் தீட்ஷிதர். மறு கணமே ‘ஸ்ரீநாதாதி குரு குஹோ’ என்ற கீர்த்தனை பிறந்தது. முதியவராக வந்தது முருகப் பெருமானே என்றுணர்ந்த முத்துஸ்வாமி தீட்ஷிதர், திருத்தணி முருகன் மீது எட்டு கிருதிகளைப் பாடினார். அவையே, புகழ்பெற்ற ‘விபக்தி கீர்த்தனைகள்’ ஆகும்.

இங்கே 2 உற்சவர்கள். ஒரு உற்சவர் 1 முகம் 4 கரங்களோடு ருத்ராக்ஷ விமானத்தில் காட்சி தருகிறார். ஒரு லட்சம் ருத்ராக்ஷங்களால் ஆன விமானம் இந்த ருத்ராக்ஷ விமானம். இன்னொரு முருகன் ஆறு முகம் பன்னிரு கரங்களோடு காட்சி தருகிறார். மேலும் இங்கே வள்ளி, தேவானை இருவருக்குமே தனி, தனி சந்நிதி. 

 என்னை பொறுத்தவரை இந்த கோவிலில் மிகப்பெரிய ஹை லைட். ராமேஸ்வரம், சபரி மலை போல். இந்த கோவிலும் ஹிந்து, இஸ்லாம் ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக இருக்கும் ஸ்தலம். 

 இந்த பகுதியை 200 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட காதர் என்னும் நவாபிற்கு ஒரு பெரிய நோய் வந்தது. அவர் நவபாஷானத்தின் அறிவியல் மகத்துவம். அந்த நவபாஷாணத்தால் ஆன இந்த தணிகை முருகனின் அருள் மகத்துவம் இரண்டையும் கேள்விப்பட்டு. இந்த ஸ்தலத்து முருகனை வழிபட்டு. பக்தியோடு திருத்தணி முருகன் கோவில் சந்தனத்தை பூசி அதை உண்டதில். அவரின் நோய் நீங்கியது. அதன் பின்னர். இந்த கோவிலில் நாலாவது   பிரகாரமான ரத வீதியில் அந்த காதர் ஒரு சிவலிங்கம் அமைத்தார். பிரசன்ன காதரீஸ்வரராக சிவன் இன்று அருள் பாலித்து கொண்டு இருக்கின்றார். 

 இன்றும் ஸ்வாமி புறப்பாடின் பொழுது. நாலாவது பிரகாரத்தில் உள்ள நவாப் வாத்திய மண்டபத்தில் ஒரு இஸ்லாமியர் முரசு வாத்தியம் வாசிப்பார். 

 இந்திரனின் வாகனமான ஐராவதம் விரும்பி வந்து தங்கிய பதி இது. சூரனால் இந்திரன் இழந்த அனைத்து செல்வங்களையும் இந்திரன் பெற்ற பதி இது. இந்த திருத்தனிக்கு பரி பூரண பதி என்றும் ஒரு பெயர் உண்டு. அணைத்து செல்வங்களையும் பெற்ற ஊர் என்பதே இதன் பொருள். 

செல்வம் தரும் ஸ்தலங்களில் இந்த  திருத்தணியும் ஒன்று. நோய் நீக்கும் ஸ்தலங்களில் இந்த திருத்தணியும் ஒன்று, ஞானம் வழங்கும் ஸ்தலங்களில் இந்த திருத்தணியும் ஒன்று. 

தணிகை முருகனுக்கு வில்வ அர்ச்சனை செய்தல் மிக , மிக விசேசம். நாலே நாலு வில்வ இலைகளை 10 ரூபாய் க்கு இங்கே விற்கிறார்கள். அதனால் தணிகை முருகனை தரிசிக்க செல்பவர்கள் தேவையான அளவு வில்வ இலைகளை ஒரு பேப்பரில்  கட்டி கொண்டு செல்லுங்கள். [ பிளாஸ்டிக் கூடாது. 

நானிலம் போற்றும், நாலாயிரம் ஆண்டுகள் பழமையான மத நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கும் தனித்துவமான திருத்தணி வேலணை, மகத்துவமான திருத்தணி வேலணை நாம் தொழுது எல்லா நலங்களும், வளங்களும் பெறுவோமாக. 

  திருதணிகை திருமுருகன் திருபாதங்கள் போற்றி

அமெரிக்காவில் திருவண்ணாமலை

அமெரிக்காவில் திருவண்ணாமலை 

ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள் தவம் செய்தார். சிவனை நேரில் கண்டார். அவர் முன் மயில், பாம்பு, பூனை, எலி முதலான பல விலங்குகள் தனது பகை மறந்து ஒற்றுமையாக இருந்தன. தன்னை வந்து தாக்கிய தீயவர்களை கூட இவர் சபிக்கவில்லை. போலீசில் புகாரும் கொடுக்கவில்லை. அத்தகையோரிடமும் அன்பை காட்டி திருத்தினார். பலரின் நோய்களை இவர் குணப்படுத்தினார். அதே சமயம். இவர் தனக்கு வந்த புற்று நோயை குனப்படுத்த இவர் தனது தபோ வலிமையை பயன்படுத்த வில்லை. எனது கர்ம வினையை நான் அனுபவித்தே தீர வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். 

இந்த துறவியின்  உத்தரவை தட்ட முடியாமல். மயக்க மருந்து கொடுக்காமல் தான் கேன்சர் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையை இவருக்கு டாக்டர்கள் செய்தார்கள். அந்த துறவி துளி கூட கத்தவில்லை. அவ்ளவு ஏன். ஒரு சொட்டு ரத்தம் கூட அந்த துறவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வரவில்லை. இத்தகைய ஒரு அதிசய நபரை அதுவரை அந்த மருத்துவர்கள் சந்தித்தது இல்லை. இனி சந்திக்கபோவதும் இல்லை. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு இருந்த பதட்டத்தில் ஒரு சதவீதம் கூட அந்த துறவிக்கு இல்லை. மலர்ந்த தாமரை போன்ற சிரித்த முகத்தோடு அந்த துறவி இருந்தார். 

 நான் யார் என்ற கேள்வியை தனக்கு தானே கேட்டு கொண்டு. அதற்கு விடையையும் கண்டு. முற்றும் உணர்ந்த ரமண மஹரிஷிக்கு இந்த கேன்சர் கட்டி எம்மாத்திரம். 

 இவர் ஒரு உண்மையான ஞானி என்றால். இவருக்கு எவ்வாறு? புற்று நோய் வரும். தனது நோயை குணப்படுத்தும் சக்தியே இந்த ஞானிக்கு இல்லையா என்று  ஒரு அரசியல் வாதி இவரை அண்ணா ந்து பார்த்து கேலி செய்தார். அந்த அரசியல் வாதி ஒண்டரை ஆண்டுகள் மட்டுமே தமிழக முதல்வராக இருந்து புற்று நோயால் இறந்தார் என்பது தனி கதை. 

 நியூட்டனின் மூன்றாம் விதி சொல்வது என்ன?  ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. ரமண மஹரிஷி போன்றவர்கள் இது போல் தன்னை பழிப்பவர்களை சபிக்க மாட்டார்கள். அதே சமயம் நமது பாவ, புண்ணிய பலன்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.அதில் இருந்து தப்பவே முடியாது என்று தான் சித்தர், புத்தர் என  அனைவரும்  சொல்லும் விஷயம். 

 ரமண மஹ ரிஷிக்கு எதனால் புற்று நோய் வந்தது என்பதை பற்றி ஓஷோ ரஜனீஷ் என்ன சொல்கிறார் என்றால். 
ஒரு ஞானிக்கு ஏற்படும் துன்பங்களும்,மகிழ்ச்சியும் அவரது உடலுக்கே ஏற்படுபவை.அவை அவர் ஆத்ம சாட்சாத்காரம் அடைவதற்கு முன் துலங்கிய கர்ம பலன்களின் தொடர்ச்சியே.ஒரு கனவில் விதைக்கப்பட்ட விதைகள் கனவிலேயே வளர்ந்து விதை கொடுக்கலாம். நான் விழித்து எழுந்த பின் இவை கனவுக் கனிகள் என்றே உணர்கிறேன். நான் கனவிலேயே தொடர்ந்து இருந்தால் அந்தக் கனிகளை அறுவடை செய்து,அதன் விதைகளை அடுத்த பயிர்வரை விதைத்து இருப்பேன்.விழித்தெழுந்துவிட்ட நானோ இந்தப் பயனற்ற செயலில் ஈடுபட மாட்டேன் அல்லவா ? அந்தக் கனவுக் கனிகள் பழுத்து உதிர்ந்து விட்டன.அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை.அது போன்றே,ஞானிக்கு ஏற்படும் இன்ப,துன்பங்களும் பழைய கர்ம பலங்களின் தொடர்ச்சி என்கிறார் ஓஷோ. 

பூகோளம், வரலாறு, அறிவியல் என அனைத்தை பற்றியும் ரமணருக்கு தெரியும். இவரிடம் யார் எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் இவர் அவர்களிடம் பேசுவார். இவை எல்லாம் ரமணர் எப்பொழுது கற்று கொண்டார் என்பது இவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாத ஒன்று. ஒருமுறை அமெரிக்காவில் இருந்து ஒரு தம்பதியர் ரமணரை தரிசிக்க வந்து இருந்தனர். திருவண்ணாமலைக்கு நிகராக ஏதேனும் எங்கள் அமெரிக்காவில் ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றதா என்று அந்த தம்பதியர் ஆவலோடு கேட்டனர். ரமணர் சில நொடிகள் கண் மூடி பின்னர் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கின்றது. அது கலிபோர்னியாவில் உள்ள Mount Shasta என்றார். 

 திருவண்ணாமலை, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Mount Shasta இரண்டுமே ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது. தொடர்ந்து பத்தாயிரம் ஆண்டுகளாக ஒரு எரிமலையில் இருந்து எரிமலை குழம்பு  வரவில்லை என்றால். அந்த எரிமலை Extinct Volcano. திருவண்ணாமலை, Mount Shasta இரண்டுமே Extinct Volcano என்பதை முதற்கொண்டு அந்த அமெரிக்க தம்பதியினருக்கு ரமண மகரிஷி சொன்னது தான்  அவர்களுக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். 

 தமிழ் நாட்டை தாண்டாத இவருக்கு கலிபோர்னியாவில் அப்படி ஒரு மலை இருப்பது எவ்வாறு தெரிந்தது. 

இன்று அமெரிக்காவில் உள்ள புனித ஸ்தலங்களில் Mount Shasta வும் ஒன்று. திருவண்ணாமலை போல் அந்த மலையையும் பல பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள். மேலும் புராணத்தில் குறிப்பிடப்படும் பாதாள உலகம் என்பது தனியாக உள்ள உலகம் அல்ல. அது இந்த பூமியின் மறு பகுதியான அமேரிக்கா. இங்கே பகல் என்றால் அமெரிக்காவில் இரவு வர காரணம் அது தான். புராணத்தில் குறிப்பிடப்பட்ட கபிலாரண்ய ஷேத்ரம் தான் இன்றைய கலிபோர்னியா. 

சிந்தனையை உள் நோக்கி திருப்பி. தன்னை தானே வென்ற ஞானிக்கு தெரியாத ஒன்று என்று உலகினில் எதுவும் இல்லை. முடியாத ஒன்று எதுவும் இல்லை. அத்தகைய ஒரு ஞானி நினைத்தால் இந்த உலகையே ஒரு நொடியில் வென்று விடலாம். 

 ஆன்ம ஞானம் அடைவதை பற்றி ரமணர்.

ரமண மஹரிஷி கூறுகிறார் : ஆத்ம ஞானம் என்பது மிக எளிதாகப் பெறக்கூடிய ஒன்று.ஏனெனில் அதை எங்கேயும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது உன்னிடத்திலேயே உள்ளது. எப்போதும் இருந்து கொண்டே இருப்பது. நீ செய்ய வேண்டியதெல்லாம் வெளியே நோக்குவதை  விட்டு, விட்டு  உள்ளே திரும்பி நோக்க வேண்டும். அவ்வாறு நோக்க, நோக்க.  நீ உடனே ஒரு பிச்சைக்காரன் என்ற நிலையிலிருந்து சக்கரவர்த்தி என்ற நிலைக்கு உயர்கிறாய்.ஆத்ம சிம்மாசனத்தில் அமர்ந்து ஞான சாம்ராஜ்யத்தை ஆளத்துவங்குகிறாய். நீ செய்ய வேண்டியதெல்லாம் திரும்பி காண வேண்டியதுதான்.அதுவே ஆத்ம ஞானத்தின் திறவுகோல்.

இதுவரை நீ கற்றதெல்லாவற்றையும் மறந்து விடு.உனது புத்திசாலித்தனம்,சாதுர்யம் எல்லாவற்றையும் துறந்து,ஒரு குழந்தை போன்ற தன்மையுடனும்,நம்பிக்கையுடன் உள் நோக்கிச்செல். உன்னைத் தவிர வேறு ஒன்றுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை. எனவே ஒரு திறந்த இதயத்துடன் ஞானத்தை வரவேற்பாய். இதுவே உண்மையான சிரத்தை உண்மையான அறிதல் என்கிறார் ரமண பகவான். 

 நாமும் சற்று நமது சிந்தனையை உள் நோக்கி செலுத்தி மனதை வென்று ஆத்ம ஞானம் பெற முயற்ச்சிப்போம். அதற்கு புற துறவு அவசியம் அல்ல. அக துறவே அவசியம்.

புலியுடன் தனியாக ஆயுதங்கள் இன்றி மோதினார்

கட்டிய, வெட்டிய

கட்டிய, வெட்டியவா. என்ன? தலைப்பு  இது. கட்டிக்கோ, ஒட்டிக்கோ ராம்ராஜ் விளம்பரம் மாதிரி என்று நீங்கள் குழம்பலாம். 

பல சுவையான சரித்திர நிகழ்வுகளை உங்களுக்கு சொல்ல போகிறேன். அவற்றை தெரிந்து கொள்ள நீங்கள் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அவ்வாறு பின்னோக்கி செல்ல நீங்கள் நேற்று, இன்று, நாளை படத்தில் வரும் டைம் மெஷின், 24 படத்தில் வரும் வாட்ச் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்த தேவையில்லை. நீண்ட, நெடிய இந்த  பதிவை முழுமையாக வாட்ச் பண்ணி படித்தாலே போதும். 

சுமார் 1065 ஆண்டுகளுக்கு முன் சாளா என்னும் மாவீரர் புலியுடன் தனியாக ஆயுதங்கள் இன்றி  மோதினார். அப்போது அதை வேடிக்கை பார்த்த மக்கள் ஹோய்சாளா, ஹோய்சாளா என்று கோஷம் இட்டார்கள். (ஹோய் என்றால் கன்னடத்தில் மோது; சாளா என்பது போரிட்டவரின் பெயர்.) இரண்டும் இணைந்து ஹோய்சாளா என்று மாறியது. புலியை வென்ற அந்த சாளாவுக்குப் பின் வந்தவர்கள்  ஹோய்சாள வம்சம் என அழைக்கப்பட்டனர். 

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்து 14-ஆம் நூற்றாண்டு வரை ஹோய்சாள வம்ச மன்னர்கள் அரசாண்டனர்.

950-ஆம் ஆண்டு ஆரக்கெள்ள என்பவரைத் தலைவனாகக் கொண்டு இவ்வம்சத்தின் வரலாறு தொடங்குகிறது. 

அவருக்கு பின் வந்த நிரூபகமா தான் ஹோய்சாள சாம்ராஜ்யத்தின் முதல் மன்னர்.   நிரூபகமாக்கு பின் 2] வினயா தித்தா, 3] ஈரே யேங்கா 4] பல் லாலா,  ஐந்தாவதாக வந்த விஷ்ணு வர்தணன் தான் ஹோய்சாள  சாம்ராஜ்யத்தில் குறிப்பிடத்தக்க மன்னர் ஆவார். ஆம். சோழர்களில் எவ்வாறு ராஜேந்திர சோழனோ அதே போல்  ஹோய்சாள சாம்ராஜ்யத்தில் விஷ்ணு  வர்தணன். 

அன்று சைவ வெறியனாக இருந்த இரண்டாம் குலோத்துங்கனால்  வைஷ்ணவர்கள் பல அவதிகளுக்கு உள்ளானார்கள். ராமானுஜ தாசனான ரங்கராஜ நம்பியை ரங்க ராஜர் சிலையோடு கட்டி கடலில் இரண்டாம் குலோத்துங்கன்   வீசி  எறிந்த கதை தசாவதாரம் படம் பார்த்த அனைவருக்குமே தெரியுமே. கிருமி கண்ட சோழன் என்று அழைக்கப்பட்ட  இரண்டாம் குலோத்துங்க சோழனின் கொடுமைகள் உச்சத்தை தொட. அதனால்   ராமானுஜர் கர்நாடக தேசம் சென்றார். அதன்பின்  ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான் ராமானுஜர் இருப்பிடத்தை சொல்ல மறுத்ததால்.  இரண்டாம் குலோத்தங்கன்  கூரத்தாழ்வாரின்  2 கண்களையும் பிடுங்கினான். 

கிபி 840 இல்  செத்து கிடந்த சோழ சாம்ராஜ்யத்திற்கு புத்துயிர் கொடுத்து புனர் நிர்மாணம் செய்தவர்  விஜயாலய சோழன். அவர்  காலத்தில் ஆரம்பித்து  தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி குவித்தவர்கள் சோழர்கள். 

அத்தகைய  சோழர்களே முதன்முறையாக நிலைகுலைந்தது எப்பொழுது என்றால். கிபி 1004 இல் கலியூரின் மீது படை எடுத்த பொழுது. ஆம் சோழர்களையே கலியூர் யுத்தம் கலங்க வைத்தது. 

அன்று கர்நாடகத்தில்  வலுவான பேரரசு இல்லை. கர்நாடகத்தை ஆண்டு கொண்டிருந்த மேற்கு சாளுக்கியர்கள் அப்பொழுது அங்கே முழுமையாக வீழ்ச்சி அடைந்து விட்டார்கள். கர்நாடக மக்கள் கைகளில் கிடைத்த  சிறு, சிறு ஆயுதங்களை கொண்டு அன்று பாரத தேசத்தில் மிகப்பெரிய சக்ரவர்த்தியாக இருந்த ராஜ, ராஜ சோழனையே எதிர்த்தார்கள். மிக வீரமாக, மிக மூர்க்கமாக கங்கம்பாடி வீரர்கள் போரிட்டார்கள். 

அந்த கலியூர் யுத்தத்தில் ராஜ, ராஜ சோழன் அவர்களுக்கு வெற்றி கிடைத்தாலும் முழுமையான கர்நாடகத்தை அவரால் கைப்பற்ற முடியவில்லை. கர்நாடகத்தின் தெற்கு பகுதியை மட்டுமே ராஜ, ராஜ சோழனால் கைப்பற்ற முடிந்தது. 

1004 இல் சோழர்கள்  கைப்பற்றிய பகுதிகள் அனைத்தையும் 1117 இல் மீட்டு. அன்றைய சோழ மன்னரான விக்கிரம சோழனை தோற்கடித்த வீரர் தான் விஷ்ணு வர்தணன். இவர் சோழ சாம்ராஜ்யம் முழுவதையும் கைப்பற்ற நினைக்கவில்லை. சோழர்களிடம் இழந்த தனது மண்ணை மீட்க மட்டுமே இவர் போராடி அதில் வெற்றியும்  பெற்றார்.

சரி. இந்தியாவில் பல பகுதிகள் இருக்கும் பொழுது ராமானுஜர் கர்நாடக தேசம் சென்றதன் காரணம் என்ன?

அன்று அணைத்து சாம்ராஜ்யங்களும் சோழர்களுக்கு அடி பணிந்தது. ஆனால் பாண்டிய சாம்ராஜ்யம் மட்டும் சோழர்களுக்கு அடி  பணியாததால் பாண்டியர்கள் சோழர்களால் பல இன்னல்களுக்கு உள்ளாகினார்கள். பாண்டிய மன்னர்களுக்கு அன்றைய இலங்கை  மன்னர்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் என்னும் ஒரே காரணத்திற்காக  தான் சோழர்கள் இலங்கை மீது படை எடுத்தார்கள். இலங்கையை வெற்றி கொண்ட பின். இலங்கையில் உள்ள பல ஆயிரம் தமிழ், சிங்கள மக்களை கொத்தடிமைகளாக சோழர்கள் சிறை பிடித்தார்கள் என்பதை  சோழர்களின் கல்வெட்டுக்களே மிக பெருமையாக சொல்கிறது. 

ராமானுஜருக்கு எந்த சமஸ்தானத்தின் மன்னன் அன்று அடைக்கலம் கொடுத்திருந்தாலும் இரண்டாம் குலோத்துங்கன் அந்த மன்னன் மீது   நிச்சயம் படை எடுத்து வருவான். ஆனால் குலோத்துங்கனே பார்த்து பயப்பட்ட ஒரு மன்னன்   அன்று பிட்டி தேவன் என்கிற விஷ்ணு வர்தணன் மட்டுமே.

அதனால் தான் ராமானுஜர் கர்நாடக தேசம் சென்றார். பிட்டி தேவனும் ராமானுஜருக்கு அடைக்கலம் கொடுத்தார். பிட்டி தேவன் சமண மதத்திற்கு மாறிய மன்னர். மகேந்திர வர்மன், நெடுஞ்செழிய பாண்டியன் போன்ற மன்னர்கள்  எவ்வாறு சமண மதம் மாறி மீண்டும் தாய் மதம் திரும்பினார்களோ அதே போல் இந்த பிட்டி தேவனும்   தாய் மதம் திரும்பினார். அதற்கு காரணமாக இருந்தவர் ராமானுஜர். 

பிட்டி தேவனின் மகளான வசந்திகா ஒரு கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாள். அதனால் அவள் அனைவரிடமும் மிக மோசமாக  நடந்து கொண்டாள். அவளை பேய் பிடித்தவள் என்றே அனைவரும் அழைத்தனர். ராமானுஜர் துளசிக்கு மிஞ்சிய மருந்து எதுவும் இல்லை  என்று பிட்டி தேவனிடம் எடுத்து சொல்லி. ராமானுஜர்  பெருமாளை வணங்கியவாறே அவர் துளசி மூலம் எதோ ஒரு வைத்தியம் செய்து. வசந்திகாவை  பிடித்து இருந்த  அந்த கொடுமையான மனநோய் என்னும் பேயை விரட்டினார். மேலும் காலம், காலமாக பெருமாள் கோவில்களில்  செப்பு பாத்திரத்தில் துளசி நீர் கொடுக்கபடுவதன் காரணம் அதன் அறிவியல் மகத்துவம் பற்றி ராமானுஜர்  பிட்டி தேவனிடம் எடுத்து சொன்னார்.

உண்மையிலேயே துளசி  பல நோய்களை குணபடுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா. ஆம். ஒன்றல்ல, இரண்டல்ல. 448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

ஆயுர்வேதம் சொல்வது இருக்கட்டும். துளசியின் மகத்துவம் பற்றி வெள்ளையர்களின் ஆய்வுகள் சொல்வது என்ன?  நாங்க வெள்ளைகார பய புள்ளைங்க சொல்வதை தான் உண்மை என்று நம்புவோம் என்று நீங்கள் சொன்னால். 

Tulsi Cures Cancer என்று கூகிளில் தேடுங்கள். ndtv முதலான பல வலைத்தளங்கள் துளசி மருத்துவத்தின் மகத்துவம் பற்றி அறிவியல் சான்றுகளோடு பதிவுகள் செய்து இருக்கிறார்கள். 

தனது மகள் வசந்திகாவின் நோயை ராமானுஜர் குணப்படுத்தியதால். பிட்டி தேவன் சமண மதத்தில்  இருந்து  வைணவத்திற்கு மாறினார். 

விஷ்ணு வர்தணன் வைஷ்ணவராக மாறிய பின். 100 இற்கும் மேற்பட்ட கோவில்களை கட்டினார். அதில் சிவன் கோவில்களும் பல  அடக்கம்.  அந்த சிவன் கோவில்களில் குறிப்பிடதக்க ஒரு கோவில் ஹளபேடுவில் உள்ள சிவன் கோவில்.

சாத்துக்குடி கண்ணன் [ பெயர் மாற்றப்பட்டு உள்ளது ]  என்கிற வைணவ பேச்சாளர் ஒருவர்  சிவனை, பிற தெய்வங்களை பழிப்பது  தான்   வைஷ்ணவம் என்று கோமாளி தனங்கள் செய்து கொண்டு இருக்கிறாரே. அது  போல் ராமானுஜர் செய்யவில்லை. சிவனோ, விஷ்ணுவோ. அல்லாவோ, ஏசுவோ  ஏதேனும் ஒரு கடவுளின் மீது முழுமையான பக்தி செலுத்தி அந்த கடவுளை மட்டுமே வணங்குதல் தவறு இல்லை. ஆனால் பிற தெய்வங்களை மதங்களை பழிப்பதன்  பெயர் பக்தி அல்ல.  அது சுத்த பைத்தியகார தனம். 

யாராலும் வெல்ல முடியாத வலுவான பேரரசாக அன்று இருந்த சோழ பேரரசையே  விஷ்ணு வர்தணன்  வென்று. அந்த வெற்றியின்  சின்னமாக கட்டப்பட்ட கோவில் தான்  பேலூரில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவில். 

இந்த கோவில். விஷ்ணு வர்தணன்  காலத்தில் முழுமையாக கட்டப்படவில்லை. 

விஷ்ணு வர்தணன். அவரின் மகன் நரசிம்மன் அதன் பின் வந்த வீர பல்லாளன் காலத்தில் தான் இந்த கோவில் முழுமையாக  கட்டப்பட்டது. இந்த கோவிலை முழுமையாக கட்டி முடிக்க எவ்ளவு? ஆண்டுகள் ஆனது தெரியுமா.

103 ஆண்டுகள். 

சென்ன கேசவ பெருமாள் கோவிலில் உள்ள சிற்ப்பங்கள் எவ்ளவு? தெரியுமா.

பத்தாயிரம் சிற்ப்பங்கள். 

அதில் கண்ணாடியோடு இருக்கும் தர்ப்பன சுந்தரி என்கிற சிற்ப்பம் மிக பிரபலமான சிற்ப்பம். பல விளம்பரங்களில் அந்த சிற்ப்பம் வந்துள்ளது. எனக்கு தெரிந்தவரை  நட்சத்திர வடிவில் கோவில்கள் கட்டியவர்கள் ஹோய்சாளர்கள்  மட்டுமே. 

சென்ன கேசவ என்றால் அதன் அர்த்தம் என்ன? சென்னை என்னும் தமிழ் சொல்லிற்கு அழகு  என்று ஒரு பொருள் உண்டு. சென்னை பாரிசில் உள்ள காளிகாம்பாளின் தமிழ் பெயர் என்ன? தெரியுமா. சென்னியம்மன். 

மும்பா தேவி காவல் தெய்வமாக இருக்கும் ஊர் மும்பை. காளி காவல் தெய்வமாக இருக்கும் ஊர் காளிகட் என்னும் கல்கத்தா. மங்களா தேவி காவல் தெய்வமாக உள்ள ஊர் மங்களூர். சென்னியம்மன் காவல் தெய்வமாக 
உள்ள   ஊர் சென்னை. 

சென்னையில் வசிப்பவர்கள் யார், யார் எல்லாம் சென்னையின் காவல் தெய்வமான சென்னியம்மன் கோவிலுக்கு சென்று. பக்தியோடு தேவி காளியை வணங்குகிறார்களோ. அவர்கள் ஓகோவென்று இருப்பார்கள். 

காவல் தெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடு இரண்டுமே மிக முக்கியம். 

சென்னை என்கிற நகரம் உருவாக காரணமாக இருந்த சென்னியப்ப நாயக்கர் சென்னியம்மனின் அருளால் பிறந்தவர் தான். 

கன்னடத்திலும் சென்ன என்றால் அழகு. சென்ன கேசவ பெருமாள் என்றால். கன்னடத்தில் அழகான பெருமாள் என்று  அர்த்தம். 

நான் 4 நாட்களுக்கு முன் தான் சென்னகேசவ பெருமாள் கோவிலை பார்த்தேன். முதன் முதலில் தாஜ் மகாலை பார்ப்பவனே மலைத்து போய்  பார்ப்பான் என்றால். தாஜ் மகாலை விட பல நூறு மடங்கு அழகான நட்சத்திர வடிவில்  உள்ள இந்த கோவிலை நான் முதன் முறையாக பார்த்த பொழுது அப்பொழுது  நான் அடைந்த அந்த பேரானந்தத்தை  சொல்ல வார்த்தையே இல்லை. 

14 ம் நூற்றாண்டில் மாலிக்கா கப்பூர் என்கிற காட்டு மிராண்டி 10 லக்ஷம் வீரர்களோடு இந்தியா மீது படை எடுத்து வந்தான். அப்பொழுது சோழ, பாண்டிய என அணைத்து சாம்ராஜ்யங்களும் வீழ்ச்சி அடைந்து விட்டது. மாலிக் படை எடுத்து வந்த பொழுது அன்று ஹோய்சாள மன்னராக இருந்த ஹரிஹர ராயரின் வயது 75. 

ஸ்ரீரங்கம் கோவிலில் மாலிக் கொள்ளை அடிக்க வந்த பொழுது. 10 லக்ஷம் வீரர்கள். மாலிக்கையும் சேர்த்து 10 லக்ஷத்தி 1 வீரர்களை. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வெறும் 30 ஆயிரம் மக்கள் எதிர்த்து பல மணிநேரம் போரிட்டு அதில் 25 ஆயிரம் மக்கள் இறந்து போனார்கள். எஞ்சிய சிலர் தப்பித்து போனார்கள். உடல் உறுப்புகளை இழந்தார்கள். ஹரிஹர ராயர்  மாலிக்கை எதிர்த்து போரிட்டு அவரும் வீர மரணம் அடைந்தார். 

அதன் பின் தொடர்ந்து பல அந்நியர்கள் நம்மை ஆண்டதன் விளைவு. சென்னகேசவ பெருமாள் கோவில், ஹளபேடு சிவன் கோவில் முதலானவைகள் கவனிப்பு, பூஜை இன்றி பாழாய் போனது. சில கோவில்கள் வெறும் ஷூட்டிங் ஸ்பார்ட் ஆனது. 

பேலூரில் சென்னகேசவ பெருமாள் கோவில் என்று ஒரு கோவில் இருப்பதே சினிமா மூலம் தான் மக்களுக்கு தெரிந்தது. ஆம். 1980 இல் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன தெலுங்கு படம் சங்கராபரணம். அதை சினிமா என்று சொல்ல முடியாது. அதை ஒரு கர்நாடக இசை காவியம் என்று சொல்லலாம்.  இந்த கோவிலில் ஷூட்டிங் எடுத்து அதன் மூலம் இப்படி ஒரு கோவில் இருப்பதை வெளி உலகிற்கு இந்த படத்தின் இயக்குனர் கே விஸ்வநாத் தெரியபடுத்தினார்.

இன்னொரு முக்கியமான தகவலையும் இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும். விஷ்ணு வர்தணன் வைஷ்ணவத்தை, ராமானுஜரை மதித்த அளவு தமிழையும் மதித்தார். அவர் காலத்தில் தமிழ், கன்னட இரண்டு கல்வெட்டுக்களுமே  இந்த கோவிலில் வைக்கப்பட்டது. இன்று உள்ள வட்டாள் நாகராஜ் போன்ற கன்னட மொழி வெறியர்களால்  தமிழ் கல்வெட்டுக்கள் அழிக்கப்பட்டு விட்டது.

அன்று கூட மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் தான் போர் தொடுத்தார்கள். மொழி வெறியால் அல்ல. அன்று இல்லாத மொழி வெறி இன்று  இந்தியாவின் பல பகுதிகளில் தலை தூக்கி ஆடுதல் காலத்தின் கோலம்.

இன்று நாம் இன்னொரு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையோ, இன்னொரு தஞ்சை பெரிய கோவிலையோ.  இன்னொரு  பேலூர் சென்ன கேசவ பெருமாள் கோவிலையோ நிச்சயம் கட்ட முடியாது. ஆனால் நமது முன்னோர்கள் கட்டிய  கோவில்கள், முன்னோர்கள் வெட்டிய குளங்கள், ஏரிகளை நாம் நினைத்தால் பாதுகாக்கலாம். 

கட்டிய, வெட்டிய தலைப்பின் அர்த்தம் இப்பொழுது புரிகிறதா.

சோகங்கள் தீர்க்கும் சோளிங்கர்!*

*சோகங்கள் தீர்க்கும் சோளிங்கர்!*
*நரசிம்ம ஜயந்தி ஸ்பெஷல்!* 
 
 புராண காலத்தில், திருக்கடிகை, சோளசிம்மபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் இப்போது, சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அற்புதமான திருத்தலம் இது! மூலவர் யோக நரசிம்மர். உற்ஸவர் ஸ்ரீ பக்தவத்சலம், தாயாரின் திருநாமம் ஸ்ரீ அமிர்தவள்ளி. 

  பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள். 

  பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது! பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம். இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகாசனத் திருக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார்கள்! 

   இத்தலத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி முதலான  பிரச்னைகள் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும்! 

   புதிதாக, நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும்  வீடு கட்ட ஆசைப்படுபவர்களும் கோயில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக் கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை! 

    இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வதற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள். 

  மன நோய் உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நீராடி மலை மீது உள்ள  நரசிம்மரையும் அருகில் உள்ள ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள். வளமும் நலமும் கிடைப்பது உறுதி! 

 கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப் பழம் தருதல், நரசிம்மருக்கும் தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல், என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்!
 
  வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில், திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வதும் விசேஷம்!   
 
    சோளிங்கருக்கு வந்து, முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். இத்தலத்தில் ஒரு கடிகை எனப்படும் 24 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

  மூலவர் யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார். சுவாமி சாளக்ராம மாலை அணிந்துள்ளார். தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தரும் வள்ளலாக அருள்பாலிக்கிறார். ஊரின் மையப்பகுதியில் உற்சவருக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இங்கு மட்டும் தான். இங்கு தான் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இங்கிருந்து மலைக்கோயில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

  ஸ்ரீமன் நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண்கூடாக வெளிப்படுத்திய அவதாரம் மட்டுமில்லாமல், சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவருக்காக உதவிய அவதாரமும் கூட! அத்தகைய அவதாரமான இறைவன் யோக நரசிம்மராக திருக்காட்சி தரும் திருத்தலம் இது! 

  நாளை ஸ்ரீநரசிம்ம ஜயந்தித் திருநாள். இந்த நாளில் சோளிங்கர் யோக நரசிம்மரை வணங்குவோம். நம் சோகங்களையெல்லாம் தீர்த்தருள்வார் நரசிங்கப்பெருமாள்!

தன்வந்திரி பகவானின் மஹா மந்திரம் .

தன்வந்திரி பகவானின் மஹா மந்திரம் . இதை தொடர்ந்து சொல்வதாலோ அல்லது கேட்பதாலோ உடலில் நோய் எதிர்ப்பு தன்மை உருவாவதோடு. நோய் உண்டாகாமல் கவசமாகவும் விளங்கும். 
ஓம் நமோ பகவதே சுதர்சன வாசுதேவாய தன்வந்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய 
சர்வ பய விநாசாய 
சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே
த்ரைலோக்ய நிதயே 
ஸ்ரீ மஹா விஷ்ணு சொரூபாய
ஸ்ரீ தன்வந்திரி சோரூபாய 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஔசத சக்ர நாராயணா ஸ்வாஹா.

https://youtu.be/xeB5j1BVsic

நான்கு மனைவிகள் வாழ்க்கையின் உண்மை

வாழ்க்கையின் உண்மை

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். 
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த 
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
Have a Healthy Day