Thursday, August 25, 2016

யோகா முத்திரைகள்:

யோகா முத்திரைகள்:

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.

Wednesday, August 24, 2016

நீங்கள் என்ன தருகிறீர்களோ அதையே பெறுவீர்கள்.

நீங்கள்  என்ன தருகிறீர்களோ அதையே பெறுவீர்கள்.

01. விழித்திருக்கும் நேரமெல்லாம் வளர்ச்சிக்கான நேரம் என்பதை அறிந்து, உயர்வுக்கு வித்திட வேண்டும். சிதிலமடைந்து போன வாழ்க்கையை சீர்படுத்த அந்த நேரத்தை நல்லதோர் ஆயுதமாக மாற்ற வேண்டும்.

 
02. தவற விட்ட வாழ்க்கையைத் தேடி திசைகளை துழாவுவதைவிட்டு, இனி வரும் நாட்கள் ஒளியுடையதாக அமைய பாடுபட வேண்டும்.

03. வாழ்க்கையை வீணடிக்க நேரமில்லை ஏனென்றால் பிறக்கும்போதே இறப்பிற்கான கவுண்ட் டவுண் ஆரம்பித்துவிடுகிறது.

04. நேற்றைய இருளில் இருந்து விடுபட்டு, இன்றைய வெளிச்சத்தில் நடந்தால், நாளைய நட்சத்திரங்களாக ஜொலிக்கலாம்.

05. வளர்ச்சிக்கான விதைகளை நம்மிடமே வைத்துக் கொண்டு, அது தெரியாமல் பாசத்தைத் தேடி பள்ளங்களிலும், வெளிச்சத்தைத் தேடி வீதிகளிலும், விதைகளைத் தேடி பாலைவனங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறோம்.

06. நம்பிக்கையுடன் நடந்தால் கடலும் வழிவிட்டு வாழ்த்தும். நேசத்துடன் பார்த்தால் கல்லும் நெகிழ்ந்துருகும், கோபத்துடன் கையாண்டால் பனியும் நெருப்பாகும். இறுக்கத்துடன் பற்றினால் பனியும் சருகாகும்.

07. நட்புடன் நடவுங்கள் மிருகம் கூட கை கொடுக்கும், பயத்துடன் ஓடுங்கள் புழுவும் வாளெடுக்கும்.

08. வார்த்தைகளை அவதானமாக பேசுங்கள். பொருளறிந்து கூறினாலும், பொருளறியாமல் கூறினாலும் எந்த வார்த்தை எதைச் சுட்டுகிறதோ அது நடந்தே தீரும்.

09. வார்த்தைகளை சொல்லும்போது உணர்ச்சியுடன் சொல்லுங்கள் அப்போதுதான் அது எய்யப்பட்ட அம்புபோல இலக்கை தாக்கும்.

10. வார்த்தைகள் விதைகள், எண்ணங்கள் மொட்டுக்கள், செயல்கள் கனிகள். வார்த்தைகளில் சுவையுண்டு, வெப்பமுண்டு, திரட்சியுண்டு, வேகமுண்டு, மருந்துண்டு, நஞ்சுமுண்டு.

11. அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கும், அறுதலான வார்த்தைகளால் தற்கொலையையும் தவிர்க்கலாம்.

12. இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கும், எழுச்சியான வார்த்தைகள் வெற்றியைத் தரும். ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டும். கனிவான வார்த்தைகள் உயிரையே காப்பாற்றும்.

13. காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத் தவிர்க்கும். தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும்.

14. தன்மையான வார்த்தைகள் மனச்சலிப்பை நீக்கும். நகைச்சுவையான வார்த்தைகள் இறுக்கத்தை; தளர்த்தும்.

15. ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அதுபோல வார்த்தைகளால் சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்.

16. வாழ்வின் எல்லாச் சூழலிலும் நம்மை இணக்கமாக வைத்திருப்பது வார்த்தைகளே. வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்தினால், வாழ்வின் வெற்றிகரமான இணக்கம் நிலவும்.

17. காற்று ஓய்ந்ததும் கடல் அமைதியாகும், ஆசைகள் ஓய்ந்ததும் நாம் அமைதியாவோம்.

18. மிகச்சிறந்ததை எதிர்பாருங்கள், அது கடந்த காலத்தில் இல்லை கடவுள் நல்ல மதுவை இறுதியில்தான் வைத்திருப்பார்.

19. வாழ்வை எண்ணத்தாலும் செயலாலும் அளக்கலாம் காலத்தால் அல்ல. கடைசியில் சந்தோஷமான திருப்தியான இதயத்தை கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும்.

20. ஒவ்வொரு பெரிய போராட்டம் அல்லது விபத்திலிருந்து ஒரு புதிய விடியல், வாழ்வின் உயிரின் மறுபிறப்பு தோன்றி, முன்னேற்றத்தின் சக்தி வாய்ந்த அலை மனிதனை மேலும் மேலும் உயர்த்தி வருகிறது.

21. கதவுகள் மூடப்படவில்லை, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை கிடையாது. நாமே செய்வது போலத்தான் எதிர்காலம் இருக்கும். புதிய யுகத்தை படைக்கும் ஆரம்பக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

22. சரித்திரத்தின் மிகவும் சவாலான வாய்ப்பு நம்முன்னே இருக்கிறது. அனைவரும் சோகங்களை விடுத்து உற்சாகமாக வேண்டும்.

23. முன்னேற்றம் இயற்கையின் விதி, அது நீண்ட அலைகளாக செல்கிறது. ஆனால் அது ஒரு நேர்கோட்டில் செல்ல வேண்டிய அவசியமில்லை. சிலவேளை பின்னடைவுகள் வரும் ஆனால் இறுதியில் புவி ஒரு குலுங்கு குலுங்கி அதைச் சரி செய்து கொண்டு உருளும்.

24. நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், வாழ்வில் எல்லாமே சுமுகமாக இருந்துவிடாது. சிலவேளை அடிதலையாக விழவும் கூடும், ஆனால் நாகரிகத்தின் இயல்பே எப்போதும் மேல் நோக்கி இருப்பதுதான்.

25. இந்த நாளைப்பற்றி அறிவுபூர்வமாக நீங்கள் ஆராய்ந்ததில்லை ஆகையால்தான் இந்த நாளைவிட கடந்த காலம் மேலானது என்று கருதுகிறீர்கள்.

26. ஆக்கபூர்வமாக சிந்திக்கும் வலிமை இல்லாத காரணத்தால்தான் ஆக்கபூர்வமான அணு சக்தியை மனிதன் அணு குண்டாக மாற்றியிருக்கிறான்.

27. உலகம் பற்றிய அதிக அறிவு பெறுவதுதான் எதிர்காலத்திற்கு நல்லது. ஆனால் அதிக அறிவு மட்டும் போதாது அதற்கேற்ப அன்பும் வேண்டும்.

28. இருண்ட இறுகிய முகமுடைய அவநம்பிக்கை மிக்க காலம் முடிந்துவிட்டது என்று கருதுங்கள்.

29. இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட அனைத்து சக்திகளிலும் உயர்ந்த சக்தி நம்பிக்கையே.

30. மனித குலத்திலும், கடவுளின் நோக்கங்களிலும் நம்பிக்கை இழக்காதே

உன்னால் முடியும்

Tuesday, August 23, 2016

எந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

எந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஜாதகம், பரிகாரம், ராசிப்பலன் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும், மனதின் ஒரு ஓரத்தில் இதன் மீது நம்பிக்கை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வதில்லை. எப்படி ராசியைக் கொண்டு, அந்த ராசிக்குரியவரின் குணத்தை சொல்ல முடிகிறதோ, அதேப் போல் எந்த ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை வழங்கும் என்பதையும் சொல்ல முடியும்.அந்த நாளில் அந்த ராசிக்காரர்கள் தங்களது முக்கிய பணிகளை மேற்கொண்டால், வெற்றிக் கிட்டும். அது தொழிலாகட்டும் அல்லது சொந்த வாழ்க்கையாகட்டும், அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சரி, இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்று பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றிக்கிட்டும். நீங்கள் மற்றவர்களிடம் உங்களது திறமையை வெளிக்காட்ட நினைத்தால், இந்நாளில் மேற்கொள்ளுங்கள், இதனால் வெற்றி உங்களுக்கே.
ரிஷபம்
வெள்ளி, புதன், சனி மற்றும் திங்கள் போன்ற கிழமைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும். செவ்வாய் கிழமைகளில் ஊதாரித்தனமான செலவுகளைச் செய்யக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.
மிதுனம்
இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். மிதுன ராசிக்காரர்கள் எந்த ஒரு புதிய செயலையும் புதன் கிழமைகளில் மேற்கொண்டால் நல்லது நடக்கும். மொத்தத்தில் இந்த கிழமை உங்களுக்கு முன்னேற்றத்தை மட்டுமே தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகள் இன்பம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகள் வெற்றியை வாரி வழங்கும். புதன்கிழமை பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்கு உகந்தது. சனிக்கிழமை சாதகமில்லாத நாள். இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் விரதமிருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஞாயிற்று கிழமை சிறந்த நாள். இந்நாளில் உங்களது திறமையை முழுமையாக காணலாம். இந்நாளில் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் வெற்றியை மட்டுமே பரிசாகப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன், வெள்ளி, திங்கள் மற்றும் வியாழக் கிழமைகள் அதிர்ஷ்டத்தை வழங்கும் தினங்கள். ஞாயிறு, செவ்வாய், சனி போன்ற தினங்களில் எந்த ஒரு முக்கியமான மற்றும் புதிய விஷயத்தையும் மேற்கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால், தாங்க முடியாத அளவில் படுதோல்வியை சந்திக்கக்கூடும்.
துலாம்
இந்த ராசிக்கு வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் உங்களது ராஜதந்திர மனோபாவம், நிறைய மக்களுடன் பழகவும், அதிக புகழையும் வாங்கித் தரும். மொத்தத்தில் இந்நாள் உங்களை உயரச் செய்யும்.
விருச்சிகம்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான தினம். இந்நாளில் எந்த காரியத்திலும் வெற்றி கிட்டும். புதன் மற்றும் சனிக்கிழமைகள் சாதகமற்றது. இந்நாளில் எந்த ஒரு முக்கிய விஷயங்களையும் மேற்கொள்ள வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வியாழக்கிழமை அதிர்ஷ்டமான தினம். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக புலப்படும். எனவே நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கும் காரியங்களை இந்நாளில் மேற்கொள்வது வெற்றியைத் தரும்.
மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை உகந்தது. இந்நாளில் இவர்கள் செய்ய நினைக்கும் செயல்களை மேற்கொண்டால், அவர் இதுவரை நினைத்திராத பலன் கிடைக்கும். இந்நாளில் இவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் மற்றும் புத்துணர்ச்சியுடன் செயல்படக்கூடும். இதனால் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள் போன்ற தினங்கள் அதிர்ஷ்டமான நாட்கள். புதன் மற்றும் சனி அதிர்ஷ்டமற்ற நாட்கள். ஞாயிற்றுக்கிழமை கலவையானது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! உங்களுக்கு வியாழக்கிழமை மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் உங்களது புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது மற்றும் இந்நாளில் நீங்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள்.

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல்

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பாடல்பிறந்தன இறக்கு மிறந்தன பிறக்கும்
தோன்றின மறையு மறைந்தன தோன்றும்
பெருந்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
என்றிவை யனைத்து முணர்ந்தனை யன்றியும் – பட்டினத்தார்
பிறந்த உயிர்கள் அனைத்தும் இறக்கின்றன் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கின்றன. பெரிய பொருள் சிறிய பொருளாகும் சிறிய பொருள் பெரியவையாகும். அறிந்தவை அனைத்தும் மறந்துபோகும் மறந்தவை அனைத்தும் தெரியவரும். சேர்ந்தவை அனைத்தும் பிரியும். பிரிந்தவை அனைத்தும் சேரும். உண்டவை அனைத்தும் மலமாம். புனைந்த அனைத்தும் அழுக்கு ஏறிவிடுமாம். இன்று விரும்புபவை நாளை வெறுக்க தோன்றும் நேற்று வெறுத்தவை இன்று விரும்ப தோன்றும் என்று அனைத்தையும் உணர்ந்து விட்டேன்

உடம்பின்றி உயிரில்லை உயிரின்றி உடம்பில்லை

உடம்பின்றி உயிரில்லை உயிரின்றி உடம்பில்லை

உயிரும் உடம்பும்உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பை அறியாதவர் மடத்திற் புகுந்த நாய் போன்றவர் என்கிறார் திருமூலர்.
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே.  — திருமந்திரம் 2148
உடம்பின்றி உயிர் இயங்காது. உயிர் இன்றி உடம்பு இயங்காது. உடம்புக்கு உயிர் இன்றியமையாதது. உயிருக்கு உடம்பு இன்றியமையாதது. உடம்பும் உயிரும் ஒன்றியிருந்தால்தான் சிறப்பு.
கூட்டைவிட்டு பறவை பறந்துவிடுவது போல உடம்பைவிட்டு உயிர் பிரிந்துவிடகூடாது. உடலை உயிர் மறக்ககூடாது. உயிரை உடல் மறக்ககூடாது. உயிருறும். உடல் உடலுறும் உயிர் ஆகிய இரண்டுமே ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது காக்கப்பட வேண்டும்.
அருட்பிரகாச வள்ளல் பெருமான் இப்படி இறைவனிடம் வேன்டுகிறார்.
உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி.
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றி சிவத்திற்கு சேர்வதே சித்தி இதையே திருமூலர்.
உடலும உயிரும் ஒழிவற ஒன்றிற்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட்டு இந்த உயிர் எங்குமாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றுவதே உண்மை நட்பு. இந்த நட்பை உணர்ந்து உரிய சாதனங்களால் சுத்த.பிரணவ, ஞான தேகங்களை பெற்று முத்தி.சித்திகளை பெறவேண்டும்.. இஃது உணராது உடம்பு பிணமாக விழ உயிர் முத்தியடையும் என்போர் மூடர். அத்தகைய மூடரை நோக்கியே தாயுமானவர்.
உலக நெறிபோல் சடலம் ஒயஉயிர் முத்தி
இலகுமெனில் பந்த இயல்போ பராபரமே.
உரிய பக்குவமுடையார்க்கு இறைவன் உயிரில் மட்டுமன்றி உடலிலும் புகுந்து கலந்து அருள் புரிகின்றான்.
சுத்த வடிவம் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்க – சித்தெனும்ஓர்
ஞான வடிவம் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்
தான விளையாட்டியற்றத் தான்.
நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாட்டைந்தேன் – நானே
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு – திருஅருட்பா
சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும் என்பது பழமொழி அதுபோல் உடம்பை வைத்துத்தான் நாம் முத்தி சித்திகளை பெற முடியும்.
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உருபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே. – திருமூலர்
இந்த பாடலில் உடம்பின் அருமையை அழகாக திருமூலர் கூறுகிறார். முத்தியடைவதற்கு இந்த இம்மானிட தேகமே ஏற்றதேகம் வேறு தேக்கத்தால் அதை அடை முடியாது ஆதலால், எவ்விதத்தால் ஆயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும் என வள்ளல் பெருமான் உபதேசித்துள்ளார்.

Sunday, August 21, 2016

ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

பிச்சைகாரன்..

சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.”

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…? ஏதுவா இருந்தாலும் சரி என் பிரச்னை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா

ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட  பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.

ஆண்டவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

ஆண்டவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ, பதிகங்களை படிப்பதோ, கோவிலுக்கு செல்வதோ, உழவாரப்பணி முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ – இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

Thursday, August 18, 2016

தினம் தூக்கத்தில் இந்த உலகம் இல்லை.

தினம்  தூக்கத்தில்  இந்த  உலகம்  இல்லை.  ஏனெனில்  தூக்கத்தில்  மனமோ , உடலோ ,  உலகமோ  இல்லை.   எழுந்தவுடன்  மனம்  விரிகிறது, அதனால் உலகம்    தெரிகிறது. மனமோ , சரீரமோ  இல்லாமல்  உலகத்தை  யாரும்  பார்க்க   முடியாது.

" விஸ்வம்  தர்ப்பண   திருஷ்யமான   நகரி   துல்யம்  நிஜ  அந்தர்கதம்  "   

உள்ளே  இருப்பதே   வெளியே  புலன்கள்  மூலம்   தெரிகிறது ! கனவும்  அதுபோல  தானே !  சுகமான  கனவானால்  யாரேனும்  எழுப்பி  விட்டாலும்  பிடிப்பதில்லை.  

விழிப்பில்  பெரும்  தனவானன  பணக்காரன்  கனவில்  பிச்சை  எடுக்கலாம். ஏழ்மையால்   அலையலாம்.  அவனுக்கு  கனவிலிருந்து  யாரேனும்  எழுப்பி விட்டால்  " அப்பாடா ! "  என்று  சந்தோஷத்தில்  நன்றி  கூறுவான். அதே நேரம்  பரம  தரித்திரன்   தனது  கனவில்  ஓர்  சக்ரவர்த்தியாக  கனவு  காண்கிறான்  எனக் கொள்வோம்.  அவனை  எழுப்பிவிட்டால் ........கோபத்துடன்  அடிக்க  துரத்துவான் ,   ஏனெனில்  எழுந்ததும்   ஒன்றுமற்ற  நிலைமை .......கனவில்  அனுபவித்ததை  எல்லாம்  இழந்த  துயரம். இவனுக்கு  சாம்ராஜ்ஜியம்  நஷ்டமடைவதால்   அவன்  எழுந்திருக்க  விருப்பபட  மாட்டான் !

கனவு  சுகமானால்  எழும்ப  விருப்பமில்லை -  கனவு  துக்கமானால்   ஒரு  ஆஸுவாசம் ....அப்பாடா  என்ற   விழிப்பு  இருக்கும் .

நமக்கு  துக்கம்   நேருவதும்  இதுவே !  அருள்  நம்மை  கருணையுடன்  இந்த  பிரபஞ்சம்  என்ற   கனவில் இருந்து  விழிக்கவே  .............துக்கம்  நேர்வது ......அதன்மூலம்   விசாரம்  பிறக்கவே ! பகவானது  கருணையே  துக்கம்  நேர்வது .......!

அத்வ யம்   ஆத்மானதேவ   குருதேவு  .. பிரபோத  சமையே 

இரண்டு  இல்லாத  ஆத்மா  தான்   இருக்கு  - ஆத்மா ,  முக்தி ,  சாந்தி   எல்லாம்  இதுதான்  - என்பது   தெரியும்.
' இருக்கின்றேன் '  - என்ற  பேருணர்வு  தான்   இருக்கு .  அதிலேதான்  மனம்  இருக்கு ,   அது  பாதி  விரிந்தால்   கனவு , முழுதும்  விரிந்தால்   நனவு ,  மனம்  லயம்  ஆனால்   தூக்கம். இந்த  மூன்று  அவஸ்தைகளும்   அகந்தைக்கு  தான் .

விழிப்பு நிலையில் ,  எனக்கு  தானே  உலகம்  தெரிகிறது . உலகம்  வந்து  என்னிடம்  சொல்லவில்லையே .......' நான்  இருக்கிறேன் '  என்று ........எனவே 
இந்த  ' நான் '     விசாரத்திற்கு   உரியது.

உலகம்  நான்  பார்க்கும்  உலகமாக  இல்லை ..........பின்பு , விசாரம்  செய்  , என்றார்கள் .............தவறான   தோற்றத்திலிருந்து   விலகி  நின்று  பார்  என்றனர்  நம்  ரிஷிகள் ! 

இதுதான்  முதலில்  மாயை , அகங்காரம்,  கனவு  போன்றதே  .........என்று  சொல்வது !  விசாரித்து , உண்மையான   உணர்வுக்கு   போய்விட்டால் .........ஆன்மாவுக்கு  போய்விட்டால் ..........நித்ய , முக்த , சுத்த , புத்த  வஸ்துவுக்கு   போய்விட்டால் ,,,,,பகவத்  சாட்ஷாத் சொரூபத்துக்கு   போய்விட்டால் .....அங்கு  சலனம்   கிடையாது.   அந்த  நிச்சல  நிலையே   சிவம் !

 இந்த   நிச்சல  நிலையிலிருந்து   திரும்பவும்  எழுந்தால் .........எண்ணங்கள்  ஏற்படும்,  சித்த  விருத்திகள்  ஏற்படும்.  மனம்  கிளம்பும்.  திரும்பவும்   உலகம்   தெரியும் !

அந்த  நிச்சல  நிலையிலிருந்தே,,,,,,  ஒரு  ஆற்றல் , சக்தி ,  தோன்றும். .உலகத்தை ........பார்ப்பதும்   அதன்  வழியே!  இந்த  சக்தியே  என்னுள்  மனசாகவும் ,  வெளியே  புலன்களின்  வழியே   பிரபஞ்சமாகவும்   தெரிகிறது.

பிரபஞ்சமாக  தெரிகின்ற  வஸ்துவே .........உள்ளே  மனசாகவும் ,  மனசு  அடங்கும்  போது , உள்ளே   நிச்சல  ,  பிரகாசமான   வஸ்துவாகவும்   பிரகாசிக்கிறது .  இந்த   நிச்சலமான  வஸ்துவை   ஆத்மா ,  புருஷன் .......சிவன்   என்கின்றனர் .  இதில்  சலனம்  ஏற்பட்டு  வெளியில்   தெரிவதை   சக்தி ,  பிரகிருதி ...........லோகம் , உலகம்   என்கின்றனர் . இந்த   இரண்டையும்  ஒன்றாக்கி  பரமேஸ்வரன் ...........நாராயணன் ........என்ன   பேர்  வேண்டுமானாலும்   சொல்லலாம். ரெண்டும்   ஒரே   வஸ்து  தான் !

சமுத்ரத்தில்   அலை  மோதும்  பொழுது  எப்படி   அலையும் , குமிழியும், நுரையும்    ஒரே  பொருளில்  இருந்து  வந்ததோ   அதே  போல ..........

இந்த   நிச்சலமான   ஆத்மாவில்  இருந்து   வந்த  மனசும் , பிரபஞ்சமும்  ஒன்றின்   மூலத்திலிருந்து   வெளிவந்ததே.

Tuesday, August 16, 2016

பாம்பு விஷத்தை முறிக்கும் அதிசய புற்றுமண் கிடைக்கும் கோயில் எது தெரியுமா









பாம்பு விஷத்தை முறிக்கும் அதிசய புற்றுமண் கிடைக்கும் கோயில் எது தெரியுமா

நம் முன்னோர்கள் கோயில்களை வெறும் வழிபாட்டு தலமாக மட்டும் அமைக்காமல் நம்முடைய வாழ்கையின் பல நிலைகளிலும் உதவக்கூடிய ஒரு முழுமையான அமைப்பாக இயங்கும்படி நிறுவியிருக்கின்றனர். பஞ்ச காலத்தில் காத்துக்கொள்ள கோபுர கலசங்களில் நவதானிய விதைகளை வைத்தனர், பெருவெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தடிமனான கற்களால் ஆன மிகப்பெரிய மதில்களை அமைத்தனர், ஆன்றோர்கள் வாழ்ந்து கல்வி போதிக்கும் இடமாகவும், தீராத நோய்களையும் குணமாக்கும் மருத்துவ கூடமாகவும் கூட கோயில்கள் இருந்திருக்கின்றன.
அக்காலத்தில் ஒருவருக்கு பாம்பு கடித்தால் அவரை குணப்படுத்துவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. இறப்பை உறுதி செய்யும் விஷயமாக இருந்த பாம்புக்கடியை குணப்படுத்தும் அருமருந்தாக கோவை மாவட்டம் சோமனூரில் இருக்கும் வாழைத் தோட்டத்து ஐய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண் இருந்துவருகிறது.  
வாருங்கள், பாம்புக்கடியை குணப்படுத்தக்கூடிய புற்றுமண் கிடைக்கும் வாழைத் தோட்டத்து ஐய்யன் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்ளலாம்.  
 

வாழைத்தோட்டத்து
ஐய்யன் கோயில்
கோவை
மாவட்டத்தில் திருப்பூர் எல்லையை ஒட்டி நொய்யல் தழுவியோடும் சோமனூர் என்ற ஊரில் அமைந்திருகிறது வாழைத்தோட்டத்து ஐய்யன் கோயில்.    
நூற்றாண்டுகள்
பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும்வாழைத்
தோட்டத்து அய்யன் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும், தீரா நோய்களையும் தோஷங்களையும் தீர்க்கும் இந்த கோயிலின் மகிமைகள் பற்றியும் அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம்.
வாழைத்
தோட்டத்து அய்யன் என்பவர் யார்?
சின்னையன்
என்ற இயற்பெயர் கொண்ட வாழைத் தோட்டத்து கி.பி 1777ஆம்
ஆண்டு செங்காளியப்பன் என்பவருக்கு மகனாக பிறந்திருக்கிறார்தனது
12ஆம் அகவை வரை கல்வி பயின்ற பிறகு தந்தையின் விருப்பப்படி மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டிருக்கிறார்.
சிறு
வயதில் ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவராக இருந்த சின்னையன் மாடு மேய்க்கும் போது சிறு சிறு கற்களை அடுக்கி தெய்வ வழிபாடு மேற்கொண்டு வந்திருக்கிறார். ஒருநாள் இவர் மாடுமேய்க்கும் வழி வந்த பெரியவர் சின்னையனுக்கு சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்துள்ளார்.
வாழைத்
தோட்டத்து அய்யன் என்பவர் யார்?
இதே
பெரியவர் பின்னொருநாள் சின்னையனின் அறையில் தோன்றி சிவ பெருமான் பார்வதி தேவியாரோடு இருக்கும் காட்சியை காட்டி மறைந்துவிட்டார்.  
சிவ
தரிசனம் பெற்றதன் பிறகு நோய்களை குணமாக்கும் வல்லமையையும், பாம்பு மற்றும் தேள் ஆகியவற்றின் விஷத்தை விபூதி மற்றும் பஞ்சாட்சிர மந்திரங்களை கொண்டு குணப்படுத்தி வந்திருக்கிறார்.

வாழைத்
தோட்டத்து அய்யன் என்பவர் யார்?
தனது
72ஆவது வயதில் மாடு முட்டி இறைவனடி சேர்ந்தார். பின் தனது பண்ணையில் வேலை செய்து வரும் தொழிலாளி ஒருவரின் கனவில் தோன்றி தான் இதுநாள் வரை பூஜித்து வந்த லிங்கம் மற்றும் நந்தி  ஆகியவவை
இருக்கும் இடத்தை சொல்லியிருக்கிறார்.
இவற்றை
சுற்றி தான் இன்று நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கோயில்
அமைப்பு:
வாழைத்
தோட்டத்து அய்யன் முக்தியடைந்ததாக சொல்லப்படும் கிளுவை மரத்தின் கீழ் தான் அவர் வழிபட்டு வந்த லிங்கம் மற்றும் நந்தி ஆகியவை இருந்திருக்கின்றன. இந்த லிங்கத்தை சுற்றி பின்னாளில் புற்று ஒன்று வளர்ந்திருக்கிறதுஇந்த
புற்று மண் பாம்பு விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
புற்று
மண்:
இக்கோயிலுக்கு
வரும் பக்தர்கள் அனைவருக்கும் மருத்துவ குணம் கொண்ட இந்த புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பக்தர்கள் பூச்சிகடிகள் மற்றும் விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்
ராகு
தோஷம்:
ராகு
கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும், குடும்பத்தில் ஒற்றுமையின்றி இருப்பவர்களும் கூட வாழைத் தோட்டத்து அய்யன் கோயிலுக்கு வந்து  வழிபட்டால்
அக்குறைகள் நீங்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது

திருவிழா:
மார்கழி
மாதம் நிகழும் திருவாதிரை நட்சத்திர நாள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல தமிழ் புத்தாண்டான சித்திரை வருட பிறப்பின் போதும் சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாழைத் தோட்டத்து அய்யனை தரிசிக்க வருகின்றனர்.
சந்நிதிகள்:
இக்கோயிலின்
மூலவராக வாழைத் தோட்டத்து அய்யன் கிளுவை மரத்தின் கீழ் சிறிய சிற்பமாக அருள்பாலிக்கிறார். அதோடு இக்கோயிலில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் முருகன் ஆகியோரது சந்நிதிகளும் இங்கே இருக்கின்றன
எப்படி
அடைவது?
கோவை
- அவினாசி சாலையில் உள்ள கருமத்தம்பட்டியில் இருந்து 8கி.மீ தொலைவில்
சோமனூருக்கு அருகே அய்யம்பாளையம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறதுஇக்கோயிலுக்கு
உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  


நீங்கள்
கோவையில் இருந்தாலோ அல்ல

இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்க்கவில்லையே...

||| 80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது.

நல்லபடியாக நடந்து முடிந்த பின்...

+ அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்......

+ அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....

+ அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....
அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த 
அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்....

+ அதற்க்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....

+ எனக்கு அது பிரச்சினையில்லை,
 பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்.....

+ ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த _இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்க்கவில்லையே.....
இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததேயில்லை, இப்போது நினைத்து உணர்ந்தபோது, 
கண்ணீர் வழிகிறது,

+ மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்க்கு எட்டு லட்சத்திற்க்கு  பில்....

+ எல்லாம் வல்ல கடவுள் 
கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......

+ இறைவனின்
அருட்கொடைக்கு 
நிகர் இறைவனே.....
- நாம் தான் நன்றி கெட்டவர்களாக 
இந்த மண்ணில் வாழ்கிறோம்.....

+ எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....
🙏🙏🙏🌺🌺🌺🌺

Saturday, August 13, 2016

மயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா??

மயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா??

மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். 

மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.

ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இல்லையெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாஸ்து தோஷம்

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும். 

அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து 'ஓம் சோமாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

சனி தோஷம்

சனி தோஷம் நீங்குவதற்கு, மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு 'ஓம் சனீஸ்வராய நமஹ' என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும்.

அலமாரி

நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். 

இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.

எதிர்மறை ஆற்றல்கள்

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

அலுவலக இடம்

ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

பூச்சிகள் வராது

மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். 

அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

அன்யோன்யம் மற்றும் புரிதல்

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

நன்றி - "நாட்டு வைத்தியம்"