Wednesday, August 31, 2016

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.

ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.

அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.

அவன் மன்னனிடம், “அரசே……..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?” என்று கேட்டார். மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

வீரத்தை வென்ற விவேகம்!

வீரத்தை வென்ற விவேகம்!

மதனபுரி என்ற நாட்டை மகேந்திரவர்மர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்குத் தன் நாட்டிலுள்ள தலைசிறந்த துணிச்சல்காரன் யார் என்பதை அறிய ஆவல் வந்தது. அதனால் அரச சபை கூடிய தினத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

வீரத்தை வென்ற விவேகம்“‘அறிவில் சிறந்த அவையோரே, அன்பில் சிறந்த குடிமக்களே! நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரன் யாரெனத் தேடிக் கண்டுபிடியுங்கள். வரும் பெüர்ணமியன்று வழக்கம் போல அரச சபை கூடும்போது, அவரை அழைத்து வந்து நிரூபித்துக் காட்டலாம். நம் ராஜபிரதானிகள் தேர்ந்தெடுக்கும் அந்த மாவீரனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கி “தலைசிறந்த துணிச்சல்காரன்’ என்ற பட்டமும் வழங்கப்படும். அந்த மாவீரனை அழைத்து வரும் நபருக்குப் பரிசாக ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும்” என்றார்.

பெüர்ணமி அன்று, மீண்டும் அவை கூடியது. நாட்டின் மாவீரனைக் காண மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது. கட்டியங்கூறுவோன் வாழ்த்தொலி கூற அவைக்கு அரசர் வந்தார். அவை எழுந்து மரியாதை செலுத்தியது. அரசர் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர். அரசர் சொன்னார்-

“”உயர்ந்த குடிமக்களே, நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரன் யார் என்பதைக் காண ஆவலாக வந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. தீர்ப்பு சொல்ல ராஜபிரதானிகளும் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றி. அன்று நான் அறிவித்தபடி, அழைத்து வந்திருப்பீர்கள். ஒவ்வொருவராக, அவர்களுடைய மாவீரனை அழைத்து வாருங்கள்…” என்று ஆணையிட்டார்.

முதலில் ஒரு தனவந்தர் தனது அடியாளான ஒரு முரட்டு மனிதனை அழைத்து வந்தார். அரசனை வணங்கிவிட்டுச் சொன்னார்-

“”அரசே, நான் தேடிக் கண்டுபிடித்த நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரர் இவர்தான். இவரோடு மோத யாருக்கும் தைரியம் இருந்தால் வந்து மோதிப் பார்க்கலாம்…” என்று அவையில் சவால் விட்டார்.

சட்டை போடாத அந்த முரடர், தன் கை, மார்பு, கால் சதைகளை முறுக்கித் தன் உடல் திறத்தை வெளிப்படுத்தினார். அதைக் கண்ட மக்கள் கரகோஷம் எழுப்பினர். அவரை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. அதனால் அவருக்குத் தனி ஆசனம் கொடுக்கப்பட்டது. அவரும் அதில் அமர்ந்தார்.

அடுத்து ஒரு கவசம் அணிந்த சிப்பாய் தனியே வந்தான். அரசரை வணங்கிச் சொன்னான்-

“”மன்னர் மன்னா… நான்தான் தங்கள் காலாட்படையிலேயே தலைசிறந்த வீரன். பக்கத்து நாட்டோடு போர் மூண்டபோது என் வாள் பலபேரை வெட்டிச் சாய்த்தது. என் போர் திறமையைப் பாராட்டிய தளபதி, எனக்குப் பரிசாக அளித்த முத்துமாலை இதோ…” என்று எடுத்துக் காண்பித்து மேலும் சொன்னான், “”அந்தப் போரில் கத்தியும் ஈட்டியும் என்னைக் காயப்படுத்தின. இதோ பாருங்கள், அந்த வீரத் தழும்புகளை” என்று கூறித் தனது கவசத்தைக் கழற்றிக் காண்பித்தான். சில இடங்களில் அவன் கூறியபடி காயத் தழும்புகள் இருந்தன.
அரசர் கோபமாக எழுந்தார், “”நீயெல்லாம் மார்பில் வேல் தாக்கிய வீரனா? முதலாவதாக வந்தவன் போரிட சவால் விட்டானே, அப்போது நீ வந்து முன் நின்றாயா? அல்லது அது உன் காதில் விழவில்லையா? ரோஷமில்லாத உன்னை என் வீரனென்று கூறவே என் நா கூசுகிறது. உனக்குப் போய் முத்துமாலையைப் பரிசளித்த அந்த முட்டாள் தளபதியைத்தான் நான் நொந்து கொள்ள வேண்டும். பேராசை பிடித்தவனே… என் கண்முன்னால் நிற்காமல் ஓடிப் போய்விடு..” என்று கர்ஜித்தார்.

அரசரின் கோபத்துக்கு ஆளானால் தனக்குத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் அந்த சிப்பாய் ஓடிப்போய்விட்டான்.
அடுத்த அழைப்புமணி ஒலித்தது. தளபதி ஒருவர் தன்னோடு ஒரு வீரனை அழைத்து வந்து சபையில் அறிமுகம் செய்தார்.

“”மக்களை ஆளும் சக்கரவர்த்தியே, இந்த வீரன் நமது கொரில்லாப் படையின் தலைவன். தன் உயிரை துச்சமாக மதித்து நம் நாட்டுக்கு சேவை செய்பவன். இவனுக்குத் தனது உயிர் பெரிதல்ல. ஆனால் நமது நாட்டைக் காக்க இவன் நமக்குத் தேவை. இவன் மனித வெடிகுண்டாக மாறினால், இதோ அமர்ந்திருக்கும் இந்த முரடனைப் போல எத்தனை பேர் வந்தாலும் அவர்களையும் அழித்துத் தானும் அழிந்து விடுவான். இப்படிப்பட்ட துணிச்சல் வேறு எவருக்கு வரும்? தன் உயிரைத் துச்சமாக மதிக்கும் இவனே நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரன்… சக்கரவர்த்தி அவர்களே…” என்று வணக்கத்துடன் கூறினார். அவனுக்கும் தனி ஆசனம் கொடுக்கப்பட்டது. அடுத்த அழைப்புமணி ஒலித்தது.

சிறிது நேரம் யாருமே வரவில்லை.

“”இவ்விருவரைத் தவிர வேறு எவருமே இல்லையா? இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முன் வருபவர் வரலாம்…” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அப்போது மந்திரி மதிவாணர் தன் கையில் ஓர் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக் கொண்டு அவைக்குள் நுழைந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் விழித்தனர்.

மதிவாணரைப் பார்த்து அரசர் கேட்டார், “”என்ன மதிவாணரே… ஆட்டை மேய்க்க அவைக்கே வந்து வீட்டீர்? ஆடு மேய்க்க உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? இந்தப் போட்டியில் இப்படி நீர் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் உமது கெüரவமாவது மிஞ்சியிருக்கும்…” என்று நையைண்டி செய்தார். மதிவாணர் அடக்கமாகச் சொன்னார்-

“”அரசே, நமது நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரர் இவர்தான் அரசே!” என்று ஆட்டைக் காட்டி அறிமுகம் செய்தார். அதைக் கேட்ட அரசரும் அவையோரும் கொல்லெனச் சிரித்தனர். கசமுசவென்று ஒரே பேச்சு சத்தம்… அரசர் அவையை அமைதிப்படுத்திவிட்டுச் சொன்னார்-

“”என்ன மதிவாணரே, நீர் மதியை இழந்துவிட்டீரா இல்லை உமது மதி கலங்கி விட்டதா? எப்பேர்ப்பட்ட வீரர்கள் எதிரே இருக்கும்போது ஒரு சாதாரண ஆட்டைக் கொண்டு வந்து இதுதான் தலைசிறந்து துணிச்சல்காரன் என்கிறீரே! உம்மைப் போய் நான் மந்திரியாக வைத்திருப்பதை நினைத்தால் எனக்குத்தான் அவமானமாக இருக்கிறது…”

“”அரசே, எதையும் பார்த்த மாத்திரத்தில் அவசரப்பட்டு தீர்ப்பு சொல்லக்கூடாது. அன்று பாண்டியன் நெடுஞ்செழியன் அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்கியதால்தான் மதுரை மாநகரமே எரியும்படி நேர்ந்தது. தீர்ப்பு வழங்குவதில் எப்போதுமே நிதானம் தேவை அரசே! இல்லையென்றால் நீதியே அநீதியாகிவிடும்” என்று சொல்லிவிட்டுக் கை தட்டினார் மதிவாணர்.

அப்போது பெரிய வீச்சரிவாளுடன் முகத்தில் முக்கால்வாசி மீசையுடன் வந்து நின்றான் ஒருவன். அவனது வீச்சரிவாளை மதிவாணர் வாங்கி, அமர்ந்திருந்த முரடனின் கழுத்தில் அந்த அரிவாளை வைத்தார். முரடன் திருதிருவென்று விழித்தான்.

“”உலக மகா துணிச்சல்காரரே, இதைக் கொண்டு உம்மை இப்போது நான் வெட்டப் போகிறேன்…” என்றார்.

அதற்கு அந்த முரடன், “”ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நிராயுதபாணியான என்னை வெட்டுவேன் என்கிறீரே? தைரியம் இருந்தால் அரிவாளைக் கீழே போட்டுவிட்டு என்னுடன் மோதிப் பாரும்.. உமது எலும்புகளை அப்பளமாக நொறுக்கிக் காட்டுகிறேன்…” என்றான்.

“”ராஜபிரதானிகளே, நீங்களே சொல்லுங்கள். பலமான உடம்பும் எவருக்கும் பயப்படாத குணமும் கொண்ட இவன், கேவலம் இந்த அரிவாளைக் கண்டு பயப்படுகிறானே? இவன் உண்மையிலேயே துணிச்சல்காரனா? தீர்ப்பு சொல்லுங்கள்… தனது உயிருக்குப் பயந்த எவனுமே நிச்சயம் துணிச்சல்காரனாக முடியாது…”

அரசரும் ராஜபிரதானிகளும் பதில் பேசமுடியாமல் போயிற்று.
“”அரசே, மிஞ்சி இருப்பவன் இந்த கொரில்லாக்காரன். தளபதி இவனைக் கூட்டி வந்திருப்பதை ஒற்றன் மூலம் கேள்விப்பட்ட நான், இவனது ஒரே மகனை ஆள் வைத்துக் கடத்திச் சென்றிருக்கிறேன். நான் போகாமல் இவன் மகனை மீட்க முடியாது. இன்னும் இரண்டு நாழிகைக்குள் நான் வராவிட்டால் அவனைத் தீர்த்துக்கட்டச் சொல்லியிருக்கிறேன். இவனுக்குத் தைரியமிருந்தால் என்னைக் கொல்லட்டும்… மகனை மீட்கட்டும் பார்க்கலாம்…” என்றார் மதிவாணர்.

கொரில்லா வீரன் மதிவாணரின் காலைத் தொட்டுக் கேட்டான்.

“”மதிவாணரே, நாங்கள் தவமாக இருந்து பெற்றெடுத்த பாலகன் அவன். வசதியில்லாத நான் அவனை வளமாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகத்தான், கொரில்லாப் படையிலேயே சேர்ந்தேன். நான் செத்தாலும் அவன் மட்டும் சாகக்கூடாது மதிவாணரே!” என்று மண்டியிட்டுக் கெஞ்சினான்.

“”அரசே, ராஜபிரதானிகளே… அந்த முரடன் தன் உயிருக்குப் பயந்தவன், இவனோ பாசத்தால் பலவீனமாகிப்போய்விட்டான். ஓடிய சிப்பாயோ பணத்தாசை பிடித்தவன். ஆனால் இதோ நிற்கும் ஆடு எதற்குமே அடிமையாகாது மன்னா… இதற்குப் பேராசையே கிடையாது ராஜபிரதானிகளே! அரசே, இதன் முன் உங்கள் கஜானாவையே கொட்டிப் பாருங்கள். அது தொட்டுக்கூடப் பார்க்காது. கொல்லபோகும் கசாப்புக் கடைக்காரனோடு தைரியமாக வந்துள்ளது. இவன் கொல்லத் துணிந்தாலும் எதிர்த்துப் போராடாது. அதனால் இதற்குத் தனது உயிரின் மீதும் ஆசையில்லை. இதன் குட்டியைப் பிரித்து, அதன் கண்முன்னே எந்தச் சித்திரவதையானாலும் செய்த பாருங்கள். சிறிதுகூடக் கண்ணீர் சிந்தாது. அதனால் இது பாசத்துக்கும் அடிமை கிடையாது. பொன், உயிர், பாசம் ஆகிய மூன்று ஆசைகளுமே இல்லாதவரே நிகரற்ற துணிச்சல்காரர். இந்த மூன்று ஆசைகளுமே இல்லாத இந்த ஆடே, உண்மையான துணிச்சல்காரன் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ராஜபிரதானிகளே, இப்போது நீங்கள் நன்றாக ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுங்கள்…” என்று கேட்டுக் கொண்டார் மந்திரி மதிவாணர்.
ராஜபிரதானிகளின் தீர்ப்பின்படி இரண்டாயிரம் பொற்காசுகள் மந்திரி மதிவாணருக்குக் கிடைத்தது. அதில் கசாப்புக் கடைக்காரனுக்கு இருநூறு பொற்காசுகள் கிடைத்தது. ஆட்டின் கழுத்தில் “உலகமகா துணிச்சல்காரன்’ பட்டம் தொங்கியது.

கொரில்லாக்காரனிடம் மந்திரி சொன்னார், “”உன் மகனை நான் கடத்தவில்லை. இந்தப் போட்டிக்காக அப்படிச் சொன்னேன். உன் மனத்தைப் புண்படுத்திய என்னை மன்னித்து விடு…” என்று கேட்டுக் கொண்டார்.

வீரத்தை விவேகம் வென்றுவிட்டதை உணர்ந்தார் மன்னர் மகேந்திரவர்மன்.

அன்பு வெற்றி செல்வம். அன்பு, வெற்றி, செல்வம், என்ற மூவரும் நண்பர்கள் ஆவார்கள்

அன்பு
வெற்றி 
செல்வம்.
அன்பு, வெற்றி, செல்வம், என்ற மூவரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் நாள் தோறும் யார் அழைத்தாளும், அவர்களுடைய வீட்டிற்க்குச் சென்று அவர்களை உபசரிப்பது வழக்கம்.

ஒரு நாள் மாலை ஆறு மணி ஆகிவிட்டது. ஊரில் உள்ளவர்கள் எல்லோருடைய வீட்டிலும் குத்துவிலக்கேற்றி பூஜை அரையில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமையத்தில் ஒரு வீட்டில் வயதான பெரியவர் வீட்டுக்கு வெளியில் உள்ள தின்னையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அன்பு, வெற்றி, செல்வம் என்ற மூன்று நண்பர்களும் அந்தப் பெரியவரைப் பார்த்தவாரு தெருவில் சென்றுக் கொண்டிருந்தனர். பெரியவர் அவர்களை அழைத்தார், அவர்களின் பெயர் மற்றும் அவர்களை பற்றி விசாரித்தார்.
உடனே பூஜை அறையில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த தனது மருமகளுக்கு குரல் கொடுத்தார்... நமது வீட்டிற்க்கு வெற்றி, செல்வம், அன்பு என்ற மூன்று பேர் வந்திருக்கிறார்கள். அவர்களில் யாரை அழைப்பது என்று கேட்டார்.

அதற்க்கு அந்த பெரியவரின் மருமகள், அந்த மூவரையும் நமது வீட்டிற்க்கு அழைத்து வாருங்கள் அப்போது தான், நமது வீடு சந்தோஷமாகவும் செல்வச் செழிப்போடும் இருக்கும் என்றால்.  

உடனே அந்தப் பெரியவர். வெளியில் காத்திருந்த அந்த மூவரையும் தனது வீட்டிற்க்கு வந்து தங்களை உபசரிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். அதற்க்கு அந்த மூவர் அளித்த பதில் என்னத் தெரியுமா! எங்களில் யாரையாவது ஒருவரை மட்டும் தான் நீங்கள் அழைக்க வேண்டும் மற்ற இருவர்கள் ஊரில் உள்ள மற்ற வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றனர்.

இந்த செய்தியைக் கேட்டவுடன், உடனே அந்த பெரியவர் தனது மருமகளிடம் விஷயத்தை சொன்னார். அதற்க்கு அந்த மருமகள் அப்படியானல்... நமது வீட்டிற்க்கு செல்வத்தை அழைத்து வந்துவிடுங்கள். அவனைவைத்து நமக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளலாம் என்றால்.

உடனே அந்த பெரியவர் செய்வதறியாமல் தனது வீட்டிற்க்கு செல்வத்தை அழத்துக்கொண்டார். மற்ற இருவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

வெற்றி, மற்றும் அன்பு ஆகிய இருவர்களில் வெற்றியை ஒரு வீட்டுக்காரர் அழைத்துக்கொண்டார். பிறகு அன்பு தனிமைப்படுத்தப்பட்டான். கடைசியாக ஒரு ஏழை விவசாயி வேறு வழியின்றி அன்பை தனது வீட்டிற்க்கு வந்து தங்களை உபசரிக்கும்மாறுக் கேட்டுக்கொண்டார்.

சிறிது நாள் சென்றது. தனது நண்பன் அன்பு என்றவனைக் காணாமல், பேசாமல் இருந்ததால் துடிதுடித்துப் போய்விட்டார்கள் வெற்றியும், செல்வமும்.

வெற்றியும், செல்வமும் உடனே ஒரு முடிவை எடுத்தார்கள். அவர்கள் குடிக்கொண்ட வீட்டில் உள்ளவர்களை அழைத்து “அன்பு” எங்களது ஆறுயிர் நண்பன் அவனைக் காணாமல் பேசாமல் எங்களால் ஒரு நொடியும் இருக்க முடியாது. ஆகையால் தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு மறு கணமே அங்கிருந்து கலம்பிவிட்டார்கள் அன்பு இருக்கும் இடத்திற்க்கு. 

அன்பு இருக்கும் இடத்தில் தான் வெற்றியும் செல்வமும் நிலைத்திருக்கும். மற்ற இடங்களில் ஒருவேலை வெற்றியும், செல்வமும் இருந்தாலும் அது நிலைத்திருக்காது என்பது உண்மை. அவற்றை இந்த கதையின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அன்பு என்றால்! மன்னிப்பு, சகிப்புதன்மை, கருனை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நன்மை மற்றும் தீமையை கண்டறியும் தெளிவு, பாசம், முரட்டுதனம் இல்லாத காதல். இவையெல்லாம் மனிதக் குலத்திற்க்கே உள்ள கடவுள் கொடுத்த மகத்தான சொத்து.

இத்தகைய சொத்தை பயன்படுத்தி வாழ்கையில் மோகம் இல்லாமலும், வெறுப்பு இல்லாமலும், கொடூரங்களை செய்யாமலும், வாழ்க்கையின் நியதி அறிந்து நிம்மதியாக வாழலாம்

தோஷங்களை நீக்கும் மம்மியூர் கோயில்!

தோஷங்களை நீக்கும் மம்மியூர் கோயில்!

ஸ்ரீகிருஷ்ண பகவான் சொர்க்கத்திற்குச் சென்ற பின் துவாரகை கடலில் மூழ்கியது. அந்த நேரத்தில் மகா விஷ்ணுவின் விக்கிரகம் தண்ணீரில் மிதந்து வந்தது. 
குருவும், வாயுவும் சேர்ந்து விக்கிரகத்தை எடுத்துப் பிரதிஷ்டை செய்வதற்கு, வானில் சஞ்சரித்தபடி தகுந்த இடத்தைத் தேடிக் கொண்டிருந்தனர்.  வாசுதேவனும் ஸ்ரீ கிருஷ்ணனும் பூஜை செய்திருந்த அந்த விக்கிரகத்தின் தெய்வீக ஒளி ரிஷிகளுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.
குருவும், வாயுவும் கேரளக் கரைக்கு வந்த போது பரசுராமரைக் கண்டனர். அவர் காட்டிய வழிப்படி, மகாதேவன் பல யுகங்களாகத் தவம் செய்து வந்த ருத்ர தீர்த்தக் கரைக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைக் கண்டு மகிழ்ந்த பரமசிவன் அவர்களை வர வேற்று, தனக்கு அருகே அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா விஷ்ணுவின் விக்கிரகமே மம்மியூரப்பன் ஆலயத்தில் மகாதேவனின் அருகே தனி ஆலயத்தில் உள்ளது.
காலப்போக்கில் இந்தத் தலம் மம்மியூர் எனவும், இங்குள்ள மகாதேவன் மம்மியூரப்பன் எனவும் அழைக்கப்படுகிறார்.
கலியுகம் தொடங்கும் முன்பே உள்ள திருக்கோவில் என்ற பெருமைக்குரிய ஆலயம் மம்மியூரப்பன் ஆலயம். சிவபெருமானும், மகா விஷ்ணுவும் ஒரே ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அதிசயம் இந்த ஆலயத்தில் தான் உள்ளது.
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் ஆலயத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மம்மியூரில் அமைந்துள்ளது மம்மியூரப்பன் ஆலயம்.
எந்த ஆலயத்திலும் இல்லாத சிவபெருமானும், மகா விஷ்ணும் இந்த ஆலயத்தில் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனர். இருவருக் கும் ஒரே நேரத்தில்  பூஜைகள் நடைபெறுகின்றன. இரண்டு அர்ச்சகர்கள் தனித்தனியே இருவருக் கும் ஒரே நேரத்தில் பூஜைகளையும் ஆராதனைகளையும் நடத்தும் சம்பவம் இந்த ஓர் ஆலயத்தில் மட்டுமே நடக்கும் அதிசயம் எனலாம்.
ஆலயத்தின் முகப்பு மண்டபத்தைக் கடந்தவுடன் ஒரு பெரிய ஆலமரம் அதைத் தொடர்ந்து பெரிய மண்டபம் உள்ளது. அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன. அதைத் தொடர்ந்து மம்மியூரப்பனின் கருவறை உள்ளது.
ஆலயத்தின் வடபுறத்தில் பகவதியம்மன் சன்னதி அமைதியான சூழலில் அமைந்துள்ளது. அன்னை மேற்குத் திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.
குருவாயூரப்பனைத் தரிசிக்க வருபவர்கள் அந்த ஆலயத்திலிருந்து 1 1/2 கி.மீ. தொலைவில் உள்ள மம்மியூரப்பன் ஆலயத்திற்கு வந்து மகாதேவனையும், மகா விஷ்ணுவையும் தரிசனம் செய்தால் மட்டுமே அவர்களுடைய புண்ணிய பயணம் பூர்த்தியாகும் என்பது வழிவழியாக வரும் ஐதீகம்.
இந்த ஆலயத்தில் மகாதேவனுக்கும் உள்ள முக்கியத்துவம் மகா விஷ்ணுவுக்கும் தரப்படுகிறது.
காலை 4.45க்கு ஆலயம் திறந்தால் நிர் மால்ய தரிசனம், எண்ணெய் அபிஷேகம், மாலை சார்த்துதல், மலர் நைவேத்தியம், திருமதுர நைவேத்தியம் முதலியவற்றைச் செய்கின்றனர்.
அனைத்து தினங்களிலும் மகாதேவனுக்கும், மகா விஷ்ணுவிற்கும் ரிக்வேத தாரை, பாலாபிஷேகம், உஷ பூஜை முதலியன நடைபெற்று பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 4.45 க்குக் கோவில் திறக்கப்படுகிறது.
பின் தீபாரதனை, உமா-மகேஸ்வர பூஜை, இரவு பூஜைக்குப் பிறகு, அன்ன நைவேத்தியம், பால் பாயசம், அப்பம் முதலியவற்றை எல்லா தெய்வங்களுக் கும் நைவேத்தியம் செய்து, இரவு 8.30 மணிக்கு ஆலயம் சாத்தப்படுகிறது.
இந்த ஆலயத்தில் ஆதி காலம் முதல் கோவிலின் ஆச்சார முறைப்படி வேத மந்திரம் சொல்லி, எல்லாச் சடங்குகளையும் விதிமுறைப்படி நடத்தி வருகின்றனர்.
1930 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தில் நடப்பட்ட ஆலமரம் ஒன்று இப்போது வளர்ந்து நெடிதுயர்ந்து, சுவாமி சன்னதியின் முன் ராட்சஸ உருவில் நிற்கிறது.
1961 ஆம் ஆண்டு ஒரு பெண் இந்த ஆலமரத் துக்கு உபநயனம் நடத்தி, வேத மந்திர விதிமுறைப்படி எல்லாச் சடங்குகளையும் செய்து வைத்தார். பின், ஆலமரத்தை ஒரு வரனாகப் பாவித்து, மணப் பெண்ணாக வேப்ப மரத்தை நட்டு வைத்து, வேத மந்திரங்கள் சொல்லி, வாத்தியங்கள் முழங்க, இரண்டுக் கும் திருமணம் நடத்தி வைத்தார்.
பத்து நாட்கள் நவராத்திரி விழா இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி மண்டபத்தில் வாணி தேவிக்கு விசேஷ பூஜையும், அனுமனுக்கு வடை மாலை சாத்துதலும், அஷ்டமி தினத்தில் பூஜைக்காக புத்தகங்கள் வைப்பதும், நவமி நாட்களில் லட்சார்ச்சனையும் இங்கு நடைபெறுகிறது.
விஜயதசமி நாளில் நாட்டின் பல திசைகளிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்குத் தலைமை அர்ச்சகர்கள் ஹரிஸ்ரீ எழுதப் பயிற்று விக்கும் சம்பிரதாயம் நம்மை வியக்க வைக்கும் நிகழ்ச்சி என்பதில் சந்தேகமே இல்லை.
இங்கு நடக்கும் பூஜைககல் கலந்து கொள்வதால் தாம்பத்தியத்தில் நிம்மதியும், புத்திர பாக்கியம் ஏற்படுவதுடன், அனைத்துத் தோஷங்களும் பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

சுமை தீர்க்கும் வைத்தியநாத சுவாமி கோயில்.

சுமை தீர்க்கும் வைத்தியநாத சுவாமி கோயில்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து வடமேற்கே ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது பாண்டூர் என்ற கிராமம். சகல விதமான  வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இங்குதான் அமைந்துள்ளது. பசுமையான வயல்வெளிகள் சூழ இயற்கை சூழலில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம். 
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அருள்மிகு வைத்தியநாத சுவாமி. இறைவி அருள்மிகு பாலாம்பிகை என்பதாகும்.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்து இடது புறம் பிள்ளையார் வலதுபுறம் துர்க்கை சன்னதிகள் உள்ளன.
அடுத்து மகாமண்டபமும் அர்த்த மண்டபமும் உள்ளன. தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் கீழ்த்திசை நோக்கி லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார்.  மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி அருள்மிகு பாலாம்பிகை தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. பிரகாரத்தில் மேற்கு திசையில் பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை திருமேனிகள் உள்ளன.
வடக்கு பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வமரம் உள்ளது. அதனடியில் சிறிய அளவிலான சிவலிங்கம், நாகர், நந்தி திருமேனிகள் உள்ளன. இங்கே, சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சண்டீஸ்வரர் சன்னதியும் இங்கு உள்ளது. கிழக்கு பிரகாரத்தில் சூரியன், பைரவர் சன்னதிகள் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தமான சூரிய புஷ்கரணி ஆலயத்தின் எதிரே உள்ளது.
நவராத்திரி, சிவராத்திரி மற்றும் விசேஷ நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. தினசரி காலை, சாயரட்சை, அர்த்த சாமம் என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மூத்த ஆலயமாக இது கருதப்படுகிறது. சனிபகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளதால் நவக்கிரகங்கள் இங்கு இல்லை. சனிக்கிழமை மற்றும் கிரகப் பெயர்ச்சி நாட்களில் இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
சனிப் பார்வையால் துன்பப்படுவோர் இங்குள்ள சனி பகவானை வேண்டிக் கொண்டு பாதிப்பின் வேகம் குறைய, தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தி நிம்மதி பெறுகின்றனர். எள் சாத நிவேத்தியம் செய்து அனைவருக்கும் விநியோகம் செய்கின்றனர்.
சனிபெயர்ச்சிக் காலங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை.
ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
அரிச்சந்திரன் இத்தலத்து இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்ததால் தனது கடன் தொல்லைகளிலிருந்து நீங்கப் பெற்றதாகக் தல வரலாறு கூறுகிறது.
எனவே, அதை நினைவுபடுத்தும் விதமாக சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை கடன் நிவர்த்தி பூஜை இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் நடத்தப்படுகிறது. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் பக்தர்கள் இந்தப் பூஜையில் கலந்துகொண்டு பலன் பெறுவதாக நம்புகிறார்கள்.
மேலும், அன்று முதல் மூன்று நாட்களுக்கு கோவிலுக்கு அருகே அரிச்சந்திரன் வரலாற்றை நாடகமாக அரங்கேற்றி அதைப் பார்த்து மக்கள் மகிழ்வது வழக்கமாக உள்ளது.
சகலவிதமான சரும நோய்களை நீக்க வல்லவர் இத்தலத்து இறைவன் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி நீலோத்பவ மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்தால் ரோக நிவர்த்தி பெறலாம் என்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
கார்கோடன் என்ற நாகத்தால் தீண்டப்பட்டு உருமாறிய நளமகாராஜன் இத்தலத்து இறைவனை வேண்டி தன் பழைய உருவைப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. பொதுவாக நோய்களில் இருந்தும், கடன் பிரச்னைகளிலிருந்தும் மீட்டு நல்வழியை இத்தலத்து இறைவன் காட்டுவார் என பக்தர்கள் நம்புகின்றனர்.
மயிலாடுதுறையிலிருந்தும் காளியிலிருந்தும் இத்தலம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. பொன்னூர் என்னும் கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது யார்?

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது யார்?

தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறை இருக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களேதான் தேடிக் கொண்டீர்கள். அது எப்படி?

எத்தகு தகப்பனுக்கும் தாய்க்கும் கருவாக அமைந்து தன் வாழ்க்கையில் எத்தகு இன்ப துன்பத்தை அனுபோகிக்க வேண்டும் என்ற கரு அமைப்பு இருக்கிறதோ, அத்தகு உடலைத்தான் உங்கள் தாய் வயிற்றில் உங்கள் உயிரானது அடிமன நிலையில் இருந்து கட்டிக் கொண்டது. 

அதேபோல, கருமைப்பைக் கொண்டும், பிறந்த பின்னர் இதுவரை நீங்கள் அமைத்துக் கொண்டுள்ள மனத்தின் தரத்தைக் கொண்டும், உங்களுக்கு வாழ்நாளில் என்ன இன்ப துன்பம் வரவேண்டுமோ, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைத் துணைவர் வருகிறார். அவரை உங்கள் உயிரே - அடிமனமே தெரிந்து, அது பல பேர் மனத்தில் பிரதிபலித்து, அவர்கள் என்னவோ முயற்சி எடுப்பது போல் சில நடவடிக்கைகள் நடந்தேறி, உங்களுக்கேற்ற அந்த வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான். 

எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்.

அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் ஞானமேயானாலும் சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது அது ஞானமேயாயினும் அதனால் ஒரு பயனும் வராது.

- வேதாத்திரி மகரிஷி

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

எவர்  ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார். 
நான் ஒண்ணுமே செய்ய முடியாது. என் கையிலே ஒண்ணுமே இல்லை. நான் ஒரு கையாலாகாதவன் , கோழை, யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க, நான் ஒரு அநாதை, நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட் , என்ன பண்ணினாலும், எவ்வளவு சம்பாதிச்சாலும் - கையிலே பைசா நிக்கவே இல்லை. இப்படி - பலப்பல எண்ணங்கள் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு அஷ்டம சனி யோ , இல்லை ஏழரை சனியோ நடந்து கொண்டிருக்கும்.

சிவனே னு நீங்க பாட்டுக்கு டூ வீலெர் ல போய்க்கிட்டு இருப்பேங்க, சம்பந்தமே இல்லாமே  திடீர்னு ஒரு நாய் , தேடி வந்து , ஏதோ உங்களுக்காகவே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த மாதிரி , உள்ளே வந்து விழும். அப்புறம் என்ன, ஒரு மாசம் கட்டு போட்டு உக்காரணும். 

உற்றார் உறவினரை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தள்ளி இருக்க வேண்டி வரும். நாம ரொம்ப நேசிக்கிற பொருள், உயிர், நண்பர்கள் எல்லாரையும் வெறுத்து ஒதுக்க வேண்டி வரும். அவரை மாதிரி ஒரு உத்தமன் உண்டானு சொல்லிக்கிட்டு இருந்த உலகம் , இப்போ கை கொட்டி சிரிக்கும்.

கவலையே படாதீங்க. இப்போ தான் நீங்க ஒரு பக்குவப்பட்ட மனுஷனா மாறி இருப்பீங்க. அசலுக்கும், போலிக்கும் இப்போ தான் வித்தியாசம் பார்க்க முடியும். நீங்க செஞ்ச பாவக் கணக்கு - நேராகுதுன்னு நினைச்சுக்கிட்டு - மனசை தேத்திக்கோங்க. 

ஆண்டவனுக்கு தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு. மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம் பாஸு ! இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க. ....

இது எல்லாமே, சனி யால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் - யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக
ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி  மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும். 

உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.

12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர் பிரித்திருக்கின்றனர்..

12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர் பிரித்திருக்கின்றனர்.. 


நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம் , மீனம் காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம் நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி,மகரம் நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம்,தனுசு மேற்க்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்... பஞ்சபூத ஸ்தலங்கள்; மண் -காஞ்சிபுரம் நீர்-திருவானைக்காவல் நெருப்பு-திருவண்ணாமலை காற்று -ஸ்ரீகாளஹஸ்தி ஆகாயம் -சிதம்பரம் உங்கள் லக்னம் மிதுனம் என்றால் மிதுனம் காற்று ராசி ..எனவே அதர்குறிய ஸ்ரீகாளஹஸ்தி சென்று உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.. விதி,கதி,மதி என சொல்லப்படும் லக்கினம்,சூரியன்,சந்திரன் எது பலமாக இருக்கிறதோ அது எந்த ராசியை குறிக்கிறதோ அதற்குறிய கோயிலும் சென்று வரலாம்..சனி எந்த ராசியில் இருக்கிறதோ அதற்குறிய வழிபாட்டை செய்தால் தொழில் நன்றாக இருக்கும்...என்ன திசை இப்போது நடக்கிறதோ அந்த திசாநாதன் இருக்கும் ராசி மற்றும் அதன் அதிபதி எந்த ராசியில் இருக்கிறதோ அந்த கோயில் சென்றாலும் சிறப்பு..பஞ்சபூத கோயில்கள் பின்னால் இருக்கும் சூட்சுமமும் இதுதான்...

- Dr.Star Anand ram Visvakarma 
Www.moneyattraction.com 

Monday, August 29, 2016

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் !!

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் !!

 நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.  சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.

அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.

உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.

அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.

இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:-

அகஸ்தியர் – திருவனந்தபுரம்
கொங்கணர் – திருப்பதி
சுந்தரனார் – மதுரை
கரூவூரார் – கரூர்
திருமூலர் – சிதம்பரம்
தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் – பொய்யூர்
குதம்பை சித்தர் – மாயவரம்
இடைக்காடர் – திருவண்ணாமலை
இராமதேவர் – அழகர்மலை
கமலமுனி – திருவாரூர்
சட்டமுனி – திருவரங்கம்
வான்மீகர் – எட்டிக்குடி
நந்திதேவர் – காசி
பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
போகர் – பழனி
மச்சமுனி – திருப்பரங்குன்றம்
பதஞ்சலி – இராமேஸ்வரம்

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து

மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து

உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து

சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
அடுத்து

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து

திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து

பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்

27 நட்சத்திரங்களும் சித்தர்களும்

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி

* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.

மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.

மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.

மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.

* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,

புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)

* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்
நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.

உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;

* உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்

* உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.

* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.

* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.

சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை

விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம்(விருச்சிகம்)=
ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.

* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.

பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.
ரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் :

1. அஸ்வினி நட்சத்திரம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :

2. பரணி நட்சத்திரம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :

3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :

4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :

5. ரோகிணி நட்சத்திரம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :

6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :

7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் – ரிஷப இராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :

8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

9. மிருகசீரிடம் நட்சத்திரம் 4ம் பாதம் – மிதுன இராசி :
ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

10. திருவாதிரை நட்சத்திரம் – மிதுன இராசி :
ஸ்ரீம் குரு – துரு – குரு – வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :

11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – மிதுன இராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் – ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :

12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் – கடக இராசி :
ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :

13. பூசம் – நட்சத்திரம் கடக இராசி :
ஓம் ஸ்ரீம் – குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம :

14. ஆயில்யம் நட்சத்திரம் – கடக இராசி :
ஓம் ஸ்ரீம் ம் -அம் – உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :

15. மகம் நட்சத்திரம் – சிம்ம இராசி :
ஓம் ஹம் – ஸம் – ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

16. பூரம் நட்சத்திரம் – சிம்ம இராசி :
ஓம் ஸ்ரீம் – ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் – ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் – சிம்ம இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் – ஸ்ரீ இராம தேவரே நம
18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் – கன்னி இராசி :
ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் – கன்னி இராசி :
ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :

20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் – கன்னி இராசி :
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :

21. அஸ்தம் நட்சத்திரம் – கன்னி இராசி :
ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :

22. சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் – கன்னி இராசி :
ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

23. சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் – துலாம் இராசி :
ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

24. சுவாதி நட்சத்திரம் – துலாம் இராசி :
ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

25. விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – துலாம் இராசி :
ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

26. விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் – விருச்சிக இராசி :
ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

27. அனுஷம் நட்சத்திரம் – விருச்சிக இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

28. கேட்டை நட்சத்திரம் – விருச்சிக இராசி :
ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :

29. மூலம் நட்சத்திரம் – தனுசு இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் – குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம :

30. பூராடம் நட்சத்திரம் – தனுசு இராசி :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம :
31. உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் – தனுசு இராசி :
ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

32. உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – மகர இராசி :
ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

33. திருவோணம் நட்சத்திரம் – மகர இராசி :
ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

34. அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் – மகர இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

35. அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :

36. சதயம் நட்சத்திரம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :

37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :

38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் – மீன இராசி :
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம :

39. உத்திரட்டாதி நட்சத்திரம் – மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :

40. ரேவதி நட்சத்திரம் – மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம்



கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

படித்து பாருங்கள் உங்களுக்கு மெய்
சிலிர்த்துபோகும் !!

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? 
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள
வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்
கோயில்களுக்கு மட்டும் தான் இது.

பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும்
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.. 

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல்
எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட
அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
தை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும்
காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த
உடம்பை புண்ணியமாக்க; மீதி இரண்டு சொட்டு உங்கள்
உடம்பை பரிசுத்தமாக்க. 
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக
எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம்
இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில்
சேரும் என்பது ஐதீகம்.

பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய
நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம்
இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். 
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். 

எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில்
ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்
மூலஸ்தானம். 

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால்
அது மிகையாகது.. 

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட
லைட்னிங் அரெஸ்டர்ஸ்.. 

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும்
இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில்
கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால்
எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்.. 

இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்.. 

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில்
இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த
எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற
மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான்.