"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Thursday, March 31, 2016
உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்
100000 ரூபாய்
ஒரு தந்தை மகளின் உரையாடல் - பெண்ணைப் பெற்றவர்கள் அவசியம் படிங்க.
கடவுள் பக்தி என்றால் என்ன?
மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
தொழில் ரகசியம்: முடிவு உங்கள் கையில்
உங்கள் மனதில் தோன்றுகிறது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று கண் மூடித்தனமாய் இருக்காதீர்கள். முடிவெடுக்க தேவையான அனைத்து செய்திகளையும் சேகரிக்கிறீர்களா என்று பாருங்கள். உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் செய்திகளுக்கு மட்டுமே இடம் கொடுக்காதீர்கள்.
முடிவெடுக்கும் போது நடக்கும் தவறுகள் குறித்து மூன்றாவது வாரமாகத் தொடர்கிறோம். முடிவுகளில் தவறுகள் ஏற்படுவது பெரும்பாலும் முடிவெடுப்பவர் மனதில்தான் என்கிறார்கள் ’ஜான் ஹேமண்ட்’, ‘ரால்ஃப் கீனி’ மற்றும் ‘ஹோவர்ட் ரைஃபா’. ’ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ‘The hidden traps in decision making’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் நிர்வாகங்கள் தவறான முடிவெடுப்பதிலுள்ள உளவியல் ரீதியான புதைகுழிகளை பட்டியலிடுகின்றனர். அதில் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம்.
கன்ஃபர்மிங் எவிடென்ஸ் ட்ராப் (Confirming-evidence trap)
தாம் நினைத்ததே சரி, தாம் நினைத் ததையே மற்றவர் சொல்லவேண்டும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். மாற்று கருத்து சரியானதாக இருந்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். மனதில் இருப்பதை உறுதி (கன்ஃபர்ம்) செய்யும் சாட்சிகளை (Evidence) மட்டுமே நாடுவதால் இதற்கு கம்ஃபர்மிங் எவிடென்ஸ் ட்ராப் என்று பெயர்.
மணி பத்திருக்கும் என்று நினைக் கிறோம். வாட்ச் இல்லை. அருகிலுள்ள நண்பரிடமும் வாட்ச் இல்லை. அவரிடம் ‘மணி பத்திருக்கும் இல்ல’ என்று கேட்கிறோம். அவர் ‘சே இருக்காது’ என்கிறார். ‘அட போய்யா கண்டிப்பா பத்திருக்கும்’ என்று அடித்துக் கூறுகி றோம். கூறியது ஞாபகம் வருகிறதா!
அமெரிக்க ஆராய்ச்சி ஒன்றில் தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஒரு அணியையும் அதை எதிர்க்கும் ஒரு அணியையும் அழைத்து அவர்களிடம் இரண்டு ஆராய்ச்சி அறிக்கைகள் தரப்பட்டன. ஒரு அறிக்கை அறிவியல் பூர்வமாக தூக்கு தண்டனை சரியே என்று விளக்கும் அறிக்கை. இன்னொரு அறிக்கை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து தூக்கு தண்டனை தவறு என்று விளக்கும் அறிக்கை. இரண்டு அறிக்கைகளையும் இரு குழுக்களும் படித்தபின் அவர்களிடம் அந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று ஆராயப்பட்டது. இரு குழுக்களும் தங்கள் எண்ணத்தை பிரதிபலித்த அறிக்கையிலுள்ள காரணங்களை மட்டுமே கணக்கிலெடுத்து ‘பார் நாங்கள் சொல்வதைத் தான் கூறியிருக்கிறார்கள்’ என்று சாதித்தது. என்னதான் அறிவியல் பூர்வமாக ஆதாரங்களும், மாற்றுக் கருத்தும் அளிக்கப்பட்டாலும் தங்கள் எண்ணத்தை கைவிட இரு குழுக்களும் தயாராக இல்லை.
நிர்வாகங்களிலும் இதே கதைதான். எக்ஸ்போர்ட் கம்பெனி உரிமையாளர் ரூபாயின் மதிப்பு அடுத்த சில மாதங் களில் குறையும் என்று நினைக்கிறார். அதைக் கொண்டு உத்தி அமைக்க வேண்டும் என்பதால் இதைப் பற்றி ஏற்றுமதித் துறையில் உள்ள தன் நண் பரிடம் கேட்கிறார். அவர் ‘இல்லையப்பா, ரூபாயின் மதிப்பு கூடுமே ஒழிய குறையாது’ என்கிறார். ஏற்றுமதி நிறுவன உரிமையாளரோ கம்பெனி ஓனரோ ‘இந்தாளுக்கு என்ன தெரியும்’ என்று தான் நினைத்தபடி ரூபாய் மதிப்பு குறையும் என்றே உத்தி அமைக்கிறார். கன்ஃபர்மிங் எவிடென்ஸ் ட்ராப்பில் தொபுக்கடீர் என்று விழுகிறார்!
கண்மூடித்தனம் வேண்டாம்
உங்கள் மனதிற்கு சரியென்று பட்டதை, பட்டென்று தோன்றுவதை செய்யக்கூடாது என்றில்லை. பல சமயங்களில் உங்கள் அனுபவத்தின் காரணமாக அது சரியாகவே இருக்கலாம். உங்கள் மனதில் தோன்றுகிறது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று கண் மூடித்தனமாய் இருக்காதீர்கள். முடிவெடுக்க தேவையான அனைத்து செய்திகளையும் சேகரிக்கிறீர்களா என்று பாருங்கள். உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் செய்திகளுக்கு மட்டுமே இடம் கொடுக்காதீர்கள்.
ஆலோசகர் அவசியம்
நீங்கள் எடுக்கும் முடிவில் தவறு இருந்தால் அதை உங்களிடம் கூற உங்கள் ஊழியர்கள் தயங்குவார்கள். படியளப்பவரிடம் பயம் இருக்காதா. இதற்கும், பொதுவாகவே உங்கள் மனசாட்சியாய் திகழ்வதற்கும் நல்ல நிர்வாக ஆலோசகரை நியமியுங்கள். உங்களுக்கு ஆமாம் போடும் ஆசாமியாய் இல்லாமல் நீங்கள் தவறான முடிவெடுக்கும் போது தட்டிக்கேட்கும் திறன் உள்ளவரை தேர்ந்தெடுங்கள்.
ஓவர் கான்ஃபிடன்ஸ் ட்ராப் (Over-confidence trap)
பல நேரங்களில் முடிவெடுக்கையில் ஓரளவேனும் வருங்காலத்தை கணித்து முடிவெடுக்க வேண்டியிருக்கும். நம் கணிப்புகள் அனைத்துமே சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பல நேரங்களில் நம் கணிப்புகள் தவறாக அமைந்து அதனால் முடிவுகளும் தவறாகிப் போவதுண்டு. இது தெரிந்தும் பலர் வருங்காலத்தை கணிப்பதில் தான் கில்லாடி கிருஷ்ணன் என்று தங்களுக்கு தாங்களே கூறிக்கொண்டு தங்கள் கணிப்பில் அபரிமிதமான நம்பிக்கை வைத்து முடிவெடுக்கின்றனர். இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது. கம்பெனிக்கும் ஆகாது. சமயங்களில் கணிப்புகள் தவறாகிப் போய் முடிவுகள் அநியாயத்திற்கு தவறாகி கம்பெனியையே பாதித்துவிடுகின்றன. ‘நம்பியவன் கழுத்தறுத்தான்’ என்று கேள்விப்பட்டிருப்போம். தன்னையே ஓவராய் நம்பி கழுத்தறுபடுவது இந்த வகை!
அன்றாட வாழ்க்கையில் ஓவர் கான்ஃபிடன்ஸ் ட்ராப்பில் எத்தனை தரம் விழுகிறோம் என்று நினைத்துப்பாருங்கள். வண்டி ஓட்டும் போது டிராஃபிக்கில் கிடைத்த கேப்பில் புகுந்து போய்விடலாம் என்று மற்றவர்கள் செல்லும் வேகத்தை குறைவாய் கணித்து நம் திறமை மீது ஓவர் கான்ஃபிடன்ஸ் வைத்து புகுந்து செல்ல முயற்சிக்கிறோம். சின்னதாய் இடித்து பெரியதாய் சண்டையில் இறங்குகிறோம்.
ரீகாலபிலிடி ட்ராப் (Recallability trap)
வருங்காலத்தையோ, நடக்க இருப்பதையோ கணிக்கும் போது நம்மையும் அறியாமல் கடந்த காலத்தில் அதை சார்ந்த, நம்மை மிகவும் பாதித்த விஷயத்தை கொண்டு கணிக்கிறோம். வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுகூர்ந்து (ரீகால்) அதன் தாக்கத்தில் முடிவெடுப்பதால் இதற்கு ரீகாலபிலிடி ட்ராப் என்று பெயர்.
நம்மில் பலர் உடற்பயிற்சி, வாக்கிங் செய்வதில்லை. சேனலை எழுந்து மாற்றச் சோம்பேறித்தனப்பட்டு ரிமோட்டோடு டீவி பார்க்க உட்காரும் கேஸ் தான் பலரும். ஆனால் நமக்கு மிகவும் நெருங்கியவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடலில் மல்லாக்க மூக்கில் குழாயுடன் மூச்சை தவணை முறையில் விடுவதை பார்த்தால் போதும், அடுத்த நாள் முதல் அலாரத்தை நாமே எழுப்பி, அதுவரை வாழ்க்கையில் நடந்ததே கிடையாது என்பது போல் நடக்கிறோம். வீட்டிலுள்ளவர்கள் துரத்தி வந்து ‘போதுங்க, ப்ளீஸ் வீட்டுக்கு வந்திடுங்க’ என்று காலை பிடித்து கெஞ்சும் வரை அசுர வேகத்தில் வாக்கிங் போவோம். சிரிக்காதீர்கள், உண்டா இல்லையா!
கணிப்புகள், பாதிப்புகள்
மனதை பாதிக்கும் நிகழ்வுகள் அதைச் சார்ந்த வருங்கால கணிப்புகளை பாதிக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு ஆராய்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெயர்கள் கொண்ட லிஸ்டுகள் தயாரிக்கப்பட்டன. எல்லா லிஸ்டுகளிலும் சரிசமமான பெயர்கள் இருந்தாலும் சில லிஸ்ட்டுகளில் பிரபலமான ஆண்களின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தது. வேறு சில லிஸ்ட்டுகளில் பிரபலமான பெண்களின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தது. லிஸ்டில் உள்ள பெயர்கள் படிக்கப்பட்டு ஆண்கள் பெயர் அதிகமா, பெண்கள் பெயர் அதிகமா என்று மக்களிடம் கேட்கப்பட்டது. எல்லா லிஸ்டிலும் ஆண்கள், பெண்கள் பெயர்கள் சம அளவில் இருந்தாலும் பிரபலமான ஆண்கள் பெயர் அதிகமிருந்த லிஸ்ட்டை படிக்கக் கேட்டவர்கள் அந்த லிஸ்ட்டில் ஆண்களின் பெயர் அதிகம் இருப்பதாய் கூறினர். பிரபல பெண்கள் பெயர் அதிகம் இருந்த லிஸ்ட்டை கேட்டவர்கள் பெண்கள் பெயரே அதிகம் என்றனர். நம் மனமே நம்மை எப்படி ஏமாற்றுகிறது பார்த்தீர்களா?
நிர்வாக முடிவெடுக்கும் போது ரீகாலபிலிடி ட்ராப்பில் விழாமல் இருக்க ஒரே வழி முடிவெடுக்க தேவையான செய்திகளில் நம் பழைய நினைவுகளின் தாக்கம் அதிகம் இருக்கிறதா என்று சரிபார்த்து முடிந்த வரை முடிவெடுக்க சேகரித்த செய்திகளின் உண்மைத் தனத்தை உறுதி செய்வது தான்.
முடிவெடுக்கும் போது நம்மை முட்டித் தள்ள முயற்சிக்கும் புதைகுழி களில் விழாமல் இருப்பது எளிதல்ல. எடுத்தவுடன் எல்லாருக்கும் இது வந்து விடாது. பிரம்மப் பிரயத்தனப்பட வேண்டும். பாடுபடவேண்டும். இல்லை, இத்தனை கஷ்டப்பட முடியாதென்றால் இருக்கவே இருக்கிறது பல்லாங்குழி போல் புதைகுழிகள். அதில் விழுவது ரொம்பவே ஈசி!
சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!
satheeshkrishnamurthy@gmail.com
லோகோ வெறும் வார்த்தையாகவோ, உவமையாகவோ
லோகோ வெறும் வார்த்தையாகவோ, உவமையாகவோ, படமாகவோ, வண்ணமாகவோ, கதாபாத்திரமாகவோ அல்லது இதன் கலவையாகவோ இருக்கலாம். ‘சோனி’ பிராண்டுக்கு தனியாக லோகோ என்று விஷுவலாக எதுவும் கிடையாது. அது எழுதப்பட்டிருக்கும் ஸ்டைல் தான் லோகோ. ‘பேனாசோனிக்’, ‘ஷார்ப்’ போன்ற பிராண்டுகளும் அவ்வண்ணமே.
சில விஷயங்களை வளவளவென்று பேசுவதை விட விஷுவலாக காண்பிக்கும் போது பட்டென்று புரிகிறது. சட்டென்று தெரிகிறது. ஒரு பெண் காலில் மெட்டி அணிந்திருந்தால் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவளைக் கேட்காமலே தெரிந்து கொள்ள முடிகிறது. அஃப்கோர்ஸ் தாலி கட்டியிருந்தாலும் அதே அர்த்தம்தான். என்ன, தாலி இருக்கிறதா என்று கழுத் துக்கு கீழே உற்றுப் பார்த்துக் கொண் டிருந்தால் செருப்படி கிடைக்குமே என்று மெட்டியைச் சொன்னேன்!
பிராண்டுகளும் அவ்வண்ணமே. பிராண்டை பொசிஷனிங் செய்து, பர்சனாலிடி கொடுத்து, அதற்கு ஒரு பெயரையும் வைக்கிறோம். அதை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல அந்த பெயரை விஷுவலாய், பிராண்டின் பொசிஷனிங்கிற்கேற்ப வடிவமைக்கவும் வேண்டும். அந்த வடிவமைப்புக்கு லோகோ என்று பெயர். லோகோ பொருத்தமாய் இருந்து பிராண்டின் தன்மையை தெளிவாய் சொன்னால் அது நம் மார்க்கெட்டிங் வேலையை எளிதாக்கிவிடும்.
தினம் ஷேவ் செய்ய எடுக்கும் ‘ஜில்லெட்’ பிராண்டை உதாரணத்திற்கு எடுப்போம். ஜில்லெட் ஷேவிங் மார்க் கெட்டின் தனிக்காட்டு ராஜா. தன் கூர்மை யான பிளேடுகள் மூலம் ரோம சாம்ராஜ் யத்தை பூண்டோடு அழித்து கன்னத்தை வழவழவென்று ஆக்கும் பிராண்ட். இதுவே அந்த பிராண்டின் சிறப்பம்சம். இதை தெளிவாக விளக்கும் வகையில் தன் லோகோவில் ’G’ துவங்கி ‘i’ மீதுள்ள புள்ளி வரை கூர்மையாய் வெட்டப்பட்டது போல் வடிவமைத்திருக்கும் சாமர்த்தியத் தைக் கவனியுங்கள்.
லோகோ வெறும் வார்த்தை யாகவோ, உவமையாகவோ, பட மாகவோ, வண்ணமாகவோ, கதாபாத் திரமாகவோ அல்லது இதன் கலவை யாகவோ இருக்கலாம். ‘சோனி’ பிராண்டுக்கு தனியாக லோகோ என்று விஷுவலாக எதுவும் கிடையாது. அது எழுதப்பட்டிருக்கும் ஸ்டைல் தான் லோகோ. ‘பேனாசோனிக்’, ‘ஷார்ப்’ போன்ற பிராண்டுகளும் அவ்வண்ணமே.
லோகோ என்பது பிராண்டின் தன் மையை அல்லது பயனைக் குறிக்கும் வகையில் இருப்பது நலம். `டெட்டால்’ பிராண்டின் பொசிஷனிங் பாதுகாப்பு. பாதுகாக்கும் பிராண்ட் என்று வாடிக் கையாளருக்குத் தெளிவாக விளக்கத் தான் டெட்டாலுக்கு ‘வாள்’ லோகோவாக அமைக்கப்பட்டிருக்கிறது.
லோகோ என்பது பிராண்டின் முக்கிய மான அம்சத்தை குறிக்கவேண்டுமே தவிர பிராண்டின் எல்லா அம்சங்களை யும் குறிக்கவேண்டிய அவசியமில்லை. அப்படிக் குறிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தப்பாட்டம். லோகோ வாடிக்கையாளர்களுக்கு எளிதில் புரிய வேண்டும். நம் பிராண்டை வாங்கப் போவது சாமானியர்கள். அவர்கள் டிசைனர்களோ, ஆர்டிஸ்டுகளோ, அவார்ட் வாங்கிய ஓவியர்களோ கிடையாது. அதனால் அவர்களுக்கு எளிதில் புரியும்படி லோகோவை டிசைன் செய்வது அவசியம்.
‘எங்கள் வெப்சைட்டில் எல்லா பொருட்களும் வாங்க முடியும். கனி வான சேவையும் தருகிறோம்’ என்பது ‘அமேஸான்’ பிராண்டின் பொசிஷனிங். அதனாலேயே தங்கள் லோகோவில் ‘A’ முதல் ‘Z’ வரை அம்புகுறி வரைந்திருக் கிறார்கள். A முதல் Z வரை அனைத்து பொருட்களும் எங்களிடம் கிடைக்கும் என்று குறிப்பதற்கு. அதோடு அந்த அம்புகுறி புன்னகை போல் இருப்பதை யும் கவனியுங்கள். எங்களிடம் கனிவான சேவையும் உண்டு என்பதை இதை விட எப்படி அழகாகக் கூற முடியும்!
பிராண்ட் லோகோ போட்டியாளர்கள் லோகோக்களை விட வித்தியாசமாய் இருப்பதும் அவசியம். திறமையாக வடி வமைக்கப்படும் லோகோ வாடிக்கை யாளர் மனதில் பிராண்டை டக்கென்று ஞாபகப்படுத்தும். ‘ஃபெட்எக்ஸ்’ உலகின் லீடிங் கூரியர் பிராண்ட். சரியான விலா சத்திற்கு பொருட்களை வேகமாகக் கொண்டு சேர்க்கிறோம் என்பது அவர் கள் தரும் உத்திரவாதம். இதையே பல பிராண்டுகள் கூறினாலும் உலக மக்கள் மனதில் கூரியர் என்றாலே பட்டென்று நினைவிற்கு வரும் பிராண்ட் ஃபெட்எக்ஸ். மக்களின் ஏகோபித்த பேராதரவை ஃபெட்எக்ஸ் பெற அதன் லோகோ சிறிய அளவிலாவது உதவியிருக்கிறது. எப்படி?
வேகம், துல்லியம் இரண்டையும் விஷுவலாக உணர்த்த அவர்கள் தேர்ந் தெடுத்தது அம்பை. இதை ஃபெட்எக்ஸ் எழுத்திலேயே அவர்கள் வடிவமைத்த அதிசயத்தை கவனித்திருக்கிறீர்களா? ‘E’, ‘x’ எழுத்துகளுக்கு நடுவில் ஒளிந் திருக்கும் அம்பு ஃபெட்எக்ஸின் உத்திரவாதத்தை உறுதி செய்கிறது. போட்டியாளர் பிராண்டுகளை போட்டும் தள்ளுகிறது!
லோகோ பிராண்டின் அங்கம். பிராண்ட் பெயர் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் லோகோ தெளிவாக தெரியும்படி வடிவமைக்கவேண்டும். சில லோகோ கலரில் பார்க்க அழகாக இருக்கும். கருப்பு வெள்ளையில் அசிங்கமாக தெரியும். அதுபோல் லோகோவை வடிவமைப்பது தப்பாட்டம். சுவர் விளம்பரம், தட்டி, பிளெக்ஸ், பேனர் போன்றவற்றில் விளம்பரப்படுத்த வேண்டியிருக்கும். அதிலும் கூட லோகோ வடிவமைத்த விதத்தை போலவே தெரியவேண்டும். அதனால் லோகோவை வடிவமைக்கும் போதே கவனத்தோடு வடிவமைப்பது அவசியம்.
காலகாலத்திற்கும் லோகோ நிலைத் திருந்தால் தேவலை என்றாலும் அப்படி அமையும் என்று நினைப்பது ரொம்பவே ஓவர். கால மாற்றங்கள், மக்களின் மாறும் ரசனைகளுக்கேற்ப லோகோவின் ஒரு சில மாற்றங்கள் தேவைப்படும். அதை செய்யத் தயங்கக்கூடாது. ’ஏர்டெல்’, ‘கனரா வங்கி, ‘பெப்சி’ என்று பல பிராண்டு கள் தங்கள் லோகோவை காலத்திற் கேற்ப மாற்றியிருக்கின்றன. அதற்காக லோகோவை வருடத்திற்கொரு முறை வீட்டிற்கு வெள்ளையடிப்பது போல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேவைப்படும் போது மாற்றினால் போதுமானது.
‘கோகோ கோலா’ 130 வருடங்களுக்கு முன் வடிவமைத்த தன் லோகோவை இன்று வரை மாற்றவில்லை. ‘உலகின் ஒரிஜனல் கோலா’ என்று தன்னை பெருமையாய் கூறிக்கொள்ளும் பிராண்ட் தன் ஒரிஜனல் லோகோவை பயன்படுத்துவது தானே முறை.
லோகோவை சரியாக வடிவமைக்க வில்லை என்றால் லோலோ என்று அலைய வேண்டி வரும். இதை வடிவமைப்பதில் கவனம் தேவை. சும்மாவேணும் ஒரு டிசைனரை கூப்பிட்டு ‘என் பிராண்டுக்கு அர்ஜெண்டா ஒரு லோகோ டிசைன் போட்டுக் கொடுப்பா’ என்கிற சமாச்சாரமில்லை. இதை பார்த்துச் செய்யவேண்டும். முக்கியமாக நீங்களே செய்யக்கூடாது. தேர்ந்த டிசைன் நிபுணர்களைக் கொண்டு செய்யவேண்டும்.
‘மைக்ரோமேக்ஸ்’ பிராண்ட் தன் லோகோவை வடிவமைத்த விதம் அலாதியானது. 2012ல் தங்கள் பிராண்டுக்கு புதிய லோகோ டிசைன் செய்து தருமாறு டிசைன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போட்டி ஒன்றை நடத்தியது. உலகெங்கும் சுமார் 150 கல்லூரிகள் கலந்து கொண்டன. 2,500 டிசைன்கள் பெறப்பட்டன. இரண்டு மாதம் நடந்த போட்டி. தேர்வு செய்யப்பட்டது அமெரிக்க மாணவன் ஒருவன் வடிவமைத்த ‘பன்ச் டிசைன்’.
இப்படி மக்களிடமிருந்து ஐடியாக்கள் பெறுவதற்கு கிரவுட்சோர்சிங் (Crowdsourcing) என்று பெயர். நாமும் இப்படி செய்து பார்க்கலாமே என்று சபலம் தட்டுகிறதா? சும்மா ஓசியில் வர வில்லை மைக்ரோமேக்ஸ் லோகோ. தேர்வு செய்யப்பட்ட டிசைனை வரைந்த மாணவனுக்கு விலையுர்ந்த மேக்புக் புரோ கம்யூட்டர் அளித்து தங்கள் வெப் சைட்டில் அவனைப் பற்றியும் பெருமை யாக அறிவித்தது மைக்ரோமேக்ஸ்.
லோகோ என்பது பிராண்டின் சொத்து. சொன்னதைச் செய்கிறோம் என்று வாடிக்கையாளர்களுக்கு ஸ்டாம்ப் பேப்பரில் போடும் உத்திரவாதக் கையெழுத்து. அதை கேஷுவலாய் இல்லாமல் கேர்ஃபுல்லாய் செய்து பிராண்டின் தன்மையை விஷுவலாய் விளக்கினால் லோகோ உங்கள் பிராண்டை ஓகோ என்று உயர்த்தும்!
Wednesday, March 30, 2016
50 New Rules of Work with the hope
|