சிவத்தை வழிபடுவது - பூஜிப்பது ஏன் ? ( உற்றவன் கருணையால் உண்மை விளங்கி வழிபட வேண்டி )
நமசிவாய
சிவகருனையால் சிவத்தை வணங்கி பூஜிக்கும் பாக்கியம் பெற்றார்கள் பாதம் பணிகிறேன்.
வழிபடுவது – நமக்கு வாழ்வளித்து வாழ்விப்பவனை உணர்ந்து நன்றியுடன் வணங்குவது.
பூஜிப்பது - நமக்கு வாழ்வளித்து வாழ்விப்பவனை உணர்ந்து அவன் நமக்கு அளித்தவையை சமர்ப்பித்து வணங்குவது.
ஏன் ஈசனை வணங்கவேண்டும் ?
நமக்கு தந்தை என்ற ஒருவரையும், தாய் என்ற ஒருவரையும் இன்புற செய்து, அதன் பயனாக எத்தனையோ கோடி அணுகளில் நம்மை உருபெற்ற செய்து, நமக்கு தேவையான அனைத்தையும் யார்மூலமாவது, எதன்மூலமாவது வழங்கி வளர்த்து, அறியும் அறிவையும், உணரும் தன்மையும், வழங்கி, முத்தை இருந்த உறவுகள் நம்மைவிட்டு பிரிந்தாலும் புது உறவை நம்முடன் இணைத்து, நம்மை தனியாக பரிதவிக்க விடாமல், பாதுகாத்து, தன்னை வெளிக்காட்டாமல் எப்போதும் நம்முடன் இருந்து காப்பவன் ஒருவன் இருக்கிறான் என்று உணரும்போது,
அந்த ஒருவன் இவன் தான் என்று பலவற்றை பற்றி திரியும் பலருடன் பழகியும், வாழ்ந்தும் வரும்போது சிவன் அருளால், பெற்று வழங்கியவர்களை வணங்கி திரிந்து மயக்கம் தெளிவித்து, என்றும் எப்போதும் வழங்கி வழங்கி வாழ்விப்பவனை உணரும் பாக்கியம் பெற்று,
நம் பிறப்பிற்கு முன்பிருந்து அருளி, பிறந்து வாழும் காலத்தில் நமக்கு அகமை, புறமாய் நம்மை வழிநடத்தி, வாழ்ந்த வாழ்வின் மெய்யை உணர்ந்து உடலாகிய கூட்டில் இருந்து உய்ராகிய ஆன்மா பிரியும்போது எங்கு சென்று சேர்வது என்று பரிதவிக்கும் போது கூட நான் இருகிறேன் என்னுள் வந்து ஐக்கிமாகிகொள் என்று என்றும் நம்மை கை விடாதவனை,
உணர்ந்து உருகி வணங்கவேண்டும் அல்லவா !
ஏன் ஈசனை பூஜிக்க வேண்டும் ?
நம்முடன் எல்லாமாக இருந்து, நமது தேவையை நமக்கு முன் அறிந்து அளித்து, நமது உடலை, உயிரை, உற்றாரை, சுற்றாரை என்று அனைத்தையும் வழங்கி வாழ்விக்கும் வள்ளலை, சிவம் அளித்தவை கொண்டு நன்றியுடன் சமர்ப்பித்து வணங்குவதே பூஜை,
சிவன் உன்னை பூஜிக்க சொன்னாரா ?
சிவன் என்றும் யாரிடமும் எதுவும் கேட்பது இல்லை, வழங்கியே வாழ்விக்கும் வள்ளல் நம்பெருமான்,
அப்படி இருக்க ஏன் பூஜிக்கவேண்டும் ?
உலகில் எத்தனையோ நிரந்தரம் இல்லாத பலவற்றை நன்றியுடன் நினைத்து, நாம் ஈசனிடம் பெற்றதை கொண்டு நன்றி செலுத்துகிறோம், (ஏதோ நமது என்று எண்ணிக்கொண்டு), அப்படி இருக்கு எபோதும் என்றும் காப்பவனுக்கு நன்றி செலுத்துவது நமது கடமை அல்லவா !, ஐந்து அறிவு கொண்டு ஜீவனுக்கு உள்ள நன்றி என்னும் உணர்வு, அறு அறிவுடன் நம்மை பிறக்கவைதவனுக்கு நன்றி செலுத்தாவிட்டால் நன்றி கெட்டவன் ஆகி விடுவோம், என்பதால் பூஜிக்கிறோம்.
ஏதோ கோவிலுக்கு போனோம், கையை குப்பி சிந்தனையை எங்கோ வைத்துகொண்டு ஒரு கும்பிடு போட்டோம்,
இன்றைய சூழலில் வித்தியாசமாக நெஞ்சை கையால் தொட்டு கைக்கு ஒரு முத்தம் கொடுத்து வணங்குவது போல் இல்லாமல்.
“”” உட்ற்றவனை உணர்ந்து பெற்றவையை நன்றியுடன் நினைந்து வணங்கி வழிபடவே இப்பதிவு ஈசன் திருவருட் கருணையால் “”””
#எப்படி ஈசனை உணர்த்து ஆத்மார்த்தமாக பூஜிக்கவேண்டும் என்று நாளை பதிவில் ஈசன் திருவருளால்
திருச்சிற்றம்பலம்
நன்றிக்கு உரியவன் கருணையால்
அடியேன்
அங்கமுத்து குமார்
No comments:
Post a Comment